-
அன்பு முரளி சார்,
மனிதரில் மாணிக்கம் பற்றிய தங்களுடைய நினைவுப் பதிவுகள் அமர்க்களம். மனிதரில் மாணிக்கம் ஐம்பது நாட்கள் தாண்டாதது உங்கள் மனதை மிகவும் பாதித்திருப்பது உங்கள் பதிவிலிருந்து உணர முடிகிறது. தாங்கள் கூறியுள்ளது போல ஏதோ ஒன்று அப்படத்தில் குறைவாக இருப்பது உண்மை. நடிகர் திலகம் இல்லையென்றால் இப்படம் ஒரு வாரம் தாங்கியிருப்பதே கஷ்டம். 1971முதல் 1974 வரை நடிகர் திலகத்தின் காவியங்கள் ஓடிய நாட்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி. அருமையான பதிவு.
தாங்கள் கூறியுள்ளது போல் நன்றிக்கடன் தீர்ப்பதில் நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் தான். அந்த நல்ல உள்ளத்தை அவருக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அவரைக் காயப்படுத்திதான் இருக்கிறார்கள்.
அவரை இயக்கிய இயக்குனர்களும் அவரது இளகிய மனதை புரிந்துகொண்டு அவரை வேதனைப் பட வைத்துள்ளனர். அசோகன் என்ற நடிகர் இவருக்கு எதிரி முகாம் நடிகர் என்று தெரிந்தும் இவரைக் கேட்காமலேயே இவருடைய படங்களில் நடிக்க வைக்கப்பட்டார். திரு பி.ஆர்.பந்துலு தன் பெரும்பான்மையான படங்களில் அசோகனை நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்க வைத்துள்ளார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, கர்ணன், முரடன் முத்து போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள். நடிகர் திலகத்தைப் பற்றி தாறுமாறான விமர்சனங்களை அசோகன் பலதடவை கூறியுள்ளார். இருந்தாலும் பந்துலு அவர்கள் மீது கொண்ட நட்பாலும், தன் திறமையின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்ததாலும் நடிகர் திலகம் இதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லையென்றுதான் கூற வேண்டும்.
நம் பம்மலார் அவர்கள் பதிந்த உயர்ந்த மனிதன் பதிவில் 'அசோகனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நடிகர் திலகம்' செய்தியில் கூட எதிர் முகாம் நடிகராக இருந்தாலும், தன் அனுபவத்தை வைத்து அந்த டாக்டர் ரோல் தனக்குக் கிடைக்காவிட்டாலும் கிடைத்தவர் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எப்படி அந்த ரோலை நடித்தால் நன்றாய் இருக்கும் என்று அசோகனுக்கு சொல்லிக் கொடுக்க, ஆனால் அவரோ "அந்த ஆள் (நடிகர் திலகம்)என்னை கவிழ்த்து விடுவதற்காக வேண்டுமென்றே தப்பாக சொல்லிக் கொடுத்துவிட வில்லையே"என்று சரவணனிடம் சொன்னால் ஏ.வி.ஏம் முக்கு தான் பட்ட செஞ்சோற்றுக் கடனுக்காக அதையும் பொறுத்துக் கொண்ட மகா புருஷர் நம் நடிகர் திலகம். (ஏ.வி.ஏம் படங்களில் பெரும்பாலும் அசோகன் இடம் பெறாமல் இருக்க மாட்டார். P.s வீரப்பாவின் ஆண்டவன் கட்டளையிலும் கூட அசோகன் வில்லன்)
முக்தா ஸ்ரீனிவாசன் படங்களில் மாற்று முகாம் நடிகரின் அபிமானி வில்லன் நடிகர் கண்ணன் பெரும்பாலும் இடம் பெறாமல் இருக்க மாட்டார். அன்பைத்தேடி, இமயம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அதையும் முக்தாவிற்காக பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம். (பாலாஜி அவர்களின் 'ராஜா' வில் கூட வில்லனாக ஒரு சிறு பாத்திரத்தில் கண்ணன் வருவார்.)
அதே போல தேங்காய் சீனிவாசன். மாற்று முகாமில் இருந்தாலும் இவருடன் எத்தனை படங்கள்! பிற்காலங்களில் திரு. எம்ஜியார் அவர்கள் முதல்வர் ஆனபிறகு 'தேங்காய்' இல்லாத நடிகர் திலகம் படங்களே இல்லை எனும் அளவுக்கு. அதுவும் வலுவான ரோல்களில். அதற்கு முன்னம் கூட தேங்காய் சீனிவாசன் ஸ்ரீதருக்கு வேண்டியவர் என்பதனால் சிவந்தமண்ணில் தலை காட்டுவார். (விமானத்தில் காஞ்சனாவின் உதவியாளராக வந்து நடிகர் திலகத்துடன் ஒரு சிறு சண்டைக்காட்சி) முக்தாவின் 'அருணோதயம்', நிறைகுடம் படங்களிலும் தேங்காய் சீனிவாசனுக்கு சான்ஸ். இயக்குனர் டி .என் பாலு அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து முதன் முதல் இயக்கிய 'அஞ்சல் பெட்டி 520'-இல் தேங்காய் சீனிவாசன் நடிகர் திலகத்தின் நண்பனாக நாகேஷுடன் சேர்ந்து வருவார். இயக்குனர் டி .என் பாலுவும், தேங்காய் சீனிவாசன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்பதனால் தேங்காய்க்கு அந்த ரோல். ஜேயார் மூவீஸ் 'எங்க மாமா' விலும் தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு காமெடி ரோல். இதையெல்லாம் விடவும் ராம்குமார் பிலிம்ஸ் 'சுமதி என் சுந்தரி' யிலேயே இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் உதவி இயக்குனராக இருந்ததால்) தேங்காய் சீனிவாசனை ஒரு ரோலில் நடிக்க வைத்திருப்பார். ('கலியுகக் கண்ணன்' படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்தபோது நடிகர் திலகத்தையே நடிப்பில் மிஞ்சி விட்டதாக அப்படி ஒரு அண்டப்புளுகுப் பிரச்சாரம் அப்போது எதிர்முகாமினரால் செய்யப்பட்டது மறந்து போகுமா?..இதற்கு சில பத்திரிக்கைகள் கூட உடந்தை)
சிவாஜி புரடக்ஷன்ஸ் படங்களிலும் கூட (அண்ணன் ஒரு கோவில், திரிசூலம்) தேங்காய் சீனிவாசன் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை காரணமாக 'புக்' செய்யப்பட்டார். பின் தேங்காயின் சொந்தப் படமான 'கிருஷ்ணன் வந்தான்' திரைப்படத்தில் கூட பழைய விஷயங்கள் எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நட்புணர்வோடு நடித்துக் கொடுத்து உதவினார் நடிகர் திலகம்.
சொந்தத் தயாரிப்பாய் இருந்தாலும் கூட,எதிரி முகாம் நடிகர்களாய் இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இயக்குனர்களின் விருப்பத்திற்கு ஒத்துழைத்த கள்ளம் கபடமில்லாத பிள்ளை உள்ளம் கொண்டவர் நம் நடிகர் திலகம். பழி வாங்கும் உணர்வு, பகை தீர்த்தல் போன்ற தீய சுபாவங்கள் என்றுமே அவருக்கு இருந்ததில்லை. மாறாக தன்னை தூற்றிப் பேசிய அனைவரையும் தூக்கி வைத்துதான் கொண்டாடியிருக்கிறார் அவர். ஆனால் அவருடைய நல்ல உள்ளத்தை எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்கள்?... அல்லது நினைத்துப் பார்க்கிறார்கள்? வேறு யாராக இருந்தாலும் இப்படி விட்டுக் கொடுத்துப் போவார்களா? அதுதான் நடிகர் திலகம்...அவர்தான் மனித தெய்வம்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் முரளி சார்,
நீதி மற்றும் மனிதரில் மாணிக்கம் நினைவலைகள் அற்புதம், படத்தில் அவருக்கு டாக்டர் ரோல் அதுவும் ஏழைகளுக்கு உதவும் ஒரு அருமையான மனிதர்.
என்ன இருந்தாலும் avm ராஜன் தானே ஹீரோ, இவருக்கு கௌரவ வேடம் தானே, அதனால் கூட படம் ஓடாதிருந்திருக்கலாம்
-
டியர் வாசுதேவன் சார்,
வெற்றிக்கு ஒருவன் பதிவு பிரமாதம், அதிலும் படப் பிடிப்பின் போது நடிகர் திலகம் சக கலைஞர்களுடன் இருக்கும் ஸ்டில் அதி அற்புதம்.
-
CENTPERCENT TRUE HAPPENNGS WHICH HAPPEND BETWEEN 67 TO 72 TILL MGR WAS WITH DMK. it s not far to dicuss ill of the peoplewho are no more. but the way asokan, kannan humilated NT and fans somethng very bad and nonsense,
thengai also joned thestream under compulson, JUST TO PLEASE OTHERS AND POLITCAL GANINS THEY ARE COMPELLED TO ACT LIKE THIS. as NADIGAR THILAGAM happened to be a UYARTHANTHA MANITHAN, HE SIMPLY
IGNORED EVERYTHNG. WELL SAID MR VASUDEVAN SIR.
-
Demi-God's December Delicacies
மனிதனும் மிருகமும்
[4.12.1953 - 4.12.2011] : 59வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷங்கள் : ஒரிஜினல் பாட்டுப் புத்தகப் பக்கங்கள்
முகப்பு
http://i1110.photobucket.com/albums/...GEDC5207-1.jpg
பின் அட்டை
http://i1110.photobucket.com/albums/...GEDC5211-1.jpg
நடிக-நடிகையர்-தொழில்நுட்பக்கலைஞர்கள்
http://i1110.photobucket.com/albums/...r/GEDC5209.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC5210.jpg
கதைச் சுருக்கம்
http://i1110.photobucket.com/albums/...r/GEDC5212.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC5213.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC5214.jpg
நடிகர் திலகம் பாடுவதாக வருகின்ற 'காலமென்னும் சிற்பி செய்யும்' பாடலின் வரிகள்
http://i1110.photobucket.com/albums/...GEDC5215-1.jpg
[இசைச் சித்தரின் இனிமை நிறைந்த குரலில் ஒலிக்கும் இந்த 'காலமென்னும் சிற்பி செய்யும்' என்ற அருமையான மிக அரிய பாடலின் ஆடியோவை கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கிலிருந்து பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் !]
http://www.mediafire.com/?d4ehy65ks16lghq
அன்புடன்,
பம்மலார்.
-
Demi-God's December Delicacies
மனிதனும் மிருகமும்
[4.12.1953 - 4.12.2011] : 59வது ஆரம்பதினம்
நவரத்தினங்களை மிஞ்சும் பொக்கிஷம் : மிகமிக அரிய நிழற்படம்
சுதேசமித்ரன் : 1953
http://i1110.photobucket.com/albums/...perStill-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு பம்மலார் சார்,
தலைவர் வீட்டிற்கு வந்து தலைவருக்கு அஞ்சலி செய்த ரஜினி அவர்களின் ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழாவில் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் பதிவிட்டு கலக்கி விட்டீர்கள். தலைவர் அந்த விழாவில் ஜாலியாக இருந்தது படிக்க சந்தோஷமாய் இருந்தது.
மனிதனும் மிருகமும் பார்ட் 2 சூப்பர். ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு அட்டை பின்னி எடுக்கிறது. பாரிஸ்டர் மாதவன் அசத்தலாக உள்ளார். ஆனால் கதைச் சுருக்கம் நான் படிக்கவில்லை. (பின்னாளில் இப்படம் கிடைத்து பார்க்க நேர்ந்தால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால்) அரிய, மிக அரிய, மிக மிக அரிய பதிவை அளித்த தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சுதேசமித்திரன் ஸ்டில்லும் அசத்தல்.
'காலமெனும் சிற்பி செய்த' காவியப் பாடலின் லிங்கிற்கு நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் அன்புப் பாராட்டிற்கு நன்றி.
டியர் ராமஜெயம் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
அன்பு வாசுதேவன் சார்,
'பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே' என்ற மனம் நடிகர்திலகத்துக்கு வாய்க்கப்பட்டிருந்ததால் பலனடைந்தவர்கள் பலர். தேங்காய் சீனிவாசனின் கிருஷ்ணன் வந்தான் முழுப்படத்தையும் பணமே வாங்காமல் நடித்துக்கொடுத்தார் என்று ஏற்கெனவே நமது திரியில் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது, அண்னன் ஒரு கோயிலில் துவங்கி, பின்னர் நடிகர்திலகம் நடித்த 90 சதவீதம் படங்களில் தேங்காய் நடித்திருந்தார். அதுவும் பல படங்களில் நடிகர்திலகத்துக்கு இணையான ரோல்களில் நடிக்க வைக்கப்பட்டார்.
கே.கண்னன், பாலாஜியின் ராஜாவில் மட்டுமல்ல, நீதி படத்திலும் நடித்திருந்தார். மனோகர் ஏராளமான படங்களில் நடிகர்திலகத்துடன் நடித்துள்ளார். நம்பியாரைப்பெறுத்தவரையில் மாற்றுமுகாமை விட, நடிகர்திலகத்துடன் நடித்த படங்கள்தான் அதிகம். 50களில் துவங்கி, நடிகர்திலகத்தின் கடைசிப்படமான 'பூப்பறிக்க வருகிறோம்' வரையில் தொடர்ந்து நடித்துள்ளார். எஸ்.வி.ராமதாஸும் எழுபது எண்பதுகளில் பல்வேறு படங்களில் நடிகர்திலகத்துடன் நடித்துள்ளார். இவர்கள் யாரும் நடிகர்திலகத்தைப்பற்றி தப்பாய் பேசியவர்கள் அல்ல. இவ்வளவு ஏன், ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டின் கூட 'தியாகம்' சண்டைக்காட்சியில் நடித்து முடித்தபின், 'சிவாஜி சாருடன் இதுவரை நடிக்கவில்லையே என்ற என்னுடைய பெரிய ஆசை இன்று நிறைவேறியது' என்று பத்திரிகையாளர்களிடம் பெருமைபடக்கூறியுள்ளார். (பின்னர் ‘வெற்றிக்கு ஒருவன்’ படத்திலும் ஜஸ்டின் நடித்தார்).
இவர்களில் அசோகன் மட்டுமே நடிகர்திலகத்தை எப்போதும் எதிரியாக நினைத்து ஏதாவது கமெண்ட் அடித்துக்கொண்டிருப்பார். இருமலர்கள் படப்பிடிப்பின்போதும் இப்படித்தான். நடிகர்திலகம் ஒரு காட்சியில் சீரியஸாக நடித்துக்கொண்டிருக்கும்போது, சற்று தள்ளி 'அவுட் ஆஃப் போகஸ்' ஏரியாவில் நின்று கொண்டு அசோகன் ஏதாவது காமெடி பண்ணி அனைவரின் கவனத்தையும் சிதறடிப்பாராம். இப்போது அவர்கள் யாரும் இல்லாததால் இதை பெரிது படுத்திப்பேச வேண்டியதில்லையெனினும், தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில் நடிகர்திலகம் சிறந்து விளங்கினார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர் நினைத்திருந்தால் இவரை படத்திலிருந்து தூக்கு என்று சொல்ல அதிக நேரம் ஆகியிருக்காது.