-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [9]
சிங்கத்தமிழன் குறித்த சீரிய கட்டுரைகள் : 3
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஏப்ரல் 1981
http://i1110.photobucket.com/albums/...GEDC6725-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6726-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுடைய உச்சமான தொடர் பாராட்டுதல்களுக்கு எனது பணிவான நன்றிகள்..! நமது நடிகர் திலகம் நம் ஒவ்வொருவர் ஆன்மாவுக்குள்ளும் அமர்ந்திருந்து நமக்கு நல்வழி காட்டிக்கொண்டிருக்கிறார்..! நமது திரி 70000 ஹிட்ஸ்களைக் கடந்து மிகமிக வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதற்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..! திரியின் வெற்றிப்பயணத்தில் தங்களுடைய பங்களிப்பும் அளப்பரியது..!
திரையுலகில் வைரவிழாவை பூர்த்தி செய்யும் நமது திரையுலகச் சக்கரவர்த்திக்கு, நமது சென்னை அன்புள்ளங்கள் 60 விதமான பதாகைகளை 85வது ஜெயந்தி விழாவையொட்டிய காணிக்கைகளாக அளிக்கும் செயல் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும்..! அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..! தாங்கள் இதுவரை வழங்கியுள்ள 26 வடிவங்களும் தெள்ளத்தெளிவாக உள்ளன. ஒவ்வொரு பதாகையிலும் உள்ள நமது நடிகர் திலகத்தின் நிழற்படமும் கண்களுக்கு அம்சமான விருந்து..! ஒவ்வொரு பேனர் வாசகமும் அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்து நமது இரத்தநாளங்களை முறுக்கேற்றுகிறது..! இந்த அழகிய வடிவங்களை அளித்த அன்புள்ளம் திரு.பி.கணேசன் அவர்களுக்கும், அதனை இங்கே சிறந்த முறையில் இடுகை செய்து உலகத்தோர் கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்..!
நகைச்சுவை நடிகர் சந்திரபாபு, நமது நடிகர் திலகத்துக்கு மாலையணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதாக, தாங்கள் அளித்துள்ள ஸ்டில் மிகமிக அபூர்வமான ஒன்று..! இது "செந்தாமரை" திரைக்காவியத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்..! பகிர்ந்து கொண்டமைக்கு பல்லாயிரம் நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
கலைமகளின் தலைமகனுக்கு இன்று பிறந்தநாள்.
http://www.zwani.com/graphics/happy_.../images/5a.gif
இணையத்தில் முதன்முறையாக இதய தெய்வத்தின் இந்த அரிய புகைப்படம்.
http://i1087.photobucket.com/albums/...5554332592.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
ரசிகர்களென்றால் இவருக்கு வாய்த்தது போலல்லவா இருக்க வேண்டும் என ஒவ்வொரு நடிகரும் உலகெங்கும் பொறாமைப் படும் அளவிற்கு தன்பால் உயிரை வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட கலைத் தெய்வமே ... என்னைப் பொறுத்த வரையில் உன் பிறந்த நாள் கலைக்குப் பிறந்த நாள் ...
உன் படங்களின் மூலம் பயனடைந்தவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைத்த நாள்
உன் படங்களின் மூலம் நடிப்பின் பல பரிணாமங்களைக் கற்றுக் கொண்டு அவற்றைத் தங்கள் நடிப்பில் வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் கிடைத்த நாள்
வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளவும் சவால்களை எதிர்கொள்ளவும் தைரியத்தை உன் படங்களின் மூலம் மக்களுக்கு தேவி கடாட்சம் கிடைத்த நாள்.
இப்படி கல்வி, செல்வம், வீரம் என மூன்று தேவியர்களின் அருளையும் ஒரு சேர உம்மிடமிருந்து ஒவ்வொரு ரசிகருக்கும் கிடைக்கக் கூடிய நாள்
எனவே இந்த நாள் தொடங்கி ஒவ்வொரு நாளையும் ரசிகர் தினமாகக் கொண்டாடுவோம்.
இந்த நாளில் நாம் சில சங்கல்பங்களை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
1. உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாத உத்தம சீலரை, நேர்மையை மட்டுமே அரசியலில் முதலீடாகத் தந்த சிறந்த மனிதரை, திரையில் மட்டுமே நடித்த உண்மையானவரை - நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தலைவராக ஏற்று அவர் வழி நடக்க உறுதி பூணும் கட்சிக்கே இனிமேல் நாம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
2. அவருடைய உழைப்பை அவருடைய பெயரை பயன் படுத்தி அவரைப் பின்னுக்குத் தள்ளும் தொலைக்காட்சிகளைப் புறக்கணிப்போம். இனிமேல் எந்தத் தொலைக்காட்சி நம் நடிகர் திலகத்தை முன் நிறுத்தி அவருக்கு முதலிடம் தருகிறதோ, எந்தத் தொலைக் காட்சி நடிகர் திலகத்தை ஒரு தலைவராக சித்தரிக்கிறதோ, எந்தத் தொலைக்காட்சி நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகளை முழுமையாக எடுத்துக் கூறுகிறதோ அந்தத் தொலைக் காட்சியைத் தான் நாமும் முதலிடம் தந்து பார்ப்போம்.
3. எந்த பத்திரிகை, எந்த வார அல்லது மாத இதழ், நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று முதலிடம் தந்து செய்திகளைத் தருகிறதோ, எந்த பத்திரிகை அல்லது மாத இதழ் அவருடைய திரையுலக வெற்றிச் சாதனைகளை இருட்டடிப்பு செய்யாமல் முழுமையாக தருகிறதோ, அந்தப் பத்திரிகையைத் தான் நாமும் முதலிடம் தந்து வாசிப்போம்.
4. எந்த அரசியல் வாதி நடிகர் திலகத்தின் தேசிய பங்களிப்பினை உணர்ந்து அதனைத் தன் உரைகளில் மறக்காமல் எடுத்துச் சொல்கிறாரோ எந்தத் தலைவர் நடிகர் திலகம் இந்த நாட்டுக்குச் செய்துள்ள தான தர்மங்களைப் பற்றி மக்களுக்கு சரியான முறையில் சொல்கிறாரோ, சுருக்கமாகச் சொன்னால் எந்த அரசியல் வாதி நடிகர் திலகத்தை தன்னுடைய தலைவராக ஏற்று அவர் வழி நடக்கிறாரோ, அவரையே நம் விழாக்களுக்கு அழைப்போம்.
5. எந்த கலையுலகப் பிரமுகர் நடிகர் திலகத்தின் பங்களிப்பினை உணர்ந்து அதனை மறக்காமல் தான் பங்கேற்கும் விழாக்களில் மறக்காமல் எடுத்துச் சொல்கிறாரோ, எந்த கலையுலகப் பிரமுகர் நடிகர் திலகத்தின் திரையுலக வெற்றிகளை உண்மையாய் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்களிடம் எடுத்துச் சொல்கிறாரோ அவரையே நம் விழாக்களுக்கு அழைப்போம்.
இந்த ஐந்து சங்கல்பங்களையும் ஐந்து கட்டளைகளாக ஸ்வீகரித்துக் கொண்டு நாம் செயல் பட்டோமானால் எதிர் காலத்தில் நடிகர் திலகத்தின் அனைத்து சாதனைகளும் மக்களிடம் சரியான முறையில் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. இது ஐந்து தான் என்று இல்லை. நம் நண்பர்களும் தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை வெளிப் படுத்தி அவற்றையும் இந்த கட்டளைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டினை சிவாஜி ரசிகர் ஆண்டாகக் கொண்டாடுவோம்.
குறிப்பு. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாக இந்தக் கொள்கைகள் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இவை கூறப் பட்டுள்ளன. அதற்கேற்ற படி இந்த பதிவின் வாக்கியங்களும் மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
-
டியர் வாசு சார்
சூப்பர் ஸ்டில் ... எங்கேயிருந்து தான் பிடிக்கிறீர்களோ...
பாராட்டுக்கள்.
-
பம்மலார் சார்
விழுப்புரம் மைந்தனைப் பற்றி மற்றோர் விழுப்புரம் மைந்தர் கூறியதை ஒரு விழுக்காடு கூட மறக்க மாட்டோம்.. பாராட்டுக்கள்.. சூப்பர் ... பொருத்தம் என்றால் இதுவல்லவோ பொருத்தம்...
-
நமது இதய தெய்வத்தின் 85வது ஜெயந்தியை முன்னிட்டு இன்று (1.10.2012) காலை ஜெயா தொலைக்காட்சி செய்திகளில் நடிப்புக் கடவுளுக்கு சூட்டிய புகழாரம் சுடச்சுட நம் அனைவருக்கும்.
http://www.youtube.com/watch?feature...&v=nwe4_seozdE
அன்புடன்,
வாசுதேவன்.
-
மெகா தொலைக்காட்சி, ஜெயா மேக்ஸ், ஜெயா நியூஸ், ஜெயா மூவீஸ், 7 மியூசிக், வசந்த் தொலைக்காட்சி அனைத்து சேனல்களும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ரிமோட்டைத் திருப்பினாலே எங்கும் தெய்வத்தின் திருமுகமும், அவரின் அட்டகாசமான பாடல்களும்தாம்.. அனைத்து சேனல்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஜெயா மூவிஸில் இந்த வாரம் நடிகர் திலகம் வாரமாக அதகளம் செய்கிறார்கள். இந்த வாரம் முழுதும் இரவு 9 மணிக்கு நடிகர் திலகத்தின் காவியங்கள் ஒளிபரப்பாகின்றன.
http://i1087.photobucket.com/albums/..._000000260.jpg
http://i1087.photobucket.com/albums/..._000006420.jpg
திங்கள் - தேனும் பாலும்
https://encrypted-tbn0.gstatic.com/i...GTa7V0jv1XgK_B
செவ்வாய் - மனிதரில் மாணிக்கம்
http://www.nadigarthilagamsivaji.com...Stills/166.jpg
புதன் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
http://www.hindu.com/cp/2011/03/20/i...2050401601.jpg
வியாழன் - மன்னவன் வந்தானடி
http://www.musicglitz.com/html/music...nthanadi/1.jpg
வெள்ளி - வாழ்க்கை
http://i4.ytimg.com/vi/wbdml8rfMfI/sddefault.jpg
சனி - தங்கப்பதக்கம்.
http://www.shotpix.com/images/99733254155907008668.jpg
-
happy birthday remembrances of our NT! Though not with us you will always feel from heaven that we are with you, our legend!Even at the last moment of our life, You only come to our eyes!!!
-
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தமிழ்க் கலாசாரத்தின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தமிழ்க் கடவுளே,
உன்னை நினைக்காமல் நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஒரு நாளும் சென்றதில்லை; இனி செல்லப் போவதுமில்லை!
உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு!!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தத்துவ ரீதியாய்ச் சொல்வார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டே இருக்கிறாய் ஒவ்வொரு புதிய ரசிகனின் மனதில். தமிழும், கலையும், உலகும் உள்ளவரை, ஒவ்வோர் நாளும், நீ புதிதாய்ப் பிறந்து கொண்டே இருப்பாய். புதிது புதியதாய் ரசிகனும் பிறந்து கொண்டே இருப்பார்கள்.
இருப்பினும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - யாருக்கு? தமிழுக்கு, கலைக்கு, அந்தக் கலைக்கடவுளுக்கு!
என்றும் உன் நினைவுடன்,
இரா. பார்த்தசாரதி