-
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
courtesy net
-
# பைபிளில் இயேசுவின் வார்த்தைகள் , பலருக்கும் பலவேளைகளிலும் பொருத்தமாகவே இருக்கும்..!
''தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை''
இயேசுவின் இந்த வார்த்தைகள் இப்போது எனக்கும் கூட பொருத்தமாகவே இருக்கிறது...!
ஆம்.. எம்.ஜி.ஆர். நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட “பரமபிதா” படத்தின்போது நடந்த பழைய கதைகள் என்னவென்று , நிஜமாகவே எனக்குத் தெரியாது..!
"பரமபிதா" இயேசுவின் கதை என்றுதான் இத்தனை நாள் எண்ணியிருந்தேன்...! ஆனால் , புதிய கதை ஒன்றை இன்று வாசித்தேன்...அது இதுதான்..!
# “பரமபிதா” படத்தயாரிப்பில் இருந்தபோது எம்.ஜி.ஆரைப் பார்க்க லயோலா கல்லூரியின் அப்போதைய முதல்வர் டிசூஸா என்பவர் வந்தாராம்...
அவரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர். ...
பேச்சு வாக்கில் “பரமபிதா” பற்றியும் பேசிக் கொண்டார்களாம்...
படத்தின் கதையை சுருக்கமாக டிசூஸாவிடம் சொன்னாராம் எம்.ஜி.ஆர்..!
ஆழ்ந்து யோசித்த டிசூஸா ,
அழுத்தமாகச் சொன்னாராம் :
“ கூடாது....! பாதிரியார் மனதில் சலனங்கள் வரக் கூடாது. நீங்கள் சொன்ன கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான்.... அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அவன் போகக் கூடாது...! அப்படிப்பட்டவன் பாதிரியாராகவும் வரவே முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது..” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாராம் டிசூஸா..!
அவர் சொன்ன கருத்தை சிலுவை சுமந்தது போல சில நாட்கள் மனதில் சுமந்து தவித்த எம்.ஜி.ஆர். , இரண்டாயிரம் அடிவரை எடுத்திருந்த “பரமபிதா” படத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு , தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டாராம்..!
[ நன்றி: கலைமாமணி கே.ரவீந்தர் (விழா நாயகன் எம்.ஜி.ஆர்) ]
# சரி.. அதை விடுங்கள்...! இயேசுவின் தோற்றத்தில் எம்.ஜி.ஆர். கனிவோடு அமர்ந்திருக்க , அருகே அமர்ந்து உணவருந்தும் கருணாநிதியைப் பார்க்கும்போது , ஏனோ இயேசு சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது...!
“ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் [ எதிரிகள் ]
அவன் வீட்டாரே.”
[மத்தேயு 10:36]
# இது கருணாநிதிக்கு மட்டும் அல்ல...!
நம் எல்லோருக்குமே பொருந்தும்..!
courtesy net
-
-
Thanks and wishes TO The Hindu Tamil Team
Quote:
Originally Posted by
ravichandrran
-
-
-
-
எம்ஜிஆர் 100 - இந்து நாளிதழில் வெளிவந்த விளம்பரத்தை பதிவிட்டமைக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார்.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' ஒளி பரப்பாக உள்ளது.
-
-