Quote:
ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்பு மகுடத்தில் மின்னிடும் வைரம் இந்தக் காட்சியே !
பணம் கையாடல் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் கலெக்டர் அலுவலக நேர்மை குமாஸ்தா ...உணர்ச்சிப் பிழம்பாக தன்னிலை மறந்து தனது மனைவியின் கலெக்டர் அந்தஸ்தையும் மறந்து '...... அந்த நம்பிக்கை உனக்கு இல்லாமெ போச்சே ஜானகி ..என்று கதறும் காட்சி எந்தக் கல்நெஞ்சையும் கரைத்துக் கலங்கடிக்குமே !!
ஜெமினியின் குமுறல் நமது இதயங்களை ஊடுருவி ஒருவகை சிலிர்ப்பை உண்டாக்கி நமது விழிகள் நம்மையும் அறியாமல் கண்ணீர் குளமாகும் மகோன்னதமான நடிப்பு!!