Originally Posted by
kaveri kannan
நடிகர்திலகத்தின் உடல்மொழி வரிசையில் அந்தத் தங்கச்சுரங்கத்தில் இருந்து அள்ள அள்ளக் குறையாத கட்டிகளை வெட்டி வெட்டித்தரும் அனைவரோடு என் சிறுகரமும்...
படம்: பாபு
பாடல்: இதோ எந்தன் தெய்வம்
உடல்மொழிக் கவிதை:
குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கள் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
உலகில் எங்கும் காணா அந்த அரிய கலைதேவன் நமக்காய் வந்தது நம் அதிர்ஷ்டம்...
2) படம்: படிக்காத மேதை..
பாடல் : ஒரே ஒரு ஊரிலே..
பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..
பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என
ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
கற்றதால் பெற்றதா ...பிறவியிலேயே இருந்ததா?
Nature OR Nurture?
NT is always a wonderful puzzle to me!
சில கேள்விகளுக்கு விடையில்லை!
சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதே அழகு!