17.1.2013
மக்கள் திலகம் அவர்களுக்கு
http://i48.tinypic.com/5ydg1v.jpg
உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன் .
வணங்கி உங்களின் பிறந்த நாள் இன்று மகிழ்வுடன் வரையும் மடல் .
அன்பு தெய்வமே
உலகமெங்கும் உள்ள உங்கள் அன்பு உள்ளங்கள் தங்களது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
உண்மையான உங்களது அன்பு உள்ளங்கள் எந்த பிரதிபலன் பாராமல் உங்களது பிறந்த நாளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .
உங்களால் பயன் அடைந்தவர்கள் , உங்கள் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , உங்கள் திருமுகத்தை
stamp அளவில் போடவும் மனமில்லாமல் ,அரசியல் சுய லாபத்துக்கு ,உங்கள் பெயரை - திருமுகத்தை மறைத்து , மறந்து ,வாழும் உள்ளங்களை ...
நீங்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது
பொன் பொருளை கண்டவுடன் .. வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர்கள் போகட்டுமே .
என் மனதை நானறிவேன் . என் உறவை நானறிவேன்
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .
எங்கள் இல்லங்களில் என்றென்றும் நீங்கள் விருந்தாளி .
நித்தமும் உங்கள் படங்கள் , உங்கள் பாடல்கள் எல்லா ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி கொண்டு வரு கின்றனர் .
எங்கள் அலை பேசியில் உங்கள் .. பாடல் -- திருமுகம்
எங்கள் மடி கணினியில் DESKTOP
உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
COMPUTER - DESKTOP -உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .
மையம் திரியில் உங்களுக்கென்று தனியாக ஒரு திரி நமது நடிகர் திலகம் ரசிகர்களின் மூலம் துவங்கப்பட்டு
2005 முதல் 2012 வரை இரண்டு பாகங்கள் முடிவுற்று
23-10-2012 மக்கள் திலகம் MGR PART -3 துவங்கி நேற்றுடன் முடிவுற்றது .
திரு ரவிச்சந்திரன் அவர்களால் மக்கள் திலகம் MGR
PART -4 உடனே துவங்கப்பட்டு வெற்றி நடை போடுகிறது
உங்கள் ஆசியுடன் விரைவில் உங்களது மாபெரும் வெற்றி படைப்பான உலகம் சுற்றும் வாலிபன் 40வது ஆண்டு நிறைவு விழாவில் புதிய சரித்திரம் படைக்க விரும்புகின்றோம் .
அன்பு தலைவா
இந்த ஆண்டு மார்ச் மாதம் உங்களது முதல் படமான சதிலீலாவதி வெளிவந்து 77 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . அதனை முன்னிட்டு உங்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு விரைவில் வர உள்ளது .
உங்களது புன்சிரிப்பு
உங்களது அழகு முகம்
உங்களது கம்பீர அலங்காரம்
உங்களது கண் அசைவுகள்
உங்களது காதல் பார்வை
உங்களது வாள் வீச்சு
உங்களது சிலம்பாட்டம்
உங்களது ராஜ நடை
உங்களது வெண் கலகுரல் வசனம்
உங்களது கனிவான பார்வை
உங்களது பொன்மனம்
உங்களது வீரமான நடிப்பு
உங்களது SHORT & SWEET பட காட்சிகள்
உங்களது லட்சிய வேடங்கள்
உங்களது நேர் மறையான சிந்தனைகள்
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
எங்களது நிரந்தர சொத்து - நீங்கள்தான் .
உங்களை வழி படும் எல்லோருமே எங்கள் சொந்தம்தான் .
உங்களின் அன்பு உள்ளங்கள்
வினோத் - ரவிச்சந்திரன் - செல்வகுமார் - சிவகுமார்
ஜெய்சங்கர் - கலியபெருமாள் - ராமமூர்த்தி
ரூப்குமார் - சைலேஷ் - மாசனம்
கணேஷ் - ஆரணிரவி - M .ரவி - மோகன் குமார்
CS குமார் -ரவிச்சந்திரன் - வின்சென்ட் - ராமு
மற்றும் பல நண்பர்கள் .