Originally Posted by
gopal,s.
முரளி,
நீங்கள் ராமதாஸ் அவர்களின் பதிவை நீக்கியது சரியாகவே இருக்கலாம். ஆனால் இது வரை எந்த அங்கத்தினரும் செய்யாத அநாகரிகமாய் ஒருவர் தன் படிப்பு தகுதியை சொல்லி மற்றவர்களை அவமான படுத்தி உள்ளார். பதிவின் தரத்தை விமரிசிப்பது தவறில்லை. ஆனால் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பு கொள்கிறேன். ஆனால் பணம்,படிப்பு இவைகளை வைத்து ,மற்றோரை அவமான படுத்தும் புது trend உருவாவதை கவனித்தீர்களா?இது வடித்தெடுத்த அயோக்யத்தனம்.கயமை.இதுவரை எந்த உறுப்பினரும் செய்யாதது.
ராமதாஸ் அவர்கள்,என்னை புகழ்ந்தும் உள்ளார்.இகழ்ந்தும் உள்ளார். ஆனால் என் பதில்கள் எல்லை மீறி அவர் தரத்தை தாழ்த்துவது போல இருந்ததே இல்லை. கிண்டல் பண்ணி இருக்கிறேனே தவிர ,,சீண்டியிருக்கிறேனே தவிர ,மற்ற படி சிவாஜி செந்தில் போல ,படிப்பு,பணம் இவற்றை வைத்து யாரும் யாரையும் விமர்சித்ததில்லை.
டாக்டர் செந்திலின் இந்த பதிவு ,நான் டாக்டர் ,நீயும் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால் என்னோடு மோது என்ற சவால் வேடிக்கையானது.விபரீதமானது.
புலிகேசி கரடியின் மீது விடுவது போல அம்பு விட்ட அர்ஜுனன் ,சரியாக கரடியின் தலையை கொய்த கர்ணனை பார்த்து,நீ ஷத்ரியனா என்று கேட்பது,மகாபாரத காலத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் செந்தில்?
இதை தாங்கள் அனுமதித்தால் ,திரிக்கே மோசமான முன் உதாரணம் ஆகி விடும்.சிவாஜி செந்திலுக்கும் ஒரு warning கொடுக்க பட்டே ஆக வேண்டும்.தொடர்ந்து சீனியர் அங்கத்தினர்களை சீண்டுவது போல ,தரமற்ற விஷயங்களை தூக்குவது,சமமாக பேசுவது,பட்டங்களை வாரி விடுவது என்று மோசமான அரசியல் செய்து வந்தார். தன்னை தானே self proclaimed leader ஆக எண்ணி.
இப்போது நான் சொல்கிறேன். டாக்டர் படித்த இவர் பதிவை விட ராமதாஸ் பதிவுகள் நேர்மையானவை.சுவையானவை. அவர் எல்லார் பதிவையும் படித்தே உள்ளார். சிலர் போல ,ஆ....காந்தியடிகள் இறந்து விட்டாரா என்று outdated ஆக பேசவில்லை.
இதில் எனக்கு சந்தோஷமே. என்னுடைய பதிவு எண் 9 ,நகைச்சுவையின் உச்சம் தொட, டாக்டர் செந்தில் எனக்கு உதவியுள்ளார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.