-
எம்ஜிஆர் படமும் வரலாற்று தகவலும் ......
மலைக்கள்ளன் - 1954
எம்ஜிஆர் மிக சிறந்த ஆளுமை கொண்ட நடிகர் . பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்ற பட்டமும் கிடைத்தது
குலேபகாவலி -1955.
இஸ்லாமிய கதையில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும் அபாரம் .
அலிபாபாவும் 40 திருடர்களும் 1956
முதல் தென்னிந்திய வண்ணப்படம் . எம்ஜிஆரின் பேரழகும் இயற்கை நடிப்பும் துள்ளல் காட்சிகளும் விறுவிறுப்பான வாள் வீச்சு காட்சிகளும் எம்ஜிஆருக்கு புகழ் தந்தது .
மதுரை வீரன் - 1956
எம்ஜிஆரை மதுரை வீரனாகவே வாழ்ந்து காட்டினார் . மதுரை மக்களின் செல்லப்பிள்ளை ஆனார் . வெள்ளிவிழா கண்ட காவியம் .
33 அரங்கில் 100 நாட்கள் . 1977 வரை இந்த சாதனைகளை யாராலும் தொடமுடியவில்லை .
தாய்க்கு பின் தாரம் -1956
சமூக படத்தில் புரட்சி செய்த எம்ஜிஆரின் வெற்றி படம் .
சக்கரவர்த்தி திருமகள் - 1957
எம்ஜிஆரின் அருமையான நடிப்பு .வெற்றி காவியம் .
நாடோடிமன்னன் - 1958
இமாலய வெற்றி . மக்கள் மனதில் திமுக . அண்ணனா , எம்ஜிஆர் முவரும் நிரந்தரமாக இடம் பிடித்த வரலாற்று காவியம் .
மன்னாதி மன்னன் - 1960
சினிமாவிலும் அரசியலிலும் தான் நிரந்தர மன்னாதி மன்னன் என்பதை அறிவித்த வெற்றி படைப்பு ...... Thanks Friends.....
-
எம்ஜிஆர்
சொத்து சேர்க்கவில்லை
வழக்கில் சிக்கவில்லை
நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
கண்ணீரை கண்டதில்லை
கூடா நட்பை அனுமதித்ததில்லை
சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
மகன்கள் மகள்கள் பேரன்கள்
பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை
மக்களை ஏமாற்றியதில்லை
தொண்டர்களை வெறுத்ததில்லை
நன்றி மறந்தவரில்லை
உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்
உலகமெங்கும் வாழும் மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை..... Thanks Friends...
-
மதுரை சென்ட்ரலில் கடந்த வாரம் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.புகழ்
பல்லாண்டு வாழ்க திரைப்படம் ஒரு வார வசூலாக ரூ.1,10,000/-,ஈட்டி சாதனை செய்துள்ளது.
தகவல் உதவி.மதுரை பக்தர் திரு.எஸ்.குமார்.... Thanks Friends.....
-
*MGR is Really a Blessed Soul!!!*
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.*
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை.? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை..??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்.? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை.! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்., "ஏன் இந்தப் பரபரப்பு.?"
அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
மஹா பெரியவர் மூன்று கி.மீ. தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
*"இவ்வளவு தானே.? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
*மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*
முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி., *"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*
*"அதனால் என்ன.? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்.!"* என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் பலர் அறிந்திருக்க நியாயம் இல்லை., *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்.! அந்த ஒரு சிலரில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.!*
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி.!
"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள் ~ பழனி — திருச்செந்தூர் — திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போக வேண்டியிருக்கு.! அதுக்கு தேக சிரமம்., கால விரயம்., பணச் செலவுன்னு ஆகிறது.
*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும் படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*
இவ்வளவுதானே., இந்த விஷயத்துக்காக என்னைக் கூப்பிட்டிங்க.? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதும்.? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க., *"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*
"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா., அதனாலதான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்.! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு"., என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்..!!*
*எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது., யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்.ஜி.ஆர். ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!*..... Thanks Friends....
-
http://i64.tinypic.com/1zgs4mv.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " வெளியான தேதி :11/11/1966.
வெளியாகி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
சர்க்கஸ் காட்சிகள் நிறைந்த படம். இந்த படம் வெளியாகி 28 நாட்களில் பெற்றால்தான் பிள்ளையா வெளியாகி வெற்றி நடை போட்டதால் பறக்கும் பாவை
அந்த காலத்தில் சுமாரான வெற்றியை பெற்றது .ஆனால் 1972க்கு பிறகு எப்போது வெளிவந்தாலும் அபார வெற்றி பெற்று வசூலை குவித்தது .காரணம் இந்த படத்தில் நெஞ்சை அள்ளிக் கொண்டு போவது போல் எம்.ஜி.ஆர். அழகாக தோற்றமளித்தார் .
புத்தூர் நடராஜ\னுடன் இரண்டு சண்டை காட்சிகள் மிகவும் பிரமாதம்.
இனிமையான பாடல்கள் . வண்ண பிரதிகள் அருமை. மெல்லிசை மன்னரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிக்கும்படியும், சர்க்கஸ் காட்சிகளில் ஆங்கில படங்களுக்கு இணையான இசையமைப்பு .சந்திரபாபு, தங்கவேலு ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் நல்ல கலகலப்பு .விறுவிறுப்பான காட்சிகள் அமைப்பு .
வசன ஆசிரியர் திரு.ஆரூர்தாஸ் தனது விமர்சனத்தில் சில எம்.ஜி.ஆர். படங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் , யானை படுத்தாலும் குதிரை மட்டம்
அதாவது வசூலில் சாதித்துவிடும் என்று கூறியுள்ளது இந்த படத்திற்கு (பறக்கும் பாவை ) மிகவும் பொருந்தும் .
திரைப்படத்தின் புகைப்படங்கள் உதவி : பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சி.எஸ். குமார் .
-
-
-
-
-