:clap: :clap:
ஆறு அதை
வென்றதாரு
ஊறாதவாறு
கொன்றதாரு
பாலாறு
வைகையாறு
ஊர் ஊராய்
சென்றாறு
மண்ணாறாய்
ஆக்கியதாரு
மூனாறு
பெயர்
வெச்சதாரு
பெயர் சொன்னவுடன்
கொச்சையாக்கி
சிரித்ததாரு...
-
கிறுக்கன்
Printable View
:clap: :clap:
ஆறு அதை
வென்றதாரு
ஊறாதவாறு
கொன்றதாரு
பாலாறு
வைகையாறு
ஊர் ஊராய்
சென்றாறு
மண்ணாறாய்
ஆக்கியதாரு
மூனாறு
பெயர்
வெச்சதாரு
பெயர் சொன்னவுடன்
கொச்சையாக்கி
சிரித்ததாரு...
-
கிறுக்கன்
ஆரு???
நம் ஊராரு வேறாரு!!!! :wink:Quote:
Originally Posted by pavalamani pragasam
அதுல நானும் நீரும் உண்டோ?
Quote:
Originally Posted by kirukan
பாலாறு வைகை மூணாறு
கர்நாடகத் தண்ணீர் வந்துவிட்டால்
வேறில்லை கோளாறு!
வரும்வரைதானே மண்ணாறு!
நிலைமை நான் புரிந்துகொண்டவாறு!
சரிதானே?
இல்லை வேறு விளக்கமுண்டா?
கட்டாயம் உண்டு...விதைததில் நீங்கள் வளர்ததில் நாங்கள் வினை அனுபவிக்க போவது எதிர்கால சந்ததி.Quote:
Originally Posted by pavalamani pragasam
வேறு விளக்கமும் உண்டு. அடையாறை அழுக்காறு(கூவம்) ஆக்கியது நாம்தானெ....உயிர் தரும் நதிகளுக்கெ விஷம் (ரசாயன கலப்பின் மூலம்)வைப்பவர்கள் தானே நாம்...Quote:
Originally Posted by bis_mala
:cry2:
Quote:
Originally Posted by bis_mala
Quote:
Originally Posted by kirukkan
எது எப்படிப் போனாலும் சென்னை பெருமைக்குரிய நகரம்தான்,
அதில் வாழ்வோரும் பெருமைபெற்றவர்களே.
எனவே:
கூவத்துக் குப்பையைக் கூட்டி அள்ளி
குற்றால அருவியாய் மாற்றிக் கொள்ள
ஆபத்தைக் காத்திடும் தொடர்வண்டிகள்
அதன்மேலே விட்டவர் சென்னைவாசி.
என்று சென்னைவாசியின் பெருமையைப் பாடினால்
அது பொருத்தமாக இருக்கக்கூடும், அல்லவா?
ரூபாய் நாணயக் குறியீடு.
புதிய நாணயக் குறியைப்
பொலிவாய் அமைத்த பெருமை - அதைப்
பதிய முந்தும் பொழுது -- அதுவும்
பைந்தமிழ் நாட்டுக்கு உரிமை.
நன்று.
அறம்பாடிய தமிழரிடை
அறம்பாடிய தமிழரிடை
அருங்குழவிக் கொலையா?
அடைதுயர்தான் களைந்திடுதற்கு
ஆவது நர பலியா?
பலர்பொன்நகை திருடியபின்
பருகியமது விருந்தா
நலம்சேர்தரும் மாத்திரைகளில்
நலிபோலியும் மருந்தா?
அகப்பொருள்தனை அறிவித்தவர்
அவரிடைமண விலக்கா?
மிகப்பொருள்வரும் வரன்பரிசினை
மேற்கொள்வதே இலக்கா!
கலைச்சாலைகள் தம்புகழ்கெடக்
காண்பொய்ச்சான் றிதழா
நிலைபுதுமா ணவன்மரித்திட
நிதமும் அடி உதையா!
கண்டைநிகர் திரைப்பாடல்கள்
கலவைமொழிக் கொலையா
பண்டைப்புகழ் பண்பாடு இவை
பலவும்கெட உலையா?