தன்னிலை விளக்கம்:பாகம்-2.
பாதசாரி ஒரு பூவா?
பாதசாரியின் பிரபந்தம் பாமரர்களுக்கும் புரியும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.சிலர் தமிழ் அடர்த்தியாக இருந்தது என்று குறிப்பிட்டாலும்,என் வகுப்பின் ஹிந்தி மாணவர்கள் கூட என் வாசிப்பில்,பாதசாரியின் சாராம்சத்தை உண்ர்ந்து கொண்டனர்(சில இடங்கள் தவிர).நான் சொன்ன பாமரர்கள் அந்த அளவில் தமிழ் குறித்த பிரசித்தம் அறிந்தவர்கள்.ஓவியத்தை பற்றிய உரையில் வழிந்த சர்ச்சையை நான் மீண்டும் கொணர விரும்பாததால்,என் புரிதல் குறித்து கொஞ்சம் வெளியிட வேண்டியுள்ளது.கலை என்பது கலைஞனுக்கும்,வாசகனுக்கும் ஒரு பாலம்.கருத்தும்,பொருளும் பரிமாற்றபடுவதே அதன் நோக்கம் என நினைக்கிறேன்.எனில்,கருத்தை சிலருக்கு மட்டும் புரியும் வகையில் சமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.கவிஞனோ,கலைஞனோ வாசகனுக்கேற்றவாரோ,பிறரின் வாய்வசைக்காகவோ ஆற்ற வேண்டும் என்பதும் என் கருத்தன்று.சொல்வது நல்கருத்தெனின் அஃது அனைவர்க்கும் போய்ச்சேரட்டுமே என்ற பார்வையுடையோன் நான்.அதே சமயம் எக்காரணம் கொண்டும் நெறிகளை மாற்றும் அவசியமும் இங்கில்லை.கலை என்ற சொல் நளினத்தோடு எளிமையும் புதுமையும் பூண்டுகொள்ள வேண்டுமென்ற ஒரே கருத்தே எனக்கு.நானோ,அல்லது யாரோவுமே தமிழை உலக அரங்கில் வைப்பது,அல்லது திருத்துவது போன்ற வீண் வேலைகளில் மூழ்கியில்லை.அதே சமயம் நான் திருவாளர்.பேரரசாக மாறவும் மாட்டேன்.இன்றைய சூழலில் கவிஞன் சில நொடிகளில் வாசனகனை குளிர்விக்கும் ஒரு கருவி.கருவிக்கோ தான் குளிர்வித்தது குறித்து கொஞ்சம் எக்காளம்,மலர் சிந்தும் பாங்கில் கொஞ்சம் பூரிப்பு.அவ்வளவே.நிச்சயமாக சிரவணன் நாடகத்தின் மூலம் இன்னொரு காந்தி கிடைப்பார் எனும் கருத்தில் தலையாட்ட விருப்பமில்லை.என் எழுத்துகள் ஒரு குடிகாரனை குடிக்காமல் செய்யும் என்பதிலும் நம்பிக்கை இல்லை.நானும் இன்பத்திற்கென(அதற்காக அர்த்தமற்று அல்ல)நீங்களும் சுவைக்கென விழியுருட்டுகிறோம்.சில சமயம் புரட்சியாய் எழுதுவது இதயத்தின் ஓரத்தில் படிந்து கிடக்கும் கொஞ்சம் நம்பிக்கையில்.என் எழுத்தின் மையல் இதுவே.நான் கந்தகம் அல்ல,காந்தம்.சயனைடும் அல்ல,சாக்லேட்டு.மிஸ்டு கால் அல்ல ரிங்டோன்.விசயத்திற்கு வருவோம்.(இது போன்ற எண்ண அதிர்வுகள் இத்திரியை வலைப்பூவாக முயற்சி செய்கின்றன என்பதற்கு மன்னித்துவிட தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்)வலைப்பூக்கள் ஒரு கருத்தையோ,பொருளையோ சார்ந்திருப்பதில்லை.முரட்டுத்தனமாக பலவற்றைப்பேசும் பஞ்சவர்ணத்தோடு நீள்கின்றன.அவற்றில் நண்பர்கள் பாராட்டுகிறார்கள்,ஆனாலும் அவை constructive criticismsஆக உருப்பெறுவதில்லை.சில வலைப்பூக்கள் எழுத வேண்டிய நிர்ப்பந்த்தத்தினை கட்டவிழ்க்கின்றன.பலபடத்தோன்றும் எல்லாவற்றினையும் விவாதிக்கும் அல்லது போதிக்கும் கூடங்களாக,டீக்கடை பெஞ்சுகளாக சில தேவையில்லாத விஷயங்களை most of the time ஆராய்கின்றன.நிறைய ப்ளாக்குகள் பாவமாய் விமர்சனங்களின்றி காய்கின்றன.நெத்தியடியாக கருத்துருக்கள் இல்லை.பொழுதுபோக்கு.ஆனால் என்னைப் பொறுத்தவரை நன் எழுத ஆரம்பித்த அதே ஆண்டில்,இதுவரை இல்லாத முயற்சியாக(பாதுகாப்பிற்கென எழுதும் வகையில்:i may be wrong too)பயணக்கட்டுரைகளில் என் பாணியை உருவாக்கிக்கொண்டிருக்கிறென்.இதன் மூலம் நான் எந்த புது தத்துவத்தைக் கண்டாயவில்லை.என்றாலும்,ஒரு சிறுவனாக முயற்சியாவது எடுத்திருக்கிறேன்.பயணக்கட்டுரைகள்(நான் படித்த ஏறத்தாழ பதினாறு எழுத்தாளர்கள்:கல்கி,கண்ணதாசன் தவிர)இந்த வடிவில் தான் எழுதினார்கள் என்பது வேதனை,கொடுமை.பயணத்தை பேருந்திலோ,ரயிலிலோ ஆரம்பிப்பார்கள்.நிச்சயம் நிலச்சரிவால் போகுவரத்து பாதிக்கப்படும்,பிறகு கஷ்டப்பட்டு டேக்ஸியில் நிர்ணயம் செய்த இடத்தை அடைவார்கள்.வழியில் இயற்கை எழிலை இரசிப்பார்கள்.அங்கே ஒரு வயசானவருடன் நட்பு ஏற்படும்.அவர்களின் உறவினர் யாருடைய துணையேனும் கொண்டு சுற்றுலா தொடங்கும்.தொடங்கிய மாத்திரத்தில் கடும் மழையோ,புயலோ,சரிவோ ஏற்படும்.அதனால் அவர்கள் விடுதியிலேயே தங்குவார்கள்.அங்கு வசதிகள் குறையும்.எல்லோரும் நான்காம்/ஐந்தாம் இரவில் மறுநாள் ஊர் செல்வதாக முடிவெடுப்பார்கள்,ஆனல் மறுதினம் சீதோஷ்ணத்திற்கு பிடித்த ஜலதோஷம் விலகி சரியாகும்.சுற்றுலாவில் கடைசி பகுதியில் மிகவும் அழகிய வானம்,ஆந்தக் கிரகமும் அனைவரின் பேனாவுக்கும் சிவப்பாகத்தான் தெரியும்,பிண்ணனியில் அருவியோ மலையோ இருக்கும்.ரொம்ப அழகு,நிறைவு,சுபம்.இது தான் வரையறை.அத்தனை எழுத்தாளர்களும்(ராமகிருஷ்ணன் உட்பட)இந்த மாவைத்தான் அரைத்தார்கள்.பயணம் என்பது மனதளவில் ஒரு ரசாயன மாற்றம் என்று நான் கருதுகிறேன்.வேரிலிருந்து பூவுக்கு செல்லும் நீர் ரொம்பவே பழக்கப்பட்டது.ஆனால்,பாதசாரி.... பூவிலிருந்து கனி முளைத்து மீண்டும் அதன் மீதங்கள் வேர் மீது படர்ந்து அனுப்பிய நீர் பன்மடங்காக பெருகும் சுவை ஒத்து.
"பூக்களின் நறுமணம் ஊர்புகழும்
வேர்களின் புழுக்கம் யாரற்வார்?"
(-இயக்குநர் சேரன்)
அவற்றுள் நான் இரண்டாம் ரக பயணி,நகராமல்.அதற்கென்றே நான் காகிதமாக அடைகாக்கும் பாதசாரிக்கு நண்பன் அபிலாஷை வரையச்சொன்ன படம் பேனாவை மரமென உருவகித்து அது வேர் பரப்புவதுபோல,நிறங்களின் நிரல் பூசாமல்,கறுப்பாய்.முடிக்கும் தறுவாயில் இந்த உரையின் கடைவரியாய் ஒரு கவிதை,கட்டுரை வடிவில்.
எத்தனை மெத்தப் படித்தவர்கள் நீங்கள்?மரங்கள் நகர்வதில்லை என்கிறீர்களே!வேர்கள் தான் பாதசாரித்துக்கொண்டிருக்கின்றனவே.
ஆமாம்,பாதசாரி (வலைப்)பூ அல்ல,வேர்.