Sadly I can't follow the serial. :(.
Printable View
Sadly I can't follow the serial. :(.
anbukkathir,
Dont u have jayatv at the place where u stay?
I stay in a hostel.. TV room irukku .. but Jaya TV reception is worst and moreover the timings are during my dinner time.
March 6th
_________
இன்றைய தொடர் முழுவதும் அஷோக்கைச் சுற்றி அமைந்திருந்தது.
வெங்கடராமன் எப்படி ரமணர் ஆனார் என பாகவதர் கூறிக்கொண்டிருக்கிறார். உறவினர் ஒருவர், 'அருணாசலம்' என்ற பெயரிட்ட இன்னொருவரை விளிக்க, அந்த வார்த்தை அவருள் பெரிய மாறுதலை உண்டாக்கியது. திடீரென ஆன்ம தாகம் பெருக்கெடுக்க, அதற்கு விடையும், அதன் இலக்கையும் தேடத் துவங்கினார். சிறுவயதிலேயே அவர் சமாதிநிலையை அனுபவித்துள்ளார். அதைப் பற்றி பிறரிடம் கூறத்தான் என்ன இருக்கிறது? அதனால் அதைப் பற்றி வீட்டிலோ வெளியிலோ விஸ்தாரிக்கவில்லை. 'அருணாசலம்' என்ற வார்த்தை கேட்ட மாத்திரம் நிகழ்ந்த உள்ளுணர்வைத் தொடர்ந்து, 'தன்னைத் தேடவேண்டாம்' எனக் கடிதம் எழுதிவைத்து விட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இதைப்போலவே தங்களுடைய மகனும் சென்றுவிடுவானோ என்ற எண்ணம் நாதன் தம்பதிக்கு மேலிடுகிறது. அஷோக் திருவண்ணாமலை சென்றதன் காரணம், நோக்கம் குறித்து பாகவதர் அவனிடம் கேட்டு தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறார் நாதன்.
அஷோக் மனம் திறந்து உரையாடும் ஒரே நபர் பாகவதராக இருக்க, திருவண்ணாமலையில் அவனுக்கு நடந்த அதிசயத்தையும், அங்கு சென்ற காரணத்தையும் பாகவதருக்கு விளக்குகிறான்.
கல்லூரி விட்டுத் திரும்பும் போது, யாரோ ஒருவர் இன்னொருவரை "கைலாசம்" என்று கூப்பிட, இவனுக்கு பொறிதட்டினார் போல் உடம்பு சிலிர்க்கிறது. அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரம், சகல நாடி நரம்பும்
மலர்ந்து ரோமாஞ்சனம் அடைகிறான். 'நான் பூமிக்கு வந்திருக்கும் சுற்றுப்பயணியைப் போல் உணர்ந்தேன். இந்த உடல் நானில்லை என்று உணர்ந்தேன். என் உயிரை உடலினின்று தனித்து உணர்ந்தேன். உடல் எனக்கு கட்டுண்டு என்னுடன் நடந்து வர, நான் திருவண்ணாமலையில் இருப்பதை உணர்ந்தேன். தேவைக்கு, நேரத்திற்கு, யாராரோ எனக்கு உணவளித்தனர், தங்கும் இடம் கொடுத்தனர். திருவண்ணமலை
அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. க்ஷண நேரத்து மின்னலைப் போல் வந்து போயிற்று"
"உன்னை நீயே ஒரு உன்னத நிலைக்காக தயார்படுத்திக்கொண்டிருக்கிறாய். you are gifted. உன்னுள் ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. அமைதியாக இரு" என பதிலளிக்கிறார் பாகவதர்.
அவன் மேலும் தொடர்கிறான். "இதுமட்டுமல்ல, ஒரு பெரிய அதிசயமும் நிகழ்ந்தது." மரத்தடியில் ஒரு மனிதர் சாய்ந்து படுத்திருக்கிறார். அவ்வழியே செல்லும் அஷோக்கை தடுத்து நிறுத்தி, "ஏன் அலைந்துகொண்டே இருக்கிறாய். ஓர் இடத்தில் அமைதியாய் இரு. சும்மா இருத்தலே சுகம். வெளியே அலைந்து தேடுவதை விடுத்து, உன்னுள் ஆழ்ந்து தேடிப்பார். ஒரு பிச்சைக்காரன் பாறையின் மேல் அமர்ந்து தினமும் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் ஒரு நாள் பாறையை தோண்டிய போது அங்கு புதையலே இருப்பது தெரிந்தது, அது தெரியாமலே, இத்தனை நாள் அவன் வெளியில் பிச்சை எடுத்திருக்கிறான், அது போலத்தான் வெளியே அமைதி தேடும் முயற்சி. உன்னைத் தேடி உன் வீட்டார் வருவர். உன் வீட்டிலேயே இரு. அங்கேயே உனக்கு விடை கிடைக்கும்." என்று கூறுகிறார். கூறிய மறுநொடி, மறைந்தும் விடுகிறார். அடையாளமாக அவர் அணிந்த ருத்ராக்ஷம் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
"உன்னுள்ளும் வெளியேயும் நடப்பதை அமைதியாய் கவனித்துக்கொண்டிரு. கடவுள் நிச்சயம் வழி வகுப்பார்" என்று ஆறுதல் கூறுகிறார் பாகவதர். "இதையெல்லாம் நான் யாரிடம் சொல்ல முடியும்? இங்கு என்னை யார் புரிந்து கொள்வார்கள். அதனால் நான் இதையெல்லாம் வெளியே கூறிக்கொள்வதில்லை" என அஷோக் முடிக்கிறான்.
வசுமதியிடம் பேச்சு கொடுக்கும் பாகவதர், நீ பிள்ளையை சுமந்திருக்கும் போது என்னென்ன படித்தாய் எனக் கேட்கிறார்.
சத்புத்திரன் வேண்டும் என்றெண்ணி பாகவதம், இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை படித்ததாகக் கூறுகிறாள் வசுமதி. சீமந்தம் (பிள்ளை சுமக்கும் தாய்க்கு ஏழாம் மாதம் நடக்கும் விழா) முடிந்த அன்று நள்ளிரவு வீட்டில் ம்ருதங்க ஒலியும், நாதஸ்வர ஒலியும் கெட்டதாகவும், எங்கிருந்து வருகிறது என ஆராய முற்பட்டபோது உடனே அவ்வொலிகள் நின்றுவிட்டது என்று அவள் முன்பு கூறியதையும் நினைவு படுத்துகிறாள்.
சத்புத்ரன் நீ தானே வேண்டிக் கேட்டுக்கொண்டாய். உனக்கு இறைவன் வரம் அருளி சத்புத்ரன் வழங்கியிருக்கும் போது, 'சாமான்ய புத்ரன்' கிடைக்க அருள் செயவில்லை என்று நீ முறையிட்டால் எப்படி சரியாகும், உன் ஆன்ம பலத்தை வளர்த்திக்கொள். உனக்கு வாய்க்கப்பெற்றிருக்கும் மகன் சாமன்யன் அல்ல என வசுமதியை மெதுவாய் தயார்படுத்துகிறார் பாகவதர்.
வார்த்தைகளுக்கும் ஒலிகளுக்கும் பலம் அதிகம். நல்ல வார்த்தைகளும் ஓலிகளையும் பகிர்ந்துகொள்ள முடியாது போனால், மௌனமாய் இருப்பது நலம் என்று கருத்தைப் பரிமாறும் சோ, இறைவனிடம் மந்திரங்கள் ஜெபிக்கும் போது வார்த்தைகளை மிகச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்றார்.
த்வஷ்டா என்ற தேவதச்சன் யாகம் செய்து இந்திரனைக் கொல்ல ஒரு மகன் வேண்டினான். மந்திரம் உச்சரிக்கும் போது உச்சரிப்பு தவறியதால் அவனுக்கு கிடைத்ததோ இந்திரனால் கொல்லபட்ட மகன். ஆகவே இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து மந்திரம் சொல்லும் போது, மிகவும் கவனமாக பிரார்த்திப்பதும், உச்சரிப்பதும் அவசியம்.
கொசுறு தகவல்: நம் வீடுகளில் விரத பூஜைகளுக்கு மந்திரம் ஓதி சங்கல்பம் எடுத்து செய்யும் போது (குறிப்பாக வரலக்ஷ்மி விரதம், விக்னேஸ்வர பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை) கடைசியில் ஒரு மந்திரம் சொல்லி முடிப்பது வழக்கம்.
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் சுரேஷ்வரீ
யத் பூஜிதம் மயா தேவி பரிபூரணம் ததாஸ்து மே
இதன் பொருள், 'இப்பூஜையில் ஏற்பட்டிருக்கும் மந்திர தவறுகள், செயலால் அல்லது பக்தியின் குறைவால் ஏற்பட்டிருக்கும் குறைகளை மன்னித்து, பரிபூர்ண பலன் அருள்வாய்' என்பதாகும்.
(வளரும்)
http://www.isaitamil.net/forums/f67-sun-tv-serial-zone/Quote:
Originally Posted by anbu_kathir
u can watch here if time permits
wowQuote:
Originally Posted by Shakthiprabha
:ty:
------
ஏன் இப்படி பறந்து கொண்டிருக்கிறாய்?
ஓ! அதுவா
பறக்க வேண்டுமென சிவனிடம் வரம் வேண்டினேன்.
இப்படித் தந்துவிட்டான்
I wont be seeing today's episode :(
(can someone plz write a jist about it?)
I shall write about yesterdays episode asap :(
என்ன சொல்லவரீங்க? புரியலை :?Quote:
Originally Posted by aanaa
எது தேவையோ அதை தருகின்றான்.
தேவையில்லாமல் பேராசைப்பட்டு உள்ளதையும் இழக்கின்றான்
March 9th
_________
வையாபுரியின் அடியாள் சிங்காரம் செய்த கொலையை கண்ணால் கண்ட சாக்ஷியாக தான் இருப்பதாக கூறுகிறான் அஷோக். இந்த வழக்கு வழக்காடுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால், தான் அஜாராவது திண்ணம் எனக்கூறுகிறான். நாதன் அவனை கடிந்து கொள்கிறார். அவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு சில நேரங்களில் சில இடையூறுகளை சமாளிக்க வையாபுரி போன்றோரின் உதவி தேவைப்படுவதால், வையாபுரிக்கு எதிராக நிற்க தன் மனசாட்சி இடம் கொடுக்க மறுப்பதாக தெரிவிக்கிறார்.
'நியாயம் நேர்மை நியதி பண்பு ethics, morality' எனப் பலச்சொற்களை தன்னுள் அடக்கிய சொல் 'தர்மம்' என நடுவில் புகுந்து விளக்குகிறார் சோ. அவரவர்கள் தமக்கென வேறுபட்ட தர்மங்கள் வகுத்துக் கொள்கின்றனர். "இது தான் தர்மம் என்றோ நான் தான் தர்மம்" என்றோ, தர்மம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 'இது தான் தர்மம்' என புதிதாய் யாரும் போதிப்பதில்லை. தொன்றுதொட்ட காலமாய், பெரியவர்கள் (வயதில் பெரியவர்கள் அல்ல, அறிவிற் பெரியவர்கள்) வலியுறுத்தி வந்ததை தர்மம் எனக் கடைபிடித்து வருகிறோம்.
கர்ணன் நட்புக்குத் தலை வணங்கி, துரியோதனனுக்கு துணை நிற்பதை தர்மம் எனக்கருதினான். குந்தி அவளை அன்னை என்று அறிமுகப்படுத்திக்கொண்ட போது "ஆற்றில் தவழ்ந்து வந்த என்னை தழுவி எடுத்த தேரோட்டியின் மனைவியே என் தாய்" எனப் பகர்கிறான். அன்பின் காரணமாய் அதிரதன் மனைவிக்கு கர்ணனைக் கண்டதும் மார்பகத்தில் பால் சுரந்ததாம். எப்பேர்பட்ட அன்பு! விபீஷனனின் தர்மம் தர்மத்தின் பக்கம் நிற்பதே என்றால், கும்பகர்ணனின் தர்மம், தன் தமையனுக்கு துணை நின்று அவனுக்காக உயிர் நீப்பது. இப்படி அவரவர் தம் தர்ம எல்லைகளை, நியாயங்களை தாமே வகுத்துக்கொள்கிறார்கள். அவரவர்க்கென "ச்வதர்மா" வை வகுத்துக்கொண்டு அதன்படியே நடக்கின்றனர்.
ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது , தனிப்பட்ட மனிதனின் தர்மப்படி நியாயமாக தோன்றாவிடினும், ராஜதர்மத்தின் படி முறையானதே. ராஜாவின் மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத போது அந்த அரசின் ஆணை பெருமளவு மதிக்கப்பெறாது. அரசின் தரம் குறையும், அரசு கவிழும். அரசு தர்மத்தை நிலை நிறுத்த சிதையை விட்டு பிரிந்து வாழ்வதே தர்மமாக ராமன் கருதினான்.
கல்லூரியில் அஷோக் சிக மாணவர்களால் சீண்டிவிடப்படுகிறான். 'நீ ஏன் புத்தகம் கொண்டுவருவதில்லை" என்றால், "கீதை, குர்-ஆன், பைபிள் போன்ற புத்தகங்களைத் தவிர மற்றவை எதுவும் எனக்கு குப்பைக்கு சமானம் அவற்றை நான் புத்தகங்களாக கருதுவதில்லை" என்று கூறுவதோடில்லாமல், குப்பை என்றால் எரித்துவிடுவாயா என்ற கேள்விக்கு அதை எரித்து சாம்பலாக்கி தன் பதிலை ஊர்ஜிதப்படுத்துகிறான். இதனால் அவன் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறான்.
An after thought:: இயல்பான மனநிலையைத் தாண்டிய plane or சிந்தனை ஓட்டம் உடையவர்களுக்கு பொது ஜனத்துடன் பழகுதல், இருத்தல், அவர்களுடன் லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு இன்புறுதல், இதெல்லாம் மிகக்கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஞானநிலையை எய்திவிட்டால், அவர்கள் பொது ஜன மனஓட்டத்துக்கு கீழிறங்கி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆச்சார்யர்களாக, குருக்களாக, மஹான்களாகத் திகழ்கின்றனர். வேறு சிலர், காடுகள் மலைகள் என தனிமையைத் தேடி, அங்கு சித்தர்களாக வாழ்ந்து நித்யானந்தம் அனுபவிக்கின்றனர்.
உலகத்தோடு ஒட்டொழுகல் கடினம் என்பதாலேயே, ஞான நிலையை நோக்கி படிகள் எடுத்து வைப்பவன், பெரும்பாலும் தனிமையை நோக்கியே பயணிக்கிறான்.
(வளரும்)