இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையே என்பன் ஓடிவந்தே.
imaikkum vinaivazhiyE adum kaalan, enai nadunga
azhaikkum pozhuthu vandhu, 'anchal' enpaay! aththar chiththam ellaam
kuzhaikkum kaLapak kuvimulai yaamaLaik kOmaLamE!
uzhaikkum pozhuthu, unnaiyE annaiyE enpan OdivandhE
