Originally Posted by pammalar
திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.
விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".
பெருமிதத்துடன்,
பம்மலார்.