COURTESY : RAGAVENDRAN SIR
http://i501.photobucket.com/albums/e...psbd561412.jpg
Printable View
COURTESY : RAGAVENDRAN SIR
http://i501.photobucket.com/albums/e...psbd561412.jpg
THIS PICTURE WAS TAKEN IN AN OUTDOOR SHOOT - NAAM PIRANDHA MANN
http://i501.photobucket.com/albums/e...ps5f0e8002.jpg
PUNCH DIALOGUE - EVERY FRAME THERE IS A PUNCH !
http://www.youtube.com/watch?v=UKsutLYWnYc
PUNCH DIALOGUE - EVERY FRAME THERE IS A PUNCH !
http://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA
Mr RKS,
Pls inform which movie shotting spot the paper cutting published by you.
Regards
நடிகர் திலகம் நினைவுநாளையொட்டி மதுரை சிவாஜி காமராஜ் கல்வி அறகட்டளை சார்பில் மாணவிக்கு உதவி வழங்கப்பட்டது !
http://i501.photobucket.com/albums/e...ps9e274c0f.jpg
“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!” - Thanks to Mr. Usha Deeepan for this article - A true and honest attempt to showcase the talent of Nadigar Thilagam
http://i501.photobucket.com/albums/e...ps289e1462.jpg
மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது, அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது.. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்தி, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது அவர் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று இல்லை.
அவரின் படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் வராது. .வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள்.
ஸ்டார் என்றால் அது அவர்தான். எட்ட முடியாத தூரத்திலிருந்தவர்.
அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள்.
அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.
அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்கி, கதையை உருவகித்து, காட்சிகளை அமைத்து, அவரை நடிக்க வைத்து பார்த்துப் பார்த்து ரசித்தார்கள். காமிராவை நிறுத்தத் தவறி, கட் சொல்ல மறந்து, மெய் விதிர்த்து நின்றார்கள். அவரும் இந்த எதிர்பார்ப்பு அறிந்து ஆசை ஆசையாய் நடித்தார். அச்சு அசலாய் வாழ்ந்தார்.
இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல பாவனை செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் பரிதாபக் காட்சிகள்.
இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது. பரிசை வாங்கும் நடிகருக்கே நான் என்ன செய்தேன்னு இதைக் கொடுக்கிறாங்க என்கிற வியப்பு.
அதே நடிகர் நடிகர்திலகத்தை நினைத்துக் கொண்டாரானால், கை நீட்டி அவருக்கான பரிசை வாங்க முடியுமா? மனசு வெட்கப்பட வேண்டுமே? அதுதானே நியாயம்?
ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு பாராட்டிய, வரவேற்பளித்த, பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன?.
மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் அவர். ஆசை ஆசையாய் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம், துடிப்பு அவருக்கு.
மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது.
தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும்.
அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.
http://i501.photobucket.com/albums/e...psced7601d.jpg
விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள்.
இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான, உடனடி நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள்.
உடனேயேவா கணத்தில் ஒரு நடிகரால் இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார்
நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் நடிகர்திலகம்..
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது தந்தை பெரியார் என்று சொன்னார்.
வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே.
பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.
மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.
யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். எத்தனை அடக்கம் பாருங்கள்.
ஒரு சிறந்த கலைஞன் என்பவன் மனதளவில் குழந்தையைப் போன்றவன் என்பது நடிகர்திலகத்தைப் பொருத்தவரை அத்தனை நியாயம். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம்.
அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது, நன்றாய் இல்லாமல் போனது அல்லது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. திருப்தியில்லாமல் பார்த்து வைத்தார்கள் ரசிகர்கள்.
ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை. இன்றுவரை அதுதான் நின்று நிலைக்கவும் செய்கிறது.
பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய கிழவர் வேடத்திலே இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். அந்தப் பிரின்டெல்லாம் இன்று இருக்கிறதோ இல்லையோ?
இந்த இடத்தில் நான் நினைவுபடுத்தித்தான் பலருக்கும் தெரியவரும் என்பதே என் எண்ணம்.
நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.
திரு எஸ்.வி.ரங்காராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என் நம்பியார், பாலையா, சகஸ்ரநாமம், டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம்..
அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.
இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை.
தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன.
அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற பெருமூச்சை ஏற்படுத்தின.
அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது.
சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை.
ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம்.
சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.
வேறு வழியில்லாமல் சிலதைப் பார்த்து வைக்கிறார்கள் பொழுது போவதற்கான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது.
சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம்.
நடிகர்திலகத்தின் படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது.
ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே!
எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார்.
கடைசிவரை தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை.
விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.
திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.
போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை.
மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள்.
அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.
மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள்.
இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார்.
ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான்.
சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
காலம் எத்தனை கடந்தாலும், ஒரு பாகப்பிரிவினை கன்னையாவையும்,
பச்சை விளக்கு சாரதியையும்,
பாவ மன்னிப்பு ரஉறீமையும்,
ஒரு பார்த்தால் பசி தீரும் பாலுவையும்,
ஒரு பாசமலர் அண்ணனையும்,
படித்தால் மட்டும் போதுமா முரட்டு கோபாலையும்,
பலே பாண்டியா பாண்டியனையும்,
இருவர் உள்ளம் செல்வத்தையும்,
ஒரு கை கொடுத்த தெய்வத்தையும்,
தெய்வப்பிறவி மாதவனையும்,
பாலும் பழமும் டாக்டர் ரவியையும்,
நவராத்திரி ஒன்பது நாயகர்களையும்,
வேறு யாரையும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத கம்பீரக் கர்ணனையும்,
கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.யையும்,
வீரபாண்டியக் கட்டபொம்மனையும்,
மோட்டார் சுந்தரம் பிள்ளையையும்,…
உத்தமபுத்திரன்,
தெய்வமகன் க்ளாசிக்கையும்,
உயர்ந்த மனிதன் தொழிலதிபர் ராஜூவையும்,
கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்தையும்,
வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபய்யரையும்,
தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும்,.இன்னும் எத்தனையைத்தான் சொல்லிக் கொண்டே போவது….எதை விடுவது….? இதிலேயே நிறைய விடுபட்டிருக்குமே?
யாரேனும் மறக்க முடியுமா இவைகளை? மறந்தால் அது ஆழ்ந்த ரசனைக்கு அர்த்தம்தான் ஆகுமா?
இந்த வேடங்களில் தன்னை ஆழ நிறுவியிருக்கும் அவரை எந்த நடிகர்கள் நெருங்க முடியும்? நான் நெருங்கிவிட்டேன் என்று இன்றுவரை யாரும் சொன்னதில்லை.
அவரது ரசிகர்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டதில்லை. அதுதானே உண்மை?
தொழிலதிபர் ராஜூவாக வந்து என்ன பாடு படுத்தியிருப்பார்?
நாகையா பணி ஓய்வு பெறும் அந்த ஒரு காட்சி போதாதா மனதை உருக்க?
ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து கொண்டு, ஒரு நடைபிணமாய், எந்தச் சந்தோஷமும் வாய்விட்டு, மனம் விட்டு அனுபவிக்க முடியாத ஒரு கௌரவமான தொழிலதிபராக அந்த கண்ணியமான வேஷத்தில் வேறு யாரால் அப்படிப் பரிணமிக்க முடியும்?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே….பாட்டுக் காட்சி ஒன்று போதாதா?
சௌகாரோடு சண்டையிடும் அந்த உச்சக்கட்ட காட்சியில்தான் என்ன ஒரு ஸ்டைல், பாடிலாங்வேஜ், எத்தனை முகபாவங்கள்….நெக்லஸ் தொலைந்து போய்த் தேடும்போது கிடைத்து, சிவகுமாரை அடிக்கும் காட்சியில்,நாமும் ரெண்டு அடி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்குமே அய்யா…!
பிறவி நடிகனாய் இருந்தால்தானய்யா அப்படி அமையும்....வேறு எந்தக் கதாநாயக நடிகராவது இந்த அளவுக்குத் திருப்தி தந்திருக்கிறார்களா இன்றுவரை? அந்த இமயத்தை யார்தான் நெருங்க முடியும்?
யாரும் எதையும் மறக்க முடியுமா? மறந்தால் அது ரசனை ஆகுமா?
அது அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் துரோகமல்லவா அது?
நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் இடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை. அதுதான் சத்தியமான உண்மை. நிரப்பவும் முடியாது.
அதற்கு ஒரு கச்சிதமான முகம் வேண்டும் முதலில்.
பரந்த நெற்றி.
அளவான மூக்கு.
கச்சிதமான தாடை.
பொருத்தமான உதடுகளைக் கொண்ட மொழி பேசும் வாயமைப்பு.
கதுப்புக் கன்னங்கள்.
எந்த விக் வைத்தாலும் பொருத்தமாய் உட்கார்ந்து கொள்ளும் முக அமைப்பு.
அந்த முகத்தில் வீற்றிருப்பதனாலேயே தனக்கு ஒரு பெருமை என்பதுபோன்றதான் தோற்றம் தரும் அழகு. யாருக்கு வந்தது இந்தக் கச்சிதம்?
http://i501.photobucket.com/albums/e...ps77af278a.jpg
என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.
பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்?
அது பல்லாயிரக்கணக்கானவர்க்குச் சமமாகாதா? என்னைப் போன்ற சிலரின் மனதில் அவர் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் சத்தியம்.
யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று.
முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான்.
இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான்.
அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங்களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரது பண்பட்ட ரசிகர்களின் சார்பில் 2014 ஜூலை 21 ம் தேதியின் அவரது நினைவு நாளில் ஆத்மார்த்தமான அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.
Jaihind !
Quote:
என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.
பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்?
At every heart beat, eye twinkle, pulse and breathe...... millions keep on thinking about him.....as the definitive dictionary and beacon of acting...till this world exists!
In creating a rerun record, KARNAN remains at peak as a 'never before and never again' phenomenon keeping other movies following the footsteps of Karnan only. Karnan's stupendous success only opened the floodgate for the producers to venture upon presenting the old classics in new technical formats in a profitable way. In the history of Tamil Cinema no other movie can ever come closer to the level of genuine success digital Karnan enjoyed with the public thanks to the magnetic charisma and mesmerizing depiction of Karnan by NT as the real crowd puller to theaters simultaneously all over Tamil Nadu. Even as the legend is not with us, NT still remains the most bankable Box Office icon and the role model to show way to other actors too to try their level of remembrance in the hearts and minds of fans!!
தேவை கருதி மறுபடி இங்கே
சிலருக்கு ஏன் என்பது புரியும்
http://i157.photobucket.com/albums/t...psed1199a5.jpg
நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்
வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்
குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்
உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்
பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்
உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்
பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது
திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இல்லை எனவே அதுபற்றிய விபரம் என்னிடம் இல்லை
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 186
தேடி வந்த அழைப்பு
https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 187
திரை உலகில் அதுவும் தமிழ் திரை உலகில் இது போல பல அதிசயங்கள், எவராலும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை அடிக்கடி நடிகர் திலகம் அவர்கள் செய்து காட்டியதால் தானே மற்றவர்களுக்கு அவர் மீது அப்படி ஒரு வயிதெரிச்சல் !
நாம் இங்கு குண்டு சட்டியில் குதிரை ஒட்டிகொண்டிருக்க இவன் மட்டும் என்னதான் நாம் சதி செய்தாலும் உலகளவில் புகழ் பெருகிறானே என்ற பொறாமை தானே இன்று வரை தொடர்கிறது !
என்றைக்கு நாம் விருதை தேடி போனோம் ? அங்கிகாரமும், பாராட்டும், பட்டமும் நம்மை அல்லவா தேடி வந்தது 1952 தீபாவளி முதல் !
நாம் என்றைக்கு நமக்கு நாமே மானியம் விட்டுகொண்டோம் ? இன்று வரை நாம் அதை செய்வதில்லை !
எட்டுதிக்கும் தேடி வந்து பாராட்டப்பட்ட ஒரே நடிகர் அவர் காலத்தில் நடிகர் திலகம் மட்டுமே என்பதை உலகறியும் என்பதை ஆதார ஆவங்களுடன் நிரூபிப்பவர் நாம் ! அதன் வழியில் இதோ !
நடிகர் திலகத்துடன் நடித்ததால் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்கள் !
1) சரோஜா தேவி - கவர்ச்சி பதுமையாக வலம் வந்தவர் - நடிகர் திலகத்துடன் இனைந்து பாலும் பழமும் ,பாகபிரிவினை, இருவர் உள்ளம், புதியபறவை, தேனும் பாலும் படங்கள் - நடிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவருக்கு வந்த வாய்ப்பு கல்யாணபரிசு, குலவிளக்கு, மற்றும் பல படங்கள்.
2) ஜெயலலிதா - சற்று கூடுதல் கவர்ச்சி பதுமையாக பயன்படுத்தப்பட்ட நடிகை - நடிகர் திலகத்துடன் நடித்த படங்கள் தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. மற்ற நாயகர்களுடன் நடித்ததை விட அதிக 100 நாட்கள் இவர் நடிகர் திலகத்துடன் நடித்தபோதுதான் கிடைத்தது, சிறந்த நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது - தெய்வமகன், கலாட்ட கல்யாணம், ராஜா என்ற நேரம் போக்கு படங்கள் நடித்து பெரு வெற்றி பெற்றாலும் அதை விட பெரு வெற்றி பெற்ற படங்கள் - எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, அவன்தான் மனிதன் - அன்பை தேடி, பாட்டும் பாரதமும் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பில் பரிமளித்து தேர்ச்சி பெற்றார் - சூரியகாந்தியாக !
இப்படி எந்த நடிகையின் வளர்ச்சியை எடுத்துகொண்டாலும் நடிகர் திலகம் அவர்களுடன் இணைந்த பிறகே இவர்களுக்கு ஒரு பெரும் நட்சத்திர அந்தஸ்த்தும், நடிப்பு திறமையும் அதிகரித்து பல நல்ல நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரங்கள் அமைந்தது !
நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம் ! அதில் பயின்றவர்கள் என்றுமே சோடைபோனதில்லை !
தங்கை வனஜா ,
நீட நாள் சென்று திரியில் வந்தது சந்தோசம் முன்பு அளித்தது போல நல்ல பதிவுகளை அளிக்கவும்.வருக என்று வரவேற்கிறேன்.
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எங்கள் இனிய ரமதான் வாழ்த்துக்கள். அந்த ஓரிறை உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவிட அருள் புரியுமாக. மனிதம் ,மதங்களை முந்தட்டும்.
முரளி அவர்களே
தங்கள் நடுநாயகமான தீர்ப்புக்கு நன்றி.நான் நிறைய உங்களிடம் எதிர்பார்த்தேன்.அது என்னுடய தவறுதான்.இனி என்ன கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.ஆனால் இந்தத் திரியைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் மத்தியில் ஏன் உங்கள் மனதிலும் கூட நியாயம் என்று தெரிவதை உங்கள் மனசாட்சிப்படி மறைக்க முடியாது. உங்கள் சூழ்நிலை அப்படி. உங்களின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் உங்களை நன்றாகவே காட்டிக் கொடுத்து விட்டன. தங்கள் பதிவில் நாகரீகம் குறைந்து அகங்காரம் தெரிய ஆரம்பித்துவிட்டது.மற்றவர்களுக்கு உண்மை உணர வைக்கும் நீங்கள் நிறைய உண்மைகளை உணர்ந்து உணராதது போல் பாசங்கு செய்வது எவ்வகையில் நியாயம். திரியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று கூறும் நீங்களே சொல்லுங்கள். திரி திரியாகவா இருக்கிறது. நீங்களும்தானே உயிரைக் கொடுத்து இந்தத் திரியை வளர்த்தீர்கள். நீங்களே அது உங்கள் கண்முன் அழிவதை வேடிக்கை பார்க்கிறீர்கள் அதுவும் கை தட்டிக் கொண்டு.அப்படி என்ன நிர்ப்பந்தம் உங்களுக்கு. இளிச்சவாயர்களுக்கு மட்டுமே உங்கள் எச்சர்ரிக்கை செல்லுபடியாகும்.உங்கள் கோபம் எங்களைப் போன்றோரிடம்தான் செல்லும்.கோபால் போன்றவர்களிடம் செல்லாது.அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது நான் தொண்டைத் தண்ணீர் வத்தி கத்தி என்ன பயன்.உங்களுக்குக் கோபம் வரும்படி நான் ஒன்றுமே எழுதவில்லையே.சிவாஜியைப் பற்றி பதிவிட்டால்தான் கேட்க உரிமை உண்டு என்ற ஒரு வாதத்தை வைக்கிறீர்கள்.அப்படிப் பார்த்தால் இந்தத் திரியில் மூன்று பேரைத் தவிர யாரும் தேற மாட்டார்கள்.எல்லாமே எஸ்,சூப்பர்,அருமை இப்படித்தான் போடுவார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. உங்களுக்கு புரிவதற்காக சொல்கிறேன்.இதற்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும் வேலையைப் பார் என்பீர்கள்.
ஒரு படத்தைப் பார்ப்பவன் அதை தாரளமாக விமர்சனம் செய்யலாம். அவன் அந்தப் படத்தில் பங்கு கொண்டிருக்க தேவை இல்லை. இந்த சின்ன விஷயம் கூட புரியாத இத்திரியில் நான் இனி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,எதிர்த்த நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி கூறி எப்போது இந்தத்திரி நியாயத்தின் பக்கம்நகர ஆரம்பிக்கிறதோ அப்போது மீண்டும் வருவேன் என்று கூறி தற்காலிகமாக விலகுகிறேன்.இனி இந்தத் திரியை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது.வணக்கம். நன்றி.
ராமதாஸ்
மனதை கவர்ந்த பாடல்கள் வரிசையில்
https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU
https://www.youtube.com/watch?v=T9cjvtnF-eM
ராமதாஸ்,
தங்கள் பிரச்சினை புரியவில்லை. ஆனாலும் அது உங்களுக்கும் moderator அவர்களுக்கும் உள்ள பிரச்சினை.அதில் நான் தலையிட விரும்பவில்லை.
கீழ்கண்ட பதிவு தங்களால் 6 மே 2014 இல் போடப்பட்டது.
6th May 2014, 10:16 AM #2654
Rama Doss
Rama Doss is offline
Junior Member Junior Hubber
Join Date
Apr 2014
Posts
29
Post Thanks / Like
கோபால் அவர்களே!
நன்றிகள் பல. தங்கள் எழுத்துக்களை அணுஅணுவாகப் படித்து ரசித்து வருகிறேன். தங்கள் பதிவுகள் திரியோடு முடிந்து போகாமல் திக்கெட்டும் புகழ் பரவியதாய் இருக்க வேண்டும். கண்டிப்பாக புத்தகமாக வெளியிடப் படவேண்டும். உள்ளதை உள்ளபடி உரைக்கும் தங்கள் துணிச்சல் மெச்சத் தகுந்தது.
இது தங்களின் பதிவுதானே?நான் ஒன்றும் தவறாக quote செய்யவில்லையே? உங்களுக்கு என்னை பற்றி
அபிப்பிராயம் மாறியிருக்கலாம். ஆனால் என் பதிவுகள் எப்போது புரியாததாக ஆயின? சொன்னால் திருத்தி கொள்வேன்.விமரிசிப்பது உங்கள் உரிமை என்றாலும் இரண்டே மாதங்களில் இவ்வளவு முரணா ?மற்ற படி எனக்கு சலுகை காட்டி எதோ திரியில் அனுமதிக்கிறார்கள் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவது உள்நோக்கம் கொண்டது.
சாதாரண அகவற்பா மரபு முறையில் ,சாதாரண தமிழ் சொற்களால் எழுத பட்ட,பாடு பொருள் நன்கு தெரிந்த கவிதையில் புரியாமல் என்ன உள்ளது?நீங்கள் ஒரு ஆசிரியர் எனவே நம்பி,உங்கள் பழைய மாணவர்களை எண்ணி கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை.ஆனாலும் ,தங்கள் பிரச்சினை தீர ,ஒரு கோனார் நோட்ஸ் போட்டு விடுகிறேன் ,என் கவிதைக்கு.
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-...h-Sivaji-G.jpg
உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம் '
http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs
அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஈஃத் திருநாள் வாழ்த்துகள்.
அன்புடன்
Eid Mubarak to all our Islam friends!
Regards,
R. Parthasarathy
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்!
http://www.youtube.com/watch?v=ruMVB...yer_detailpage
இந்த திரியில் மிக அக்கறை காட்டும் ஓய்வு பெற்ற வாத்யாருக்காக ,அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.
பாடல்
அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்
உரை
தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.
பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது
உரை
எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்
ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.
பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்
உரை
சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.
பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
உரை.
இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு
கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.
பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே
உரை.
தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)
பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.
பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்
உரை
சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து
செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.
பாடல்
கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது
உரை.
தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல
நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு
ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.
தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.
பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை
உரை
பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.
காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.
பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.
வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.
பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே
உரை
தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது
ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு
பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து
உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.
பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்
உரை
தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை
மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .
தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை
இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.
பாடல்
காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.
உரை
உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி
அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி
உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து
மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.
பாடல்
நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்
நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை
உரை
ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை
பாடல்
எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை
நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை
உரை
எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.
பாடல்
வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது
உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு
உரை
எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.
பாடல்
ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக
உரை
ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .
பாடல்
தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை
ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே
உரை
human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்
அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..
பாடல்
தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
உரை.
உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்
உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,
எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.
இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் சிவாஜிகணேசன்...ஒரு சுவாரசியத் தகவல்...!
கடவுள்களின் பெயர்கள், தங்களது மனதுக்குப் பிடித்த தலைவர்களின் பெயர்கள், தமிழறிஞர்களின் பெயர்கள், சாதனையாளர்களின் பெயர்கள், அல்லது தங்களது முன்னாள் காதலன், காதலி ஆகியோர்களின் பெயர்களைத்தான் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வைப்பது வழக்கம். ஆனாலும், ஒரு சிலரிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள், உங்க பெயரோட அர்த்தம் என்னன்னு கேட்டல் சொல்லத் தெரியாது.
திரையுலகில் பெயர் என்பது மிகவும் முக்கியம், பெற்றோர் வைத்த நிஜப் பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயரை வைத்துக் கொண்ட நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும் அதிகம். அதில் ஜோசியம், ராசி வேறு கலந்திருக்கும். இவர்களில் இயக்குனராக அறிமுகமான போதே தன்னுடைய பெயராலும் திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாக சங்கர் என்றுதான் எழுதுவார்கள், ஆனால் இவரோ பெயரிலும் ஷங்கர் என போட ஆரம்பித்தார். தனக்கு இந்தப் பெயரை அம்மா எதற்காக வைத்தார்கள் என சமீபத்திய விழா ஒன்றில் ஷங்கரே தெரிவித்தார்.
“எனக்கும் 'செவாலியே சிவாஜிகணேசன்' அவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. எனது அம்மா தீவிரமான திரைப்பட ரசிகை. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அன்று இரவே அவருக்கு பிரசவ வலி எடுத்து நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த பின் அவர் எனக்கு ஷங்கர் என பெயர் வைத்தார். நான் பிறந்த அன்று என் அம்மா பார்த்த படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் சங்கர். அதையே எனது பெயராக அம்மா வைத்து விட்டார்கள்.
எனக்கும் சிவாஜி அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'காதலன்' படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு நடிப்புச் சிங்கத்துக்கு தீனி போடும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். அவரை இயக்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் ரஜினி அவர்கள் நடித்த படத்திற்கு 'சிவாஜி' என பெயர் வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன், ” என்றார்.
17/8/1963 இல் முத்து லக்ஷ்மி-சண்முகம் தம்பதியருக்கு மகனாக பிறந்த (தாய்,மகன் இருவரும் சிவாஜி ரசிகர்கள்) எஸ்.ஷங்கருக்கு செவாலியே சிவாஜி விருது தந்த விஜய் டி.வீ க்கு நன்றிகள்.
இவர் தாய் , சிவாஜி பட பாத்திரத்தின் பெயரை வைத்திருந்தால் , அது 17/8/1963 க்கும் முன் வெளியானதாக இருக்க வேண்டும். நினைவு தெரிந்து 1952 முதல் 1963 வரை வெளியான படங்களில், அன்னையின் ஆணை 1958(அப்பா சிவாஜி பெயர்), பலே பாண்டியா 1962 (விஞ்ஞானி ரோல் பெயர்) ஷங்கர் என்று இருப்பதால் ,பலே பாண்டியா நினைவான பெயரே ஷங்கருக்கு சூட்ட பட்டிருக்க வேண்டும்.