http://i63.tinypic.com/wa0ns7.jpg
Printable View
DEEPAVALI ENDRAL nadigarthilagam padangal than comes to memory first,
1962 pandhapsam broadway theatre followed by ANNAIILLAM AT maaraja in 1963navarathri at maharani IN 1964 1965 palani srikrishna 1966 selvam at chitra on a torrential rainy day 67 ootyvaraiuravu at pallavaram janatha morning show by 7am more than 200 persons were inques evening irumakargal at ram theatre fortunately tickets bppked in advance,
like that we have enjoyed first day allaparaigal aarpattangal which remains pasumaiyaga in mind always,
WITH DTWALI GREETINGS TO ALL OUR BROTHERS AND SISTERS
BLESSIGS
raghavendran kartk sir murali sir your diwali ninaivalaigal excellent and very descriptive
blessings
அனைவருக்கும், தீபாவளி நல்வாழ்த்துக்கள்
What a pleasant surprise!
இன்ப அதிர்ச்சி என்னவென்று உணர்த்தி விட்டார் கார்த்திக்.
கார்த்திக் தங்களுடைய பதிவுகளில்லாமல் இத்திரியின் கடந்த சில பாகங்கள் முழுமை பெற முடியாமல் இருந்தன. தீபாவளி நினைவுகள் தங்களை இங்கு பதிவிடச் செய்து விட்டதில் எனக்கு பெருமை.
தொடர்ந்து தாங்கள் இங்கு பங்கு பெற வேண்டும். இதுவே என் வேண்டுகோள். என்னுடையது மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைவரது வேண்டுகோளும் அதுவாகத் தான் இருக்கும்.
தங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் உளமார்ந்த தீபாவளிீ நல்வாழ்த்துக்கள்.
ராமஜெயம் சார்
தங்களுடைய பந்தபாசம், அன்னை இல்லம், நவராத்திரி, தீபாவளி நினைவுகள் சுவையாக உள்ளன. மேலும் தங்களுடைய நினைவுகளைத் தாங்களும் விரிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஆவலுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள்
தொடர்ச்சி..
1970ம் ஆண்டிற்குப் போவதற்கு முன்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் காலையில் எழுந்து குளித்து வெடி வெடித்து, புத்தாடை உடுத்தி காபி அருந்தி விட்டு கிளம்பி விடுவோம். நண்பர்கள் அனைவரும் ஒருவரையொருவர் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு இன்னொரு நண்பர் வீட்டில் கூடி விடுவோம். அவர் வீட்டில் சிற்றுண்டி அல்லது இனிப்பு இப்படி வயிற்றுக்கு அசை போட்டு விட்டு, தலைவரின் படங்களைப் பற்றிய பேச்சு துவங்கி விடும். கிட்டத்தட்ட 6.30 முதல் 8.30 மணி வரை தலைவரைப் பற்றி, படங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்புவோம். காலைக் காட்சி 1970க்குப் பிறகு தான் துவங்கியதாகையால். அதற்கு முந்தைய ஆண்டுகள் வரை முதல் நாள் முதல் காட்சி மேட்னியாகத் தான் இருக்கும். அதற்கு எப்படியாவது டிக்கெட் எடுத்து விடுவோம். ஒரு 12 மணி வாக்கில் கிளம்பினோமானால் மேட்னி ஆரம்பிக்கும் வரை தியேட்டர் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு மாலைக் காட்சிக்குக் காத்திருக்கும் ரசிகர்களிடம் உற்சாகமாகக் குரல் கொடுத்து விட்டு (அதற்கேற்ப படங்களும் அமைந்ததை சொல்லவும் வேண்டுமோ), இரவு 8 மணி சுமாருக்கு வீட்டுக்குப் போனால் பெற்றோர்க்குக் கோபம் வரும் .. பண்டிகை நாளும் அதுவுமா வீட்டில் இல்லாமல் எங்கோ போகறாய் என்று (நியாயமான கோபமாயிருந்தாலும் அது ஒரு ஃபார்மாலிட்டிக்குத் தான் இருக்கும். நம்மை மாற்ற முடியுமா என்ன).
கிட்டத்தட்ட ஒரு வாரமாக டென்ஷனாக இருந்த மனது தீபாவளியன்று தலைவரைத் திரையில் தரிசித்த பிறகு தான் நார்மல் லெவலுக்கு வரும். அதுவும் ரிலீஸுக்கு முதல் நாள் படத்தயாரிப்பாளர் கூட அவ்வளவு டென்ஷனாக மாட்டார். ரசிகர்கள் ஆகி விடுவார்கள். ரிஸல்ட் ஓஹோ என்றவுடன் மனம் துள்ளும் பாருங்கள்.. அதை வார்த்தையில் சொல்ல முடியாது.
தியேட்டர் அலங்காரம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். பெரும்பாலும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை போன்ற சுற்று வட்டார ரசிகர்களின் கைங்கரியமே அதிகமிருக்கும். ஏனென்றால் சாந்தி தியேட்டரின் ரசிகர்கள் பல்ஸ் ரேடியஸ் அடையார் வரை கூட போகும். சில சமயம் அபூர்வமாக அடையார் ஈராஸில் புதுப்படம் வரும். ஆனால் அப்போது கூட நடிகர் திலகத்தின் படங்கள் மிக மிக அபூர்வம். எனவே அத்தனை மக்களும் சாந்திக்கே வருவார்கள். பிராட்வே, அல்லது, கிரௌன் அல்லது கிருஷ்ணா தியேட்டர் வடசென்னைப் பகுதியை கவர் செய்து விடும். புரசைவாக்கம் கீழ்ப்பாக்கம், சூளை, கெல்லீஸ், அமைந்தகரை போன்று இந்தப் பகுதிகளையெல்லாம் ராக்ஸி அல்லது மேகலா அல்லது புவனேஸ்வரி போன்ற தியேட்டர்கள் கவர் செய்து விடும். கிட்டத்தட்ட சென்னை நகரின் மொத்தப் பரப்பளவு ரசிகர்களுக்கும் இந்த மூன்று நான்கு தியேட்டர்கள் தான் புகலிடம் என்பதார் அனைத்துப் பகுதி ரசிகர்களுக்கும் தியேட்டரில் அலங்காரம் செய்வதற்கு இடம் பிடிப்பதில் போட்டி ஏற்படும்.
சாந்தி தியேட்டரைப் பொறுத்த வரையில் நான் முன்பே சொன்னது போல் ஷ்யாம்பிரசாத் ஹோட்டல் ரசிகர் மன்றம் பேனரை முதலில் வைத்து விடுவார்கள். அதைத் தொடர்ந்து மற்றவை.. பார்க்கும் பொழுதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இடமிருந்து வலமாக கிட்டத்தட்ட 20 அடி நீளத்திற்கு துணி பேனர்கள் வரிசையாக தொங்கும் காட்சி பார்க்கவே ரம்மியமாக இருக்கும். சாந்தி தியேட்டரின் வெளிப்புறச் சுவற்றிலிருந்து எதிரில் இருக்கக் கூடி பாங்கியின் சுவர் வரை கிட்டத்தட்ட 25 முதல் முப்பது அடி நீளத்திற்கு வரிசையாக கயிறு கட்டி அதில் பிளாஸ்டிக்கிலும் துணியிலும் தோரணமாக காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 30 வரிசையில் அவை கண்களைக் கொள்ளை கொள்ளும். நடுநடுவில் ஸ்டார்கள் மன்றத்தின் பெயரைத் தாங்கி, அதில் விதவிதமாக தலைவரின் போட்டோக்கள் ஒட்டப்பட்டு பார்ப்பவர்களை ஈர்க்கும். அதில் சிலர் பாட்டரி வைத்து விளக்கு வசதியும் செய்திருப்பார்கள். இரவு நேரங்களில் அந்த ஸ்டார்கள் ஜொலிப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...60&oe=56B78802
அவற்றில் சில பாட்டரி வைத்து விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அதன் நினைவூட்டலாக...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...1b&oe=56FA32C0
மேலே தோரணங்களும் ஸ்டார்களும் கழுத்து சுளுக்கும் அளவிற்கு நம்மை அண்ணாந்து பார்க்க வைத்தன என்றால்...
நம்மைச் சுற்றிப் பார்த்தால் ...
..... தொடரும்...
1960களில் நடிகர் திலகம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்ட காங்கிரஸ் கொடிகள்... ஓர் நினைவூட்டலுக்காக..
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...18&oe=56F91FF3
நடிகர்திலகத்தின் அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகத்தின் தீபாவளி பட வெளியீடு கொண்டாட்டங்களை காண கொடுத்துவைக்காத என்னைபோன்றவர்களின் குறையை தங்களின் நினைவலைகள் தீர்த்துவைக்கிறது,நன்றி.இங்கே பெங்களூரில் தீபாவளி நாளில் கூட்டம் அதிகம்,கலாட்டாக்கள் அதிகம் என்பதால் என் தந்தை எங்களை ஒரு வாரம் கழித்தே கூட்டிசெல்வார்.ஆனால் தீபாவளி நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திருவிளையாடல்,வசந்தமாளிகை,தங்கபதக்கம் கட்டபொம்மன் போன்ற படங்களை 80களில் பார்த்தது மறக்கமுடியாத அனுபவம்
ராகவேந்தர் சார் அவர்களின் தீபாவளி நினைவுகள்
முத்தையன் சார் அவர்களின் ஊட்டி வரை உறவு ஸ்டில்கள்
ஆதவன் ரவி அவர்களின் நினைப்போம் மகிழ்வோம் வரிசை
அனைத்தும் ஒன்றிணைந்து தீபாவளியை களைகட்ட செய்துவிட்டன.
ராகவேந்தர் அவர்களின் தீபாவளி படங்களின் வெளியீட்டு வைபவங்கள் அவர்மீது பொறாமைகொள்ள வைக்கின்றன. கொடுத்துவைத்த ரசிகர்கள்.
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
மதுரையில் பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை ஆகிய படங்களின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .
(தொடரும்)
அன்புடன்
திரு.முரளி, திரு.ராகவேந்திரன் ஆகியோரது அனுபவப் பதிவுகள், திரி நண்பர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.
கார்த்திக் சார், தங்களது பதிவுகளும் இடம்பெற்றால் திரியின் சுவை மேலும் மெருகேரும்.
தொடர் பதிவுகளைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
Dear murali sir,
we are waiting..................
திரு.முரளி, திரு.ராகவேந்திரன் ஆகியோரது அனுபவப் பதிவுகள், திரி நண்பர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.
கார்த்திக் சார், தங்களது பதிவுகளும் இடம்பெற்றால் திரியின் சுவை மேலும் மெருகேரும்.
தொடர் பதிவுகளைத் தரும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
இதை இதைத்தானே எதிர்பார்க்கிறோம்.