https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e2&oe=5C82840D
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...56&oe=5C739DA3
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...02&oe=5C751C8A
Printable View
திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு கன்யாகுமரி சென்றிருந்த சிவாஜியை மூன்று கல்லூரி மாணவிகள் சந்தித்தார்கள். அவர்களிடம் சிவாஜி அடித்த ஜோக்.... இந்த கமலாதான் எனக்கு குழந்தை. அவளுக்கு நான் குழந்தை. என்னா ஒண்ணு.... அவ என்னை தூக்கிடுவா... என்னால அவளை தூக்க முடியாது. மாணவிகள் வயிறு வலிக்க சிரித்திருக்கிறார்கள்.... (ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் படித்தது)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...59&oe=5C700710
( nayagan nayagan -nadigarthilagam sivaji visirigal)
சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ எஸ்பி.முத்துராமன் கூறியதை பார்பபோம்.
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘பராசக்தி’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமா ஆசையே எனக்கு வந்தது. கலைஞர் அவர்களின் வசனமும், அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பும் அந்த வயதில் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தாக்கம்தான் என்னை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களை சினிமாவில் பங்குபெற வைத்தது.
ஏவி.எம் நிறுவனமும், ஜே.ஆர் மூவிஸ் கம்பெனியும் இணைந்து ‘எங்க மாமா’ என்ற திரைப்ப...டத்தை எடுக்க முடிவு செய்தார்கள். அந்தப் படத்தை என் குரு நாதர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். குருவுக்கு சிஷ்யன் நான். சிவாஜி அவர் கள்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், நான் மகிழ்ச்சி யின் உச்சத்துக்கே போய்விட்டேன். படத்தில் நாயகி செல்வி ஜெயலலிதா அவர்கள்.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது மாதிரி இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அன்றைக்கு அமைந்தது. ‘எங்க மாமா’ படத்தில் 12 குழந்தைகள் நடித்திருப்பார்கள். படப்பிடிப்பில் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நாங்கள் சமாளித்த கதை ஒரு பெரிய சவால்!
அந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்கள். இசையும் பாடலும் இணைந்து இன்றும்கூட அந்தப் படத்தின் பாடல்கள் புகழ் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆஸ்டின் காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவாஜி நகர்வலம் வருவதுபோல எடுக்கப்பட்ட
‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’
என்ற பாட்டில் அந்த குழந்தை மலர்களை, தன்னைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு அப்படி ஒரு பாவனையோடு சிவாஜி அவர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல, பியானோ வாசித்துக்கொண்டே பாடும்
‘எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்’
– என்ற பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஜெயலலிதா அவர்களின் முகபாவனை மாறிக்கொண்டே இருக்கும். சிவாஜி பியானோ வாசிக்கிற நடிப்பும், அந்த ஸ்டைலும் அவரால் மட்டும்தான் அது முடியும்!
இன்றைக்கு மேலோட்டமாக யோசித் துப் பார்த்தால் கர்ணன், கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி போன்றவர்களை நினைக் கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகத்து வருவார். இவர்களைப் போல் சிவாஜி நடித்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல் நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAl