https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f1&oe=5E5B71EB
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bb&oe=5E55BF73
நன்றி Vcg Thiruppathy H O S
நடிகர் திலகத்தின் 100 வது காவியமான "நவராத்திரி " வெளியான நாள் இன்று,
இப்போதெல்லாம் வருடத்திற்கு 200 படங்களுக்கும் மேலாக வெளியான போதிலும் கூட தீபாவளி திருநாள் முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் பிகில், கைதி ஆகியன மட்டுமே வெளியாகி இருக்கிறது,
கொஞ்சம் பின்னோக்கி நவராத்திரி வெளியான 1964 ஆம் ஆண்டின் தீபாவளி திருநாள் சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என அலசும் போது அந்த ஆண்டின் தீபாவளிக்கு மட்டுமே நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கிறது,
அந்த ஆண்டில் வெளியான மொத்த தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 34 மட்டுமே,
அந்த 34 படங்களில் நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமே 7 படங்கள் அவை
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) ஆண்டவன் கட்டளை
4) கை கொடுத்த தெய்வம்
5) புதிய பறவை
6) முரடன் முத்து
7) நவராத்திரி
அதாவது மொத்த படங்களில் 5 ல் ஒரு பங்கு நடிகர் திலகம் திரைப்படங்கள் ஆகும்,
1964 ல் வெளியான 34 படங்களில் 100 நாள்களுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்டவை மொத்தம் 12 படங்கள் ஆகும்
நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் -5
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) கை கொடுத்த தெய்வம்
4) புதிய பறவை
5) நவராத்திரி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் -3
1) பணக்கார குடும்பம்
2) வேட்டைக்காரன்
3) படகோட்டி
இதர படங்கள் காதலிக்க நேரமில்லை, கருப்புப் பணம், பூம்புகார், சர்வர் சுந்தரம் ஆகியன வெற்றிப் படங்கள்,
03-11-1964 அன்று தீபாவளி முன்னிட்டு நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் நவராத்திரி, முரடன் முத்து ஆகியன ரிலீஸாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீபாவளி எனக் கொண்டாடச் செய்தது, இது போல நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் இரண்டு படங்கள் என 18 முறை ரிலீஸாகி சாதனை நிகழ்த்தி இருக்கிறது அதிலும் தீபாவளி நாளில் மட்டுமே 8 முறை இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகி அசத்தி இருக்கிறது, அதில் 80% படங்கள் வெற்றிப் படங்கள் ஆகும்,
குறிப்பாக 1967 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரு மலர்கள், ஊட்டி வரை உறவு
1970 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி அனைத்தும் 100 நாட்களைக் கொண்டாடி சாதனை செய்து இருக்கிறது,
நவராத்திரி சென்னையின் நான்கு தியேட்டர்களிலும் முரடன் முத்து நான்கு தியேட்டர்களிலும் என 8 தியேட்டர்களில் வெளியான போது ஏற்கனவே புதிய பறவை பாரகன் தியேட்டரில் 100 நாட்களை நெருங்கி ஓடிய படி இருந்தது, இதுவும் இல்லாமல் நடிகர் திலகத்தின் வெவ்வேறான பழைய படங்கள் 3 தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்ததால் அன்றைய நாளில் சென்னையில் அமைந்திருந்த 25 க்கும் குறைவாக இருந்த முக்கிய திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே 12 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது, "இங்கு கவனிக்க வேண்டியது நடிகர் திலகத்தின் சொந்த திரையரங்கான சாந்தி தியேட்டரில் நடிகர் திலகம் படம் ஓடவில்லை"
சிலர் சாந்தி தியேட்டரில் மட்டுமே சிவாஜி படங்கள் ஓடியன என எதிர்மறை கருத்தை சமூக வலைத்தளத்தில் சொல்லி வருவதை பார்க்க முடிகிறது,
நவராத்திரி சென்னையில் திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது
தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு ஹீரோவின் 100 வது படம் சென்னையில் ரிலீஸான 4 திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது என்றால் அது நடிகர் திலகத்தின் நவராத்திரி மட்டுமே,
முரடன் முத்துவும் 50 நாட்களைக் கடந்து குறிப்பிட்ட வெற்றியை பெற்றது,
எம்ஜிஆர் இன் படகோட்டி சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ப்ளாஸா தியேட்டரில் மட்டுமே 100 நாளைக் கொண்டாடியது,
1964 ஆம் ஆண்டின் தீபாவளி சிவாஜி ரசிகர்களுக்கு இனிப்பான தீபாவளியாக அமைந்தது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d1&oe=5E49F310https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d5&oe=5E5A3834https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a6&oe=5E4F49F2https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...92&oe=5E4A2565
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0f&oe=5E6282E7
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0f&oe=5E5E1DA9
நன்றி Sekar Parasuram (Face book)
இன்று பாகப்பிரிவினை வெளியான நாள்,
31-10-1959
பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை வெலுத்து வாங்கிய மெகா ஹிட் திரைப்படம்,
மறு வெளியீடு ஆகி கருப்பு வெள்ளை திரைப்படங்களில் அதிக சாதனை படைத்ததும் கூட,
... 1959 ஆம் வருடத்தில் வெளியான நடிகர் திலகம் திரைப்படங்கள் மொத்தம் 5
அவை 1) நான் சொல்லும் ரகசியம்
2) வீரபாண்டிய கட்டபொம்மன்
3) மரகதம்
4) அவள் யார்
5) பாகப்பிரிவினை
இதில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை ஆகியன சில்வர் ஜூப்ளி கொண்டாடியவை
மரகதம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பாகப்பிரிவினைக்கும் இடையே சிக்கி 100 நாளைக் கொண்டாடியிருக்கிறது,
1959 ஆண்டைப் பொறுத்த அளவில் நடிகர்திலகம் திரைப்படங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை, மரகதம் ஆகியன பல திரையரங்குகளில் 100 நாட்களைக் கொண்டாடி இருக்கின்றன,
இது போன்ற இமாலய சாதனைகள் என்பது நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே சாதித்து இருக்கிறது,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...25&oe=5E59C7A8https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a7&oe=5E5F3E57
நன்றி Sekar Parasuram (Face book)
சிங்கதத்மிழனின் 100 வது படம் நவராத்திரி
பிரான்ஸ் நாட்டின் அதிஉயர் விருதான செவாலியே
விருதை பெற்றுக்கொடுத்த திரைப்படம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e9&oe=5E512C2A
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d5&oe=5E169E47https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1a&oe=5E1B365C
நன்றி Vcg Thiruppathy H O S
இன்று மாலை #திண்டுக்கல் NVGB யில் #எங்கள்தங்கராஜா WIN குதூகல கொண்டாட்டமும், #பாகப்பிரிவினை வைரவிழா ஆண்டு நிகழ்ச்சியும்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5E1C240A
நன்றி Vaannila
சிங்கத்தமிழனின்
வெள்ளை ரோஜா மலர்ந்த நாள் இன்று (4/11/1983--4/11/2019)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bd&oe=5E5800FA
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e4&oe=5E5245D3
நன்றி Vcg Thirpppathi H O S