முரடன் முத்து 3/11/1964
https://scontent-ort2-1.xx.fbcdn.net...86&oe=5FC6EF34
Thanks Vcg Thiruppathi
Printable View
முரடன் முத்து 3/11/1964
https://scontent-ort2-1.xx.fbcdn.net...86&oe=5FC6EF34
Thanks Vcg Thiruppathi
வெள்ளை ரோஜா 3/11/1983
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...1f&oe=5FC6971A
Thanks Vcg Thiruppathi
..........................................
30/10/1978 ல் இந்தியாவிலும் 22/12/1978 ல் இலங்கையிலும் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத் இந்தியாவில் 100 நாட்களுக்குமேலும், இலங்கையில் 200 நாட்களுக்குமேலும் ஒடி சாதனை படைத்தது.கொழும்பில் 2 தியேட்டர்கள் உட்பட யாழ்நகரிலும் மொத்தம் 3 அரங்குகளில் 100 நாட்களுக்குமேல் ஓடியது.இதற்குமுன்னர் உத்தமன் 3 தியேட்டர்களில் 100 நாட்கள் காட்சியளித்து சாதனை நிலைநாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் திருமலை மட்டுநகர் கண்டி வவுனியா போன்ற இடங்களில் 75,90 நாட்களுக்குமேலும் ,கணிசமான மேலும் பல ஊர்களில் 50 நாட்களுக்குமேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
பைலட் பிரேம்நாத் கொழும்பு ,யாழ்ப்பணம் தவிர திருமலை, மட்டுநகர் ,கல்முனை, அம்பாறை, வவுனியா, கண்டி, மாத்தளை , அனுராதபுரம், குருநாகல் , நீர்கொழும்பு,கொச்சிக்கடை,
நுவரெலியா, மஸ்கெலியா, ராகலை, ஹட்டன், பதுளை ,பண்டாரவளை, கிளிநொச்சி, மன்னார், மற்றும் பல ஊர்களிலும் திரையிடப்பட்டு 1 வருடத்துக்குள் சுமார் 50 லட்சங்களுக்கு மேல் வசூல் பெற்று சாதனை நிலைநாட்டிது சாதனைச்சக்கரவர்த்தியின் பைலட் பிரேம்நாத்.
இதன் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.டிக்கட்டின் விலை 500.00 ரூபாய் ஆகியபின் வந்த படங்களின் விபரம் தெரியவில்லை.
என்றும் அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரே.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...f0&oe=5FC9014Ahttps://scontent.fybz2-1.fna.fbcdn.n...98&oe=5FC87700
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...32&oe=5FC8A51E
(Thanks Sivaji Group)
விஷ்வரூபம் 6/11/1980
https://scontent-ort2-1.xx.fbcdn.net...c1&oe=5FCBEDC2
Thanks Vcg Thiruppathi
திருத்தணியும் நடிகர் திலகம் சிவாஜியும்,
முருகனின் பெருமையை விளக்கி கந்தன் கருணை திரைப்படத்தை அளித்தார் நடிகர் திலகம்,
கந்தன் கருணை திரைப்பட போஸ்டர்கள் மீது சாணம் அடித்து தங்களது முருகப் பக்தியை கட்டினார்கள் அப்போதைய எம்ஜிஆர் ரசிகர்கள்,
1971 ல் பொதுத் தேர்தலின் போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை முதல்வராக அரியணை ஏற்றிட திருத்தணியிலிருந்து தான் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கினார்,
சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கை நழுவிப் போனது,
ஏராளமான தேர்தல் விதிமீரள்கள் நடந்தேறிய தேர்தல் அது,
நேர்மையின் வடிவமாய் திகழ்ந்த பெருந்தலைவர், நடிகர் திலகம் தொண்டர்கள் நேர்மையான வெற்றியை மட்டுமே எதிர்நோக்கியதன் விளைவு தேர்தல் அரசியலில் தோல்வி,
ஆன்மீக பூமியான முருகனின் திருத்தணியை தமிழகத்தோடு இணைத்திட போராடிய போராட்டக் குழுவினருக்கு உற்ற துணையாக நின்றார் நடிகர் திலகம் சிவாஜி,
போராட்டக் குழு தலைவராக திகழ்ந்த ம.பொ.சி அவர்களை தமிழக எல்லை வரை சென்று அங்கிருந்து மேள தாளத்துடன் பெரும் வரவேற்பைக் கொடுத்தார் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி,
தற்போதைய நிலை திருத்தணிக்கும் ஆன்மீகத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத தலைவர்களை துதி பாடும் பாடல்கள் வேறு,
எல்லாம் முருகன் செயலா?
அல்லது எல்.முருகன் செயலா??
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...8f&oe=5FCB35A6
Thanks Sekar p
இன்றைய நாட்களில் டிவிச் சேனல்கள் தானே பிரதானம்,
டிவிச் சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படம் இல்லாத நாட்களே கிடையாது,
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தது நான்கு திரைப்படங்கள் முதல் எட்டு திரைப்படங்களுக்கும் மேலாக இடம் பெற்று வருகிறது,
மேலும் கூடுதல் முத்தாய்ப்பு மகிழ்ச்சி இளைய திலகம் பிரபு, இனிய திலகம் விக்ரம் பிரபு திரைப்படங்கள் வேறு,
மூன்று தலைமுறை அன்னை இல்லத்தின் திரைப்படங்களை கொண்டாடும் நான்கு தலைமுறை நடிகர் திலகம் வழித் தோன்றல்கள்,
எதிர்மறை சிந்தனையார்கள் என்ன செய்வார்கள்??
"கஷ்டம் கஷ்டம்' என்ற திருவிளையாடல் வசனம் தான் நினைவிற்கு வருகிறது,
எங்களைப் போல தலைமுறையினர் தாண்டி கொண்டாடும் கொண்டாட்டம் அமைய வேண்டும்,
06-11-2020 இன்று
1) நானே ராஜா - 1:30 pm வசந்த் டிவி,
2) திருவருட்ச் செல்வர் - 2 pm பாலிமர் சேனலில்,
3)தீர்ப்பு - 11 pm பாலிமர் சேனலில்,
இளைய திலகம் பிரபு ஸ்பெஷல்,
4) தை பொறந்தாச்சு - 9:30 am ராஜ் டிஜிட்டல்.
5)மாப்பிள்ளை கவுண்டர்- 7:30 pm வசந்த் டிவி,
6) யெஸ் மேடம் - 10 pm கே டிவி,
7)காவலுக்கு கெட்டிக்காரன்- 11:45 pm ராஜ் டிஜிட்டல்,
விக்ரம் பிரபு ஸ்பெஷல்,
8) வீர சிவாஜி- 10 am ஜெயா டிவியில்,
9)வெள்ளைக்கார துரை- 10:30 am ஜீ திரை
Thanks Sekar.P
நடிகர் திலகத்தின் 100 வது வெற்றிக் காவியம் நவராத்திரி வெளியான தினம் 03-11-1964,
நவராத்திரி தமிழகம் முழுக்க 7 திரையரங்குகளில் 100 நாட்களையும் 32 திரையரங்குகளில் 50 நாட்களையும் தாண்டி அசத்தலாக ஓடியது
இதில் விஷேசம் யாதெனில் வேறு எந்த ஒரு முன்னணி கதாநாயகனின் 100 வது திரைப்படமும் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 100 நாளை இதுவரையிலும் கொண்டாடியதில்லை,
நவராத்திரி மட்டுமே திரையிடப்பட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாள் கொண்டாடிய சாதனையைக் கொண்டிருக்கிறது,
மேலும் வெளியான 03-11-1964 அன்று முரடன் முத்துவும் வெளியானதால் தமிழகத்தில் இருந்த 75% அளவிலான திரையரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களே மக்களை மகிழ்வித்தது எனலாம்,
மேலும் சில மாற்று சிந்தனையாளர்கள் நவராத்திரி மறு வெளியீடு ஆனதில்லை என வெற்றுக் கூச்சலிடுவர்,
ஆனால் நவராத்திரி தொடர்ந்து மறு வெளியீடான வண்ணமே இருந்தது,
அதற்கான உதாரணமாக 1992 ல் மறு வெளியீடான செய்தி விளம்பரம் இணைத்து இருக்கிறேன்,
நவராத்திரியை 30 ஆண்டுகள் கழித்து 92 ஆம் ஆண்டு தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாகவே நடைபெற்றதையும் அந்த குதூகலத்தில் நவரச நடிப்பை கொண்டாடியதையும் இன்றைய நாளில் கூட பசுமையாகவே இருக்கிறது,
1964 ல் பார்த்தவர்கள் முதன்மை பாக்கியவான்கள்,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...c0&oe=5FCBB584https://scontent-ort2-1.xx.fbcdn.net...a3&oe=5FCCB0D3
Thanks Sekar.P
காத்தவராயன் 7/11/1958
https://scontent-ort2-1.xx.fbcdn.net...14&oe=5FCC803F
Thanks Vcg Thiruppathi
கப்பலோட்டிய தமிழன் 7/11/1961
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ba&oe=5FC9D452
Thanks Vcg Thiruppathi
அறுபது வருடங்களுக்கு முன்னர் ஏழைகளின் சத்துணவுத் திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாயை முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் சிவாஜி அவர்கள், இது குறித்து அப்போதே ஆனந்த விகடன் ஒரு 12.4.1959 இதழில் தலையங்கமும் எழுதியது. அன்று 100 ரூபாய் என்பது இன்றைய 7500 ரூபாய் என்று online inflation calculator சொல்கிறது,இன்று ஒரு லட்சம் ஏறக்குறைய 75 லட்சம் ரூபாய்,வயல் வரப்பிலும் ,கொல்லன் பட்டறையிலும் கல்குவாரியிலும் , மாட்டுக் கொட்டகையிலும் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பிஞ்சு சிறார்களை துவக்கப் பள்ளிகள் நோக்கி இழுத்தது இந்த மதிய உணவுத்திட்டம் என்றால் மிகையில்லை. சிவாஜி வீட்டின் கொல்லைப்புரத்தில் எப்போதும் உணவு உலை கொதித்துக் கொண்டே இருக்கும், யார் வந்தாலும் சாப்பாடு உண்டு,இப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும், சில உதவிகள் வலது கை தருவதை இடது கை கூட அறியாது, சிவாஜி அவர்களை கஞ்சன் கருமி என்று விட்டேத்தியாக சிலர் சொல்லுவார்கள், அவர் என்றுமே அதற்கெல்லாம் விளக்கம் சொன்னது இல்லை,மீண்டும் எளியாருக்கு உதவாமல் போனதுமில்லை. தகவல் & PC விகடன் காலப்பெட்டகம் #சிவாஜி,#வள்ளல்குணம்,#மதியுணவுத்திட்டம்
வாட்ஸ்அப்பில் வந்த பதிவு
நடிகர் திலகத்தின் இமாலய திரைப்பட சாதனைகளில் இருந்து ஒரு சாம்பிள்,
1952 ல் முதல் படமான பராசக்தியிலேயே நாயகனாக அறிமுகமாகி 12 வருடங்களிலேயே 100 திரைக்காவியங்களில் நடித்து முடித்தார் நடிகர் திலகம்,
100 வது திரைக்காவியமான நவராத்திரி 1964 ல் வெளியானது,
1964 ஆண்டில் சென்னையை பொறுத்த அளவில் 16 திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றியையும் 25 திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றியையும் பதிவு செய்தன நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) கர்ணன் - 14-01-1964
2) பச்சை விளக்கு - 03-04-1964
3) ஆண்டவன் கட்டளை- 12-06-1964
4) கை கொடுத்த தெய்வம்- 18-07-1964
5) புதிய பறவை - 12-19-1964
6) முரடன் முத்து - 03-11-1964
7) நவராத்திரி - 03-11-1964
ஆகிய ஏழு திரைக்காவியங்கள் வெளியானது,
ஏழு திரைக்காவியங்களில்
கர்ணன்
பச்சை விளக்கு
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
ஆகிய ஐந்து திரைக்காவியங்கள் வெற்றிகரமாக நூறு நாட்களைக் கொண்டாடியது,
மேலும் 63 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான அன்னை இல்லமும் 100 நாட்களை 64 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடியது,
ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து ஆகிய திரைக்காவியங்களும் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றி முரசுக் கொட்டியது,
மொத்தத்தில் சென்னை நகரை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தால்
100 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை
கர்ணன் - 1) சாந்தி திரையரங்கு
2) பிரபாத்
3) சயானி
பச்சை விளக்கு- 4) வெலிங்டன்
5) மஹாராணி
6) ராக்ஸி
கை கொடுத்த தெய்வம்- 7) மிட்லண்ட்
8) பிரபாத்
9) சரஸ்வதி
10) ராம்
புதிய பறவை - 11) பாரகன்
நவராத்திரி - 12) மிட்லண்ட்
13) மஹாராணி
14) உமா
15) ராம்
அன்னை இல்லம்- 16) காஸினோ
ஆகிய 16 திரையரங்குகளில் இமாலய வெற்றியை பதிவு செய்தன,
புதிய பறவை 3 அரங்கு, ஆண்டவன் கட்டளை 4 அரங்குகள் , முரடன் முத்து 4 அரங்குகளில் என ஒட்டுமொத்த 50 நாட்கள் கொண்டாடிய திரையரங்குகளின் எண்ணிக்கை 25 ,
எவரும் எட்ட முடியாத எவரெஸ்ட் சிகரம் நடிகர் திலகம் என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆன வண்ணம் தொடர்ந்தது சாதனைகள்,
சாதனைத்தகவல்கள் உதவி மொகமட்ட தமீம் அவர்கள்.
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...8d&oe=5FCC79EC
நன்றி சேகர்.பரசுராம்
[COLOR=var(--primary-text)][COLOR=var(--primary-text)]பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனை முறியடிக்க மாற்று முகாம் எவ்வளவோ முயற்சித்தது. சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை 176 நாட்களில் நின்று போனது. அதே சிந்தாமணியில் அடிமைப் பெண் 176 நாட்களோடும், மாட்டுக்காரவேலன் 177 நாட்களோடும் ஓட்டத்தை முடித்துக் கொள்ள, அவர்கள் நம்பியிருந்த ஒரே துருப்புச்சீட்டு உலகம் சுற்றும் வாலிபன்தான். அதை மீனாட்சியில் 217 நாட்கள் ஓட்டி அதை சாதனை என்று நிலைநாட்டினர். சரியாக 217 நாட்களில் எடுக்கப்பட்டபோதே தெரிந்து போயிற்று, எந்த நோக்கத்தில் ஓட்டப்பட்டது என்று.
1959 சாதனையை முட்டி மோதி 1973 ல் முறியடித்தனர்.
நன்றி நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் குழு மொகமட் தமீம்
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..
Thanks Jahir Hussain
கவர்ச்சி நடிகைகளை ஜோடி சேர்க்காமல் டூயட் பாடல்கள் இன்றி தன்னை மட்டுமே நம்பி இரட்டை வேடங்களில் நடித்த அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தியின் நடிப்பில் 4/11/1983 ல் வெளிவந்த வெள்ளைரோஜா ( வசூல் கிடைத்த) 23 ஊர்களில் 28 தியேட்டர்களில் மட்டும் 1 கோடிக்குமேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. முதல் 40 பிரிண்டுகளில் மட்டும் 1 1/2 கோடிக்குமேல் வசூலாகி சாதனை செய்தது
சென்னை ...தேவி........................... 104 நாள்...7,22,685.00
சென்னை...சபையர்.......................76 நாள்....8,15,663.00
சென்னை புவனேஸ்வரி............104..நாள்..5,16,565.50
சென்னை..கிரௌண்....................104..நாள்..4,72, 690.60
சென்னை உதயம்............................104 ..நாள்..3,14,695.00
சென்னை அபிராமி.........................104..நாள்..2,46,61 8.50
சென்னை நகர் மொத்த வசூல்...................30,88,917.60
கோவை...அர்ச்சனா..........................106..நாள் ..13,08,683.95
திருச்சி..ரம்பா................................... .100..நாள் ..9,41,638.65
சேலம் பிரகாஷ்..................................104.நாள். ...7,76,118.50
மதுரை..சென்ட்ரல்................................10 6..நாள்..7,41,407.60
வேலூர்..ஶ்ரீகிருஷ்ணா...................... 63..நாள்..4,64,703.35
நெல்லை..பூர்ணகலா...........................51..நாள ்..2,96.810.10
ஈரோடு..ரவி........................................ ......42..நாள்..2,94,384.30
தஞ்சை ..ஜுபிடர்..................................60..நாள ்..2,93,380.50
பொள்ளாச்சி..துரைஸ்.......................50..நாள். .2, 87,650.40
காஞசி..அருணா....................................54 ..நாள்..2,56,292.25
நாஞசில்..ராஜா..................................... .61..நாள்..2,42,074.50
திண்டுக்கல்..கணேஸ்.........................50..நாள ்..2,40,734.00
குடந்தை...கற்பகம்................................6 0..நாள்..2,04,686.50
திருப்பூர்...டைமண்ட்............................31 ..நாள்..1,89,722.00
கரூர்........அஜந்தா............................... ...35..நாள்...1,50,163.20
மாயூரம்...சுந்தரம்................................ .50..நாள்...1,50,077.90
ஊட்டி...கணேஷ்....................................3 1..நாள்....1,26,329.80
நாமக்கல்...K.S அரண்மனை.............23..நாள்...1,02.016.40
பட்டுக்கோட்டை...ராஜாமணி...........45..நாள்..1.23,9 61.40
துறையூர்..அஜந்தா..............................35.. .நாள்...1,00,693.00
பள்ளிபாளையம்..கார்த்திகேயன்..21...நாள்....87,206.6 0
குமாரபாளையம்....ஶ்ரீராஜம்..............21...நாள்.. .84,060.90
23 ஊர் 28 தியேட்டர்கள் மொத்த வசூல் 1,05,51,713.40
ஒரு கோடியே ஐந்துலட்சத்து ஐம்பத்து ஓரயிரத்து எழுநூற்றி பதின்மூன்று ரூபாய் நாற்பது பைசா.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ad&oe=5FCCA2A2https://scontent.fybz2-1.fna.fbcdn.n...c1&oe=5FCD8A71
Thanks Sivaji Group[/COLOR]
நடிகர் திலகத்தை இயக்கியவர்கள் 3
ஸ்ரீதர்
ஸ்ரீதர் அமரதீபம் படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதையை, நடிகர் திலகத்திடம் கூறினார்.
நடிகர் திலகம் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் உங்களுக்கு 'முன்பணம் ' கொடுக்க, என்னிடம் வசதி இல்லை' என்றார் ஸ்ரீதர்.
'பரவாயில்லை. படத் தயாரிப்புக்கு எப்படி பணம் ஏற்பாடு செய்வாய்' என்றார் நடிகர் திலகம்.
ஸ்ரீதர் தயங்கி, நீங்கள் ஒப்புக் கொண்டால் நாளிதழ்களில் சிவாஜி கணேசன் நடிக்கும் "அமரதீபம்" என்று விளம்பரம் கொடுத்தால் விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுப்பார்கள், அதனால் பைனான்ஸியர்கள் முதலீடு செய்வார்கள் படத்தை முடித்து விடுவேன் என்றார்.
ஆச்சரியத்துடன் ஸ்ரீதரை பார்த்த
நடிகர் திலகம் தட்டிக் கொடுத்து
ஒரு ரூபாய் கூட, 'அட்வான்ஸ்' வாங்காமல், முழு படத்தையும் நடித்து கொடுத்தார்.
பத்மினி, சாவித்ரியிடமும் இதைப் போலவே பேசி ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் ஸ்ரீதர்.
"அமரதீபம்" நடிகர் திலகம், சாவித்ரி, பத்மினி, ஸ்ரீதர் தயாரிப்பு கூட்டணியில் வெற்றிப்படமாக அமைந்தது.
நெஞ்சிருக்கும் வரை
நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை இல்லாமல் எடுத்திருக்கிறார். ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை குறைவான வெளிச்சம் வெளிச்சத்தில் படமாக்கினர். திருமண அழைப்பிதழ் வாசகங்களை பாடலாக்கி
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்று வைத்திருப்பார்.
‘சிவந்த மண்’ இன்னொரு பிரமாண்டம். ‘பட்டத்து ராணி’யும் ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாட்டும், பட்டத்து ராணி பாட்டும் ஸ்ரீதரின் புதுமையான முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். இதிலும் நடிகர் திலகத்திற்கு ஒப்பனை இல்லை.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
விடிவெள்ளி படம் வெளியாகி சில மாதங்களுக்கு பின் எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது நடிகர் திலகம் ஜெய்ப்பூர் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தார். திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்காலில் நடிகர் திலகம் எனக்கு மனதார வாழ்த்துச் சொல்லி. ‘நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச் சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். சற்று முன்னர் வி.சி.சண்முகம் எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியிருந்தது நினைவுக்கு வர, ‘ஆமாண்ணே, வந்திருக்காங்க’ என்றேன். ‘உன் திருமணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே’ என்றார்.
சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச் சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தார்.
நடிகர் திலகம்‘இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்’ என்றவர் என்னைப் பார்த்து, ‘இதோ பாரு, இது வரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேர். அது மட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப் பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்’ என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம்.
‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு நடிகர் திலகம் உடனே போன் செய்து பாராட்டினார். ‘உன் பேரைச் சொன்னாலே ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே.
எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்’ என்றார்.
‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்றேன்.
ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.
இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றிக் கேட்பார். ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டு பேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்றேன். சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர்.
‘ஊட்டி வரை உறவு’ படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
சில பல காரணங்களால் ஹீரோ-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. ‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன்.
‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (எம்ஜிஆர்) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வர முடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள்
உனக்கு நிச்சயம் இருக்கும்’ என்று வாழ்த்தினார்.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
Thanks Sampath Gs
அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !
இதோ அதன் படி !
படி அல்ல, என் அன்னையின் மடி !
இப்படித்தான் துவங்குகிறது அந்த டெலி பிலிம்..
சத்ரபதி சிவாஜி என்பது அந்த டெலி பிலிம்மின் பெயர்...
1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சிவாஜி மகாராஜா அரியணை ஏறிய 300 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட பம்பாய் தூர்தர்ஸன் அந்த டெலி பிலிமை தயாரிக்க திட்டமிட்டது.
அவர்கள் பட்ஜெட் மிக குறைவு...
நடிகர் திலகத்தை தயக்கத்துடன் அணுகிறார் திரு. நாராயண சாமி. பம்பாய் D. D. யின் உயர் அதிகாரி அவர்...
உள்ள நிலையை சொல்லி, தயாரிப்பு செலவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற நிலையையும் சொல்கிறார்.
பம்பாய் தொலை காட்சி நிலையத்திற்கு பருத்தி புடவையாய் காய்த்தது அன்று..
அப்படிதான் சொல்ல வேண்டும்.
புன்னகையோடு அந்த தொலைக்காட்சி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் நடிகர் திலகம்... ஊதியம் ஒன்றும் வேண்டாம் என்கிறார்....
அதனுடன் நிற்கவில்லை.
தயாரிப்பு செலவு முழுதும் தன்னை சேர்ந்தது என்கிறார்.
AVM அவர்களிடம் N. T. பேச, அவரும் ஸ்டுடியோவை கட்டணம் இல்லாமல் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறார்.
தஞ்சை வாணன், வசனம் எழுதி தருகிறார்...
அந்த வசனம் தான் அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !!!
அந்த டெலி பிலிம் 1974 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பம்பாய் தொலைக்காட்சி நிலையத்தால் தமிழில் ஒளி பரப்பு செய்ய பட்டது.
பின் நாடு முழுவதும் அத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழில் அப்படியே ஒளி பரப்பின..
எவ்வளவு பெரிய அங்கீகாரம் தமிழனுக்கு....
மராட்டிய மன்னனின் சரித்திர சாதனையை ஒரு தமிழ் கலைஞன் தமிழிலேயே நடித்து நாடு முழுக்க ஒளி பரப்பப்படுகிறது என்கிற நிகழ்வு !
மட்டுமல்ல, பம்பாயில் நேரு பூங்காவில் உள்ள சத்திரபதி சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்க பட பெரும் தொகையை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.....
அந்த மாநிலத்தில் பல இடங்களில் உள்ள மாவீரன் சிவாஜியின் சிலைக்கு நிதி கொடுத்திருக்கிறார் இந்த சிவாஜி....
மராட்டியத்திற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம்....
அவரின் தாராள மனதிற்கு இன்னுமொரு நிகழ்வு சான்றாக இருக்கிறது....
1961-62 ஆம் ஆண்டு.
Y.B.சவாண் மகாராஷ்டிராவின் முதன் முதல் அமைச்சர் அப்போது.
மஹாராஷ்டிராவில் உள்ள koyna அணை உடைந்து போகிறது....
பேரிடர் அது... பெரும் சேதம்.. உயிர் சேதமட்டுமல்ல, எதிர்கால வாழ்வே கேள்வி குறியாக போனது மராட்டியருக்கு.
அணையை புனரமைக்க வேண்டும். அதுவும் உடனேயே, தாமதம் உதவாது...
நாட்டில் உள்ள நல்லோர் யாவரும் உதவி செய்யுங்கள் ! உடனடியாக !என்று அபய குரல் கொடுக்கிறார் அம்மாநிலத்தின் முதல்வர்...
என்ன கொடுப்பான்? எதை கொடுப்பான்?
என்று இவர்கள் எண்ணும் முன்னே,
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான் எங்கள் கர்ண வீரன்...
துணைக்கரம் நீட்டுகிறார் நம் தூயவர்....
நாட்டின் எந்த ஒரு நிறுவனத்தை காட்டிலும்....
எந்த ஒரு தனி மனிதனை காட்டிலும்,
எந்த ஒரு பாலிவுட் நடிகரை காட்டிலும்
அதிகமாக, தனி ஒரு மனிதனின் நன்கொடையாக 11 லட்சங்களை நிதியாக தந்தார் நடிகர் திலகம்...
தேசம் அந்நிய நாட்டுடன் போரில் இறங்கிய போது 65, 000 ரூபாய் கொடுத்த நடிகரின் பெயர் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தது அன்று, பலரும் பேசுகிறார்கள் இன்றும் அது பற்றி..
1961 ஆம் ஆண்டிலேயே
அண்டை மாநிலம் கூட அல்ல, மத்திய இந்தியாவில் ஒரு மாநிலம்..
பேரிடரில் சிக்கி தவிக்கும் தருணத்தில்
நடிகர் திலகம் மனம் துடித்து
கொடுத்த தொகை 11, 000, 00....
தோழர்களே ! நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடையை பற்றி...
வருமான வரி துறைக்கு மட்டுமே இந்த தகவலை தந்திருக்கிறார் எங்கள் தங்க ராஜா...
Thanks Vino Mohan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரலாறு / sivaji ganesan history
https://youtu.be/CV8_rc3U1lI
கொடை வள்ளல் சிவாஜி#சிவாஜி-கணேசன்-மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.அவற்றை காண்போம்.தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
வசந்த மாளிகை திரைப்படத்திற்கு சிவாஜி கட் அவுட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது
https://youtu.be/pZnsJ-1amN0
Thanks சிவாஜி ரசிகன் Sivaji rasikan Youtube Channel
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் "சிவந்த மண்'
சிவந்த மண் வெளியான தினம் 09-11-1969
சென்ற ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டது,
இணைப்பில்
சிவந்த மண் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்குகிறார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...4f&oe=5FCC4877
Thanks Sekar P
சிவந்த மண்.
9.11.1969 தீபாவளி அன்று வெளிவந்து, 52 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒரு அற்புதமான திரைப்படம், நடிகர் திலகம் நடித்து, ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய 'சிவந்தமண்'.
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரிய, காதல், சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படம் இது.
நடிகர் திலகம், காஞ்சனா, m.n.நம்பியார், s.v.ரங்கராவ், சாந்தகுமாரி, முத்துராமன், நாகேஷ், சச்சு, (இயக்குநர்) k. விஜயன், ஜாவர் சீதாராமன், மாலி, தாதா மிராஸி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம்.
---------
வசந்தபுரி சமஸ்தானத்தின் மன்னர் குணசீலர் ( ஜாவர் சீதாராமன்). பதவி வெறி, அதிகாரப் பித்துக் கொண்ட கொடுங்கோலனான திவான்( நம்பியார்), போர்த்துகீசிய நாட்டுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலுகிறார்.
நாட்டு மக்கள் அதை எதிர்த்துப் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தில் தன் தந்தையை இழந்த இளைஞன் ஆனந்த் (முத்துராமன்) புரட்சிக்காரனாக உருவாகிறான்.
கடமையே உயிரென நினைக்கும் நாட்டின் உயர் போலிஸ் அதிகாரி ( இன்ஸ்பெக்டர் ஜெனரல்) சந்திரசேகர் ( s.v.ரங்கராவ் ).அவரது மனைவி ஜானகி ( சாந்தகுமாரி).
ஐ.ஜி யின் மகன் பாரத் (சிவாஜி). சுவிட்சர்லாந்து நகரின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார்.
அதை அறிந்து, அதே நகரில் இருக்கும் வசந்தபுரி இளவரசி சித்ரலேகா, தன்னை வசந்தி என்ற பெயரில் ஒரு சாதாரணப் பெண்ணாக பாரத்திடம் அறிமுகம் செய்து கொள்ள, இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
தாய்நாட்டின் சந்தர்ப்ப சூழல் காரணமாக இருவரும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட, அவர்கள் வந்த விமானம் விபத்துக்குள்ளாகிக் கடலில் விழ, இருவரும் படுகாயங்களுடன் தப்பிப் பிழைக்கின்றனர்.
திவான் தன்னை மணக்க விரும்பும் சதித்திட்டம் அறிந்த வசந்தி, வசந்தபுரி அரண்மனைக்குச் செல்ல மறுத்து விட, இருவரும் பாரத்தின் நண்பன் ஆனந்த் ( முத்துராமன்) வீட்டுக்குச் சென்று, திவானுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
போராட்டத்தில் ஆனந்த் சுட்டுக் கொள்ளப்பட, பாரத், வசந்தி இன்னும் சில புரட்சி வீரர்களுடன் இணைந்து தலை மறைவு வாழ்க்கை நடத்தி, திவானை எதிர்த்து ரகசியமாகப் போராடுகிறார்கள்.
பல கட்டத் தொடர் முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர், திவான் பாரத்தால் கொல்லப்பட, நாடு திவானின் கொடுங்கோல் அதிகாரத்தில் இருந்து விடுதலை பெற, பாரத் வசந்தி இருவரும் திருமணத்தில் இணைகின்றனர்.
------------
அதுவரை காதல், மெல்லியல் மன உணர்வுகள், நகைச்சுவை என்று மட்டுமே படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர் இயக்கிய முதல் ஆக்*ஷன் படம் இது.
நடிகர் திலகம் காதல், சென்டிமெண்ட், ஆக்*ஷன் என்று அனைத்து விசயங்களிலும் படு அமர்க்களமாகப் புகுந்து விளையாடியிருப்பார்.
ஆனால், படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி, ஆடம்பரமின்றி, மிக மிக அமைதியாக, மென்மையாக இருக்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற பெர்ன் பல்கலைக் கழகத்தில் அவர் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில், அவர் படத்துடன், பார்த்த காஞ்சனா அன்று மாலை ஜூரிச் நகரின் உணவு விடுதி ஒன்றில் தற்செயலாகப் பார்த்து, அவரைச் சந்திக்க அவரருகில் வருவார்.
அப்போதுதான் நடிகர்திலகம் முதல் முறையில் திரையில் தோன்றுவார்.. வலது கை விரல்களைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, ஸ்பூனில் இடது கையில் எடுத்து அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவ்வளவு நளினம். காஞ்சனா அருகில் வந்து பேசியவுடன், சாப்பிடுவதை விட்டு விட்டு உடனே எழுந்து நிற்பதும், கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்னர் அவரிடம் "உங்க பெயர் என்ன ?" என்று கேட்காமல், "உங்க பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா ?" என்று கனிவாகக் கேட்பதும் பெண்களுக்கு அவர் தரும் மரியாதையையும் கண்ணியத்தையும் காட்டும்.
'நான் தோழிகளுடன் பாரீஸ் போகப் போகிறேன்' என்று காஞ்சனா சொன்ன போது, அதையே "பரீஸ் ?" என்று படு ஸ்டைலாக உச்சரித்துக் திருப்பிக் கேட்பது அமர்க்களம்.
இரண்டொரு நாளில் பாரிஸில் காஞ்சனாவைக் கண்ட போது, அவரிடம் தன் காதலைக் கூற முயன்று, எப்படிச் சொல்லுவது என்ற தடுமாற்றத்துடன் முன்னும் பின்னும் நடந்து, அவஸ்தைப் படுவது அருமை.
காஞ்சனாவுடன் சேர்ந்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்கும் போதும், அவருடன் டூயட் பாடும் காதல் காட்சிகளிலும், எக்ஸ்போ காட்சிகளிலும், இருவரும் படகைக் கால்களால் மிதித்து ஓட்டும் போதும், ஏரியில் இருவரும் விளையாடி மகிழும் நீர் விளையாட்டின் போதும், நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலுமே மென்மை கலந்த ஒரு கண்ணியத்தைப் படு இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார்.
இத்தகைய பூப்போன்ற மென்மையானவரா பிற்பாடு புரட்சி வீரன் பாரத்தாக அப்படி வீர தீர சாகசங்களை நிகழ்த்தியவர் என்று எண்ணும்போது படு வியப்பாக இருக்கும்.
விமானம் விபத்துக்குள்ளாகி, சிவாஜி காஞ்சனா இருவரின் நினைவற்ற உடல்களும் கரையோரம் நீரில் குப்புறக் கிடப்பதும், பெரிய அலை ஒன்று வரும்போது உடல்கள் அப்படியே அலைக்கழிக்கப்படுவதும், நிஜமாகவே உயிரற்ற இரு உடல்கள் நீரில் மிதந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே மனதைப் பதற வைக்கும். தான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றெல்லாம் சிறிதும் நினைக்காமல், டூப் போடாமல் , தானே அந்தக் காட்சியில் சிவாஜி நடித்திருப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நிச்சயம் பெருமிதப்பட வைக்கும்.
அரண்மனைக்கு எதிரில் நடந்த போராட்டத்தில், நம்பியார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நண்பன் முத்துராமன் உயிரிழந்த பின்னர், புரட்சிக்காரனாக மாறும் இவருடைய ஆக்*ஷன் கலந்த நடிப்பு மிகவும் உயர்ந்து கொண்டே போகும்.
மற்ற புரட்சி வீரர்கள் கீழே நிற்க, உயரமான பாறையின் மேல் நின்றபடி, இவர் நடத்தும் உணர்ச்சிகரமான உரை, சாதாரணமானவர்களுக்குக் கூட நரம்புகளை முறுக்கேற்றி வீரத்தை வர வைக்கும்..
குண்டுகளைப் போட்டபடியும், துப்பாக்கியால் சுட்டபடியும் ஹெலிகாப்டர் இவர்களைத் துரத்த, அதிலிருந்து தப்பிக்க இவர்கள் ஓடும் காட்சி படம் பார்ப்பவர்களை இருக்கைகளின் நுனியில் உட்கார வைக்கும்.. அதுவும் அந்தக் காட்சியில் டூப் போடாமல் இவரே நடித்து, ஹெலிகாப்டர் இவரது தலையை நிஜமாகவே உரசுவது போல மிகவும் தாழ்வாகப் பறந்து போகும்போது, நொடிப்பொழுதில் அவர் குழிக்குள் குதித்துத் தப்பிக்கும் காட்சி அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும். அவர் ஒரு நொடி தாமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
போர்த்துகீசியக் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க இவரும் மாலியும் கடலில் ரகசியமாக நீந்திச் செல்வதும், கப்பலினுள் சென்று குண்டு வைப்பதும் பின்னர் தப்புவதும் ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதைப் போல அவ்வளவு திரில்லிங்காக இருக்கும்.
திவானை அழிப்பதை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, வேறு எந்த விதமான பாச பந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற இவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம்.
திவான் வரும் ரயிலைக் கவிழ்க்கப் பாலத்தை வெடி குண்டு வைத்துத் தகர்த்து திவானைக் கொல்ல முயலும்போது, அதே ரயிலில் வருவது சொந்த அப்பா என்று தெரிந்தும், அதைப்பற்றிச் சற்றும் கவலை இல்லாமல் காரியத்தில் இறங்குவதும், தனது அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் காஞ்சனா என்று தெரிந்ததும் தன் சொந்த மனைவி என்றும் பாராமல் அவரைத் துப்பாக்கியால் சுடத் துணிந்ததும் தன் நோக்கத்தில் அவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தார் என்பது புரியும்.
அதுவும் உயரமான அந்தப் பாலத்தில் வெடிகுண்டு வைக்க இரண்டு இரும்புக் கிராதிகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து வைத்துக் கொண்டு நடக்கும் காட்சியில், டூப் போடாமல் இவரே நடித்திருப்பதும், ஒரு இடத்தில் திடீரென்று ஒரு கால் தவறுவதும் அனைவர் மனதிலும் பெரும் படபடப்பை ஏற்படுத்தும்.
எதற்காக இவர் உயிருக்கு ஆபத்தான இப்படிப்பட்ட காட்சிகளில் டூப் போடாமல், தானே நடித்து தன்னை வருத்திக் கொள்கிறார் என்று அவர் மேல் நமக்கு உண்மையிலேயே கோபம் வந்தாலும், 'நடிப்பு என்று வந்து விட்டால் தனது உயிர் கூடத் தனக்கு இரண்டாம் பட்சம்தான்' என்ற அவரது உயர்ந்த தொழில் பக்தியைச் சொல்ல இந்த ஒரு காட்சியே போதும்.
உடல்நிலை சரியில்லாத தாயைச் சந்திக்க இரவில் ரகசியமாக வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவுடன் பேசும் காட்சியிலும், தன் வருகை அறிந்த திவானின் உத்தரவுப்படி தன்னைக் கைது செய்யும்படி தன் தந்தையிடம் வேண்டும்போது அவர் மறுக்க, தன் கணவர் கடமை தவறாதவர் என்பதை நிரூபிக்கத் தன் தாயையே தன் கைகளில் விலங்கை மாட்ட வைப்பதுமான காட்சிகளில் அவரது நடிப்பு படு உருக்கமானது.
கை விலங்குடன் நம்பியாரின் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது, நம்பியார் சோபாவில் அமர்ந்து செருக்காகக் கால் மேல் கால் போட்டபடி பேச, அடுத்த நொடியே இவரும் நம்பியாருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் போட்டபடி பேசுவது, அசல் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுக்குக் கொண்டு வரும் அற்புதமான நடிப்பு.
சிறை அதிகாரி அவரை அறையில் அடைக்க உத்தரவிட்டுக் கொண்டுருக்கும்போதே சிறையின் அமைப்பைக் கண்களால் நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியை முடிவு செய்து கொண்டு, மௌனமாக ஒரு புன்னகை செய்வதும், அறைக்குள்ளே தள்ளி அடைக்கப்படும்போது, நொடிப் பொழுதில் எதிர்ச்சுவரில் கால்களை உந்தித் திரும்பி வந்து, காவலனைத் தாக்கித் துப்பாக்கியைப் பறித்து, சிறை அதிகாரியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு காவலராகத் துப்பாக்கிகளைத் தன் காலடியில் கொண்டு வந்து வைக்க வைத்து அவற்றை ஒவ்வொன்றாகச் சிறை அறைக்குள் கால்களால் தள்ளி விடுவது மிகவும் வியக்க வைக்கும் காட்சிகள்.
பட்டத்து ராணி... பாடலின் போது, அரபு ஷேக் வேடத்தில், கையில் சாட்டையுடனும், துப்பாக்கியுடனும், காட்சி முழுவதும் , என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடனேயே நம்பியாரைத் தவிக்க வைப்பது அருமை... அதிலும் சுழல் மேடையில், மேடை சுழலும் திசையில் காஞ்சனா சுற்ற, இவர் சுழற்சிக்கு எதிர் திசையில் படு கம்பீரமாக அடி எடுத்து நடப்பதும் அதே வேளையில் கவனம் முழுவதும் நம்பியார் மேலும், அவரை நோக்கியே துப்பாக்கியைக் குறி வைத்து இருப்பதும் அமர்க்களம்.
காஞ்சனா, வழக்கமாகக் கதாநாயகனுடன் வந்து செல்லும் நாயகிகளைப் போல இல்லாமல், ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்திலும், பின்னர் வசந்தபுரியிலுமாக, படம் முழுவதும் வருவதுடன், புரட்சி வீரன் பாரத்தின் போராட்டத்தில் சிறப்பாகத் துணை நிற்கிறார். எவ்வளவு அடித்த போதும், துப்பாக்கியில் சுடப்படுவாய் என்று மிரட்டப்பட்ட போதும், வெடிகுண்டுத் திட்டத்தின் தோல்விக்கு உதவியது யார் என்ற உண்மையைச் சொல்ல மறுப்பது அருமையான
நடிப்பு.
படத்தின் முதுகெலும்பே நம்பியாரின் அமர்க்களமான நடிப்புதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே நயவஞ்சகம் மற்றும் கொடூங்கோன்மையின் உச்சத்தை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. துப்பாக்கியை எடுத்து நாமே நம்பியாரைச் சுட்டு விட வேண்டும் என்று பல சமயங்களில் நம்மை நினைக்க வைப்பது அவரது நடிப்பின் மாபெரும் வெற்றி.
புரட்சிக்காரன் ஆனந்தாகக் கொஞ்ச நேரமே வந்தாலும், முத்து ராமன் மனதில் நிற்கிறார். அதிலும் இறந்து போனதாக நம்பப்பட்ட பாரத் உயிருடன் திரும்பி வந்தபோது நம்ப முடியாமல் அவரது கண்கள், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர, அகலமாக விரிவது அருமை.
நாகேஷும், சச்சுவும் மதுபானக் கடை உரிமையாளர்களாக வந்து, பாரத் கூட்டத்தினருக்கு உதவுகிறார்கள். அவ்வப்போது நாகேஷ் லேசாகச் சிரிக்க வைக்கிறார். கல்யாணக் காட்சியின்போது, திடீர் ஐயராக மாறி, மந்திரம் தெரியாமல் அவர் அடிக்கும் கூத்துகள் அருமை.
சச்சுவை இவ்வளவு படு கவர்ச்சியாகப் படம் முழுவதும் பயன்படுத்தி இருக்க வேண்டுமா என்பது சற்றே நெருடலான கேள்விதான்.
புரட்சி வீரர்களாக வரும், (இயக்குநர்) k.விஜயன், மாலி (ஜெமினி மகாலிங்கம்), தாதா மிராஸி ( ரத்தத்திலகம், புதிய பறவை, மூன்று தெய்வங்கள் ஆகிய அற்புதமான நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய அவரேதான்) போன்றவர்கள் சிவாஜியின் போராட்டத்தில் துணை நின்று அருமையாக
நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிகர் திலகத்துடன் இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார்.
அவரைப் படத்தில் பார்க்க முடியாது. காதில் கேட்கவும், கேட்டு இதயத்தில் உணரவும் மட்டுமே முடியும்.
அவர்தான் மெல்லிசை மன்னர் msv.
அவரது ஆயிரக்கணக்கான படங்களில் சிவந்த மண் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
படம் முழுவதும் பின்னணி இசையில் மனுசன் புகுந்து விளையாடி இருப்பார்.
ஆரம்பத்தில் காதல் ரசம் சொட்டும் காட்சிகளில் மனதுக்கு இதமான பின்னணி இசையைத் தந்தவர், கதைக்களம் வசந்தபுரிக்கு நகர்ந்த பிறகு, விஸ்வரூபம் எடுத்துப் பின்னி எடுத்திருப்பார். ஒரு ஆக்*ஷன் படத்துக்கு எப்படிப் பின்னணி அமைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு டிக்சனரி. அதுவும் கப்பலில் வெடிகுண்டு வைப்பதற்கு சிவாஜியும் மாலியும் கப்பலுக்குள் நுழைந்த பிறகு அவர் அமைத்த பின்னணி இசை, சஸ்பென்ஸ், திகில் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும். கப்பலில் போர்த்துகீசிய நாட்டினருக்கு நடக்கும் பார்ட்டியின் போது, பாடல் எதுவும் இல்லாமல், ராதிகாவின் நடனத்துக்குக் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஆங்கிலப் படங்களுக்குச் சவால் விடுவது போல இருக்கும்.
படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிக அற்புதமாகத் தந்திருக்கிறார் கவியரசர். வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இன்றும் நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் தேனினும் இனிய பாடல்களைக் கவியரசர் மெல்லிசை மன்னர் ஜோடி நமக்கு அளித்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.
முத்தமிடும் நேரமிப்போ....
ஒரு ராஜா ராணியிடம்....
பார்வை யுவராணி கண்ணோவியம்...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...
சொல்லவோ சுகமான கதை....
ஒரு நாளிலே உறவானதே....
ஆகிய பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது ?
"பட்டத்து ராணி..." பாடலைப் பற்றியும் , அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற வாத்தியக் கருவிகளைப் பற்றியும், l.r.ஈஸ்வரி அற்புதமாக அதைப் பாடியதைப் பற்றியும், பாடலில் msv அமைத்த வித்தியாசமான bgm பற்றியும் ஏகப்பட்ட கட்டுரைகள் ஏற்கெனவே வந்துள்ளன.
"முத்தமிடும் நேரமிப்போ..."
"சொல்லவோ சுகமான கதை சொல்லவோ..."
ஆகிய இரண்டு பாடல்களுமே மதுபான விடுதியில் ஆடப்படும் கவர்ச்சியான ஆட்டத்துக்குப் பாடப்பட்ட, நம்மைத் தாளம் போட வைக்கும் பாடல்களாக இருந்தாலும், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமான இசையில் அமைந்திருக்கும்.
முன்னதை l.r.ஈஸ்வரி பாடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதற்குப் படு கவர்ச்சியாக சச்சு நடனமாடி இருப்பார்.
"சொல்லவோ சுகமான கதை..." பாடலை p.சுசீலாவைப் பாட வைத்திருப்பதுதான் ஆச்சரியமான விசயம். தன் தேன் குரலில் அதை மிகவும் இனிமையாகப் பாடி இருப்பார் சுசீலா அம்மா. அதற்கு ஆடிப் பாடி நடித்தது காஞ்சனா.
"பார்வை யுவராணி கண்ணோவியம்..." (tms
"ஒரு நாளிலே உறவானதே..." ( tms, p.சுசீலா)
ஆகிய இரண்டுமே மென்மையான காதல் பாடல்கள்.. தேனில் ஊற வைத்த பலாச்சுளைகள் போன்றவை..
படத்தில் 7 நிமிடங்கள் வரக்கூடிய, மிக முக்கியமான பாடலான,
"ஒரு ராஜா ராணியிடம்...." பாடலைப் பற்றி மட்டுமே ஒரு தனிப்பதிவு போடலாம். அவ்வளவு சங்கதிகள் அப்பாடலைப் பற்றி உள்ளது. இருப்பினும் முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.
கவியரசரும், மெல்லிசை மன்னரும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டியில் கலந்து கொண்டவர்களைப் போல, ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் , இந்தப் பாடலில், ஆளுக்காள் அற்புதத்தைப் படைத்திருப்பார்கள்.
பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் ரோம், பாரிஸ், வெனிஸ், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை ஆகிய பகுதிகள்.
உற்றுக் கவனத்தால் படமாக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஒரு சரணமும், ஒவ்வொரு சரணத்துக்கும் வித்தியாசமான இசையமைப்பும் இருப்பது தெரியும்..
அக்கார்டின், வயலின், பாங்கோஸ், கிடார், ப்ளூட், டிரம்பெட் ஆகியவற்றை அந்தந்த சரணத்துக்கு ஏற்ற மாதிரி அற்புதமாகப் பயன்படுத்தி ஒரு ஜூகல்பந்தியே நடத்தி இருப்பார் மெல்லிசை மன்னர். அதிலும் ஆல்ப்ஸ் மலைப் பனிச் சறுக்குக் காட்சிகளின் bgm இல் அக்கார்டினில் அற்புதமாக விளையாட்டுக் காட்டியிருப்பார்.
கவியரசர் சற்றும் சளைக்காமல் மேலே மேலே போய்க் கொண்டே இருப்பார்..
ஒரு சரணம் முழுக்க "மோ.." என்ற எழுத்தில் அனைத்து வரிகளும் முடிந்தால், இன்னொரு சரணத்தில் " யோ..."என்று அனைத்து வரிகளும் முடியும். வேறொரு சரணத்தில் "னோ.." என்று முடியும். அதை விட முக்கியம் " "மோ.. யோ..னோ... "என்று முடியும் எழுத்துக்களுடன் நாயகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்ட, அதே "மோ..யோ..னோ.." என்று முடியும் எழுத்துக்களுடன் கேள்விகளாகவே கேட்டு நாயகி நாயகனின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைப் போல எழுதியிருப்பது கவியரசரின் ஒப்பில்லாத கை வண்ணம்.
மேலும் ஒவ்வொருமுறை மோ..யோ..னோ ஆகிய எழுத்துக்களை இருவரும் பாடும்போதும், ஒவ்வொரு முறையும் அந்த உச்சரிப்புகள் வித்தியாசமாக இருக்கும் வண்ணம் அமைத்திருப்பது மெல்லிசை மன்னர் செய்த அற்புதம்.
அதுவும் சுசீலா அம்மா "மோ...யோ...னோ.." என்று சற்றே இழுத்த மாதிரி முடிப்பது அப்படியே தேனை நேரடியாகக் காது வழியே நம் நாக்கில் தடவுவதைப் போல இனிக்கும்..மயக்கும்.
இறுதியில் மெல்லிய வயலின் இசையுடனும், அதை விட இனிய சுசீலா அம்மாவின் குரலுடனும் பாடல் முடியும்.
பாடல் வரிகளைக் கவனித்தால், வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியப் பெண் எப்படித் தன் பெண்மையை உயர்வாக மதிக்கிறாள் என்பது மிகவும் அருமையாகப் புரியும்.
"ஓடம்....பொன்னோடம்..." வரிகளின் சரணம் முழுவதும், இருவரும் படகைக் காலால் வலிப்பதாக, லாங் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். முகம் சரியாகத் தெரியாது. அதனால் அந்தச் சரணம் முழுவதையுமே வேறொரு விதத்தில் குளாசப்பில் எடுத்து, லாங் சாட்டில் இவர்கள் படகு வலிப்பதையும், குளோசப் ஷாட்டில் பாடல் வரிகளைப் பாடுவதையும், அதைச் சின்னதாக அப்படியே திரையின் வலது ஓரத்தின் மேற்புறத்தில் சூப்பர் இம்போஸ் செய்து, இரண்டையும் ஒரு சேரத் திரையில் அற்புதமாகத் தந்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
பிற்காலத்தில் 'பிக்சர் இன் பிக்சர்' என்ற, ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளைக் காணும் வசதியுடன், tv கள் விற்பனைக்கு வந்தன. அதனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, லாங் ஷாட்டையும், குளோசப் ஷாட்டையும் ஒரே திரையில் இடம்பெறச் செய்து அற்புதம் காட்டி விட்டது நடிகர்திலகம் & ஸ்ரீதர் டீம்.
இப்போது போல, ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடு சென்று, அரைகுறை ஆடைகள் கொண்ட வெளிநாட்டு அழகிகளுடன் ஒரு குத்தாட்டம் போல அதை எடுக்காமல், ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தது மட்டும் அல்லாமல், அதை எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் நடத்திக் காட்டிய படம்தான் சிவந்த மண்.
பாரிஸ் நகரத்தின் வீதிகள், கடைகள் ஆகியவை இரவு நேரத்தில் மின்னொளியில் அற்புதமாக மின்னுவதையும், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் காளையைக் குத்திக் கொள்ளும் அரிய காட்சியையும், ரோம், வெனிஸ், பாரிஸ் நகரங்களின் அழகிய பகுதிகள், ஆல்ப்ஸ் மலையின் அழகிய பனிச் சிகரங்கள், மற்றும் 7 நிமிடக் காட்சியாக எக்ஸ்போ கண்காட்சியின் விதவிதமான ராட்சஷ ராட்டினங்கள் ரோலர் கோஸ்டர்களையும் அப்படியே கண் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் காமெராவும் மிகவும் பாராட்டத்தக்கது.
இத்தகைய அற்புதமான ஒரு படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து ஓடியதும், சென்னையில் நான்கு தியேட்டர்கள் உட்பட, மொத்தம் ஒன்பது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றது ஒன்றும் வியப்பல்லவே.
அப்படி நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகளில் எங்கள் கோயம்புத்தூர் ராயல் தியேட்டரும் ஒன்று என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமைதான்.
நன்றி.
நாகராஜன் வெள்ளியங்கிரி.
[COLOR=var(--primary-text)]சிவந்த மண் 9-11-- 1969 -சில நினைவுகள்.
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.( அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும்.
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.(Yaman kalyan ragam)
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
[/COLOR]
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...f1&oe=5FCF64D3
https://scontent-ort2-1.xx.fbcdn.net...a5&oe=5FCCD788
https://scontent-ort2-1.xx.fbcdn.net...0f&oe=5FCDED6D
https://scontent-ort2-1.xx.fbcdn.net...4e&oe=5FCE2BDD
Thanks Gopalakrishnan.S
9/11/1969 இந்தியாவில் திரைக்கு வந்து சாதனை படைத்த சிவந்த மண்
13/01/1971 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டு சாதனை படைத்தது.
கொழும்பு ...கெப்பிட்டல்... 97 நாட்கள் ஓடியது.
யாழ்நகர்....வெலிங்டனில்..56 நாட்கள் ஓடியது.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...16&oe=5FCC9319
தியாகம் 1978
மதுரை மாநகரில் 175 நாளில்
ரூபாய் 6,74,112- 97 வசூலித்து புதிய சாதனையை படைத்தது,
10-11-2020
முரசு தொலைக்காட்சியில் 12pm&7pm ஒளி பரப்பாகிறது,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...6a&oe=5FCDB806
Thanks Sekar.P
தெய்வமகன் மறு வெளியீடு,
1994
7 வது வாரம் ஹவுஸ்புல் ஹவுஸ்புல் ஹவுஸ்புல்,,
ஆனந்த் திரையரங்கில் ஒரு காட்சியின் வசூல் தொகை முழுமையாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திரட்டும் கோயில் நல நிதிக்கு அளிக்கப்படுகிறது,
( நன்றி திவ்யா பிலிம்ஸ்)
10-11-2020 இன்று சன் லைப் தொலைக்காட்சியில். காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...b4&oe=5FD0F580
Thanks Sekar.P
விஷமத்தனமான விமர்சனம் செய்த விகடர்களை மண்டையில் சவுக்கால் அடித்தீர்கள்,
இப்படி அந்த வீனர்களையும் அடிக்கடி சவுக்கால் அடித்துக் கொண்டே இருந்து இருக்க வேண்டும்,
நாளை முரசு தொலைக்காட்சியில் 12 pm&7pm ஒளி பரப்பாகிறது
தியாகம்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...93&oe=5FCD7E11
Thanks Sekar.P
முத்துக்கள் மூன்று
10-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
தெய்வமகன்-11 am சன் லைப் சேனலில்,
தியாகம் - 12 pm&7 pm முரசு சேனலில்,
எங்கிருந்தோ வந்தாள்- 11pm பாலிமர் சேனலில்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...73&oe=5FCD8441
https://scontent-ort2-1.xx.fbcdn.net...5b&oe=5FD0BDEC
Thanks Sekar.P
15-03-1962 அன்று வெளிநாட்டு சுற்று பயணம் சென்றார் நடிகர் திலகம் ...
இரு மாத பயணம் ...
ஜெர்மனி ,இத்தாலி ,பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு சென்றார் .
மூன்று கண்டங்கள் !
ஆசியாவில் ஜப்பான் ..
ஐரோப்பாவில் முக்கிய நாடுகள் சில .
பின் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்கள் பலவற்றிற்கு சென்றார் ..
ஏறத்தாழ இது ஒரு உலக சுற்று பயணமே ..
தனிப்பட்ட பயணம் அல்ல இது ...
உடல் நலன் குறித்து சென்ற மருத்துவ சுற்றுலாவும் அன்று ....
அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக சென்றார் ....
அந்த பயணத்தின் வெற்றி குறித்து பலரும் புகைப்படங்கள் பலவற்றுடன் பதிவு செய்திருந்தார்கள் பல குழுக்களில் ...
அந்த பயணத்தின் துவக்கத்தில் அவரை வாழ்த்தி கல்கி ஏடு வெளியிட்ட வாழ்த்து செய்தி இது ....
அந்த பயணம் வெற்றியுடன் முடிந்தது ..
மிக பெரும் வரவேற்பும் நடிகர்திலகம் திரும்பி வந்த அன்று அளிக்க பட்டது .....
https://scontent-ort2-1.xx.fbcdn.net...11&oe=5FCECEC9
Thanks Vino Mohan
சிவந்த மண் 100 வது நாள் விளம்பரம்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...62&oe=5FCDC855
சிவந்த மண் 50 வது நாள் விளம்பரம்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...44&oe=5FD03087
பலகோடி ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்த நடிகர் திலகம் நடித்த முதல் நூறு படங்கள் ஒரே புகைப் படத்தில்.zoom செய்து பார்த்து மகிழுங்கள்
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...3f&oe=5FCF9319
Thanks Raja Lakshmi
அண்ணன் ஒரு கோயில் 10/11/1977
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...d8&oe=5FD08B24
Thanks Vcg Thiruppathi
அண்ணன் ஒரு கோயில்(1977)
சென்னை நகர் வசூல்
19,93,368.25
சிவாஜி 20 மணி நேரம் வேலை செய்துவிட்டு 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் அவ்வளவு கடுமையாக உழைப்பார்!
தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்று சொல்லலாம்! அந்த காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம்! கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்களே அதிகம்!
அத்தகைய காலத்தில் அகலக் கால் விரிக்காமல் சீராக நடந்து வெற்றி பெற்றவர் சிவாஜி! சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்! பற்பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே சிவாஜியாகத்தான் இருக்க முடியும்”! இப்படிச் சொன்னார் வி.கே. ராமசாமி! இவருடைய நடிப்புத்திறமைக்கே ஒரு தொடர் எழுதலாம்!
அதைவிட எம்.ஜி.ஆர். நடித்த சுமார் 140 படங்களில் அதிக படங்களில் நடித்தவர் சரோஜாதேவி! அதற்கடுத்து, ஜெயலலிதா! ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர் எம்.என். நம்பியார்! சுமார் 80 படங்களில் எம்.ஜி.ஆர். படத்தில் இவர்தான் வில்லன்! ஆனால் வாழ்க்கையில் ராமன்! ராமாயண ராமன்! ஏகபத்தினி விரதன்! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக்காட்டு!
இவர் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்?
“நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்! நமது முன்னோராலும், மூதாதையர்களாலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார்!
அதாவது கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் கண்ணதாசனை மறக்க முடியவில்லை! நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போலத்தான்! ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக்கூடியவர்! நடிப்புக் களஞ்சியமான அவர் ‘நடிப்பை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வது வியப்பாக இல்லை!
நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் அவர்! நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவர் கருத்து! அவருடன் நான் நடித்த வேடங்களை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்!
‘பாகப்பிரிவினை’யில் தம்பியாக, ‘பாதுகாப்பு’வில் அண்ணனாக, ‘பாசமல’ரிலும் ‘மக்களைப் பெற்ற மகராசி’யிலும் மைத்துனனாக, ‘உத்தம புத்திர’னில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக, அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் நடிகர் திலகம்தான்! அவரது இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!”
இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித்தார்!
Thanks Raja Lakshmi
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 46-வது படமாக...
அண்ணன் ஒரு கோயில் 1977
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 46
சென்னை சாந்தி கிரவண் பவுனேஸ்வரி
மதுரை நியு சினிமா சேலம் சாந்தி
திருச்சி பிரபாத் கோவை கீதாலயா
தஞ்சை அருள் குடந்தை செல்வம்
என 100 நாள் ஓடிய 9 அரங்குகளில் மட்டுமே
சுமார் 40 லட்ச ரூபாய் வசூலித்த மெஹா ஹிட் திரைப்படம்
வெளியான நாள் நவம்பர் 10 1977
திரையிட்ட அரங்கு நியு சினிமா
ஓடிய நாள் 100
மொத்த வசூல்.................3 83 950.58
நிகர வசூல்.....................1 85 509.16
வி பங்குது; தொகை....... 0 98 639.59
சென்னையில் குறுகிய காலத்தில்
மிகப்பெரிய அளவில் வசூலித்த படம்
சென்னை சாந்தி..............114 நாள்...9 66 353.30
சென்னை கிரவண்...........114 நாள்...5 27 633.35
சென்னை புவனேஸ்வரி...114 நாள்...4 99 381.60
3 தியேட்டர் 342 நாள் வசூல்............19 93 368.25
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...f4&oe=5FD0C1BE
Thanks Nilaa
செல்வம் 11/11/1966
https://scontent-ort2-1.xx.fbcdn.net...01&oe=5FD2CCA8
Thanks Vcg Thiruppathi
படிக்காதவன் 11/11/1985
https://scontent-ort2-1.xx.fbcdn.net...bf&oe=5FCFCD2B
Thanks Vcg Thiruppathi
சிவந்தமண் படத்திற்கு அவதூறு பரப்பிய கூட்டத்திற்கு சவுக்கடி விளக்கமளிக்கிறார்
சித்திராலயா கோபு
https://youtu.be/fUpzqgwcQs8
11-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
சுமதி என் சுந்தரி.........பி பகல் 4 மணிக்கு சண்லைப் ரி வி
கிருஷ்ணன் வந்தான்....மாலை 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் ரி வி
12-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
தேவர் மகன்..........காலை 6 மணிக்கு...........விஜய் சுப்பர் ரிவி
சொர்க்கம்.............காலை 11 மணிக்கு.........சண்லைப் ரிவி
தியாகம்...............பி பகல் 1.30 மணிக்கு.......வசந்த் ரி வி
நவராத்திரி..........மதியம் 12 மணி & மாலை 7 மணிக்கு முரசு ரிவி
சபாஷ் மீனா........ இரவு 10 மணிக்கு ..............ஜெயா மூவி
ஞான ஒளி............இரவு 11மணிக்கு.................பாலிமர் ரிவி