Happy birthday ilayathalapathi vijay
Printable View
Happy birthday ilayathalapathi vijay
சரண்யாவுக்கு கல்யாணம்!
Attachment 4254
’யாரடி நீ மோகினி’ படத்தில் பாலக்காட்டு மச்சானுக்கு பாடலில் தனுஷுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் ஈர்த்தவர் சரண்யா மோகன். தமிழில் சரண்யா நடித்த முதல் படம் ‘காதலுக்கு மரியாதை’ . ஆனந்தக் குயிலின் பாட்டு பாடலில் ஆங்கிலப் பாடல் கூட பாடுவார்.
தொடர்ந்து ’ஜெயம் கொண்டான்’, ’வெண்ணிலா கபடிக் குழு’, ’ஈரம்’; ‘அழகர் சாமியின் குதிரை’, வேலாயுதம் என பல படங்களில் நடித்தார். 26 வயதான சரண்யா மோகனுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. நேற்று ஜூலை 12ம் தேதி நிச்சயம் நடந்துமுடிந்துள்ளது.
அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் சரண்யா மோகன். இவர் ஒரு டாக்டர். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் புகைப்படத்துடன் சரண்யா மோகன் வெளியிட்டுள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளார்.
திருமணம் செய்துகொள்ளப் போகிறார் தபு! - vikatan
கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் தபு. அதுமட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்துவருகிறார். கடைசியாக த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கில் தபு போஸீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தமிழில் பாபநாசம் படத்தில் ஆஷா ஷரத் கதாப்பாத்திரத்தில் தான் இந்தியில் தபு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தபுவிற்கு 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. முன்னர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து தோல்வியில் முடிந்ததால் இதுவரை திருமணம் செய்துகொள்ள வில்லை என்ற செய்தியும் பரவி வந்தது. தொடர்ந்து தபுவின் குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்தனர். ஆனால் தமக்கு திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமலே தனிமையில் வாழ்ந்துவந்தார் தபு.
தற்பொழுது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறாராம் தபு. மும்பை தொழில் அதிபரை மணக்கப் போவதாக தகவல்கள் பரவிவருகின்றன. திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
:shock: she is getting married now ?
ஏர்வாய்ஸுக்கு ஆசைப்பட்ட அசினுக்குக் கடைசியில் கிடைத்தது மைக்ரோமேக்ஸ்தான்!
சென்னை: மாங்கல்யம் தந்துனானே... சீக்கிரமே ஆசின் இந்த மந்திரக் குரலைக் கேட்கப் போகிறார் மணவறையில்... மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை ஆசின் மணக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த இடத்தில்தான் நமக்கு கஜினி படக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. கஜினி பட நாயகன் சூர்யாவுக்கு வேண்டுமானால் ஷார்ட் டைம் மெமரி இருக்கலாம். ஆனா் படத்தை பல தடவை பார்த்த மக்களுக்கு கதை அவ்வளவு சீக்கிரம் மறக்காது இல்லையா.. மெமென்டோ படக் கதையும் கூடவே நினைவில் உள்ளதே...!
கஜினி படக் கதையில் இ்ப்படித்தான் சூர்யாவைக் காதலிப்பார் ஆசின். அதில் சூர்யா ஏர்வாய்ஸ் என்ற செல்போன் சேவை நிறுவனத்தின் அதிபராக வருவார். அவரைக் காதலித்து கடைசியில் பரிதாபமாக உயிரிழப்பார்.சினிமாவில்தான் இப்படி செல்போன் சேவை நிறுவன அதிபரை மணக்க முடியாமல் ஆசின் கதையை பாதியிலேயே முடித்து விட்டார்கள்.ஆனால் நிஜ வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு செல்போன் நிறுவன அதிபரை மணக்கப் போகிறார் ஆசின் என்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாகும். மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் பிரபலமான செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமாகும். ராகுல் சர்மா, விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா, ராஜேஷ் அகர்வால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. 2000மாவது ஆண்டில் இது உதயமானது.எப்படியோ ஏர்வாய்ஸில் நடித்த ஆசினின் காதல் குரல் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரின் மைன்ட் வாய்ஸுக்குள் எட்டிப் பார்த்து இப்போது மேரேஜ் நியூஸ் வந்து விட்டது... எல்லாம் சுமூகாக முடிவடைய வாழ்த்துவோம்.
சினேகா-பிரசன்னா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது
நடிகை சினேகா - பிரசன்னா தம்பதிக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இருவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இருப்பினும் சில படங்களில் மட்டும் நடித்துவந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே சினிகா எந்த படப்பிடிப்பிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா ட்விட்டரில் ட்விட் செய்து குழந்தை பிறக்கப்போவதை உறுதிபடுத்தினார்.
இந்நிலையில் பிரசன்னா - சினேகா தம்பதியருக்கு நேற்றிரவு அழகான ஆன்குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “ என் ஏஞ்சல் சினேகா ஆழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்” என்று ட்விட் செய்துள்ளார்.
குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தாமிரபரணி பானுவுக்குக் கல்யாணம்- பின்னணிபாடகியின் சகோதரரை மணக்கிறார்
ஹரி இயக்கத்தில் உருவான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு வந்தவர் பானு (முக்தா). தொடக்கத்தில் பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லையென்றாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
அவருக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக விளங்கும் ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை மணக்கவிருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி கேரளா, கொச்சியில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இம்மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் பானு நடித்துள்ளார். இவைதவிர சகுந்தலாவின் காதலன் என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். நிறைய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என் நடிப்பு தொடரும் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார். வாழ்த்துகள் பானு.
இயக்குநர் ஷங்கர் பிறந்த தினம் இன்று! HAPPY BIRTHDAY Sir...
Belated birthday wishes to CAPTAIN
https://www.youtube.com/watch?v=O2VVcf7lWRI
Surprised to see not even a single wish in Hub :(
நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்...பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!
’உள்ளம்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு,கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறியப்பட்டவர் அமீரின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தேசிய விருதையும் வென்று முன்னணி நடிகையானார். அதைத்தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என ப்ரியாமணி பல டாப் ஹீரோக்களுடன் நடித்தார்.
தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் பிரியாமணி. தொழிலதிபரும் , பிரியாமணியின் நீண்ட கால நண்பரும் ஆன முஸ்தபா ராஜை மணக்க இருக்கிறார். நான் தான் என் காதலை முதலில் வெளிப்படுத்தினேன் எனக் கூறிய பிரியாமணி, இப்போதுவரை அந்த நிகழ்வை அவர் நான் ஜோக் அடித்ததாகவே நினைத்ததாக கூறுவார் என முஸ்தபா குறித்தும் அவருடனான காதல் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளின் போதுதான் நான் அவரை சந்தித்தேன்.
பழகிய கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்குள் இருப்பது நட்பையும் கடந்த ஏதோ ஒரு பந்தம் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் இருவருமே அதை உணரத் துவங்கினோம். மேலும் நான் கோபப்படுவதையோ அல்லது வருந்துவதையோ கொஞ்சமும் விரும்பாத மனிதர் முஸ்தபா. நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்.
எனது பிரச்னைகள் எதுவாக இருப்பினும் என்னுடன் நிழலாக நிற்பவர் , நல்ல நகைச்சுவரை உணர்வும் அவரிடம் உள்ளது என முஸ்தபா குறித்து கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பிரபல கன்னட ரியாலிட்டி நிகழ்ச்சியான டி2 டி4 டான்ஸ் நிகழ்ச்சியில் முஸ்தபாவுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரியாமணி. சரண்யா மோகன், சாந்தனு ,அசின் லிஸ்டில் தற்போது பிரியாமணியும் இணைய இருக்கிறார்.
Happy wedding anniversary to Vijay and Sangeetha.
my bad. I didnt check the date (aug 25), just saw a an image of the couple on fb wall today and wished but I still wish them all the best.
நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்!
’நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர். அந்தப் படத்தின் மூலம் பிரபலமும் ஆனார். மலையாளத்தில் லிவிங் டு கெதர் படம் மூலம் அறிமுகமான ஷிவதா, ஆரிக்கு ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்தார். அந்தப்படத்துக்குப் பிறகு தமிழில் ஸீரோ என்ற படத்தில் மட்டும் அவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் நடிகருமான முரளிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரள பாணியில் உடை உடுத்தி இருவரும் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Happy Birthday : தமன்னாவுக்கு 26 |ஆண்ட்ரியாவுக்கு 30
ஒரே நாளில் ஆண்ட்ரியா மற்றும் தமன்னாவுக்கும் பிறந்தநாள்.தமன்னாவுக்கு வயது 26. ஆண்ட்ரியா 30 வயதை எட்டிவிட்டார். இருவரும் ஒரே வருடத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள் என்பதுதான் இதில் ஆச்சர்யம். பிறந்தது மட்டுமல்ல கலைப்பயணத்தையும் சேர்ந்தே துவங்கியுள்ளனர்.
தமன்னா, சண்ட் சா ரோஷன் செஹ்ரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். கேடி படம் மூலம் தமிழில் அறிமுகம். அதே பாணியில் ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சின்ன ரோல். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இன்னொரு நாயகி என சினிமாப் பயணம் இனிதே துவக்கம்.
காந்தக் குரலழகி ஆண்ட்ரியா எனில் தமன்னா நகை வடிவமைப்பாளர், தனக்கென தனி தளம் அமைத்துள்ளதோடு, தனக்கான நகைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் திறன் உடையவர். நடிப்பைத் தாண்டி ஆண்ட்ரியாவும் சரி தமன்னாவும் சரி நல்ல மாடல்களும் கூட. முக்கிய விஷயம் இருவரும் அவ்வளவும் தீவிரமாக டயட் மெயிண்டெயின் பேர்வழிகள்.
இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்த தடகா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் சினிமா விகடனின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
Happy Birthday to A R Rahman sir
many more happy returns of the day arr...
WISH Asin a happy married life.
Happy 30th birthday Shruti Haasan.
https://www.youtube.com/watch?v=DbaFgJebZfI
Happy Birthday to Amy Jackson. Live happy and long
http://data1.ibtimes.co.in/cache-img...g-pictures.jpg
wish Sangavi a very happy married life and best of luck for her future.
Happy Birthday to Honorable Chief Minister of Tamil Nadu J. Jayalalithaa ... !!!
நடிகர் நகுல் - ஸ்ருதி Married...
http://tamil.thehindu.com/multimedia...d_2756397f.jpg
ப்ரீத்தி ஜிந்தா திருமணம் - அமெரிக்க காதலரைக் கைபிடித்தார்
ப்ரீத்தி ஜிந்தா. கன்னக்குழி அழகி. உயிரே படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நாயகி. சினிமா மட்டுமல்லாமல் க்ரிக்கெட்டிலும் விருப்பமுடையவர். ஐ.பி.எல்லில், இவரது கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியினரின் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் - இவரது ஆட்டத்தையும் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்ததெல்லாம் உண்டு.
ப்ரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் அணியின் மற்றொரு உரிமையாளரான நெஸ் வாடியாவைக் காதலிப்பதாக செய்திகள் கசிந்தன. இருந்தாலும் அது நீடிக்கவில்லை.
இந்நிலையில், ப்ரீத்தி கடந்த ஞாயிறன்று தனது அமெரிக்க காதலரை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் கசிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குடெனஃப் என்பவரை மணந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி, இருதரப்பிலிருந்தும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், பிரபல நகை வடிவமைப்பாளரான ஃபரா கான் அலி, திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் அவரது ட்வீட் மூலமுமாகவே தகவல் வெளியாகியுள்ளது,
ப்ரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான, கபீர் பேடி, சுஷ்மிதா சென் ஆகியோடும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்த வண்ணம் உள்ளனர்.
Rangeela Girl Ties Knot
திரையுலகினரை அழைக்காமல் திருமணம் செய்த பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா , காஷ்மீரை சேர்ந்த மாடல் மற்றும் நடிகருமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது. 90களில் தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் புதிய டிரென்டையே உருவாக்கிய ஊர்மிளாவின் திருமணம் தான் தற்போது பாலிவுட்டின் சுடச் சுடத் தருணம்.
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தைத் துவங்கிய ஊர்மிளாவின் நடிப்பில் வெளியான ரங்கீலா, கவுன், ஸாத்யா, ஜங்கிள் மற்றும் பூத் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ஊர்மிளா. 42 வயதான ஊர்மிளாவின் திருமணத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
பாலிவுட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா மட்டும் கலந்துகொண்டுள்ளார். இதைப் பற்றி ஊர்மிளா கூறுகையில் " எங்கள் இரு குடும்பத்தினரும் திருமணத்தை எளிமையாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுபினர்களைக் கொண்டு நடத்தவே விரும்பினார்கள், அதன்படியே திருமணமும் நடைபெற்றது" எனக் கூறியுள்ளார். ஊர்மிளாவின் சினிமா கேரியரில் முக்கியப் படமான ரங்கீலா படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Happy Birthday to Shreya Ghoshal. Live long and prosper
Happy Birthday Shreya Ghoshal...
-Deewani Mastani to Chikni Chameli, here's a look at her top 10 songs
http://indiatoday.intoday.in/story/h.../1/618289.html
HBD - T-Rajendar | Sai-Pallavi
Notable comedian blessed with twins!#INA @arjunannk
https://o.twimg.com/2/proxy.jpg?t=HB...XQ_DX_6-0kcmpM
HAPPY BIRTHDAY LINGA HEROINE - Sonakshi Sinha
http://data1.ibtimes.co.in/cache-img...re-picture.jpg
Benny Dayal ties knot
http://img01.ibnlive.in/ibnlive/uplo...6/featured.jpg
Kaadhal Solla Vandhen actor Balaji Balakrishnan enter WEDLOCK
http://data1.ibtimes.co.in/cache-img...ot-preethi.jpg
Vaanam Director Krish and Ramya engagement
http://data1.ibtimes.co.in/cache-img...t-pictures.jpg
நடிகை இலியானாவுக்கு திருமணம் - காதலரை மணக்கிறார்
நடிகை இலியானா தனது நெடுநாளைய காதலரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் நடிக்கப் போறேன் என்று மும்பையில் செட்டிலான இலியானாவுக்கு அத்திபூத்தார் போன்றே வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் தனது ஆஸ்ட்ரேலிய காதலரை மணக்க திட்டமிட்டுள்ளார்.
இலியானா ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவை பல வருடங்களாக காதலித்து வருகிறார். விரைவில் மும்பையில் அவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பும் இதேபோல் திருமண செய்தி வெளியாகி இலியானா அதனை மறுத்திருக்கிறார். இந்தமுறை அந்த விபத்து நேராது என்று நம்புவோம்.
S. J. Surya
Let yourself do everything that you like most in life, may your Big Day be cheerful and happy!
Happy Birth Day :cheer:
Today you are you! That is truer than true! There is no one alive who is you-er than you!
Happy Birth Day DIRECTOR SHANKAR SIR