'எங்க ஊர் ராஜா' நிழற்படங்கள்.
http://www.geocities.ws/ganeshkumar_r/bg68enga.jpg
http://www.buycinemovies.com/images/...0400-vcd93.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
'எங்க ஊர் ராஜா' நிழற்படங்கள்.
http://www.geocities.ws/ganeshkumar_r/bg68enga.jpg
http://www.buycinemovies.com/images/...0400-vcd93.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
நிழற்படத்திலகம், உயிர்ப்படத்திலகம் என இரு வேறு திலகங்களை ஒரே சமயத்தில் அணிந்து வெற்றியுலா வரும் தங்களை எப்படிப் பாராட்டுவது... த்வார பாலகர்களாய் திகழும் பம்மலாரையும் தங்களையும் தாண்டிச் சென்றால்தான் நடிகர் திலகம் என்ற மூலவரை சிறப்பாக தரிசிக்க முடியும் என்கிற அளவிற்கு அவருடைய சாதனைகளின் கேடயமாய் விளங்குகின்றீர்கள். பாராட்டுக்கள்.
டியர் பார்த்தசாரதி,
ஆயிரம் மொழிகள் போதாது, வண்ணக்கிளியே, சாரதியின் பங்குதனை பாடுதற்கு வண்ணக்கிளியே..
என்று கூறும் வகையில் தாங்களும் சிறப்புற தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்..
நமது மூத்த நண்பரும் ஹப்பருமான திரு ராமஜெயம் அவர்கள் அடியேனுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் மூலமாக தங்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார். அவர் அனுப்பியுள்ள ஆங்கில செய்தி இதோ நம் பார்வைக்கு
Quote:
Subject:
HAPPY DIWALI TO ALL OUR SIVAJI RASIGARGAL- HUB FRIENDS
Type: Embeded HTML/Text
DEAR MR RAGHAVENDRAN,
diwali is one of the finest and luckiest festival to all of us as most movies released on
diwali day-week are ery much successful and box ofice hits for our super star for many years eversince parasakthi. we are defitnely missing those evergreen days that being compensated by colourful pictures and messages by our fellow RASIGARGAL in the hub and we continue to live with our NADIGAR THILAGAM on these days and moreso on deepavaliday.
paai vilakku messages are noteworthy. picures are eyecatching. we are lucky to have pammalar raghaendran asudevan trio in our team.
GREAT GUNS ARE SHOT IN THE HUB PL KEEPIT UP.
COLOURFUL DIWALI GREETINGS TO ALL OUR FRIENDS AND WE salute our NADIGATHILAGAM and HE WILL BLESS US.
Regards,
S.Ramajayam
for onward transmission toHUB hope mr raghaendran will do.
விரைவில் பவனி வருகிறார் அம்சமான எங்கள் 'அம்பிகாபதி'.
http://www.dhool.com/gifs/8404.jpg http://www.dhool.com/gifs/8405.jpg http://www.dhool.com/gifs/8403.jpg http://www.indianfox.com/musicfilmim...MBIGAPATHY.jpg
http://www.jointscene.com/php/image....mbikapathy.jpg http://i2.ytimg.com/vi/xsC2RB6SO-0/0.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
7. மாமா... மாப்ளே; படம்:- பலே பாண்டியா (1962); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் எம்.எஸ்.ராஜூ; இசை:- மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்/டி.கே.ராமமூர்த்தி; இயக்கம்:- பி.ஆர். பந்துலு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/நடிக வேள் எம்.ஆர்.ராதா மற்றும் கே. பாலாஜி.
நடிக வேள் எம்.ஆர். ராதா பங்கேற்ற பல காட்சிகள் மற்றும் படங்களில், முதல் பத்து இடங்களில் எப்போதும் இடம் பெறும் பாடல் இது (இரத்தக் கண்ணீர், பாவ மன்னிப்பு வரிசையில் மூன்றாவதாக இடம் பெற வேண்டிய படம் இது என்றால் அது மிகையாகாது.)
இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்ற பாடல் இது. இந்த நிமிடம் வரை, எல்லோராலும், ஏன் இதற்குப் பின்னர் பிறப்பவர்களும் ரசிக்கும்/ரசிக்கப்போகும் பாடல். இந்தப் பாடலின் சுவையே அதில் இழையோடும் நகைச்சுவை கலந்த அற்புதமான கர்நாடக சங்கீதம், பாடிய விதம் மற்றும் நடித்த நடிகர்களின் ஜனரஞ்சகமான மற்றும் தீர்க்கமான நடிப்பு.
இந்தப் படத்தை முதன் முதலில் எழுபதுகளின் துவக்கத்தில் பார்த்தபோது, படம் நெடுகிலும் நடிகர் திலகத்திற்கும் நடிக வேளுக்கும் கிடைத்த ஆரவாரமான வரவேற்பை - முக்கியமாக - இந்தப் பாடலின் போது இது வரையிலும் மறக்க முடியவில்லை. அந்த வரவேற்பு இன்றும் தொடர்கிறது என்பது தான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.
முதலில் பாடல் - பொதுவாக பெண் பார்க்கும் படலத்தில், ஆண் தான் பெண்ணைப் பாடச் சொல்லுவார். மாறாக, இதில், வருங்கால மாமனார், மாப்பிள்ளையைப் பாடச் சொல்லி அவரது கர்நாடக சங்கீத ஞானத்தை சரி பார்ப்பார். இந்தப் பாடலும் அதற்கேற்ப கர்நாடக சங்கீத அடிப்படையில், அதே சமயம், ஜனரஞ்சகமாகவும் அமைய வேண்டும். ஏனென்றால், இந்தப் படம் அடிப்படையில் ஒரு நகைச்சுவைப் படம். இந்தப் பாடலின் சூழல் வரும் வரையிலுமே, அநியாயத்துக்கு நகைச்சுவை இழையோட சென்று கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழலுக்கு, மிகவும் பொருத்தமாக, - பாடலின் ஆரம்பமே அவரைப் பாராட்டுவதாக "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று துவங்கி, இடையில், வருங்கால மாமனார் குஷியாவதைக் கண்டு கொண்டு "துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா" என்று பெரிய துதியையே பாடி, அவரை ஒரேயடியாகக் குஷிப்படுத்தி, அதனால், மாமனாரும் குஷியாகி, மாப்ளே மாப்ளே என்று பாடுவதாகப் போகும். மறுபடியும், படித்தவன் முதல் பாமரன் வரை ஒரு சேர சென்று சேர்ந்த பாடல் - இந்த யுகக் கவி கண்ணதாசனின் பாடல்.
அடுத்து, பாடிய முறை. மறுபடியும், டி.எம்.எஸ். அவர்கள் நடிகர் திலகத்திற்குப் பாடுகிறாரா, இல்லை, நடிகர் திலகமே பாடுகிறாரா என்று அனைவரையும், அதிசயிக்க வைத்தார். ஆலாபனையில் துவங்கி, பல்லவிக்குள் புகுந்து, கடைசியில் ஸ்வரப்ரஸ்தாரத்துக்குள் வெடிக்கும் அழகு ... சிலிர்க்கும். இருப்பினும், எல்லா வித ரசிகர்களையும் ரசிக்க வைப்பார். பிறகு, எம்.எஸ்.ராஜூ - இவர் நடிக வேளின் அத்தனை கோணங்கித் தனத்திற்கும் ஈடு கொடுத்து ஸ்வரம் போட்ட அழகும், ஆர்பாட்டமும்... அப்பப்பா! இருப்பினும், இன்று வரை இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இவர் தான் என்பது பலருக்குத் தெரியாது போனது துரதிர்ஷ்டம் தான்.
இப்பொழுது இசை. மெல்லிசை மன்னர்கள் எப்போதுமே கர்நாடக சங்கீதத்தில் அமையும் பாடல்களை வெகு ஜன ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுப்பதில் சமர்த்தர்கள் என்பதை மறுபடியும் நிரூபித்த பாடல். அதிலும், நடிக வேளுக்கேற்றாற்போல் குரல் வளம் அமைந்த பாடகரைத் தேர்வு செய்தது மிக அழகு.
இப்படியொரு பாடலை எல்லோரும் இன்றளவும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர். பாலாஜி செய்யும் கொனஷ்டைகளையும் ரசிக்கும்படி எடுத்தது அற்புதம்.
இப்போது நடிப்பு. முதலில் பாலாஜி. ஆஹா! நகைச்சுவையில், பாலாஜியும் ஸ்கோர் செய்த படமாயிற்றே. விடுவாரா? கடம் வாசிக்கும் பாவனையையும் கூடவே சில பல கொனஷ்டைகளையும் சகஜமாக செய்திருப்பார். நடிக வேள்! இவர் ஸ்வரங்களுக்குச் சரியாக வாயசைத்தாரா என்பதை யாரும் கண்டு கொள்ள விடாமல், ஏகப்பட்ட கொனஷ்டைகளை செய்து அரங்கத்தை அதிரச் செய்திருப்பார். இந்தப் பாடல், உண்மையில், இவருக்காக அமைந்த பாடல் தான் என்ற போதிலும், வழக்கம் போல சில கோணங்கித் தனங்களை அவருக்கேயுரிய பாணியில் செய்து திரையில் உள்ள மற்ற நடிகர்களை இருட்டடிப்பு செய்தார் என்ற போதிலும், நடிகர் திலகம் என்ற அந்த மாபெரும் கலைஞன், கொஞ்சமும் கவலைப் படாமல், அலட்டிக்கொள்ளாமல், செய்திருப்பார் - குறிப்பாக, நடிக வேள் ஒரு பெரிய ஸ்வரத்தைப் போட்டு எல்லோரையும் சிரிக்க வைத்த பின், உடனேயே, "ம ப ப ப......" என்று ஒரு பெரிய ஸ்வரத்திற்கு அதியற்புதமாக வாயசைத்து, அரங்கத்தை அதிர வைத்த சாதுர்யம்; ஸ்வரம் மேலேறும் போதும் கீழிறங்கும் போதும், வாசயசைத்துக் கொண்டே கையால் அதற்கேற்றாற்போல் ஏற்றி இறக்கிச் செய்யும் பாவம்; பாடல் நெடுகிலும், அனாயசமாகக் பாவனைகளின் மூலம், அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு; அவர் செய்யும் ஒவ்வொரு கோணங்கித் தனத்தின் முடிவிலும், இவர் பாட ஆரம்பிக்கும் போது, சங்கடத்தில் நெளிந்து கொண்டே அதனை முகத்திலும் காட்டிக் கொண்டே ஆனால், மிகச் சரியாக ஸ்வரம் போட்டுக் கொண்டே (அதாவது, நடித்துக் கொண்டே) போவது. இனி ஒருவன் பிறக்க வேண்டும்!
கடந்த மாதத்தில் கூட, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், வெளியேற்றப் பட்ட "சாய் சரண்" என்ற இளம் பாடகர் மீண்டும் "வைல்ட் கார்டு" ரவுண்டில் வந்து திரும்பவும் முக்கிய அணிக்குள் மீண்டும் வர வழி வகுத்த பாடல் இதுதான். இதற்காக, அன்று வந்திருந்த மெல்லிசை மன்னரிடமிருந்தே, முக்கியப் பரிசைப்பெற்றார்.
அந்த அளவிற்கு, இன்று வரை எல்லோராலும் ரசிக்கப்படுகின்ற பாடலாகையால், இந்தப் பாடலும் சிரஞ்சீவித்துவம் பெற்ற நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடலாகிறது.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி,
மாமா மாப்ளே என்று ஒரு நகைச்சுவைத் தொடரையே ஒரு தொலைக்காட்சி தயாரிக்கின்ற அளவிற்கு அந்தப் பாடல் சிரஞ்சீவித்துவம் பெற்று விட்டதே...என்று நினைக்கிற போது, உடனேயே உங்களுடைய கருத்துரை... ஆஹா.... என்ன தெளிவான பதிவு...
நடிகர் திலகம் என்கிற இறைவனுக்கு எத்தனை சாரதிகள்...
கலக்குங்கள் சார்...
இன்று வெளிவந்துள்ள 27.10.2011 தேதியிட்ட புதிய தலைமுறை தீபாவளி சிறப்பிதழில் மறையாத சூரியன்கள் என்கிற தலைப்பில் நடிகர் திலகத்தைப் பற்றி திரு பாக்யராஜ் தன் கருத்துக்களை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அனைத்து சாதனையாளர்களையும் மணியம் செல்வன் அவர்களின் ஓவியத்தையே படமாக வைத்துள்ளனர். அதில் அவர் வரைந்துள்ள நடிகர் திலகம் அவர்களின் திருவுருவம்.. நன்றி புதிய தலைமுறை இதழ்.
http://i872.photobucket.com/albums/a...iteupartfw.jpg
பம்மலார் சார்,
பராசக்தி திரைக்காவியத்தின் வெளியீட்டு விளம்பர வரிசை வெகு அற்புதம். காணக்கிடைக்காத பொக்கிஷங்களைக்கண்டு மிக்க மகிழ்ச்சி. இந்த திரியில் பங்கேற்கும் நம்மில் யாருமே பிறந்திராத காலத்தில் வெளிவந்த விளம்பரங்கள் இப்போதும் காணக்கிடைப்பதற்கு நிச்சய்ம பாக்கியம் செய்திருக்க வேண்டும். எங்க ஊர் ராஜா ஸ்டில்லும் வெகு நேர்த்தி. பாராட்டுக்கள்.
ராகவேந்தர் சார்,
'எங்க ஊர் ராஜா' வின் பொம்மை இதழ் செப்பேடுகள் கன கச்சிதம். இளமைத்தோற்றத்திலும் முதுமைத்தோற்றத்திலும் அடுத்தடுத்து அமைந்த ஸ்டில்கள் கண்கொள்ளாக்காட்சி.
வாசுதேவன் சார்,
எங்க ஊர் ராஜா நிழற்படத்தையும், பாடல் காட்சியையும் தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. ஒரு படம் முடிந்ததும் அடுத்தது என்று சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
பார்த்தசாரதி சார்,
உங்கள் அற்புத எழுத்தில் 'மாமா... மாப்பிளே' பாடலை விவரித்திருந்த விதம் மிக அருமை. ரொம்பவே ரசித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எம்.ஆர்.ராதாவின் சேஷ்டைகளால் முகத்தை சுழித்துக்கொண்டு அதே சமயம் ஸ்வரத்துக்கு தப்பாமல் வாயசைத்துக்கொண்டு நடிப்பது என்பது இவரால் மட்டுமே முடியக்கூடியது. தெளிவாக காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
படம் வெளிவந்த சமயங்களில் இந்தப்பாடல் அவ்வளவாக வானொலிகளில் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய் காய்' பாடல்கள்தான் டாமினேஷன் பாடல்களாக திகழ்ந்தன. சமீப ஆண்டுகளாக இப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்தர் சார் சொன்னபடி, ஒரு தொலைக்காட்சி நகைச்சுவை தொடருக்கு இது டைட்டில் பாடலாக, (சில பல ரீமிக்ஸுடன்) இடம்பெற்றுள்ளது.
உங்கள் ஆய்வு இப்பாடலை இன்னும் பல கோணங்களில் ரசிக்க வைக்கிறது. நான் எப்போதும் இப்பாடலைப் பார்க்கும்போது இவ்விருவரோடு பாலாஜியின் சேஷ்டைகளையும் வெகுவாக ரசிப்பதுண்டு (திரைக்குப்பின்னால் நின்று எட்டிப்பார்த்து ரசிக்கும் "நம்ம தேவிகா"வையும்தான்)
நல்ல ஆய்வு, தொடருங்கள் உங்கள் சேவையை.
நாளை நம் அழகு 'அம்பிகாபதி' வருகிறார்.(22-10-1957)
http://i1087.photobucket.com/albums/..._000505765.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார் சார்,
நடிகர்திலகத்தை பற்றிய அகிலன் அவர்களின் பதிவை கண்டேன், ஒரு எழுத்தாளர் என்கிற பார்வையில் நம்மவரை பற்றி ரசித்து எழுதிஉள்ளார், இதனை பதிவிட்ட தங்களுக்கு எனது மேலான நன்றிகள்.
டியர் பார்த்தசாரதி சார்,
நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர்திலகத்தின் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள் நன்றி , இந்த படத்திற்கு nt அவர்கள் கொடுத்த கால்ஷீட் மொத்தம் 14 நாட்கள் தான், இருப்பினும் அவசரகதியில் எதையும் செய்யாமல் மிக அருமையாக செய்ய இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? இதே படத்தில் வாழ நினைத்தால் வாழலாம் பாடலில் தண்ணீரில் நீந்தும் காட்சியில் அவரின் செய்கை ரசிக்கும் படி இருக்கும்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பெற்ற மனம்
[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்
பாவேந்தர் பாரதிதாசனாரின் "குயில்" இதழ் : 1.11.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4834-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4835-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr. Kumaresh,
Kindly excuse me if my feelings hurt you.
I'm unable to bear the disappointment of not releasing V.M. in Bangalore. We are there to give you the fullest support, please execute the release of V.M. I cannot stand when other actor movie can be released and why not our Legend's.
JAIHIND
M. Gnanaguruswamy
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது கனிவான நன்றிகள் !
'பொம்மை' இதழ் "எங்க ஊர் ராஜா" நிழற்படங்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து அசத்திவிட்டீர்கள் !
Dear Ramajayam Sir,
Thank you for your kind words !
Wishing you a very Happy Deepavali !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
பெற்ற மனம் பற்றிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்களை வெளியிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு ஆவணங்களின் சிகரத்திற்கே போய் விட்டீர்கள். இங்கு அனைவரின் பாராட்டுக்களும் உங்களுக்கு.
அன்புடன்
எல்லோரும் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப் படங்களாய்க் கொடுத்த நேரத்தில் ஸ்ரீதரின் வைர நெஞ்சம் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய படம். அப்படத்தில் செந்தமிழ் பாடும் என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. அப்பாடல் காட்சியினைத் தற்போது கருப்பு வெள்ளையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடே இப்போது நீங்கள் காணப்போகும் பாடல். கருப்பு வெள்ளையிலும் நடிகர் திலகம் இளமைத் தோற்றத்தைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=khGkBKu4P68
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பட்டாக்கத்தி பைரவன்
[19.10.1979 - 19.10.2011] : 33வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 19.10.1979
http://i1110.photobucket.com/albums/...EDC4828a-1.jpg
குறிப்பு:
தமிழ்நாட்டில் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அயல்நாடான இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள 'ஜெஸிமா' திரையரங்கில் 20 வாரங்கள் [140 நாட்கள்] மற்றும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள 'ஸ்ரீதர்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி மெகாஹிட். இந்த சாதனை விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக அளிக்கப்படும்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
"எங்க ஊர் ராஜா" நிழற்படங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் எல்லாம் எப்பொழுதும் போல் TOP !
"அம்பிகாபதி" ஆரம்பப்பதிவுகள் அசத்தல் !
Dear kumareshanprabhu Sir,
Thanks a lot !
அன்புடன்,
பம்மலார்.
http://lh6.ggpht.com/-tqtonisY98k/Tp.../s400/p46b.jpg
Quote:
'' 'தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?''
''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது.
தேவர் மகன்’ படம் கமல் சார் எனக்குக் கொடுத்த லைஃப். என்னோட டேர்னிங் பாய்ன்ட்டே அதுதான். இனிமே, அப்புடி ஒரு படம் கிடைக்குமானு தெரியல. பெரிய இமயங்களான சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்து வார பாக்கியம் அந்தப் படத்துலதான் எனக்கு அமைஞ்சது. வளர்ற நேரத்துல அந்த மகத்தான வாய்ப்பக் கொடுத்த கமல் சாருக்கு நா காலா காலத்துக்கும் கடமப்பட்டு இருக்கேன். 'தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன். தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''
திரு. பம்மலார் சார்,
'பாவேந்தரின்" எழுத்தால் நமது நடிப்பு வேந்தரின் புகழ் பாடும் கவிதையையும், எழுத்தையும் எமக்கு வேண்டி அரும்பாடுபட்டு சேகரித்து அதை இவ்விடம் வெளியிட்டு மகிழ்ந்து எம்மையும் மகிழ்வித்த நீவிர் நீடுழி வாழ்க பெம்மானே.
Anm
திரு. பார்த்தசாரதி சார்,
'பலேபாண்டியாவின்"பிரசித்தமான "மாமா', 'மாப்ளே" பாட்டை மிகவும் சிலாகித்து எழுதி அந்த வர்ணனையில் எங்களைக் குளிப்பாட்டி எல்லோரையும் மகிழ்வித்து விட்டீர்கள்!!!!
நன்றி!!!! நன்றி!!!!!
Anm
திரு. ராகவேந்திர சார்,
"செந்தமிழ் பாடும்" பாடலின் லிங்கைக் கொடுத்து அதற்கு மேலும் சிறப்பு செய்துள்ளமைக்கு நன்றிகள்!!!!
Anm
டியர் பார்த்தசாரதி சார்,
"ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே நம் சாரதி சாரின் ஆய்வேடுகளை வாசிக்க வண்ணக்கிளியே !"
மூத்த-பழுத்த ரசிக-பக்தரான தங்களின் கவித்துவமான பாராட்டு மழைக்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கட்டுரைத்தொடரில், லேட்டஸ்டாக தாங்கள் அலசியிருக்கும் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' ['மாமா-மாப்ளே'] பாடலின் திறனாய்வு அருமையோ அருமை ! இந்தப்பாடலில் தேவிகா பக்கம் கேமரா திரும்பும்போதெல்லாம் அவர் அழகுப்பதுமையாக காட்சிதருவது கண்கூடு.
தாங்கள் பாடலை அலசும்விதமே அலாதி. முதலில் அப்பாடலைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அளித்து, அதன் பின் அப்பாடல் பாடப்பட்ட முறை மற்றும் அதன் இசை, அதன் பின் நடிப்பு என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து, அதே சமயத்தில் அதில் பங்கு பெற்றவர்களின் performanceஐ நடுநிலைமையோடு சிலாகித்து தாங்கள் வழங்கும் விதம் இருக்கிறதே, அதியற்புதம் ! முடிவில், அந்தப்பாடலைப் பற்றிய தகவல் துணுக்குகளையும் அளித்து வெளுத்துக் கட்டி விடுகிறீர்கள் !
தங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
இதோ தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் காலத்தை வென்ற எவர்கீரின் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்':
http://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
டியர் ஜேயார் சார்,
தங்களுக்கு எனது கனிவான நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது பாராட்டுக்கு அன்பான நன்றி !
கருப்பு-வெள்ளையிலும் வைரநெஞ்சம் பாடல் சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சகலகலாவல்லவர்,
நடிகர் திலகத்துடனான "தேவர் மகன்" அனுபவங்கள் குறித்து 'வைகைப்புயல்' வடிவேலு மொழிந்த உணர்ச்சிபூர்வமான உரையை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், பிரசுரித்த 'ஆனந்த விகடன்' இதழுக்கும் இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் Mr.anm,
தங்களின் மேலான பாராட்டுக்கும், வளமான வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : காவிய விமர்சனம்
கிளர்ச்சி : 1.11.1952
http://i1110.photobucket.com/albums/...lmReview-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்
பேசும் படம் : நவம்பர் 1952 : 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதி
http://i1110.photobucket.com/albums/...EDC19561-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
எங்க ஊர் ராஜா
[21.10.1968 - 21.10.2011] : 44வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC4837-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4836-1.jpg
குறிப்பு:
தமிழகத்தில் கணிசமான திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த "எங்க ஊர் ராஜா" அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 85 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 50வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே பதிவிடப்படும்.
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அம்பிகாபதி
[22.10.1957 - 22.10.2011] : 55வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்
பேசும் படம் : நவம்பர் 1957
http://i1110.photobucket.com/albums/...GEDC4838-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
சித்ரா பௌர்ணமி
[22.10.1976 - 22.10.2011] : 36வது ஆண்டு தரிசனம்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்
மதி ஒளி : 1976
http://i1110.photobucket.com/albums/...GEDC4839-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
சித்ரா பௌர்ணமி திரைக்காவியத்தின் சிறப்பினை அதனுடைய விளம்பரத்தை வைத்தே கூறி விடுவீர்கள்... அட்டகாசம்...
மெல்லிசை மன்னரின் சிறப்பான இசையில் இனிமையான பாடல்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய காலம் உண்டு, பருவம் உண்டு என்கிற இனிமையான பாடல்..
http://www.youtube.com/watch?v=fA0o1I2lflo
டி.எம்.சௌந்தர்ராஜன், சுசீலா குரல்களில் ...சூப்பரோ சூப்பர்...வெள்ளுடை வேந்தரின் வெளுத்துக் கட்டும் ஸ்டைல்... பார்த்து மகிழுங்கள்...
செந்தூர நெத்திப் பொட்டின் நளினம், அது சித்திரக் கோலம்...
சௌந்தர்ராஜனின் குரல்... ஆஹா... கேளுங்க கேளுங்க... கேட்டுக்கிட்டே.... பாருங்க பாருங்க... பார்த்துக்கிட்டே...
http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0&feature=fvsr
'சித்ரா பௌர்ணமி' யில் சிகர நடிகரின் சிறப்புத் தோற்றங்கள்.
நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்"சிவாஜிகணேசன், "கலைச்செல்வி"ஜெயலலிதா, நாகேஷ், மனோகர், சுந்தர்ராஜன், ஜெய்குமாரி, செந்தாமரை மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.
கதை+வசனம்:-பாலமுருகன் அவர்கள்.
தயாரிப்பு:-கே.ஆர்.ஸ்ரீநிவாசன் & ஆர்.எம்.சுப்பிரமணியன் என்.நாகசுப்பிரமணியன் ஆகியோர்.
இயக்கம்:-பி. மாதவன் அவர்கள்.
http://padamhosting.com/out.php/i57751_vlcsnap9010.png http://www.whatsonindia.com/WhatsOnT...0000011870.jpg
http://padamhosting.com/out.php/i57747_vlcsnap39069.png
http://padamhosting.com/out.php/i57748_vlcsnap38760.png
http://padamhosting.com/out.php/i57746_vlcsnap35289.png
http://padamhosting.com/out.php/i57744_vlcsnap39342.png
http://padamhosting.com/out.php/i57743_vlcsnap29402.png
http://padamhosting.com/out.php/i57742_vlcsnap38870.png
http://padamhosting.com/out.php/i57749_vlcsnap35875.png
http://padamhosting.com/out.php/i57750_vlcsnap35241.png
அன்புடன்,
வாசுதேவன்.
'சித்ரா பௌர்ணமி' யில் சிங்கத்தமிழனின் சீர்மிகு,சீற்றமிகு நடிப்பில் அற்புதப் பாடல்கள்.
என்னடி சின்னக்குட்டி...போட்ட புள்ளி சரிதானா?....
http://www.youtube.com/watch?v=N8045Rvtzio&feature=player_detailpage
வந்தாலும் வந்தான்டி ராஜா...
http://www.youtube.com/watch?v=uckFlXsmneU&feature=player_detailpage
நீயும் வாழ வேண்டும்...
http://www.youtube.com/watch?v=xZj54M_kwx0&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
'அம்பிகாபதி' யில் அழகுப் பெட்டகமாய் அனைத்துலகமும் போற்றும் அருட்செல்வர்.
http://i1087.photobucket.com/albums/..._001473722.jpg
http://i1087.photobucket.com/albums/..._002645651.jpg
http://i1087.photobucket.com/albums/..._000078203.jpg
http://i1087.photobucket.com/albums/..._000437087.jpg
http://i1087.photobucket.com/albums/..._002363911.jpg
http://i1087.photobucket.com/albums/..._000641200.jpg
http://i1087.photobucket.com/albums/..._001605723.jpg
http://i1087.photobucket.com/albums/..._002132728.jpg
http://i1087.photobucket.com/albums/..._020989202.jpg
அகிலம் போற்றும் அரும்பெரும் நடிப்பு மேதையின் 42-ஆவது அழகோவியம் 'அம்பிகாபதி'.
தஞ்சை ராமையாதாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அற்புத வைரவரிப் பாடல்கள்.
ஜி.ராமநாதன் அவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை....
மன்மதனையே அழகில் மிஞ்சும் மகா நடிகர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்...
அற்புதக் குரலில் அனாயாசமாய் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி என்.சுந்தரம், சுசீலா, ராஜேஸ்வரி....
இனிய குரலுக்கு ஒரு அஷ்டாவதானி பி.பானுமதி...
அருமையான இயக்கத்திற்கு ப.நீலகண்டன்.
எக்காலத்திலும் மனதில் ரீங்காரமிட்டு வலம் வந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள். கண்டும் கேட்டும் இன்புறுங்கள்.
சோறு மணக்கும் சோநாடாம்...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xsC2RB6SO-0
என் ஆசைக் கனியமுதே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N3t9kUnPL5k
அம்புலியைக் குழம்பாக்கி....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ga9Nrh7i0-U
கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_iV1tFns0Bs
மாசில்லா நிலவே நம்....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fb1uJPhkpLc
வாடா மலரே ! தமிழ்த் தேனே....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=45sjbjyko5I
வானம் எங்கே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hFpRS6omL5Y
ஆடட்டுமா...கொஞ்சம் பாடட்டுமா...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sunl2TR9jC8
கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...(டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வெண்கலக் குரலில்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Eezd4TKyAyk
கண்ட கனவும் இன்று பலித்ததே...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HMLqmEnAGE0
அன்புடன்,
வாசுதேவன்.
கண்ணே உன்னால் நான் அடையும்....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ZPpeNHaFnM
இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பாளிக்க....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lTD4RjgElMM
பொனா ...ய்யன்னா ...க்கன்னா...காவன்னா...லூனாக் குதிரையின்னான்....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=v9wyExaWn8c
நடிப்புலக நாயகரின் வாயடைத்துப் போகச் செய்யும் வாயசைப்பில்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்.....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uYCh9ngEhWo
சிந்தனை செய் மனமே.....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n6Pt-dKwvwQ
வடிவேலும் மயிலும் துணை....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UHAgZ7YnXMw
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு நண்பர்களே!
எனக்கு மிக மிக மிக பிடித்தமான நடிகர் திலகத்தின் காவியங்களுள் அம்பிகாபதியும் ஒன்று. அந்த அழகு மதிவதன முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதுவும்
http://i1087.photobucket.com/albums/..._020991682.jpg
வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடலுனை கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைத்து நினைத்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...
பாடல் காட்சியில் இந்த மனிதப் புனிதர் வாயசைக்கும் அழகும், இம்மியளவு கூடப் பிசகாமல் முகபாவங்களில் புகுந்து விளையாடும் வித்தைகளும் இருக்கிறதே! நடிப்பின் இறைவா! நின்னை அடைய நாங்கள் செய்த புண்ணியம்தான் என்ன!
கண்களில் கண்ணீருடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
நிச்சயமாக ஒவ்வொரு ரசிகருக்கும் கண்ணீரால் கண்கள் குளமாகும் தங்கள் பதிவுகளைப் பார்த்தால்...
அதே உணர்வுடன்
பல ஆண்டுகளுக்கு முன் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புதல்வர் சீதக்காதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் சொன்னார், திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாடலை தன் தந்தை எழுதியதாகவும் ஆனால் படத்தில் கண்ணதாசன் பெயர் வந்ததாகவும் சொன்னார். சமீபத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கான ஒரு வலைப்பூவில் இதே தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரம் உண்டா என்பது தெரியவில்லை. இருந்தால் அதனைப் பதியலாம். அப்பாடல் பதிவான ஒலிப்பதிவுக் கூடப் பொறியாளர் அல்லது அவருடைய உதவியாளர் அல்லது ஏ.பி.என். உதவியாளர் யாராவது இருந்தால் அவர்கள் தான் இதை உறுதி செய்ய முடியும்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கான வலைப்பூ
அன்புடன்