http://i46.tinypic.com/kccfgn.png
Printable View
மக்கள் திலகம் mgr பாகம் -3
http://i47.tinypic.com/zt7v5d.jpg
இன்று 150 வது பக்கம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது . மக்கள் திலகத்தின் அபூர்வ புகை படங்கள் - ஆவணங்கள் - வீடியோ - இதுவரை வெளிவராத செய்திகள் என்று பல்வேறு பதிவுகள் இடம் பெற தொடர்ந்து பதிவிட்டு வரும் அருமை நண்பர்கள்
திரு திருப்பூர் ரவிச்சந்திரன்
திரு ஜெய்சங்கர்
திரு TMF LOVER
THIRU- RAJA
திரு மாசனம் - திரு ராமமூர்த்தி -பேராசிரியர் சிவகுமார் - THIRU, SHAILESHBASU
மற்றும் சென்னை இறைவன் mgr பக்தர்கள் குழு செயலாளர்
பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும்
http://i49.tinypic.com/117r8ud.jpg
அலை பேசி மூலம் வாழ்த்துக்களை தந்து ஊக்கபடுத்தும்
நடிகர்திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் -திரு பம்மலார் - திரு நெய்வேலி வாசுதேவன் மற்றும் பெங்களூர் - சென்னை -திருவண்ணாமலை - நெல்லை -சேலம் - கோவை நகர மக்கள் திலகத்தின் நண்பர்களுக்கும்
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இனிய நண்பர் திரு டேவிட்
[மக்கள் திலகம் அவர்களின் தீவிர அபிமானி ] அவர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை
இந்த திரியில் மக்கள் திலகத்தை பற்றி பல அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோ மற்றும் பிற ஆவணங்களை பதிவிடுவோர் மற்றும் அதை பார்வையிடுவோர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.
http://i45.tinypic.com/20rtsp5.jpg
மக்கள் மனங்களைக் கவர்ந்த
மதுரைவீரன்!
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.