-
இன்ப அதிர்ச்சி - நேற்று ஒரே இரவில் திரு முத்தையன் - திரு சைலேஷ் -திரு சத்யா , திரு லோகநாதன்.
நால்வரின் மாறுபட்ட பதிவுகள் , வீடியோ பதிவுகள் , தகவல்கள் என்று 250 பதிவுகளுக்கு மேல் வழங்கிய
நண்பர்களுக்கு பாராட்டுக்கள் . உங்களுக்காக ஒரு இனிய அபூர்வ மக்கள் திலகத்தின் நிழற் படம் .
http://i60.tinypic.com/zy7ekn.jpg
-
இனிய நண்பர் திரு ஜெய் சங்கர்
நாம் மிகவும் விரும்பி நேசிக்கும் மக்கள் திலகத்தின் படங்களான
பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966
ஒரு தாய் மக்கள் 9.12.1971
நாளை உங்களது விமர்சன பதிவினை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்
-
-
காதல் காட்சிகளுக்கு எல்லை வேண்டும்_ எம்ஜிஆர்
‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் குணச்சித்திர வேஷத்தில் நடித்த எம். ஜி. ஆர்; அது வெளிவந்தபோது தனது ரசிகர்களோடு ‘பொம்மை’ (1967 ஜனவரி) பத்திரிகையின் மூலம் பேசினார்.
அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்: “ ஒரு நடிகன் பல்வேறு குண விசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும், ‘இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு அறிமுகமாகாத நிலையில் முன்பு, ‘என் தங்கை’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் அது வெற்றி கண்டது.
“நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப் பட்டுவிட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம் ‘ரசிகர்கள் உங்களுடைய சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்பது. அது மட்டுல்ல வினியோகஸ்தர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் அவர்கள் கூறும் காரணம்…”
“சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. ‘படக் கதைக்குச் சம்பந்தமில்லாத – தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம்’ என்பதை உங்கள் ரசனை உணர்வுடன் உணர்த்தவும் வேண்டும்…”
“ ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று ‘ஒன்றைப் போன்ற மற்றொன்று’ என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத் திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது…”
“ அடுத்தது காதற் சுவை. சாதாரணமாகப் பாட்டுப் பாடி காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாத ஒன்று. பொதுப் பூங்காக்களில் படங்களில் வருவது போன்று காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும் நமது படங்களில் வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்த பாட்டுக்களாக எடுக்கிறார்கள். உவகைச் சுவை மனித உள்ளத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்…”
-
RARE STILL
MKKAL THILAGAM - ASOKAN - SORNAM. AT ANNA MEMORIAL PLACE- 1971
http://i61.tinypic.com/if4t9h.jpg
-
-
-
மக்கள் திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்.
அலுவல் நிமித்தமாக வெளியூர் சென்றதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்புகொள்ளமுடியாமல் போனது.
திரி 11 வெற்றிகரமாக நிறைவு செய்த, இரு திரிகளின் கண்ணியத்தை நட்பை நல்ல முறையில் நடத்தி சென்று பாகம் 11ஐ கண் இமைக்கும் நேரத்தில் திரி 12ஐ துவக்க காரண கர்த்தாவாக செயல்பட்ட திரு யுகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மேலும் திரி 11 நல்ல அறிவுரையுடன் நல்ல தொரு தொனியில் பயணிக்க உந்துதலாக இருந்த "gentleman of the thread " திரு வினோத் அவர்களையும் நடிகர் திலகம் திரி சார்பாக இந்த திரியில் உங்களுடைய நல்ல ஒரு நண்பன் என்ற நினைப்பில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்க ஆசைப்பட்டு, இங்கு எனது பாராட்டுக்களை பதிவு செய்கிறேன்.
You have been a great guide of this thread !!!
இந்த திரியின் அனைவரின் team work மிகவும் அதிசயிக்க தக்க ஒன்று என்றால் அது மிகையில்லை. திரு செல்வகுமார் அவர்களின் பழுத்த அனுபவம், திரு ரவிச்சந்திரன் அவர்களின் தகவல் பெட்டி, திரு சைலேஷ் அவர்களின் கால நேர சந்தற்பத்திர்கேற்ற கண்ணொளி வடிவிலான உவமைகள், திரு முத்தயாஹ் அவர்களின் theme based புகைப்பட கண்காட்சி இப்படி அனைவரும் ஒன்றுகூடி ஒரு நல்ல விருந்து படைகிறீர்கள். இது அனைத்திலும் சிகரமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று.
நம்மிடையே சில சமயங்களில் ஒரு சில போட்டி இருந்தாலும், அதை சரியான கோணத்தில் எடுத்துகொண்டு, நல்ல விஷயங்கள் நடக்கும்போது அதை உரிய முறையில் பாராட்டி , சிறப்பு செய்து வாழ்த்துவதே சிறந்த பண்பாகும் என்ற நடிகர் திலகம் அவர்களுடைய பண்பை, மாண்பை பின்பற்றுபவன் நான்.
ஆகவே என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.
நண்பர் கலைவேந்தன் அவர்களே...நலமா ?
திரி 12 தாங்கள் துவக்கியுள்ளதை தங்களுடைய எழுத்திற்கு நானும் ஒரு ரசிகன் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தங்களுடைய சரவெடி நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மத்தாப்பு போல பல வண்ணங்களில் மலர்ந்து, சங்கு சக்கரம் போல வேகமாக அதே சமயம் அழகாக சுழன்று, ராக்கெட் போல 400 பக்கங்களை சடுதியில் தொட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதலை தங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்.
இந்த திரியும் மற்ற அனைத்து திரிபோல திரு வினோத், திரு செல்வகுமார், திரு சைலேஷ், திரு ரவிச்சந்திரன், திரு முத்தயாஹ் மற்றும் பலரின் பல்சுவை பங்களிப்புடன் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
rks
-
நாம் நினைத்த ஒரு காரியத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றால் ,அதற்காக ... எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயாராக இருக்க வேண்டும்....
எம்.ஜி.ஆரைப் போல..!!!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில் மேலவை என்று தனியாக ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம் செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாநில சட்டமன்றங்களின் உறுப்பினராகவோ ஆக முடியாது என்று ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்ய ..திகைத்துப் போனார் எம்.ஜி.ஆர்...
ஆனாலும் அவரது நினைத்ததை முடிக்கும் முயற்சியை விட்டு விடவில்லை...
நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக அ.தி.மு.க கட்சி நிதியிலிருந்து 4,65,000 ரூபாயை கடனாக நிர்மலாவுக்கு அளித்தார் எம்.ஜி.ஆர்....
உடனே நீதிபதி , நிர்மலாவின் மேலவை நியமனத்தை ஏற்றுக் கொள்ள.... “நினைத்ததை முடிப்பவன்” எம்.ஜி.ஆருக்கு நிம்மதி ஏற்பட்டது...
ஆனால் அடுத்த பிரச்சினை ஆளுநர் குரானா வடிவத்தில் வந்தது...
“திவாலான ஒருவரது வேட்பு மனுவை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் ..?” என்று எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டார் கவர்னர் குரானா...
கவர்னரின் இந்த கண்டனத்தால் கடுப்பாகிப் போனார் எம்.ஜி.ஆர்.!!!
“மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ”..
என்று பொங்கி எழுந்த எம்.ஜி.ஆர். ..தான் நினைத்த வெண்ணிற ஆடை நிர்மலாவை ஏற்றுக் கொள்ளாத மேலவை இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன..?என எண்ணி மேலவையை ஒரேயடியாக கலைத்து , உத்தரவு ஒன்றை , உடனே போட்டு விட்டார்...
ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ..... நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது....
ஆம்...எம்.ஜி.ஆர். என்றுமே நினைத்ததை முடிப்பவன்...
மேலவை கதையை அன்றோடு முடித்து வைத்து விட்டார்..!!!
# எந்த ஒரு காரியத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என்றால் ,
........எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயாராக இருக்க வேண்டும்....
எம்.ஜி.ஆரைப் போல..!!!
courtesy net
-
http://i1170.photobucket.com/albums/...psd7774513.jpg
ஐகோர்ட்டு நுழைவுவாயிலில் இருந்த அம்மன் கோவில் நள்ளிரவில் இடிப்பு
சென்னை ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் என். எஸ்.சி. போஸ் ரோட்டில், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நீதி கருமாரியம்மன் என்ற பெயரில் கோவில் கட்டப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது 1984–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் அவருக்காக பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அப்போது காந்தா என்ற பெண், எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற வேண்டி இந்த கோவிலை கட்டினார். இதற்கு நீதி கருமாரியம்மன் ஆலயம் என பெயர் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். கோவில் என்றும் இதனை சிலர் அழைத்து வந்தனர்.
அன்று முதல் இன்று வரை கோவிலில் தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. சிறிய அம்மன் சிலை, பெருமாள் போட்டோக்களுடன் எம்.ஜி.ஆரின் போட்டோவும் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. சாமி படங்களுக்கு மாலை போட்டு வணங்கி வந்தது போல எம்.ஜி.ஆர். படத்துக்கும் மாலை, பொட்டு, பூவைத்து தினமும் பக்தர்கள் வணங்கி வந்தனர்.
இந்த கோவில் நடைபாதையில் இருப்பதாக கூறி டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கும் அம்மன் கோவிலை இடிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஸ்குமார், அக்னிகோத்ரி ஆகியோர் நீதி கருமாரியம்மன் கோவிலை இடிக்க சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு உத்தர விட்டனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவிலை இடிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஆச்சரியம் அளிக்கிறது. அம்மன் கோவிலை ஒருவார காலத்துக்குள் இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு நீதிகருமாரியம்மன் கோவிலை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவிலை கட்டிய காந்தா மற்றும் ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர்.
கோவிலை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும், கோவிலை கட்டி 27 ஆண்டுகளாக பராமரித்து வந்த காந்தா கதறி அழுதார்.
அங்கு திரண்டிருந்த பக்தர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நேரத்தில் பக்தர் ஒருவர் தீக்குளிக்கவும் முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இரவு 10.30 மணி வரை பக்தர்கள் கோவில் முன்பு அரண்போல் நின்றிருந்தனர். நேரம் செல்ல செல்ல அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து நள்ளிரவு 11 மணி அளவில் கோவிலை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி வரை இப்பணி நீடித்தது. விடிவதற்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இன்று காலையில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் நீதிகருமாரியம்மன் கோவில் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.
கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.