-
இனிய காலை வணக்கம் நண்பர்களே...
"மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்"
என்றாள் நல்வழியில் மூதாட்டி ஔவை.
அதனாலேயே, பசியின் கொடுமை உணர்ந்து ஆங்காங்கே அன்னசத்திரம் பலதிறந்து வறியவர் பலரின் வயிற்றுப் பசியைப் போக்கினர் நம் முன்னோர்கள் என்பது வரலாறு.
இம்மி அரிசியின் அளவாவது நாள்தோறும் பிறர்க்குக் கொடுத்து உண்ணுங்கள். ஏனென்றால், கடல் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் சமைத்திடாத அடுப்பை உடைய வறியவர் எல்லோருமே முற்பிறவியில் பிறர்க்கு ஒன்றும் உதவாதவர்கள் என்று நாலடியில் அறம் பேசுகிறார் சைனமுனிவர். ஆக, பிறர்க்கு வயிற்றுப்பசியைப் போக்கி உணவிடுபவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று நல்ல கற்பித்தலை நமக்கு வழங்கியுள்ளனர் அறங்கூறும் நம் புலவர்கள்.
அப்படித்தான், மழைபுயலென்று தன் இல்லந்தேடி வந்த வறியவர்க்கு, ஐந்து நாட்களில் ஒன்றல்ல ... இரண்டல்ல... ஒரு லட்சம் பேருக்கும் மேலானவர்க்கு வயிற்றுப்பசியைப் போக்கி உணவளித்தும்கூட, , அரசியல் மேடைகளில் திட்டமிட்ட பழிச்சொல்லுக்கு ஆளான நம் நடிகர்திலகத்தின் 90 -வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன் ' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்தொன்றாம் வார நிகழ்ச்சி நேற்று இனிதே நடந்தேறியது
நேற்றைய அன்னதானத்தின் முதல்பகுதியின் உபயதாரர் சிவகங்கையைச் சேர்ந்த திரு. ஆதவன்ரவி அவர்கள்.
இரண்டாம் பகுதிக்கு திருவள்ளூர் மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் திரு. கே. வெங்கடேசன் மற்றும் அவரின் சகோதரர் கே.சந்தானம் ஆகியோர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்து அன்னதானத்தைத் துவக்கி வைத்தவர் எழுத்தாளர் திரு.பிரபு என்கிற இராதாகிருஷ்ணன் அவர்கள்.
அவருக்கு, குழுவின் சார்பாக திரு.அம்பத்தூர் சுப்பிரமணி அவர்கள் நடிகர்திலகத்தின் காலண்டர் மற்றும் சிறு நூலொன்றை வழங்கிச் சிறப்பித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியின் முதல்பகுதி உபயதாரரான திரு. ஆதவன்ரவி சார்பாக கலந்து கொண்ட அவரின் தமக்கை மகன் திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கு குழுவினைச் சார்ந்த திரு. ML. கான், இதயராஜா திரு. குமார் மற்றும் நங்கைநல்லூர் திரு. பாலசுப்பிரமணி மூவரும் நினைவுப்பரிசாக நூல், காலண்டர், மற்றும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தனர்.
இரண்டாம் பகுதி உபயதாரரான திரு. அம்பத்தூர் வெங்கடேசன் அவர்களுக்கு திரு. வி.சீனிவாசன் மற்றும் திரு.பாலசுப்பிரமணி இருவரும் குழுவின் சார்பாக சான்றிதழ், காலண்டர் மற்றும் நூல்களை வழங்கிச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், திரு.ML.கான், இதயவேந்தன் R.S சிவா, மிட்லண்ட் திரு. சங்கர், திரு.TVS ஜானி, திரு. ஏழுமலை, திரு. நடராஜ், சிவாஜி.கே.நவீன், திரு. பாண்டியன், திரு. காமராஜ், திரு.கல்தூண்ரவி, திரு. குமார், திரு.சுப்பிரமணி, திரு. வி.சீனிவாசன், திரு.பாஸ்கர், திரு.தங்கமாரியப்பன், திரு. குமரேசன், தஞ்சையைச் சேர்ந்த முன்னாள் S.I. திரு. புலவர் அருளானந்தம், திரு. பாலசுப்பிரமணி உள்ளிட்ட. சிகர மன்றத்தின் இதயங்கள் பலர் கலந்து கொண்டனர்.
" இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள"
தான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன், அவனுக்கு கொடுக்கும் தன்மை நல்லகுடி பிறப்பு உடையவனிடம் மட்டுமே உண்டு என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
நல்லகுடி மட்டுமல்ல நல்லவழித் தோன்றலான நடிகர்திலகத்தின் ரசிகர்களிடத்தேயும் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் வாரந்தோறும் வழங்கிவரும் இந்த அன்னதானத் திட்டம் வருகின்ற அக்டோபர் முதல் தேதி முதல் தினந்தோறும் வழங்கப்படவுள்ளது என்னும் மகிழ்வானச் செய்தியை தங்களிடம் பகிர்ந்து கொண்டு விடைபெறுவது....
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi68.tinypic.com/2u9ipea.jpghttp://oi67.tinypic.com/rkvpu9.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
-
-
-
-
-
-
-
-
-