http://i65.tinypic.com/15milhw.jpg
Printable View
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
அன்பே வா படத்தின்
சுவாரஸ்யமான
தகவல்கள்
உங்களுக்காக
"அன்பே வா" படத்தில் நடிக்க மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் பேசிய எம்.ஜி.ஆர்.
-சித்ரா லட்சுமணன்
ஏவி.மெய்யப்ப செட்டியாரின் குமாரர்கள் எல்லோருமே"மக்கள் திலகம்"எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள்.அப்போதெல்லாம் எம். ஜி. ஆர்.நடித்த பல படங்கள் முதலில் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வெளியாகி அதற்குப் பிறகே சென்னையில் வெளியாகும் என்பதால் சென்னையிலே வெளியாகும்வரை காத்திருக்காமல் தாம்பரத்துக்கு ஓடிச்சென்று எம்.ஜி.ஆரின் படத்தைப் பார்ப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக இருந்த அவர்கள் எல்லோருக்குமே எம். ஜி.ஆரை வைத்து தங்களது ஏவி. எம். நிறுவனத்தில் ஒரு படத்தைத் தயா ரிக்கவேண்டும் என்பது தீராத ஆசையாக இருந்தது. அவர்களது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ஏ.சி. திருலோகச்சந்தரிடம் சொல்லி எம். ஜி. ஆருக்காக ஒரு கதையைக்கூட அவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.ஆனாலும் அதைப்பற்றி தங்களது தந்தையிடம் பேசுவதில் அவர்கள் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருந்தது.
அதற்கு முக்கியமான காரணம், ஏவி. எம். நிறுவனத்தில் அதுவரை எந்த கதாநாயகனுக்காகவும் கதை எழுதப்பட்டதேயில்லை என்பதுதான் . முதலில் கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் அந்தக் கதைக்கேற்ற நாயகர்களை ஒப்பந்தம் செய்வதுதான் எப்போதும் ஏவி. எம்.மில் வழக்கம்
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் வாகினியின் தயாரிப்பான "எங்க வீட்டுப் பிள்ளை" படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்பட விநியோகஸ்தர்கள் ஏவி. எம். சகோதர்களிடம் "நீங்கள் ஏன் எம். ஜி. ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கக்கூடாது?" என்று கேட்டனர். அப்போது எம் .ஜி .ஆருடன் நல்ல உறவில் இருந்த சரவணனின் நெருங்கிய நண்பரான நடிகர் அசோகனும்” நீங்கள் எம். ஜி. ஆரை சந்தித்துப் பேசினால் நிச்சயம் அவர் உங்களுக்காகக் படம் பண்ணுவார். ஏவி. எம். நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு எம். ஜி. ஆரை வைத்து படம் எடுக்கின்ற திட்டத்தைப் பற்றி ஏவி.எம்.சகோதரர்கள் தங்களது தந்தையான மெய்யப்ப செட்டியாரிடம் பேசியபோது அந்த திட்டத்துக்கு எந்த மறுப்பும் சொல்லாதாது மட்டுமின்றி தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
அடுத்தபடியாக "உங்களை சந்திக்க வேண்டும்.எப்போது வரலாம்?" என்று அவர்கள் எம். ஜி. ஆரைக் கேட்க உடனே வரும்படி அழைத்த எம். ஜி. ஆர். முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே ஏவி. எம். நிறுவனத்தின் படத்தில் நடிக்க தந்து ஒப்புதலைத் தந்துவிட்டார்.
அடுத்து அவரது சம்பளம் பற்றி பேச்சு வந்தது. சிறிது நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவரது சம்பளம் மூன்று லட்சம் ரூபாய் என்று முடிவானது.
அதற்குப் பிறகு பட வெளியீட்டுத் தேதியைப் பற்றி பேசத் தொடங்கிய ஏவி. எம். சகோதர்கள் 1965 ஆம் ஆண்டு பொங்கலுக்கு "எங்க வீட்டுப் பிள்ளை" வெளியானதைப்போல தங்களது படம் 1966 பொங்கலுக்கு வெளியாகவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர்
அவர்கள் அப்படிச் சொன்னவுடன் "அது முடியாதே" என்ற எம். ஜி. ஆர். "ஆர் எம் வீரப்பனுடைய நான் ஆணையிட்டால் படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன் அதனால் அவர் படத்துக்குப் பிறகுதான் உங்கள் படம் ரிலீஸ் ஆகும்" என்றார்.
"உங்களை வைச்சி நாங்க இப்போதுதான் முதல் முதலா படம் எடுக்கிறோம். அதனால் எங்களுடைய படம் பொங்கலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்று அவர்கள் மூவரும் வற்புறுத்தவே சிறிது நேரம் யோசித்த எம். ஜி. ஆர், "சரி நான் எதற்கும் ஆர். எம். வீரப்பனிடம் பேசிவிட்டு,அதன் பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்
அவரைப் பார்த்து பேசிவிட்டு ஏவி. எம். முருகன், குமரன், சரவணன் ஆகிய மூவரும் ஏவி. எம். ஸ்டுடியோவிற்குத் திரும்பிய சில மணி நேரத்தில் அவர்களைச் சந்திக்க வந்த ஆர். எம். வீரப்பன் "சின்னவரைப் பார்த்தீங்க போல இருக்கு" என்றார்.
அப்போது சினிமா உலகில் எல்லோரும் எம். ஜி. ஆரை "சின்னவர்" என்றுதான் அழைப்பார்கள். பெரியவர் என்றால் அது எம்.ஜி.ஆரின் அண்ணனான எம். ஜி. சக்ரபாணியைக் குறிக்கும்.
"நீங்க பேசிவிட்டுப் போன எல்லா விஷயத்தையும் என்கிட்டே சொன்ன சின்னவர் உங்களுக்காக என்னை விட்டு கொடுக்க சொன்னார் நானும் அதற்கு சரி என்று சொல்லி விட்டேன். ஆகவே அடுத்த பொங்கலுக்கு உங்க படம்தான் ரிலீஸ்" என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சகோதரர்கள் மூவரும் ஆர். எம். வீரப்பனுக்கு தங்களது நன்றியினை மனமாரத் தெரிவித்துக் கொண்டார்கள்.
அடுத்து இன்னொரு விஷயத்தையும் "உங்க கிட்ட சின்னவர் சொல்லச் சொன்னார்" என்ற ஆர். எம். வீரப்பன் "சம்பளத்தை மூன்றே கால் லட் சமாக தரச் சொன்னார். உங்கள் படத்தை பொங்கலுக்கு வர்ற மாதிரி முடிச் சிக் கொடுத்திடறேன்னும் சொல்லச் சொன்னார்" என்றார்
"பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு இருபத்தி ஐயாயிரமா" என்று செட்டியார் கேட்க பிள்ளைகள் அனைவருமே ஒரே குரலில் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள்
அடுத்து "அன்பே வா" என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் வேலைகள் தொடங்கின
ஏவி. எம். நிறுவனத்தில் எம். ஜி. ஆர் நடித்த முதல் படமான "அன்பே வா" தான் ஏவி. எம். நிறுவனத்தில் தயாரான முதல் கலர் படம். ஏவி. எம். நிறுவனத்தின் ஐம்பதாவது படமாகவும் "அன்பே வா" அமைந்தது.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த அந்தப் படத்தில் சரோஜாதேவியின் தந்தை பாத்திரத்துக்கு தங்கவேலுவை போடச் சொல்லி எம். ஜி. ஆர் சொன்னபோது "என் தந்தையின் நீண்ட கால நண்பர் டி. ஆர். ராமச்சந்திரன்.அதனால் அந்த பாத்திரத்திலே அவரைத்தான் போட வேண்டும் என்று அவர் நினைத்திருப்பார். இருந்தாலும் நீங்கள் இப்படி சொன்னிர்கள் என்பதை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்" என்றார் சரவணன்
உடனே "உங்களுடைய அப்பாவுக்கு எது விருப்பமோ அப்படியே செய்யட்டும்.நான் சும்மா ஒரு ஐடியாதான் சொன்னேன். நான் இப்படி ஒரு ஐடியாவை சொன்னேன் என்பது கூட அப்பாவுக்கு தெரிய வேண்டாம்" என்று கூறி விட்டார் எம். ஜி. ஆர்.
அந்த அளவுக்கு ஏவி மெய்யப்ப செட்டியார் மீதும் ஏவி எம் நிறுவனத்தின் மீதும் எம். ஜி. ஆர் மரியாதை வைத்திருந்தார்
பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது பொதுமக்க ளுக்கு முன்பாக நடன மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை எம்.ஜி.ஆர். எப்போதுமே விரும்ப மாட்டார் என்பதால் ஸ்டுடியோவிற்கு வெளியே பாடல்களைப் படமாக்கு வதை அவர் தவிர்த்து விடுவது வழக்கம்.
"அன்பே வா" படத்தில் இடம்பெற்ற "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் "என்று தொடங்கும் பாடல் காட்சியை வெளிப்புறத்திலே எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என்பது ஏவி எம் சகோதர்களின் முடிவாக இருந்தது
அதற்காக பொதுமக்கள் வர முடியாத ஒரு பள்ளத்தாக்கை தேர்வு செய்த ஏவி. எம். முருகன் "நான் தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் பொது மக்கள் அவ்வளவு எளிதில் வரவே முடியாது.ஆகவே எந்த பிரச்னையும் இல்லாமல் சூட்டிங் செய்யலாம்"என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னவுடன் "நீங்க சொன்னால் சரிதான் முதலாளி" என்று அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்த அவர் ஒப்புக் கொண்டார்.
முதல் நாள் இரவு டான்ஸ் மாஸ்டர் சோப்ராவின் உதவியாளர்களான ராமுவையும் புலியூர் சரோஜாவையும் தனது அறைக்கு வரச் சொல்லி பல மணி நேரம் நடன ஒத்திகை பார்த்த எம்.ஜி.ஆர் பயிற்சி முடிந்து டான்ஸ் உதவியாளர் ராமு கிளம்பிய போது அவரை அழைத்தார்.
"நாளைக்கு அவுட்டோர் ஷூட்டிங்கில் நீ எனக்கு எந்த டான்ஸ் மூவ்மென்ட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாது சரோஜாதேவிக்கு மட்டும்தான் சொல்லித் தரணும்.என் நடன மூவ்மெண்டை நான் பார்ர்த்துக் கொள்கிறேன்" என்று சற்று கண்டிப்பாக சொல்லி அவரை அனுப்பி வைத்தார்
ஏவி.எம்.முருகன் சொன்ன இடத்தில் எம்.ஜி.ஆர்,சரோஜாதேவி உட்பட படக்குழுவினர் அனைவரும் இறங்கி படப்பிடிப்பிற்கு தயாரானார்கள். "நான் பார்த்ததிலே" என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த அடுத்த நிமிடமே அந்த பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக பல தலைகள் தெரியத் தொடங்கின.
அந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் "ஆட்களே வர முடியாத லோகேஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று சொன்ன முருகன் சார் எங்கே?" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாலும் பாடல் காட்சியை அங்கே படமாக்க தனது முழு ஒத்துழைப்பையும் தந்தார் எம் ஜி ஆர்.
ஏவி. எம். சரவணன் சாதாரணமாக மற்ற படப்பிடிப்புகளுக்கு செல்ல மாட்டார் என்றாலும் சாண்டோ சின்னப்ப தேவர் படப்பிடிப்பில் எம் ஜி ஆர் இருந்தால் மட்டும் அங்கே சென்று அவருடன் பேசிக்கொண்டிருப்பது அவர் பழக்கம்
"அன்பே வா" படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எம். ஜி. ஆரை சந்திப்பதற்காக வழக்கம்போல தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்புக்கு சரவணன் சென்றபோது "இனிமேல் இப்படி ஷூட்டிங்கில் என்னை சந்திக்க வராதீர்கள் என்றார்" எம். ஜி. ஆர்.
எம். ஜி. ஆர் ஏன் அப்படி சொல்கிறார் என்பது புரியாமல் சரவணன் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
“இதுவரை நீங்கள் எத்தனையோ முறை என்னை சந்திக்க படப்பிடிப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள் நாம் பல மணி நேரம் பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம் அப்போதெல்லாம நீங்கள் என்னை வைத்து படம் எடுக்கவில்லை.இப்போது நிங்கள் என்னை வைத்து "அன்பே வா" என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் என்னை அடிக்கடி பார்க்க வந்தால் இந்தத் திரையுலகில் உள்ள சிலர் நீங்கள் நட்பு காரணமாக என்னை சந்திக்க வந்திருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் “ஏவி. எம். படத்துக்கே எம். ஜி. ஆர் சரியாக கால்ஷீட் தரவில்லை போல இருக்கு.பாவம் சரவணன் எம் ஜி ஆர் பின்னால் அலையாக அலைகிறார்” என்று பேசக்கூடும். அப்படிப் பேசறவங்களுக்கு நாம்ப எதுக்கு ஒரு வாய்ப்பு தரணும்.
அதனால இனிமே என்னை சந்திக்கணும்னு உங்களுக்குத் தோன்றினால் நீங்க நேராக தோட்டத்துக்கு வாங்க. நாம்ப அங்கே பேசலாம். இல்லே உங்களால வர முடியவில்லை என்றால் எனக்கு ஒரு போன் பண்ணுங்க நான் உங்க ஸ்டுடியோவிற்கு வருகிறேன். பேசிக்கிட்டிருக்கலாம் ”என்று எம். ஜி. ஆர் சொன்னவுடன் அவருடைய நுட்பமான சிந்தனையைப் பார்த்து அப்படியே அசந்து போய் நின்றாராம் சரவணன்
அதுதான் எம் ஜி ஆர் .
திரையுலக மன்னாதி மன்னன்
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...
30/6/18 அன்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .திரு.சைதை துரைசாமி, திரு.ஐசரி கணேஷ், நடிகை லதா
http://i64.tinypic.com/3ble1.jpg
திரு.முருகு பத்மநாபன் திரு.ஐசரி கணேஷ், நடிகை லதா
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி பேசும்போது .
http://i64.tinypic.com/2nbty0o.jpg