விரைவில் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில்
உரிமைக்குரல்
தகவல் - திரு.ஆர்.சரவணன், மதுரை
Printable View
விரைவில் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில்
உரிமைக்குரல்
தகவல் - திரு.ஆர்.சரவணன், மதுரை
17.1.2016
http://i1273.photobucket.com/albums/...6/46_2-2-1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் 100வது ஆண்டு விழா பிரமாண்ட துவக்கம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூறாவது ஆண்டு சிறப்பு மலர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு விழாக்கள் , பட்டி மன்றம் , நிகழ்வுகள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அரசியல் , சினிமா , மனித நேயம் பற்றிய தொகுப்புகள்.
உலகளவில் எம்ஜிஆர் -100 விழா ஏற்பாடுகள் .
தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் வெளியிடுதல்.
எம்ஜிஆர் 100 -டாக்குமெண்டரி வெளியிடுதல் .
பல சிறப்பு நிகழ்சிகள் மக்கள் திலகத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு விரைவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் செய்வார்களா ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் 100 விழா - நண்பர்கள் தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் .
இன்னும் 249 நாட்களே உள்ளது .
வினோத் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் விழா பற்றிய தங்களின் பதிவு நியாயமானதே .உலகமே வியக்கும் வகையில் எம்ஜிஆரின் விழா மிக சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு ரசிகனும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் அதிமுக தலைமையும் ,எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளும் விழா குழுக்களை அமைத்து மின்னல் வேகத்தில் செயல் பட வேண்டும் .மக்கள் திலகத்துடன் பழகிய திரையுலக நட்சத்திரங்கள் , அரசியல் பிரமுகர்கள் ,உண்மையான ரசிகர்களின்பேட்டிகள் இடம் பெறவேண்டும் . மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் முழு அளவில் இடம் பெற வேண்டும் சரித்திரம் வாய்ந்த அரசியல் சாதனைகளும் இடம் பெற வேண்டும் .பொறுத்திருந்து பார்ப்போம் .
கலயில் எரிந்த கலைஞ்ன் - இன்பா
நீ இன்ப வா அல்லது மற்றவர்களுக்கு சொம்பா. சந்திரபாபுவை பற்றி புத்தகம் வரட்டும் தப்பு இல்லை. ஆனால் உண்மையை பேசு.. ......
Please refer to Daily thanthi of today under "Puthaga mathipurai".
சைலேஷ் சார்,
மேலே உள்ள செய்தி கடந்த 4-ம் தேதி நமது திரியில் 107ம் பக்கத்தில் குமார் சார் போட்ட பதிவு. அதுகுறித்து 5ம் தேதி நமது திரியில் பேராசிரியர் திரு.செல்வகுமார் போட்ட பதிவை கீழே தருகிறேன். சினிமா எக்ஸ்பிரஸ் சமீபத்திய இதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய மதிப்புரை வெளியிட்டுள்ளனர். அதில் சந்திரபாபுவின் வாழ்க்கையை விட அரசியல் நெடியை அதிகமாக ஆசிரியர் கலந்திருப்பது சந்திரபாபுவின் வாழ்க்கையை விட சோகம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆசிரியர் யாரென தெரியவில்லை. ஆனால், அவரது பின்னணியை ஆராய்ந்தால் நிச்சயம் அவர் புரட்சித் தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராகத்தான் இருப்பார் என்பது நிச்சயம்.
திரு. செல்வகுமார் சார் 5-ம் தேதி போட்ட பதிவை அப்படியே கீழே தருகிறேன்..
-------------------------
நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு, நம் புரட்சித்தலைவர் அவர்கள் வீட்டை மீட்பதற்கு மட்டுமா பண உதவி செய்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்களை "பறக்கும் பாவை",, "கண்ணன் என் காதலன்" மற்றும் "அடிமைப்பெண்" காவியங்கள் மூலம் வழங்கி , நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் நம் மக்கள் திலகம்.
ஆனால், சந்திரபாபு போதிய நிதி இல்லாத காரணத்தினாலும், இதர காரணங்களாலும், "மாடி வீ ட்டு ஏழை" திரைப்படத்தை தொடர முடியாமல் போனதற்கு, நமது பொன்மனசெம்மலின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு சில இழி பிறவிகள் அவர் மீது புழுதி வாரி தூற்றினர்.
உண்மை நிலையை பலரும் அறியும் வகையில், இந்த கட்டுரை மூலம், பதிவிட்டு, அந்த அநாகரீகவாதிகளை வாயடைக்க செய்த திரு.வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
------------
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்