Note from moderator: One of the basic rules of The Hub is to refrain from personal abuse.
Offenders id will be disabled for a period of time and if constantly repeated, will be banned permanently.
Discuss civilly please.
Printable View
Note from moderator: One of the basic rules of The Hub is to refrain from personal abuse.
Offenders id will be disabled for a period of time and if constantly repeated, will be banned permanently.
Discuss civilly please.
'ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு'
https://i.ytimg.com/vi/hQZUQPZwYuk/hqdefault.jpg
சரி! நண்பர்களே! இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.
ஒரு ஜாலியான பாடலைப் பற்றிப் பார்ப்போம். கவலைகள் மறந்து போகும்.
என் அபிமானப் பின்னணிப் பாடகர் சாய்பாபா. கொஞ்சமல்ல...நெஞ்சம் நிறைய இவரைப் பிடிக்கும். என்னால் மறக்கவே முடியாத அற்புத குரல் வளம் கொண்டவர். ஜேசுதாஸ், பாலா, கண்டசாலா இவர்களின் குரல்களின் கலவை போன்று.
துரதிர்ஷ்டம் என்னவென்றால் குறைந்த பாடல்களே இவர் பாடியிருப்பது. இது வாழ்நாள் முழுக்க என் வருத்தம்.
ஆங்கிலம் கலந்த தமிழ் காமெடிப் பாடலை இவரை விட்டால் பாட ஆளில்லை. நாகேஷுக்கு மிகப் பொருத்தமாவார் ஏ.எல். ராகவன் போல.
அதில் செம ஜாலியான ஒரு பாடல்.
http://padamhosting.me/out.php/i39275_vlcsnap389631.png
நடிகர் திலகத்தின் 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் நாகேஷும், சச்சுவும் பாடும் டூயட் பாடல்.
சட்டைக்காரி சச்சுவுடன் சம்சாரி நாகேஷ் கும்மாள ஜோடி சேருவார் ஏற்கனவே ரமாபிரபாவுடன் குடும்பம் நடத்தியும்.
அணைக்கட்டு, (எந்த ஊர்?) பார்க், ஏரி என்று இயற்கைக் காட்சிகள். ரம்யமாக இருக்கும். (இப்போது அதையெல்லாம் பார்க்க மனதுக்கு எவ்வளவு ஆனந்தம்! இதற்காகவே ஒரு முறை சாத்தனூர் அணைக்கட்டு போய்ப் பார்த்து விட்டு ரசித்து வந்தேன் அது பாழடைந்த நிலையிலும்.)
கைகளில் குடை சகிதம் நாகேஷ், சச்சு. சச்சுவுக்கு சட்டைக்காரி வேஷம் பொருந்தாது. அவரது உடல் வேறு அந்தபந்தம் இல்லாமல் இருக்கும். நாகேஷ் கண்ணாடி அணிந்து நடுத்தர வயது மனிதராக காட்சி தருவார்.
பாலாஜி ஆபீஸில் வேலை செய்யும் இருவருக்கும் காதல்.
'மெல்லிசை மன்னர்' துள்ளல் போட வைப்பார் இசையால். இந்த மாதிரிப் பாட்டெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.
எனக்குப் பிடித்த இரு பாடகர்கள். ஈஸ்வரி சாய்பாபாவுடன் சேரும் போது இன்னும் இனிப்பார்.
பாடலின் வரிகள் சில காமெடிக் கலக்கலாக இருக்கும்.
'நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா?
என்று நாகேஷ் ராமாவைப் பார்த்து கேட்க,
'நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா?'
என்று நாகேஷிடமே சச்சு பாடுவது நகைச்சுவை. இருவரும் ஆட்டத்தில் தூள் கிளப்புவார்கள்.
ரமாபிரபாவின் கண்காணிப்பு, நாகேஷின் களவாணித்தனம், முன் ஜாக்கிரதை, அப்பாவி டைப்பிஸ்ட் மாட்டி அம்மாஞ்சியாய் முழிப்பது, ரமாபிரபாவை ஏமாற்றி அவருடனேயே நாகேஷ் எஸ்கேப் என்று கலகல.
ஈஸ்வரியின் ஹா, ஹஹ்ஹா, ஹோ அலட்சிய தொனிகள் வழக்கம் போல அசர வைப்பவை.
சாய்பாபாவுக்கு காந்தக் குரல். 'ஹலோ'வை 'ஹல்லோ' என்று அழுத்தமாக உச்சரிப்பது சுவை.
'எங்கிருந்தோ வந்தாளி'ன் நடிகர் திலகம், ஜெயா மேடம் நடிப்பு மற்றும் பாடல்களின் வெள்ள ஆக்கிரமிப்பில் சிக்கி அருமையான இப்பாடல் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. சிம்பிளான காமெடிப் பாடல்தான். ஆனால் 'சிக்'கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.
சாய்பாபாவால் சாகாவரம் பெற்று விட்டது என் வரையில். எனக்கு இந்த மாதிரி ஜாலிப் பாடல்கள் என்றால் உயிர்.
முத்தமிடும் நேரமெப்போ...
எல்லோருக்கும் காலம் வரும்...
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்...
ஏ புள்ளே சச்சாயி...
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்...
குளிரடிக்குதே கிட்ட வா...
மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்...
அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து...
உத்தரவின்றி உள்ளே வா...
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ...
சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான்...
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு...
ஜம்புலிங்கமே ஜடாதரா...
இப்படிப் பல பாடல்கள்.
இப்போ நம்ம பாடல். பாடல் இரண்டு நாட்களுக்காகவாவது மனதில் ரீங்காரம் இட்டபடி இருக்கும்.
https://i.ytimg.com/vi/kvSs63rw4Zg/hqdefault.jpg
ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ (ஈஸ்வரி பின்னுவார்)
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ
பட்டுப் போலக் கூந்தல் உண்டு
தொட்டுப் பாரய்யா
பக்க மேளம் போல என்னைத் தட்டிப் பாரய்யா
உன்னாலே என் ஆசை தீர்ந்தாலென்ன
ஒன்னோடு ஒன்னாகச் சேர்ந்தாலென்ன ஹோ
ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா
Hei! Come on baby! shake with me! Not this a way! dance away. wov..wov..(right or wrong):)
சிட்டு சிட்டான பெண்டாட்டி நீ
சின்னக் கண்ணாட்டி நீ
கட்டிப் போடாமல் தீராதடி
கண்ணைக் கண்ணால் அடி
(நாகேஷ் என்னமாய்க் கண் அடிப்பார் தெரியுமா! யானை சிலையின் தும்பிக்கையில் அமர்ந்து குடை பிடித்தவாறு)
விட்டு விட்டாலும் போகாதய்யா
வேகம் மாறாதய்யா
பக்கம் நீயின்றி வாழாதய்யா
பாதி நீதானய்யா
நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா:)
நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா:)
காஷ்மீரில் தேன் நிலவு போனால் என்ன
ஹோ! போகாமல் இங்கேயே வாழ்ந்தால் என்ன அஹ்ஹோ!
ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
https://youtu.be/5JJ9mbYMegg
குட் மார்னிங் ரவி சார்!
ஷிப்ட் கிளம்பும் நேரம் வந்தாச்சு. உங்கள் தந்தை தொடர் தொடரட்டும். 'ஹலோ மை டார்லிங்' பார்த்து ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.:) வரேன்.
கருவின் கரு - 132
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 19
அன்று வெள்ளிக்கிழமை - மிகவும் சந்தோஷமாக இருந்தேன் - என் மகள் USA விலிருந்து ஒரு மாதம் விடுமுறையில் வருகிறாள் - இரண்டு மூன்று நாட்களாக அவள் வருவதை எண்ணியே பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன் .. என் மனைவி சாதரணமாகத்தான் இருந்தாள் - அவளிடம் ஒரு படபடப்பும் இல்லை ... திருமணம் செய்துகொண்டு சென்றவுடன் முதல் தடவையாக வீடு வருகிறாள் - இரண்டு வருடங்கள் ஒட்டிவிட்டன . இரண்டு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதவள் ... இரண்டு வருடங்கள் எப்படி ???? skype வந்துவிட்ட காலத்தில் , வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் யார் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் ?? மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்வதெல்லாம் பைத்திய காரத்தனம் - என் மனைவியின் வாதம் ---
இன்றைய வாழ்க்கை மாறி விட்டது --- வேகமாக செல்லும் வாழ்க்கை - எதிலுமே செயற்கை கலந்துவிட்ட காலம் - மனிதாபிமானம் , பாசம் ,
மனச்சாட்சி இவைகளை பொன்னாக மதித்தோம் ஒரு காலத்தில் - இன்று விஞ்சானம் எல்லாவற்றிலும் முன்னேறிவிட்டது - whatsappஇல் வாழ்க்கை நடக்கின்றது - skype இல் பாசம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது - facebook இல் உறவுகள் பின்ணப் படுகின்றன - ஈமெயில் லில் வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது ....
ஷ்ரேயா வந்துவிட்டாள் - ஹாய் dad -- எப்படி இருக்கீங்க ? உள்ளே சென்றுவிட்டாள் --- ஒரே வார்த்தை - இரண்டு வருடங்களின் பிரிவை இணைத்து வைத்தது ---- கண்களை மூடிக்கொண்டேன் - கண்ணீர் கவிதையாக வெளிவந்து அன்று இருந்த ஒரு இனிய காலத்திற்கு அழைத்துச்சென்றது ....
ஒரு காலம் இருந்தது.
ஒரு காலம் இருந்தது.
மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.
கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.
நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.
பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.
மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.
எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.
சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.
என் மகள் என் மடியில் தூங்கிய காலம் அது
கதைகள் பல சொன்ன காலம் அது
sky யைப்பார்த்து சொன்ன கதைகள் -
skype யை ப்பார்த்து மகளை த்தேடுகிறேன் ..
face யை books இல் புதைத்து படிப்பாள் என் மகள்
இன்று face book இல் தான் குடியிருக்கிறாள் ..
தந்தை சாப்பிடுவது tablets - மகள் வாழ்வதும் ஒரு
tablet இல் தான் ------
இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.
அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.
https://youtu.be/SdcAN3dobz4
கருவின் கரு - 133
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மகள் என்றுமே ஒரு தெய்வத்திருமகள்
https://youtu.be/XS904XgEPz4
கருவின் கரு - 134
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
https://youtu.be/skzF7BQUgbU
கருவின் கரு - 135
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
https://youtu.be/BbH1z9AoT3E
டியர் கோபால் சார்,
உலகத்திரைப்படங்கள் பற்றிய உங்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. ஆனால் அத்தகைய திரைப்படங்கள் மீது எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாததால் அவைகளைப்பற்றிய பின்னூட்டங்கள் இட முடியவில்லை.
அவைதான் காரணமே தவிர, கண்டுகொள்ளக் கூடாது என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.
திரியில் இடம்பெறுவோரின் திரை ரசனையை உலகத்தரத்துக்கு உயர்த்த முயலும் உங்கள் எண்ணமும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியவையே.
உங்கள் விமர்சனங்களைப் படிக்கும்போது அத்தகைய படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு விரிவான விளக்கங்கள்.
குறிப்பாக 'ரோஷ்மான்'. அப்படம் பற்றி உங்களது அறிமுகமும் விமர்சனமும், தொடர்ந்து வந்த வாசு அவர்களின் மேலதிக விவரங்களும் அப்படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளன. (பார்க்க வேண்டும்) இதை முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது என் தவறுதான்.
உங்கள் அயராத முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என் மனதில் உங்கள் மீது எப்போதும் பெருமதிப்பு உண்டு.
டியர் வாசு சார்,
எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத பாடல்களை பதிவிட்டு அசத்துகிறீர்கள். 'ஹெல்லோ மை டார்லிங் இப்ப காதல் வந்தாச்சு' பாடல் பதிவு சூப்பர். என் காதில் எப்போதும் ஓ மை ஸ்வீட்டி விச்சு" என்றுதான் விழுகிறது.
எனக்கென்னவோ ரமாப்ரபாவின் சாமியார் பைத்தியத்தை தெளிய வைக்கவும், சச்சுவை பாலாஜியிடமிருந்து பிரிக்கவும் நாகேஷ் இந்த போலி காதல் நாடகத்தை நடத்துவார் என்று தோன்றுகிறது.
சாய்பாபாவின் குரல் மீது இவ்வளவு கிரேஸா? ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அவர் குரல் சற்று வித்தியாசமாக தோன்றுகிறதே தவிர மயக்கம் கொள்ள வைக்கும் அளவுக்கு அல்ல.
சாத்தனூர் அணை பூங்கா பாழடைந்த நிலையில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டது மனம் வருந்தச் செய்தது. நல்ல செழிப்பான நிலையில் இருந்தபோது நான் பார்த்தது. சமீபத்தில் போகவில்லை. எத்தனை திரைப்படங்களில் இடம்பெற்றது இந்த அணையும் பூங்காவும்.
நடிகர்திலகம் - கலைச்செல்வி நடிப்புப்போட்டி சுனாமியில் இப்பாடல் காணாமல் போனது உண்மை.
அடுத்தது என்ன அதிரடியோ.