http://i1077.photobucket.com/albums/...psa3nt5qzu.jpg
Printable View
திருவள்ளூர் துளசி தியேட்டரின் ஆண்டுவிழாவை முன்னிட்டு , நேற்று காலை (30/03/2017)10 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " திரைப்படம் பொதுமக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்பட்டது .
http://i1077.photobucket.com/albums/...psu3ajiyrv.jpg
கடந்த ஆண்டு , இதே நாளில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "குடும்ப தலைவன் "
இலவசமாக காண்பிக்கப்பட்டது குறிப்பிட தக்கது .
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று (30/03/2017)மாலை 5 மணியளவில் , சென்னை காமராஜர் அரங்கில் மிக மிக சிறப்பாக
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திரு.வை.கோ தலைமையில்
ஏற்பாடு செய்யப்பட்டது .அதன் தொடர்பாக, காமராஜர் அரங்க வளாகம் , மற்றும்
தேனாம்பேட்டை , அண்ணா சாலையில், வழி நெடுகிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன . அதன்
புகைப்படங்களை காண்க .
http://i1077.photobucket.com/albums/...ps4gu1ry86.jpg
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2ekjalj.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "மொட்ட சிவா கெட்ட சிவா" ஆரம்பத்தில் எம்ஜியார் வணிக வளாகம் என்றும் அதன் அருகில் பொன்மனச்செம்மலின் மார்பளவு சிலை அழகுடன் காட்சியளிக்கும். அதே போன்று ராகவா லாரன்ஸ் சண்டை காட்சியிலும், வசனக் காட்சியிலும் மக்கள் திலகத்தின் பொன்னிற சிலை எழிலாகத் தோன்றும். மேலும் குடியிருந்த கோயில் ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடல் ரீமிக்ஸ் செய்து பாடல் காட்சி முழுவதும் தலைவரின் பல படங்களின் திருமுகத்தை காட்டுகிறார்கள். பாடல் இறுதியில் தலைவரின் நூற்றாண்டு விழா என்று பூத்தூவுகிறார் ராகவா லாரன்ஸ். பாடல் ரீமிக்ஸை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சொன்ன நோக்கத்திற்காக அவரை பாராட்டலாம். நம் பொன்மனச்செம்மல் தன்னுடைய நூற்றாண்டை தொண்டர்களும், அவர்மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அதனால்தான் ஆட்சியில் இருந்தவர்கள், ஆட்சியில் உள்ளவர்களால் கொண்டாடப்படாமல், இன்று உலகமே தினந்தோறும் கொண்டாடுகிறது. அவர்தான் புரட்சித்தலைவர்.....
புதிய தலைமுறை வார இதழ் -06/04/2017
http://i66.tinypic.com/1zq80aa.jpg
http://i67.tinypic.com/rcoe12.jpg