Just for my information, did Hamsadhwani/KB make amends DURING the felicitation for KB?
I know they sent a non-committal mail to some of you blaming Krishna Sweets.
Printable View
Just for my information, did Hamsadhwani/KB make amends DURING the felicitation for KB?
I know they sent a non-committal mail to some of you blaming Krishna Sweets.
'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி. (1959) கிடைத்தற்கரிய நடிகர் திலகத்தின் பொக்கிஷம்.
அன்பு நண்பர்களே!
இதுவரை நம்மில் பெரும்பான்மையோர் பார்த்திராத மிக மிக அரிய ஒரு காட்சியைக் காணப் போகிறீர்கள். நம் அன்புத் தெய்வம் அவர்கள் 1959-இல் கௌரவ நடிகராக நடித்து, திரு.B.R. பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கி வெளியான 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தித் திரைப்படத்தின் அபூர்வக் காட்சி தான் அது. இந்தக் காட்சியின் ஒலி-ஒளி வடிவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதை எண்ணி பூரிப்பும்,பெருமையும் அடைகிறேன். படத்தில் மூன்று நிமிட நேரங்களே வந்தாலும் நம் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றல் காந்தமாய் நம்மைக் கவருகிறது.
நிராதரவாக தன் சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட தன் ஸ்கூல் மாஸ்டரையும், அவர்தம் மனைவியையும் பழைய மாணவனான வாசு(நடிகர் திலகம்) தன் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி, 'தான்' யாரென்று தெரியாமல் தவிக்கும் அந்த ஸ்கூல் மாஸ்டரை சற்று அதட்டலாக மிரட்டி ஒரு பேப்பரிலே 'இந்த வீட்டை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று எழுதி கொடுக்கச் சொல்ல, ஸ்கூல் மாஸ்டர் பேனா இல்லாமல் தவிக்க, நடிகர் திலகம் "ஒரு பேனா கூட இல்லை... என்ன மாஸ்டர் நீங்கள்"... என்று பொய்க் கோபம் கொண்டு தன்னுடைய பேனாவை எடுத்துத் தர, இறுதியில் சிறு வயதில் தன்னிடம் படித்த மாணவன் வாசு (நடிகர் திலகம்) தான் அது என்று தான் கொடுத்த அந்தப் பேனாவின் மூலம் மாஸ்டர் தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைய, தன்னுடனேயே தன் குருவை வாழ வைத்து நன்றிக்கடன் செலுத்துகிறார் நடிகர்திலகம். தன் குருவின் மனமுவந்த ஆசீர்வாதங்களையும் பெறுகிறார். ஸ்கூல் மாஸ்டரின் குடும்பத்தையும் அவரோடு சேர்த்து வைக்கிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் மனைவியுடன் தனியாகத் தவிக்கும் தன் மாஸ்டரை அதிகாரி உடையில், தன் கீழ் பணி புரியும் அதிகாரியிடம் சைகைகள் மூலமாகவே வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லுவதாகட்டும்.... அந்த உடன் பணி புரியும் அதிகாரியிடம் விடை பெறும்போது அடிக்கும் அந்த million dollar சல்யூட் ஆகட்டும்.... மாஸ்டருக்கு பொய்யாக அன்புக் கட்டளைகள் பிறப்பித்து அவரை தவிக்க வைப்பதாகட்டும்.... வட இந்திய பாணியில் உடுத்தியிருக்கும் உடையில் காட்டும் கம்பீரமாகட்டும்.... மாஸ்டர் தன்னை அடையாளம் கண்டுகொண்ட உடன் பாசப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் விட்டு அரவணைத்துக் கொள்வதாகட்டும்.... அசத்தல் அசைவுகளை அந்த மூன்றே நிமிடங்களில் அள்ளிக் கொடுக்கிறார் நடிகர் திலகம். இதோ அந்த மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் 'ஸ்கூல் மாஸ்டர்'.
http://www.youtube.com/watch?v=q8vxK...yer_detailpage
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்.
'ஸ்கூல் மாஸ்டர் ' பல மொழிகளில் வெற்றி நடை போட்ட ஒரு படம்.1958-இல் கன்னடத்திலும் ,1959-இல் ஹிந்தியிலும்,1964-இல் மலையாளத்திலும் B.R.பந்துலு அவர்களின் இயக்கத்தில் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளிவந்து அத்தனை மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய படம். அத்தனை மொழிகளிலும் நடிகர் திலகம் கௌரவ நடிகராக அசத்தியிருப்பார். B.R.பந்துலு அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக இந்தியிலும், கன்னடத்திலும் அருமையாக நடித்திருப்பார். மலையாளத்தில் நடிகர் திலகத்தின் அருமை நண்பரும், மலையாள திரை உலகின் புகழ் பெற்ற நடிகருமான திரு,திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக நடித்திருந்தார். ('உலகின் முதலிசை தமிழ் இசையே' என்ற தவப்புதல்வன் படத்தில் இடம் பெறும் அருமையான பாடலில் நடிகர் திலகத்துடன் போட்டி போடும் வட இந்திய பாடகராக வருவாரே ...அவரே தான்.... ' தச்சோளி அம்பு' மலையாளப் படத்திலும் நம்மவரோடு நடித்திருப்பார்.) 1958-இல் 'எங்கள் குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழிலும் இப்படம் வெளிவந்தது. பின்னர் 1973 -இல் இப்படம் தமிழில் மறுமுறை 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரிலேயே எடுக்கப் பட்டது. இதில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி,முத்துராமன்,மற்றும் ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் திலகம் மற்ற மொழிகளில் செய்த கதாபாத்திரத்தை தமிழில் திரு.முத்துராமன் அவர்கள் செய்திருந்தார்.
'ஸ்கூல் மாஸ்டர்' (1964) மலையாளப் படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரமான தோற்றம். உடன் சௌகார் ஜானகி.
http://www.thehindu.com/multimedia/d...LD_257965f.jpg
அன்புடன்
வாசுதேவன்.
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்களின் ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுதல்கள். நீங்கள் அருமையாய் விளக்கியிருந்த அந்த போஸ் என் ரத்த நாளங்களில் எப்போதும் நர்த்தனமாடிக்கொண்டிருக்கும் அற்புத போஸ். அந்த ஒரு போஸ் வாழ்க்கையில் போதும். வேறு எதுவுமே வேண்டாம்...தங்கள் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் ஆயிரம் நன்றிகள். உங்கள் பதிவு எப்போது வரும் எப்போது வரும் என்று கண்கள் காத்துக் கிடக்கின்றன. இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.
நன்றியுடன்,
வாசுதேவன்.
Dear Mr. Kumareshan Prabhu,
It's an immense pleasure to know that our N.T movie is up again at Lavanya, i would strongly suggest that we will go with 50 ft. cutout for our legend. Lets not worry about others and their views on this...
This time again, we should prove wat is our N.T not for others but for Next Generations......
Already I'm planning with my 8 year old son for Sunday Gala Grand Show, he is excited so am I. We will do all the way to create our N.T record again.
JAIHIND
M. Gnanaguruswamy
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
நடிகர் திலகத்தின் 'பொம்மை' இதழ் நிழற்படம் அற்புதம் !
நடிகர் திலகம் கௌரவத் தோற்றத்தில் கலக்கியுள்ள "ஸ்கூல் மாஸ்டர்" ஹிந்தித் திரைக்காவியத்தின் இதுவரை பார்த்தேயிராத அரிரிரிரிரிரிரிரிரிரிய ஒலி-ஒளிக் காட்சியைப் பதிவிட்டு எல்லோர் இதயத்திலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டீர்கள் ! பசுமையான பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !
நடிகர் திலகம்-சௌகார் மலையாள "ஸ்கூல் மாஸ்டர்" ஸ்டில் அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
வரலாற்று ஆவணங்களும், சாதனைச் செப்பேடுகளும் செவ்வனே தொடரும் !
('நம்பியார்'கள் என்றுமே வென்றதில்லையே, விடுங்கள் !)
அன்புடன்,
பம்மலார்.
Dear kumareshanprabhu,
Thank You so much !
Just ignore the ignorant persons !
Wish You All Success !
டியர் ராகவேந்திரன் சார்,
திரு.மோகன்ராமன் அவர்களின் திருமகள் திரையுலகில் வெற்றி பவனிவர வளமான வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
கலைக்குரிசிலின் கலக்கல் பேட்டி
[கலையுலகின் தலைமகனை பேட்டி காண்கிறார் அவரது இளையமகன்]
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜூலை 1984
முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4524a-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4525a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4526a-1.jpg
நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4527a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Hi guru
how are you ,
hi harish
we will all meet on sunday