-
-
Sivaji Ganesan's 84th Birthday Celebration
அனைத்து புகைப்படங்களுக்கான லிங்க்
http://www.kalakkalcinema.com/tamil_...st.php?id=4226
-
-
"வீர சிவாஜி வெற்றி வேந்தன் சிவாஜி"
கலைத்தாயின் தலைமகனுக்கு ஒரு அன்பு ரசிகரின் காணிக்கை.
இதய தெய்வத்தின் புகழ் பாடும் பாடல். இந்த அற்புத வீடியோவைப் பார்க்கையில் மெய் சிலிர்க்கறது.
http://www.youtube.com/watch?v=LsLwJ...yer_detailpage
-
-
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிறந்த நாள் (2 October 1904)
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், ஜெமினி கணேஷ் ஆகியோர்.
http://i1087.photobucket.com/albums/...1207620146.jpg
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய உழைப்பினை எவ்வாறு பாராட்டுவது என்று திகைத்து நிற்கிறேன். உடனுக்குடன் பல்வேறு விதமான செய்தி மற்றும் நிகழ்வுகளின் நிழற்படங்களை அளித்து பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதோர் அந்த வருத்தத்தினை உணரா வண்ணம் மிகவும் அருமையாக அளித்துள்ளீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியாகட்டும், ரசிகர்களின் மரியாதை நிகழ்ச்சியாகட்டும் அனைத்தையும் ஒரு சேர அளித்து தங்கள் பங்களிப்பினை செவ்வனே செய்துள்ளீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
-
செப்டம்பர் 30 'தினமலர்' வாரமலரில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள் அளித்த அட்டகாசமான, மறக்க முடியாத தலைவர் புகழ் பாடும் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/d1.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/d5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
மேலே பதிவு செய்யப்பட்டுள்ள தினமலர் கட்டுரை தெளிவாக நம் பார்வைக்கு.
பாசமும், நேசமும் நிறைந்த குடும்பத் தலைவர் சிவாஜி!
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள்
http://kumarsrinivas004.files.wordpr...r-gt-still.jpg
http://img.dinamalar.com/data/uploads/E_1348730919.jpeg
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, சுவாரசியமான, பசுமையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
பிரபு, ராம்குமார் போல, நானும் சிவாஜி கணேசனை ,"அப்பா' என்றே அழைப்பேன். அவ்வளவு நெருக்கமான பழக்கம். நடிப்பைத் தவிர, அவர் அறிந்த இரு விஷயங்கள், பாசமும், நேசமும் தான்!
எங்கள் குடும்பத்திற்கும், சிவாஜி குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஏ.மதுரத்தின் இளைய சகோதரி தான், என் அம்மா, டி.ஏ.பட்டம்மாள். இளம் நாடக நடிகராக இருக்கும் போதிலிருந்தே, சிவாஜிக்கு என் அம்மாவிடம் மிகுந்த பாசம். "பட்டு' என்று, அம்மாவை பாசமாக, சகோதரர் என்ற உரிமையோடு அழைப்பார்.
என் தந்தை, டி.கோவிந்தராஜும், வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ஸ்ரீதரின் கதை, வசனத்தில், "அமர தீபம்' (சிவாஜி, பத்மினி) என்ற படத்தை தயாரித்தனர். அது, மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து என் தந்தை தயாரித்த, "உத்தம புத்திரன்' சிவாஜி, இரு வேடங்களில் நடித்த முதல் படம். அப்படமும்,பெரிய வெற்றியைப் பெற்றது. நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், சிவாஜிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு, மேலும் வலுப்பட்டது.
அரை நிக்கர் அணியும் பருவத்திலிருந்தே, வாரத்திற்கு ஒரு முறையாவது சிவாஜி வீட்டுக்கு சென்று, அன்று முழுவதும் தங்கி இருப்பேன். சிவாஜிக்கு, தோட்டமும், பண்ணை வீடும் ராமாவரத்தில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்குமார், பிரபு, கிரி, முரளி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் மகன்கள், நான் எல்லாரும் ஒன்றாக இருப்போம்.
தோட்டத்தில் பெரிய பம்ப் செட்டு போட்டு, குற்றாலம் அருவி போல தண்ணீர் கொட்டும். அங்கு, ஆசை தீர எல்லாரும் குளிப்போம். சில சமயம், சிவாஜியும் எங்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியாக குளிப்பார். தோட்டத்தில், அவர் குதிரை சவாரி செய்வார். டார்கெட் வைத்து, துப்பாக்கி சுடுவார். குறிபார்த்து டார்கெட்டை சுடுவதில், அவர், "எக்ஸ்பர்ட்!'
நான் சினிமாவிற்கு வர வேண்டாம் வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, மேனேஜ்மென்ட் படிக்க வேண்டும் என்று, என் தந்தை, என்னை எம்.பி.ஏ., படிக்க, அமெரிக்கா அனுப்பி வைத்தார். ஆனால், எம்.பி.ஏ., படித்து முடித்து, இந்தியா திரும்பியதும், நான் சினிமாத் துறையிலேயே சேர்ந்தேன்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி. என் தந்தை, வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள். பெரியவர்கள் பார்த்து, எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
"நீங்க கண்டிப்பாக வர வேண்டும்...' என்று, சிவாஜியிடம் நான் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர் பல ஆண்டுகள் கழித்து, என் மாமனார் வீட்டுக்கு வந்தார். என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர்.
"நான் மாப்பிள்ளை சைடு' என்று சிவாஜியும், "நான் பெண் வீட்டு சைடு' என்று எம்.ஜி.ஆரும் அறிவித்தது, மேலும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இருவரும் நிகழ்ச்சி முழுவதும் இருந்து, எங்களை கவுரவித்தனர்.
சிவாஜி அமெரிக்கா சென்றிருந்த போது, கலைவாணரின் மகளும், என் சகோதரியுமான கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டில் தங்கினார். அங்கு, தனக்கு கிடைத்த சுதந்திரத்தை ரொம்பவும், "என்ஜாய்' செய்தார். சினிமா தியேட்டரில், மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி உள்ளே சென்றார். ஷாப்பிங் மாலில், "டிராலி'யில் பொருட்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். இது பற்றி, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, "இதெல்லாம் மெட்ராசிலே செய்ய முடியுமா? அங்கு பலருக்கு நம்மை தெரியாதுங்கிறதும் ஒரு சுகம் தானேடா' என்றார்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "புதிய வானம்' என்ற படத்திற்காக, ஸ்கிரிப்டை ஓ.கே., செய்தோம். அதில், ஒரு பவர் புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டர், அதை சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். சிவாஜி ஒப்புக் கொள்வாரா? இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், நானும் அன்னை இல்லம் சென்று, அவரிடம் கதையை சொன்னோம்.
அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப் போனதால், ஓ.கே., சொன்னார். "நான் உங்களுக்குப் படம் பண்ணினால், எம்.ஜி.ஆர்., ஏதாவது நினைப்பாரா?' என்றார். "மாமா (ஆர்.எம்.வீ.,) எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருப்பார்...' என்றேன்.
சிவாஜி, சத்யராஜ், ரூபினி, கவுதமி படத்தில் முக்கிய ஸ்டார்கள். சிவாஜி படப்பிடிப்பிற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வருவார் என்பது, திரைப்படத் துறையில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அதை நேரில் பார்க்கும் போது, தனி த்ரில் தான்! படத்தில் நடிக்க சிவாஜி போட்ட ஒரே கண்டிஷன், "காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும். இரண்டு மணிக்கு(மதியம்) என்னை விட்டுடணும். அவுட்டோரிலேன்னா, கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை...'
வாஹினி ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டிருந்தோம். 7.00 மணிக்கு படப்பிடிப்பு என்பதால், அவசரமாக கிளம்பி, 7.00 மணிக்குள் அங்கு போய் சேர்ந்தேன். முழு காஸ்ட்யூம் அணிந்து, மேக்-அப் முடிந்து, 6.45 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து, படப்பிடிப்பு தளம் பூட்டி இருந்ததால், வெளியே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிவாஜி.
சிவாஜி நடிப்பதை, அருகே இருந்து பார்ப்பது, பெரிய பாக்கியம். அவரிடமிருந்து, ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நடிகர் திலகம் காங்கிரசிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தேர்தலின் போது, ஓட்டு சேகரிக்க தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். நிறைய அலைச்சலுக்குப் பின், தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு வந்தார். அவரை சந்திக்க, அங்கு சென்றேன்.
"ஐயா மாடியில் இருங்காங்க...' என்றனர். மாடியில் ஒரு உதவியாளர் அவருக்கு கை, கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரை போகச் சொல்லி விட்டு, நான் இதமாக அவருக்கு பிடித்து விட்டேன். "உள் கிராமங்களிலே ஜாக்கெட் கூட அணியாமல், புடவை மட்டும் உடுத்தி, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கடா... எவ்வளவு ஏழ்மை, பார்த்தாலே கஷ்டமாக இருந்தது...' என்று சொல்லி, அவர்களுக்காக உண்மையாக வருந்தினார். அதை, என்னால் உணர முடிந்தது.
சிவாஜி, அப்போலோ மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே, ராம்குமாரை தொடர்பு கொண்டேன். "தியாகு... நீ இப்போ வீட்டுக்கு வராதே. எக்கச்சக்கமான கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து போட்டிருக்காங்க. நீ நேரே அப்போலோ போயிடு. சிவாஜி உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வருகிற பொறுப்பை, நீ எடுத்துக்கோ. ஜாக்கிரதை...' என்றார் ராம்குமார்.
ஆம்புலன்ஸ் வண்டி வந்ததும், சிவாஜியை அதில் ஏற்றி, தி.நகர் போக் ரோட்டில் உள்ள, அன்னை இல்லத்திற்கு எடுத்து சென்றோம்.
திரை உலகில், அவர் செய்த சாதனைகள், பாசமிகு குடும்பத் தலைவரான அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடன் நெருங்கி பழகியது எல்லாம், என் மனத் திரையில் ஓடியது. அவருடன் இறுதியாக இருந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது.