http://oi66.tinypic.com/212aipc.jpg
Printable View
கண்ணா, படம் ரிலீசான அன்னைக்கே தியேட்டர்ல ஆளில்லாம தியேட்டரே காலியா கிடக்க இது மத்தவங்க படம் இல்லே, எத்தனை வருசம் ஆனாலும் படம் போட்டா தியேட்டரே நோக்கி மக்களை வரவைக்கிற சிவாஜி டா...............
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிவகாமியின் செல்வன் 12வது வாரத்தை நோக்கி சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில்.
உழைத்த அன்பு இதயங்களுக்கும், ஊக்கமளித்து வரும் பொதுமக்களுக்கும் நன்றியைக் காணிக்கையாக்குகிறது அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்.
http://oi68.tinypic.com/npnpkp.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் முக நூலலில் இருந்து)
விகடன் பண்ணும் விபரீத விளையாட்டு
http://img.vikatan.com/cinema/2016/0.../thirulok6.jpg
மீண்டும் மீண்டும் தவறு. விகடன் (THURSDAY, JUNE 16, 2016) திருலோகசந்தர் நினைவலைகளுக்காக வெளியிட்டுள்ள கட்டுரையில் சிறுபிள்ளைத்தனமாக உளறிக் கொட்டி இருக்கிறது. இங்கே நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களுடன் நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்க, ஒரு powerful மீடியாவான விகடன் இம்மாலயத் தவறை செய்கிறது.
'சிவாஜி பத்மினி நடித்து வெளியான 'இருமலர்கள்' பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார்.'
இதுதான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிற விஷயம்.
http://i1110.photobucket.com/albums/...DC4925-1-1.jpg
'ஆனந்தவிகட' அறிவுஜீவிக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று 'இருமலர்க'ளின் பகிரங்கமான வெற்றிச் செய்தியை இப்படி வெற்றிபெறவில்லை என்று எழுதுவானேன்? இருமலர்களும், ஊட்டிவரை உறவும் ஒரே தீபாவளி நாளில் (01-11-1967) வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி இமாலய வெற்றி பெற்றன என்பது இத்தனை காலம் பத்திரிகை நடத்திவரும் விகடனுக்குத் தெரியாதா? அல்லது வேண்டுமென்றே மற்றவர்களைப் போல நடிகர் திலகத்தின் புகழை விகடனும் மறைக்கத் துடிக்கிறதா?
மற்றவர்களைப் போல விகடனும் தன் நிலையைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ளத் தலைப்பட்டு விட்டதா?
நடிகர் திலகம் என்ன இவர்கள் வீட்டுச் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டாரா?
பிரம்மாண்டமாக எடுத்து சுமாரான வெற்றியைப் பெற்ற வண்ணப் படங்களை விகடன் உச்சியில் வைத்து எழுதும் போது கருப்பு வெள்ளையில் வெளிவந்து அதுவும் ஒரே தின தீபாவளியில் ஒன்று வண்ணமும், ஒன்று கருப்பு வெள்ளையுமாய் நம் எண்ணத்தில் இன்றுவரை கலந்து வெற்றிக்கனியை இலகுவாகப் பறித்து, இன்றளவும் முறியடிக்கமுடியாத சாதனையாய் நம்மையெல்லாம் பெருமைப்பட வைக்கிறதே! இந்த வெற்றியை இல்லை என்று சொன்னால், அந்த வெற்றியை சந்தேகித்தால் இவர்கள் எல்லாம் நல்ல கதிக்குப் போவார்களா?
இரண்டாவது அந்தக் கட்டுரைக்காகப் பதிப்பித்திருக்கும் புகைப்படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் ஒன்று கூட இல்லை. வீரத்திருமகனும், அதே கண்களும், அன்பேவாவும் படங்களாகக் காட்சி தருகையில் திருலோக்சந்தரை ஹாலிவுட் வரை கொண்டு சென்ற நம் 'தெய்வ மக'னின் புகைப்படம் ஒன்று கூடவா விகடனுக்குக் கிடைக்கவில்லை?
இதிலிருந்தே நடிகர் திலகத்தின் புகழை இன்றளவும் மறைக்க விகடனும் கங்கணம் கட்டி இறங்கிக் கொண்டு வேலை செய்வது தெரியவில்லையா? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விகடன் சர்குலேஷனை விட குங்குமம் பத்திரிக்கையின் சர்குலேஷன் அதிகம் என்று சொன்னால் விகடன் ஒத்துக் கொள்ளுமா?
இன்னும் எழுதுங்களேன்...'தெய்வ மகன் என்று சிவாஜி நடித்து ஒரு படம் வந்தது...வந்ததும் தெரியாது...போனதும் தெரியாது...மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது' என்று.
நிஜ சாதனைகள் செய்த ஒரு நிஜத் தமிழனுக்கு தமிழ்நாட்டிலே இந்த நிலைமை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. சிவாஜி என்ற இமயமலையை சோற்றில் மறைக்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கும் சோற்றுப் பிண்டங்களே! நீங்கள் திருந்தாவிட்டால் என்ன? அந்த மாபெரும் சாதனையாளர் செய்த சாதனையை நாடறியும்...நாங்கள் அறிவோம்..மக்கள் அறிவார்கள். நீங்கள் என்ன?
இதோ அந்த கட்டுரைக்கான லிங்க்.
http://www.vikatan.com/cinema/tamil-..._campaign=3604
இரு மலர்கள் - சிறப்புச் செய்திகள் (நன்றி ராகவேந்திரன் சார்)
1. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.
Courtesy: Tamil.webdunia
சிவாஜியை சிவாஜியுடன் மோதவிட்ட ஏ.சி.திருலோகச்சந்தர்
ஏ.சி.திருலோகசந்தரின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு. வெறும் வார்த்தையல்ல. அவரது படைப்புகளின் வரிசையைப் பார்த்தால் அவர் எத்தனை மகத்தான படைப்பாளியாக இருந்தார் என்பது தெரியும்.
வீரத்திருமகன் படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குனராக முத்திரை பதித்தார் ஏசிடி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் சுழன்றடித்தார். அன்பே வா, தெய்வமகன், தங்கை, இருமலர்கள், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா... என்று அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தரமானவை. கமர்ஷியலாக வெற்றி பெற்றவை.
திரைத்துறையில் ஏசிடி நிகழ்த்தி சாகசங்கள் சுவாரஸியமானவை. அதில் சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்றுமுறையும் வெற்றி பெற்ற கதை முக்கியமானது.
இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலே இன்று திரையரங்குகளும், திரைத்துறையும் திணறிப்போகும். வசூல் பாதிக்கும் என்று தயாரிப்பாளரிலிருந்து பாப்கார்ன் விற்பவர்வரை கூப்பாடு போடுவார்கள். திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியான கதையெல்லாம் உண்டு.
1967 -இல் ஏசிடி சிவாஜியை வைத்து இரு மலர்கள் படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் இரு மலர்களே ஆகச்சிறந்த படம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இரு மலர்கள் வெளியாவதாக இருந்த அதே தினத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவு படமும் வெளியீட்டுக்கு தயாரானது. ஒரேநாளில் ஒரு நடிகரின் இரு படங்களா என்று பஞ்சாயத்து எல்லாம் பேசாமல் இரு மலர்களையும், ஊட்டி வரை உறவையும் ஒரேநாளில் வெளியிட்டனர். இரு படங்களும் 100 நாள்களை கடந்து ஓடின.
1970 -இல் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல். ஏசிடி சிவாஜியை வைத்து எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுக்கிறார். டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்து சொர்க்கம் படத்தை எடுக்கிறார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டுமே ஹிட். 100 நாள்களை தாண்டுகின்றன.
1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.
சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்று முறையும் வெற்றிபெற வைத்ததுள்ளார் ஏசி திருலோகசந்தர். அவர் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான் என்பதற்கு இது சின்ன உதாரணம்.
//1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.//
நன்றி வாசுதேவன் சார்.
webdunia செய்தியிலும் தவறு இருக்கிறது. டாக்டர் சிவா, வைர நெஞ்சம் இரண்டும் நூறு நாட்கள் படங்கள் அல்ல. உண்மையைச் சொல்ல தயக்கமில்லை. ஒத்துக் கொள்ளவும் தயக்கமில்லை. வைர நெஞ்சம் சுமாரான வெற்றியை அடைந்தது. வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் அதன் வெற்றி வேறுவிதமாக அமைந்திருக்கும். நிறைய சொதப்பல்களால் 'ராஜா' மாதிரி வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் காலதாமதத்தால் நல்ல வெற்றி வாய்ப்பை இழந்தது. 'டாக்டர் சிவா' நிரம்ப ஏமாற்றத்தை அளித்ததால் (எனக்கல்ல) தோல்வியைத் தழுவ நேரிட்டது.
ஓடினால் ஓடியது என்று சொல்லப் போகிறோம். இல்லையென்றால் இல்லையென்று சொல்வோம். இதிலென்ன குறைந்து விடப் போகிறோம்? வெற்றி தோல்விகள் யாருக்கும் நிலையானது அல்லவே! ஆனால் வரலாற்று வெற்றியைப் பெற்ற படங்களை ஓடவில்லை என்று அதுவும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், ஊடகங்கள் கூறும்போதுதான் எரிச்சல் வருகிறது. இது பொறாமை உணர்வையும், உண்மையை மூடி மறைக்கும் கேவலத்தையும் அல்லவா காட்டுகிறது? இதனால் என்ன லாபத்தையும், சந்தோஷத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்து விடப்போகிறார்கள்?
உண்மையை ஒத்துக் கொள்ள நடிகர் திலகத்தின் ரசிகன் எந்தக் காலத்திலேயும் தயங்கியதே இல்லை. கோபால் கூட 'அன்பளிப்பு பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் சுமாரான வெற்றியைப் பெற்றது' என்று உண்மையை மறைக்காமல் இங்கே தெளிவாகக் குறிப்பிட்டது ஒன்றே இதற்கு சான்று.
என் அபிமானப் படங்களான கருடா சௌக்கியமா, தாம்பத்யம் போனற படங்கள் தோல்விப் படங்களே என்று அந்தப் படங்களுக்கான என் பதிவுகளில் நானே அதை குறிப்பிட்டிருக்கிறேன்.
பழம்பெரும் இயக்குனரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், தனிப்பட்ட முறையில் என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவருமான அருமை நண்பர் ஏ.சி. திருலோகசந்தர் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பதும், அவர் நடிகர் திலகம் நடித்த 25க்கு மேற்பட்ட திரைப்படங்களை, குறிப்பாக "ஆஸ்கர்" விருது தேர்வுக்குச் சென்ற முதல் தமிழ்த் திரைப்படமான "தெய்வ மகன்" படத்தை இவர் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...th-256171.html
- சிவாஜி மீது காழ்ப்புணர்வு கொண்டவராக சித்தரிக்கப்படும் கருணாநிதி .