SANGE MUZHANGU- 1972- 41 ST ANNIVERSARY
http://i47.tinypic.com/14cwsas.jpg
Printable View
SANGE MUZHANGU- 1972- 41 ST ANNIVERSARY
http://i47.tinypic.com/14cwsas.jpg
'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...'
1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.
இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.
நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...
உதாரணத்திற்கு
"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...
யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...
"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி..." - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக்
காட்டுகிறார்...
இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்
இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!
இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.
சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிம் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'
என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.
கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!
Duet song from Sangay Muzhangu
https://www.youtube.com/watch?v=6aXjEFdJAKc
A philosophical song from Naan Aanaittal.
https://www.youtube.com/watch?v=-9x1dYO2V3Y
Another song
https://www.youtube.com/watch?v=IACqSG0qUgg
Emgeeyar Pictures Adimai Penn banner will appear in this song.
நாகிரெட்டி நினைவுகள் - 24: நட்பு என்பது...
By விஸ்வம்
03 February 2013
எம்.ஜி.ஆரைப் பார்க்க விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். ""ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்'' என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.
ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். ""ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க'' என்று சொன்னார்.
""நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்'' என்கிறார் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கே. ரவீந்தர் "விழா நாயகன்' புத்தகத்தில்.
எம்.ஜி.ஆருக்கும் என் தந்தையாருக்கும் இருந்த நட்புறவு எந்த அளவுக்கு வளர்ந்தது.
என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""தன் மனைவி, தன் மக்கள், வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்றிருக்கும் கடுகு உள்ளம் கொண்டவர்களுக்கு மத்தியில், மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். பள்ளிக்கூடம் போகாமல் இந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த அறிவு எப்படிக் கிடைத்திருக்கும்? எம்.ஜி.ஆர். அதிகம் படிக்காதவர்தான். ஆமாம்... பள்ளியிலும் கல்லூரியிலும் சென்று படிக்காதவர். ஒருமுறை அவரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். அவர் என்னை தன் வீட்டின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே புதையலைப் போல் ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்பதற்காக அதை அவர் வைத்திருக்கவில்லை நேரம் ஒதுக்கி தினமும் படிக்கவேண்டும் என்பதற்காக வைத்திருந்தார். அதன்படியே தினமும் படிக்கவும் செய்தார். "ஒவ்வொரு நூலகமும் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்பது போகிற போக்கில் படித்துவிட்டுப் போகிற பொன்மொழி அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நன்மொழி. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் நூலகம்தான் அவருக்கு கோயில், தன் அன்னை சத்யா அம்மையார், காந்தி அடிகள், பெரியார், அண்ணா போன்ற பெரியோர்களின் படங்களை அந்தக் கோயிலில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் வெளியே கிளம்பும்போது அந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் செல்வார்.
"சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா...'
என்று பின்னாளில் ஒரு திரைப்படத்தில்கூட அவர் பாடியுள்ளார்.
பிரபல நடிகர் என்ற வகையில் மட்டும் எம்.ஜி.ஆர். பிரபலமாகவில்லை. நேர்மை, மக்கள் நலனில் குறிப்பாக, பின்தங்கிய மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலும்தான் அவர் பிரபலமானார். தமது இளமைக் காலத்திலிருந்தே ஈர இதயமும் இரக்க சிந்தனையுடையவராகவும் வாழ்ந்தார்''.
எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். என் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லாத நேரம். அவரது உடல் நலக் குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, பாதுகாவலர்கள் புடை சூழ விஜயா கார்டனுக்கு முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல் வந்து விட்டார். வந்தவர் காரை ரிக்கார்டிங் தியேட்டருக்கு அருகிலேயே நிறுத்திவிட்டு... கார்டனில் தந்தையார் தங்கியிருந்த இல்லத்துக்கு நடந்தே வந்து விட்டார்.
""உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப் பட்டேன். அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்ற எம். ஜி. ஆர். ""ஏதாவது வெளிநாட்டு மருந்து வேண்டுமா... சொல்லுங்கள். வாங்கித் தருகிறேன்''... என்றார் தந்தையாரிடம்.
""என் உடம்புக்கு இப்போது ஒன்றுமில்லை... சற்று ஓய்வு தான் தேவை. ஏதாவது மருந்து தேவைப்பட்டால், நம் மருத்துவ மனையில் பார்த்துக் கொள்கிறேன்...'' என்று தந்தையார் சொல்ல, எம். ஜி.ஆர். சமாதானம் அடைந்தார்.
முதலமைச்சராகப் பல பணிகளுக்கு இடையே இருந்தவர், நேரில் வந்துதான் உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. தொலைபேசியே போதும். ஆயினும் எம். ஜி. ஆர். வந்தார். மனிதத் தன்மையைப் பதித்துவிட்டுச் சென்றார்.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழுவில் என் தந்தையாரை உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் எம். ஜி. ஆர்., தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சத்துணவுத் திட்டக் கூட்டத்திற்கு என் தந்தையாரை அழைத்தார்; சென்றிருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது பழைய தோழமை உணர்வோடு, என் தந்தையார் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தார் எம். ஜி. ஆர். என் தந்தையாரும் அவரை அணைத்துக் கொண்டே வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எல்லோரும் அவர்களை வேடிக்கையாகப் பார்த்தனர். "அவரோ முதலமைச்சர். நாம் சாதாரணமானவன்தானே? அவருடன் அதிகாரிகள் முன்னிலையில் சகஜமாக பழகிவிட்டோமே... அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ' என்று தந்தையார் நினைத்ததற்கு, எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசி மூலமாக சமாதானம் வந்தது.
""என்னங்க ரெட்டியார்... எதற்காக வீண் வருத்தம்? சி. எம். என்பது இரண்டெழுத்து. இது தற்காலிகமானது. எம். ஜி. ஆர் என்பது மூன்றெழுத்து. இது நிரந்தரமானது. பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நீங்கள் என்றைக்கும் எனக்கு முதலாளி. நான் தொழிலாளி'' என்று அன்புடன் பேசி என் தந்தையாரைச் சமாதானப்படுத்தினார்.
எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து இன்று நிரந்தரமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆனால்... முதலாளி தொழிலாளி என்று சொன்னாரே... அது மட்டும் யாருக்கு யார் முதலாளி, யார் தொழிலாளி... என்ற கேள்விக் குறியுடன் இருக்கிறது. ஆனால் இதற்கும் அவரே படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி என்று.
அவரது இளமைக்காலத்தில் உதவியவர்களையும், அவரது முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களையும் நினைவில் வைத்திருந்து, தனக்கு வசதி வந்த போது, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், படவுலக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.
இந்த சந்தர்ப்பத்தில் என் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அப்போது சென்னையில் ஷெரீப், துணை ஷெரீப் என்னும் கெளரவப் பதவிக்கு உரியவர்களை அரசு தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம்.
1986ஆம் ஆண்டில் ஷெரீப் ஆக ஏவி.எம். சரவணனையும் துணை ஷெரீப் ஆக என்னையும் எம்.ஜி.ஆர். தாமாகவே முன்வந்து நியமித்து, தொடர்ந்து இரண்டாண்டுகள் பணியாற்றும் வாய்ப்பினைத் தந்து சிறப்பித்தார்.
இரண்டு பிரபல திரைப்பட நிறுவனங்களின் வாரிசுகளை இந்தப் பதவியில் நியமித்து எம்.ஜி.ஆர். இந்த வகையிலும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று சொல்லலாம்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதி வைத்தார். அதை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் எம். ஜி. ஆர்.
எம்.ஜி.ஆர். மெமோரியல் எப்படி வந்தது? என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""வாகினியின் மேற்குப் புறமாக ஒரு பகுதியில் விஜயா மருத்துவமனை, தென்புறமாக விஜய சேஷமகால் திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. விஜயா வாகினி யின் பரப்பளவு குறைந்தது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து என்னால் ஈடுபடமுடியவில்லை. எனவே மனதை தொண்டு என்ற திசையில் திருப்பினேன், விஜயா மருத்துவமனையை 1972ல் நிறுவினேன்.
அப்போது அதில் 46 படுக்கை வசதிகள் இருந்தது. 15 ஆண்டுகளில் தீவிர இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் மருத்துவம் என பல பிரிவுகளை உள்ளடக்கி 200 படுக்கை வசதிகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்தது. பிற மாநிலத்தவர் மட்டுமல்ல, பிற நாட்டவரும் சிகிச்சை பெற வந்தனர். எனவே மருத்துவமனையை உலகத்தர வரிசையில் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். அப்போது உடல் நலம் இல்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க... ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சையை மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சை,யைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது? அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.
""கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன். எம். ஜி. ஆர். மிகவும் மகிழ்ந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் பச்சைப் பசேலென்ற சுற்றுச்சூழலில் நல்ல காற்றோட்டமும் வெளிச்ச வசதியோடும் கட்டி முடிக்கப்பட்டது. நோய்கள் 25 சதவிகிதம் மருந்துகளாலும் 75 சதவிகிதம் ஆரோக்கியமான சுற்றுப்புறத்தாலும் குணமாகின்றன. ஹெல்த் சென்டருக்கு யாருடைய பெயரைச் சூட்டலாம் என்று யோசித்தேன்.
"யான் பெற்ற இன்பம், பெறுக இந்த வையகம்' என்று ஞானிகள் கூறியது போல், தான் பெற்ற நல்ல சிகிச்சை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். அவரோ, "பணியுமாம் என்றும் பெருமை' என்ற திருக்குறள் இலக்கணத்துக்கு இலக்கியமாய் ஆனார். என் பிள்ளைகள் மீது அவருக்கு எப்போதும் நல்ல பிரியம் உண்டு. அதனால், மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை.
பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை எம்.ஜி.ஆரை வைத்தே திறந்திடலாம் என்ற இன்பக் கனவில் மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால்... கனவு நினைவு ஆவதற்குள் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார். யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொள்ள முடியும்?
பிரசாத் மெமோரியல் அமைக்கச் சொன்ன, எம். ஜி. ஆர். பெயரில் மெமோரியல் அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதனால்தான், மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு அவருடைய விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.
எங்கள் இருவரது ஆசையும் நிறைவேறியதில் எனக்கு நிரம்ப திருப்தி.
விஜயா ஹெல்த் சென்டரில் தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அனைத்துவிதமான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. 24 மணி நேர அவசர கால விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுடன் சுமார் 350 படுக்கையைக் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்கிறது விஜயா ஹெல்த் சென்டர்.
என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு. அதிலும் மருத்துவமனை என்பது மனித இனத்துக்கு தொண்டு செய்யும் ஆலயம். அங்கே வரும் நோயாளிகளின் துன்பத்தை (வலி) போக்கி அவர்களுக்குள் இன்பத்தை (மகிழ்ச்சி) வரவழைக்கும் இடம்.
அந்தக் கண்ணோட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இயற்கையன்னை வாழும் விஜயா ஹெல்த் சென்டர். முப்பிறவி கண்ட எம். ஜி. ஆர். விருப்பப்படி அமைக்கப்பட்ட விஜயா ஹெல்த் சென்டரின் நுழைவாயிலுக்குள் வருபவர்களை எம். ஜி. ஆர். மெமோரியல் என்னும் வார்த்தைகள் வரவேற்கும்போதே அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைத்து விட்டதாக உணர்கிறார்கள். காரணம் அவர்களை வாழ்த்தும் தெய்வமாக அங்கே எம். ஜி. ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான்''.
(தொடரும்)
Here is Author Mekala Chitravel write up on Naan Aanai Ittal. The last episode.
Page 1
http://i125.photobucket.com/albums/p...ps89db02be.jpg