http://i61.tinypic.com/2efjqs8.jpg
Printable View
M.N.NAMBIYAR BIRTH DAY REMEMBRANCE TO DAY
http://i61.tinypic.com/205eafl.jpg
நட்புக்கு இலக்கணம்
http://i62.tinypic.com/2h7krdd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வீரனும் தோழனும்
http://i58.tinypic.com/1zb7vv6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/314sbux.jpg
http://i58.tinypic.com/2qwmqde.jpg
http://i61.tinypic.com/2a5n43a.jpg
தமிழ் திரையுலகில் ஒரு மறக்க முடியாத சகாப்தம் படைத்தவர் நடிகர் எம்.என்.நம்பியார். இன்று அவரது நினைவு தினம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரு சில படங்களில் தோழனாகவும், பல படங்களில் வில்லனாகவும் பிரகாசித்தவர்.
1919ம் ஆண்டு மே 21 தேதியில் கேரளா மாநிலம், தற்போதைய கண்ணனூர்
மாவட்டத்தில் உள்ள பெருவமூர் கிராமத்தில் கேளு நம்பியார் என்பவருக்கு மகனாக பிறந்தார்.
எட்டாவது வயதில் தந்தையை இழந்தார். ஊட்டியில் ஒரு அரசு பள்ளியில் படித்தார்.குடும்ப கஷ்டம், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பதை
விட்டு சென்னை நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் உதவியாளரானார்
ராமதாஸ் என்ற நாடகத்தை பக்த ராமதாஸ் என்னும் திரைப்படம் ஆக எடுக்கும்போது முக்கிய வேடத்தில் நடித்தார்.அப்போதைய சம்பளம் ரூ.40/-
பிறகு டி.கே.கிருஷ்ணசாமி நாடக குழுவில் கவியின் கனவு நாடகத்தில்
ராஜகுரு வேடத்தில் நடித்தார்.
பின்னர் ராஜகுமாரி ,மோகினி , அபிமன்யு, வித்யாபதி போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்திலும், கதாநாயகன் வேடத்திலும் , அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் வேடத்திலும் நடித்து
பாராட்டுகளை பெற்றார். அதன்பின் வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வில்லன் வேடம் அவருக்கு பொருந்திடவே, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
நாடோடி மன்னன், வேட்டைக்காரன் ,படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், குடியிருந்த கோயில் , உலகம் சுற்றும் வாலிபன் ,
உரிமைக்குரல் ,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே, பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு,இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களில் புரட்சி தலைவருடன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
1980க்கு பின் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசி திரைப்படம் சுதேசி.சில ஹிந்தி திரைப்படங்களிலும் , ஜங்கிள் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.
திரைபடத்தில் வில்லன். நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷன்.
சினிமாவில் , மது, மாது, சிகரட் என்று நடித்தாலும் , நிஜ வாழ்க்கையில் எந்த கேட்ட பழக்கமும் இல்லாதவர்.
65 வருடங்களாக சபரி மலைக்கு சென்று வந்த ஐய்யப்ப பக்தர்.
எல்லோருக்கும் குருசாமியாக திகழ்ந்தவர். திரையுலகில் பலரை ஐய்யப்ப பக்தராக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்து வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வரலாறு படைத்த எம்.என். நம்பியார் உடல்நல கோளாறு காரணமாக 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தனது 89 வது வயதில் இயற்கை எய்தினார். தற்போது அவர் இல்லாவிட்டாலும்
பலரது மிமிக்ரி மூலம் எப்போதும் வாழ்கிறார் நம்பியார்.
நன்றி. தின இதழ் நாளிதழ்.
என் அண்ணன் - ஒரு சிறப்பு பார்வை.
--------------------------------------------------------------
சிறிய தலைப்பு. பிரம்மாண்ட படைப்பு . வெளியான தேதி.21/05/1970
44 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.
வீனஸ் பிக்சர்சின் முதல் வண்ண படம்.
படத்தின் ஆரம்ப காட்சியில் , நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு பாடலுக்கு
புரட்சி நடிகரின் வீரம் செறிந்த நடிப்பு , உற்சாகமூட்டும் அங்க அசைவுகள்
அபாரம். அரங்கம் அப்போதே அதிர்ந்தது .
இனிமையான பாடல்கள்.கே.வி. மகாதேவன் இசைஅமைப்பு அருமை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் தங்கை விஜயநிர்மலாவிடம்
காட்டும் பாசம், பரிவு தன இயல்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்டார்.
நகைச்சுவை காட்சிகளில் சோ , கீதாஞ்சலியுடன் நடத்தும் சேட்டைகள் ,
கடி ஜோக்குகள், அப்பாவி மாப்பிள்ளை வேடம் கன கச்சிதமாகவும் ,
கல கலப்பாகவும் இருந்தது.
அசோகன் , நம்பியார் இரு வில்லன்களை மோதவிடும் காட்சிகள் புதுமை.
முத்துராமன்- விஜயநிர்மலா - கண்ணுக்கு தெரியாத இன்ப சுகம் - இதமான
காதல் காட்சிகள்
நீல நிறம் -வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்--புரட்சி நடிகர் இளமையாக
தோன்றும் தேனான காதல் பாடல்.
கடவுள் ஏன் கல்லானான் - உணர்சிகரமான தத்துவ பாடல்.
ஆயிரம் எண்ணம் கொண்ட மானிட ஜாதி - வயது வந்த இளைஞனை
போல் துள்ளி குதித்து ஆடும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா அவர்களின் நடன அசைவுகள் அபாரம்.
சலக்கு சலக்கு சிங்காரி - எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத
பாடல் காட்சி . மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் இந்த பாடலில் வேட்டி , தலையில் துண்டுடன் மிகவும் வித்தியாசமான முறையில்
தனது நடன திறமைகளை காண்பித்து ரசிகர்களை பரவசபடுத்தினார்
ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு - நடிகர் சோ, கீதாஞ்சலியுடன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆடல், பாடல், காட்சிகள்
நெஞ்சில் நிறைந்தவை.
சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ஜஸ்டினுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மோதும் காட்சிகள் படு சூப்பர்.
சேலம் அலங்காரில் இப்படத்திற்கு 60 அடி உயர கட் அவுட் வைத்தது
சிறப்பு அம்சம்.
சென்னையில் ஸ்ரீகிருஷ்ணாவில் 3-ம் நாள் ஞாயிறு காலை காட்சி முதன்
முதலாக பார்த்தேன். பின்பு மேகலாவிலும், மிட்லண்டிலும் பார்த்தேன்.
மிடலண்டில் 105 நாள். மற்றும், மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில்
100 நாள் ஓடியது. ஸ்ரீ கிருஷ்ணாவில் 86 நாள் ஓடியது.
மறுவெளியீடுகளில் சக்கை போடு போடுகின்றது.
ஆர். லோகநாதன்.