தெய்வநாயகி - கே ஆர் விஜயா
பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து" என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.
நியூடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.
அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"தெய்வநாயகி" என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.
"தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!" என்றார், ராதா.
அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.