இசைக் குயில் இளவயதில்.
http://i2.ytimg.com/vi/G5w-azmPMP0/0.jpghttp://www.radjesh.com/Lata%20Manges...es/img0016.jpg
Printable View
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 21)
\http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இது எப்படி இருக்கு?
நான் '16 வயதினிலே' பரட்டை ரஜினி இல்லைங்க. இளையராஜா தொடரில் அடுத்து வரும் பாடல் இடம் பெற்ற படத்தைத்தான் சொன்னேன். இதுவும் 1978 இல் வந்த படம். ஜெய்சங்கர் ஸ்ரீதேவியுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்த காலகட்டம் இது. படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன் என்ற பட்டு.
ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ஒய்.விஜயா, சரத்பாபு, மேஜர், தேங்காய், மூர்த்தி, ஹலம், மஞ்சுஷா, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தது. அசோகன், ஒய்.ஜி.மகேந்திரன் கௌரவ நடிகர்களாக நடித்திருந்தனர்.
http://2.bp.blogspot.com/-pHugnccRpw...25282%2529.jpg
'அனிதா இளம் மனைவி' என்று குமுதத்தில் வெளிவந்த தொடர் 'இது எப்படி இருக்கு' என்று சினிமாவாக வந்து வழக்கம் போல நாஸ்தியானது.
ஜேசுதாஸ், கோவை முரளி, சுசீலா, ஜானகி பின்னணி பாடியிருந்தனர். ஜூடோ ரத்னம், எம்.கே தர்மலிங்கம் இருவரும் இணைந்து சண்டைக் காட்சிகளை அமைத்திருந்தனர். திரைக்கதை, வசனம், பாடல்கள் பஞ்சு அருணாச்சலம். தயாரிப்பு விஜயா- மீனா.
மொத்தம் 4 பாடல்கள். ஒரு பாடல் மட்டுமே சூப்பர் ஹிட் வகையை சார்ந்த்தது
http://img7.bdbphotos.com/images/hug...x.jpg?djet1p5k
1. 'எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ'
அற்புதமான ராஜாவின் மனம் மயக்கும் பாடல். ஜேசுதாஸ் ஜானகி குரலில் தேன் மதுரமாய் ஒலித்தது. 'லாலா லாலா லா' என்று ஜானகி பாடலை ஆரம்பிக்கும் போதே இனிமை கொஞ்ச ஆரம்பித்து விடும். ஜெய்சங்கரும், ஸ்ரீதேவியும் பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் உல்லாசம் புரிந்திருக்க, பின்னணியில் ஒலிக்கும் பாடல். பாடலின் நடுவில் வரும் இளையராஜாவின் பிராண்ட் ஆன அந்த 'குகுகுக்கூ' குயில் கூவல் பேஷ். ரொம்ப நன்னா இருக்கும். மிக அழகாக கிடாரை கையாண்டிருப்பார் இளையராஜா. 'தேனாக' என்று ஜேசுதாஸ் முடித்தவுடன் 'லலலலலலா' என்று ஜானகி எடுப்பது அழகு. அதே போல 'வா' என்று ஜேசுதாஸ் முடித்தவுடம் 'ம்ம்ம்ம்' என்று ஜானகி தொடர்வது இனிமையோ இனிமை. பாடல் வரிகளை அற்புதமாக கொடுத்திருப்பார் பஞ்சு. ஜெய், ஸ்ரீதேவி ஜோடி ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பாடலின் இனிமை அதை நிகர் செய்து விடுகிறது. ஆனால் ஒளிப்பதிவு ஏனோதானோ. மகா மட்டம். காட்சிகள் தெளிவாக இல்லாமல் மழுங்கலாக தெரியும். ரொம்ப லோ பட்ஜெட். இந்தப் பாடல் ஜெய்சங்கருக்கா என்று வாய் பிளப்பவர்கள் இன்றும் உண்டு. அதுவும் ஸ்ரீதேவி ஜோடியா என்று வியந்து போவார்கள்.
எப்படியோ என்றுமே ரசிக்கக் கூடிய வகையில் இந்தக் குப்பைப் படத்தில் ஒரு கோமேதேகப் பாடல். பாடலால் படத்தின் பெயர் பலருக்குத் தெரிய வாய்ப்பு. ராஜா முத்திரை. ஹேட்ஸ் ஆஃப் இளையராஜா.
https://www.youtube.com/watch?v=dtv1...yer_detailpage
2. ஜானகி பாடும் ஒரு காபரே நடனப் பாடல் 'ஓ..மை லவ்' சுமாருக்கும் கீழே. கோபாலுக்குப் பிடித்த ஹலம் ஆடுவார். சுத்தமாக வெளியே பிரபலமாகாத பாடல் இது.
3. இது இல்லாமல் தேங்காய் எக்ஸ்ட்ரா குள்ளக் காமெடியன்களுடன் ஆடிப் பாடும்,
'கைரேகை பார்த்து
ஜோசியம் சொல்வேன் கேளுங்க
சொன்னது நடக்கும் பாருங்க'
பாடலை கோவை கோவை முரளி பாடியிருப்பார். இதுவும் சுமாரே.
4. ஒய்.விஜயா விரக்தியாக சுசீலா அம்மாவின் குரலில் பாடும் இன்னொரு பாடல்.
'தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியா'
ஓ.கே.ரகமே.
'இது எப்படி இருக்கு'? ன்னு இனிமே நீங்கதான் சொல்ல வேணும்.:)
http://upload.wikimedia.org/wikipedi...5%E0%AE%BF.jpg
'எங்கும் நிறைந்த இயற்கையில் ' lovely சாங்.
ஜேசுதாஸ் ,ஜானகி இணையில் வெளி வந்த மோகன பாடல் வாசு .
முதல் பாகத்தில் இந்த பாடலை லேசாக நினைவு கூர்ந்து இருப்போம்
சுஜாதாவின் 'அனிதா இளம் மனைவி' நாவலை படித்து விட்டு படம் பாருங்கள் கண்ணீர் ஆறாய் பெருகி வரும் .
ஒரு நாவலை இப்படி கூட படம் எடுக்க முடியுமா
வருவது
https://encrypted-tbn2.gstatic.com/i...w-oXJKST33EB-O அல்ல
இந்த
https://encrypted-tbn0.gstatic.com/i...u1S02bRhkK4bFP
வரும்
பணக்காரர் மேஜர்,இரண்டாவது மனைவி y விஜயா .முதல் தாரத்தின் மகள் ஸ்ரீதேவி .பணக்காரரின் காரியதரிசி சரத்பாபு. y விஜயா மீது ஆசைப்பட்டு சவுக்கடி பட்டு சாகும் கதாபாத்திரத்தில் எஸ் வீ ராமதாஸ் என்று நினைக்கிறன் . எல்லாவற்றிற்கும் மேல் வக்கீல் கணேஷ் மக்கள் கலைஞர் .
இது எப்படி இருக்கு - காயத்திரியில் கிடைத்த கொஞ்ச நஞ்ச சொற்ப லாபத்தை கணக்கு காண்பிக்க எடுத்த படம் போல் இருக்கும் :)
http://www.bookconnect.in/products/a...1;gallery1]/0/
வாசு , இளைய ராஜாவின் மதுர கானத்தை அருமையாக அலசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சற்றே விலகி " இது கட்டு கதை அல்ல "என்ற ஒரு பதிவை இங்கு இடுவதிற்கு மன்னிக்கவும் . சமீபத்தில் , இன்றைய தலைமுறையை சேர்ந்த ஒருவர் , பலர் மனம் புண்பட தலைவர் காமராஜரை பற்றி வேறு விதமாக சொன்னது ஒரு பெரிய விவாதத்திற்கு வந்துள்ளது . எப்படிப்பட்ட ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமெல்லாம் இருந்திருக்கோம் என்று நினைக்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது - அந்த நினைவலைகளில் பின்னணியில் உதயமான பதிவு இது
இது கட்டுக் கதையல்ல..... உண்மை !.இப்படிப்பட்ட மனிதர்களும் நிகழ்ச்சிகளும் தற்காலத்தில் அரிதாகி விட்டதால். இந்தத்
தலைப்பை கொடுக்கவேண்டி உள்ளது.
அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையாத் தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையாத் தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம் என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ்.
" யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் " என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். " நான்தான் ஐயா " என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. " உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் " என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ஐயா நீங்களும் வாங்க என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வர் அறையில் உள்ள சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். " நீங்கதான் மண்ணாங்கட்டியா." .என்கிறார். "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா " என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.
அவரை " வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் " என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு நான் தப்பு பண்ணிட்டேன் தெரியாம செய்திட்டேன் மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் " என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்கன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள் என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....
இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--
அதெல்லாம் ஒரு கனா காலாமாகிவிட்டது. இப்பொழுது மனிதாபிமானமோ இறக்கமோ உதவி செய்யும் குணமோ எதுவுமே இல்லாமல் போய்விட்டது.
எனக்கு என் குடும்பம் என்று குறுகிய வட்டமும் குறுகிய மனமும் தான் மிச்சம் ... காமராஜர் மாதிரியோ கக்கன் மாதிரியோ அதற்கு பின் மக்கள் திலகம் மாதிரியோ இனி யாரும் வரப்போவதுமில்லை வந்தாலும் அவர்களை நாம் அப்படியே இருக்க விடப்போவதுமில்லை ...
கர்ணன் என்ற ஒரு பாத்திரத்தை நாம் மறக்காத வரையில் - நட்பு என்ற ஒரு வார்த்தை நிரந்தரமாக தரணியில் இருக்கும் . செய்நன்றி என்ற ஒரு வார்த்தை ஜீவனுடன் என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் , கர்ணனை பற்றிய நினைவளைகள் நம்மிடம் இருக்கும் வரையில் !!
எப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் - எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவனிடம் !! - கொடுப்பதற்காக பிறந்தான் - பிறந்ததினால் இறந்தான் - ஆனால் இறந்தபின்னும் இன்றும் வாழ்கிறான் - அவனை பற்றிய புதைந்து கிடக்கும் சில உண்மைகளை இந்த பதிவில் பதிவிட விரும்பிகிறேன் - ஏற்கனவே NT திரியில் (பாகம் 12) இல் பதித்து இருந்தாலும் இன்னும் சில உண்மைகளுடன் சேர்த்து பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
கர்ணன் -சொல்லப்படாத சில உண்மைகள் :
கர்ணன் : ஒரு பரிதாபமான பிறவி - எல்லாம் இருந்தன அவனிடம் - அனைத்தும் பிடுங்கப்பட்டன விதியின் சதியால் - பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியை கண்டான் - அவனையே எடுத்துகொண்டதில் மகிழ்ச்சியை அடைந்தான் இந்திரன் - அவனின் வீரத்தை பெற்ற தாயே தானம் கேட்டாள் - தனது இரண்டு வரங்கள் மூலம் - பரசுராமர் அவன் அந்தணன் இல்லை என்று அவன் பாடுபட்டு கற்று கொண்ட பிரம்மாஸ்திரத்தை மறக்க வைத்தார் - என்றுமே புதையாத அவன் தேர் பூமியில் முதலாகவும் , கடைசி முறையாகவும் புதைந்தது - கண்ணன் சிரித்தான் - கர்ணன் அங்கே வாழ்ந்தான் .
கண்ணன் : கண்ணன் இல்லையேல் ஏது மகாபாரதம் ?- ஒவ்வொரு காரியத்தையும் கண கச்சிதமாக செய்தவன் - யாரை எங்கு வைப்பது என்பதை முழுதும் தெரிந்து கொண்டவன் - கர்ணனை கண்ணனாலும் அழிக்க முடியவில்லையே !! கர்ணனிடம் உயிர் யாசகம் பெற்று கொண்டபின் தானே அவனால் கர்ணனை அழிக்க முடிந்தது - யாருக்கும் கிடைக்காத விஷ்வ ரூப தரிசனம் கர்ணனுக்கு கிடைத்தது - பிறர் அந்த தரிசனத்திற்கு ஏங்கினர் - கர்ணனுக்கு மட்டும் தான் அவன் கேட்க்காமல் கிடைத்து
அர்ஜுனன் : நம் எல்லோருக்குள்ளும் , ஒரு அர்ஜுனன் இருக்கிறான் - நம் மீதோ , நம் திறமையின் மீதோ நமக்கே சந்தேகம் வரும் பொழுது , தன்னம்பிக்கை என்னும் காண்டீபத்தை நழுவ விடுகிறோம் - உள் மனம் கண்ணனாக இருந்து , சொல்பவர்கள் சொல்லட்டும் , உன் மீது நீ நம்பிக்கை வை , உன் உத்தரவு இல்லாமல் யாரும் உன்னை அவமானம் படுத்த முடியாது என்று சொல்லி நம்மை மீண்டும் ஒரு நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகின்றது - இங்கே நமது மனம் தான் கண்ணன் - அது சொல்வதுதான் பகவத் கீதை !
1. கர்ணனின் பெருமையை உயர்த்தும் ஒரு நிகழ்ச்சி
ஒரு அந்தணன் யாசகம் பெற வேண்டி கர்ணனிடம் சென்றான் - கர்ணன் அப்பொழுது உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் - பாதியில் உண்ணும் உணவை நிறுத்திவிட்டு தனது left hand மூலம் அவனுக்கு முத்துமாலைகள் சிலவற்றை அளித்தான் - இதை பார்த்த சிலர் கர்ணனிடம் அதை பற்றி கேட்டனர் - கர்ணன் சொன்ன பதில் அவர்களை சிந்திக்க வைத்தது - " நான் செய்தது தவறு தான் - ஆனால் நான் என் கைகளை கழுவிக்கொண்டபின் தர்மம் செய்திருந்தால் அந்த சமயம் எனது மனது சற்றே மாறி இருக்கலாம் - அல்லது அந்த அந்தணருக்கு போதிய முத்து மாலைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம் -எப்பொழுது தர்மம் செய்யவேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்பொழுதே செய்து விடவேண்டும் மனம் மாறிவிடுவதர்க்குள் "
2. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி :
அந்த காலத்தில் ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது - போர் முடிந்தபின் , அரசர்கள் அனைவரையும் அவர்களின் தேரோட்டிகள் தேரை விட்டு இறங்கி மூன்று முறை சுற்றி வந்து வணங்கி வழிபட வேண்டும் - அர்ஜுனனுக்கு ஒரே பெருமை - தன்னை சுற்றி வந்து வழிபடவேண்டியவர் கண்ணன் - இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் ? - அந்த பெருமை கொஞ்ச நேரத்தில் கர்வமாக உருவானது - தன்னை மீறி ஒருவரும் இல்லை - இறைவனே தன்னை சுற்றி வந்து வழி படபோகிறான் - தானே இனி மேலானவன் என்று - ஆவலுடன் காத்திருந்த அர்ஜுனனை , கோபாலனின் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகள் தட்டி எழுப்பின - இதுவரை கண்டிராத கோபம் - கேட்காத வார்த்தைகள் - அவமானத்தில் குறுகினான் அர்ஜுனன் - கண்ணன் சொன்னான் " அர்ஜுனா தேரை விட்டு இறங்கு உடனே - ஏன் , எதற்கு என்று கேள்விகள் எழுப்பாதே - சொன்னதை செய் !"
அர்ஜுனன் :" கண்ணா மற்ற தேரோட்டிகளை பார்த்துமா என்னை தேரை விட்டு இறங்க சொல்கிறாய் ? "
"ஆமாம் "- கண்ணனின் வார்த்தைகளில் வெப்பம் இன்னும் அதிகமாகின
அர்ஜுனன் வேண்டா வெறுப்பாக தேரை விட்டு குதித்தவுடன் , கண்ணன் அவன் கைகளை பிடித்துகொண்டு வேகமாக அந்த தேரை விட்டு வெகு தூரத்திற்கு அழைத்து சென்றான் - சென்ற சில நொடியில் RDX வைத்ததுபோல அந்த தேர் எரிந்து சாம்பலானது
அர்ஜுனனுக்கு ஒரே ஆச்சரியம் , வியப்பு , அதிர்ச்சி ----
கண்ணன் சொன்னான் " அர்ஜுனா , உன்னை சுற்றி நான் வந்து வணங்கவேண்டும் என்று விரும்பினாய் - தேரை விட்டு நான் கீழே குதித்திருந்தால் உன் கதி என்னவாகி இருக்கும் ? அந்த தேரில் தைத்த அம்புகள் பல - எல்லாமே சக்தி வாய்ந்தவை - துரோணர் , பிதாமகர் , முக்கியமாக கர்ணன் எய்த அம்புகளின் சக்தியை நான் தடுத்து நிறுத்தினேன் - என் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவைகள் உன்னை ஒன்றும் செய்யவில்லை - நான் தேரை விட்டு இறங்கியவுடன் , பசியுடன் இருந்த அந்த அம்புகள் உன் தேரை உணவாக்கி கொண்டன - நான் யாருடைய அம்புகளுக்கும் பின் வாங்கினதில்லை - ஆனால் கர்ணனின் அம்புகள் என் சக்தியையும் மீறியவைகள் - உன்னை அவைகளிடமிருந்து காப்பாற்றுவதிலேயே என் முழு கவனமும் இருந்தது
அர்ஜுனனின் கர்வம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது
3.கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி
கர்ணனின் கொடைத்தன்மையை பற்றி சில மன்னர்கள் சபையில் விவாதித்தனர் - ஒரு சிற்றரசர் சொன்னார் " கர்ணனின் தர்மம் செய்வதில் என்ன பெருமை உள்ளது - அவனுக்கு கிடைத்த அரசாட்சி ஒரு இரவல் தானே - இரவலாக கிடைத்த ஆட்சியில் தருமம் செய்வது ஒரு பெரிய விஷயமா ?
கர்ணன் காதுகளில் இந்த விஷயம் விழுந்தது - உடனே கர்ணன் அனைவரும் அறிய கூறினான் " இதனால் தவறுதலாக எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைத்திருந்தால் அதையும் கேட்டவருக்கு கொடுத்துவிடுகிறேன் " கண்ணன் இதை மனதில் வாங்கிகொண்டான் சமயம் பார்த்து இந்த யாசகத்தை கர்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ள கண்ணன் தவறவில்லை - அவனை ஏளனம் செய்தவர்கள் வாயடைத்து போயினர் - தனக்கே உரிய கவசத்தையும் , குண்டலங்களையும் இந்திரனுக்கு கர்ணன் தானமாக கொடுத்தபின் -----
4.கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி
உடன் பிறந்த கவசமும் , காதுகளில் ஜொலிக்கும் குண்டலங்களும் ஒருமுறை பேசிக்கொண்டனவாம் - நம்மால் தான் கர்ணனுக்கு பெருமை , அவன் தேஜஸாக இருப்பதிருக்கு நாம் தான் காரணம் என்று --- இந்திரன் யாசகம் பெற்றபின் கவச குண்டலங்கள் வெட்கத்தினால் தலை குனிந்தன - அடாடா என்ன பேசிவிட்டோம் , இவன் உடம்பில் இதுவரை இருந்ததால் தானே நமக்கு ஒரு பொலிவு இருந்தது , மற்றவர்களின் கவனமும் நம்மீது இருந்தது - இப்பொழுது கர்ணன் இன்னும் பொலிவுடன் இருக்கிறான் , நாம் தான் அடிப்பட்ட பாம்பாக இருக்கிறோம் "
5. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி
அர்ஜுனன் கண்ணனிடம் கோபத்துடன் கேட்டான் - "அப்படி என்ன இருக்கின்றது கர்ணனிடம் - எல்லோரும் புகழும்படியாக ?"
கண்ணன் ஒன்றும் பேசாமல் அர்ஜுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான் - அங்கே அர்ஜுனன் கண்டது ஒரு பெரிய வைரமலை - ஜொலிக்கும் வைரங்கள் எங்கும் சிதறி கிடந்தன - கண்ணன் . அர்ஜுனனிடம் " பார்த்தா - நீ இங்கிருக்கும் வைரங்கள் அனைத்தையும் யாருக்காகவாவது தானம் செய்யவேண்டும் - அதுவும் இன்றே, இப்பொழுதே செய்ய வேண்டும்" என்றான் .
அர்ஜுனன் தனக்கு எல்லோரையும் அழைத்துவந்து வேண்டும் அளவிற்கு வைரங்களை அள்ளி கொடுத்தான் - அந்த வைர மலை ஒரு இம்மி கூட குறையாமல் இருந்தது - சூரியன் மறையும் நேரம் நெருங்க , அர்ஜுனன் தனது இயலாமை உணர்ந்தான் .
கண்ணன் உடனே கர்ணனை அழைத்தான் - அதே விடுகதை ---- கர்ணன் , கண்ணை பார்த்து " பிரபோ அடியேனின் இந்த சிறிய அன்பளிப்பை தானமாக பெற்று கொள்ளவேண்டும் - இந்த வைர மலை இனி உங்களுடையது " சொன்ன வேகத்தில் சற்றும் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றான் ---
கண்ணன் " அர்ஜுனா ஒரு வினாடியில் அந்த மலை தானமாக சென்று விட்டது - இதுதான் கொடை - அந்த மலையிடம் அவனுக்கு ஒரு பிடிப்பும் இல்லை - இதுதான் உனக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசம் - அர்ஜுனன் ஊமையானான்
When Karna was on his death bed, Krishna came to test him. He disguised himself as a Brahmin saint , and asked Karna for some offering in the name of Dharma.Karna cited his debilitated condition and asked Krishna, "O Lord Brahmin, what can i offer you in his capitulated condition". Krishna teased him ,"I thought you were the greatest philanthropist on earth, are you not going to offer anything to this old brahmin?"
Karna thought for a while and then grabbed a stone from his macabre surroundings. He then thwarted the stone into his mouth and although his brutally beaten frame was cursing every movement he was afflicting upon himself, he kept doing that continuously. Meanwhile Krishna was surprised as well as awed by courage of this great warrior. After many strong blows, Karna was able to break two golden teeth he had, and offered them to the disguised Krishna.Krishna being extremely impressed by the valor of this great warrior , did not show any visible emotions. Instead he cursed Karna(to test him again) on how he was offering such saliva ridden teeth to such a pious brahmin. Karna deeply engraved by this statement, tried to crawl up to his bow and arrow. His bow was in tatters and the thread supporting it was nowhere to be seen. He cursed himself upon the defeat he faced to Arjuna in the earlier part of the day, and kept crawling to find an auxiliary thread to support his bow. Luckily he found one a few feet away from him. Every inch that he crawled made his wounds even more blood stained, and he was slowly losing his consciousness
But he kept crawling as the legend of Karna will not have an apt ending if this saint would not be satiated by him. Finally having reached the supporting thread he drew the thread in his bow. Meanwhile his hand continued to bleed profusely, and his nerves were on the verge of bursting up.He finally launched the final assault on his body and caressed the final arrow of his life into the ground. Subsequently, a stream of water came bursting out of the ground. He washed those saliva and blood stained teeth in this pristine stream of water and offered them to the disguised saint. Krishna embarrassed and visibly taken aback, gave up his disguised identity and came in his original form. Bowing to the great warrior he said, "Karna, if you want i can make you alive at this moment and make the world bow at your feet, Until you are there at the face of this earth , i am assured that Adhama shall never ever reign on this planet".Karna replied. "O Lord Krishna ,you are the creator and are omnipresent everywhere.Dont insult me by bowing in front of me. I have had enough of travails and hardships in my life, so much so that even the most ebullient luxuries are not able to lure me back into this life again. Let me die in peace and assure me that the legend of Karna may inspire generations to come. I beg forgiveness for all the wrongs that i have done unintentionally. Let the world turn into a righteous place, where the reign of Dharma shall ensure prosperity to everyone irrespective of their not caste and their not so noble beginnings. Krishna silently nodded in agreement and blessed the warrior prince
This incident took place on the seventeenth day of the war of Kurukshetra.
Arjuna had killed Karna's son Vrishasena in order to make Karna experience the pain that he himself had suffered when Abhimanyu was brutally executed. But Karna refused to grieve his son's death and continued to fight Arjuna to keep his word and fulfill Duryodhana's destiny.
Finally when Karna and Arjuna came face to face, a serpent called Naga Ashwasena secretly entered Karna's quiver. This serpent was the one whose mother was relentlessly burnt when Arjuna had set Khandava-prastha ablaze. Ashwasena was able to save himself because he was in his eggshell, near mother at that time. Destined to avenge his mother's death by killing Arjuna, he transformed himself into an arrow and waited his turn. Karna unknowingly released Naga Ashwasena at Arjuna. Realizing that this was no ordinary arrow, Lord Krishna, Arjuna's charioteer, sunk the wheel of the chariot in the ground by pressing his feet against its floor in order to save Arjuna's life. This made the Naga, who was speedily advancing like a thunderbolt, miss his target and hit Arjuna's crown instead, causing it to fall on the ground. Disheartened, Naga Ashwasena returned to Karna and asked him to fire him towards Arjuna once again, this time making a promise that he would definitely not miss his target. After hearing Ashwasena's words, this is what the mighty AngaRaj said to him:
"It is beneath my stature as a warrior to shoot the same arrow twice. Find some other way to avenge your family's death."
Saddened by Karna's words, Ashwasena tried to kill Arjuna on his own but failed miserably. Arjuna was able to finish him off in a single stroke.
Who knows what would have happened had Karna released Ashwasena for the second time. He even might have killed Arjuna or at least would have injured him. But he upheld his principles and did not use the presented opportunity. Such was the character of AngaRaj. He was the man of his words and the epitome of morality. He was the ultimate warrior.
NT கர்ணனாக வராமல் இருந்திருந்தால் - கர்ணனை பற்றிய தெரிந்த உண்மைகளும் நமக்கு தெரியாமலே போக ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் - எப்படி பட்ட ஒரு சிறந்த கதாபாத்திரம் , எப்படிப்பட்ட ஒரு அதிசிய மனிதரால் மீண்டும் உயிர் பெற்று பல தலைமுறைகளுக்கு இன்னும் பாடம் கற்பித்து கொண்டுருக்கின்றது
http://youtu.be/GxG9EzeAXi4
பொங்கும் பூம்புனல்
சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பொங்கி வருகிறது பூம்புனல்.
மெல்லிசை மன்னர் என்கின்ற ஈடு இணையற்ற இசைமேதையின் படைப்புக்களில் 80களில் வெளி வந்த பல இன்னும் மக்களிடம் சரியான முறையில் சென்றடையவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான படைப்புகளில் ஒன்றே இன்று இங்கே இடம் பெறுகிறது.
கேட்டவுடன் இந்தப் பாடலா எனத் தங்கள் அகம் மகிழப்போவது உண்மை.
பெயருக்கேற்றவாறு அத்திபூத்த மாதிரியான அபூர்வமான பாடல்.
அத்தி பூத்தது என்கின்ற தமிழ்ப்படத்தில் எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் குரல்களில்...
மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்...
http://www.youtube.com/watch?v=z_sHduXnbBg