http://s1.postimg.org/pi0ny7b1b/DSC00909.jpg
Printable View
விஜய் டிவி மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பகிர்வுக்கு நன்றி . மிகக் கச்சிதமான நிகழ்ச்சி . கலந்து கொண்டோரின் உணர்வுகள் , நெகிழ்ச்சிகள் சிறப்பாக பதிவாகியிருந்தது . மொத்ததில் சிறப்பான நிகழ்ச்சி
மக்கள் திலகம் எம்ஜிஆர் 98வது பிறந்தநாள் - இன்றைய தினம் தித்திக்கும் விருந்தாக மக்கள் திலகத்தின் 12 திரைப்படங்கள் பல ஊடகங்களில் ஒளிபரப்பாகி உள்ளது . மேலும் எல்லா ஊடகங்களிலும் மக்கள் திலகத்தின் சிறப்பு நிகழ்சிகள் , மக்கள் திலகத்தின் பாடல்கள் , சிறப்பு பேட்டிகள் ஒளி பரப்பாகியது .உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .
பொன்விழா ஆண்டை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா நினைவாக தற்போது சன் லைப் டிவி யில் ஒளி பரப்பபாகி வருகிறது .
இன்று தமிழகம் முழுக்க ரசிகர்கள் தங்கள் இதயக்கனி என்று வைத்துப் புகழும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 98வது பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் வாழும் காலத்திலேயே அவரது ரசிகர்களால் போற்றிப் புகழப்பட்டவர். எம்ஜிஆர் என்கிற அந்த மூன்று எழுத்து மந்திரத்துக்கு கட்டுப்படாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். கிராமங்களில் இன்றும் அவரது ரசிகர்கள் எம்ஜிஆரின் பிறந்தநாளை குழந்தைகளுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
சென்னையில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தமது போயஸ் கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, இசைக் குழு எழுதி, இசையமைத்த பாடல் அடங்கிய குறுந்தகடு சென்னையில் வெளியிட்டப்பட்டது. குறுந்தகட்டை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் ஜி ஆர் ரசிகர்கள் அவரது பாடல்களுக்கு உணர்ச்சிவயப்பட்டு ஆடவும் செய்தனர். எம் ஜி ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக பாடல் எழுத கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று பாடலை எழுதிய சந்திரசேகர் தெரிவித்தார்.
http://youtu.be/UtqKfd2ebt0
4000 பதிவுகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில்
முடித்து தொடர்ந்து பயணிக்கும் நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
200 பதிவுகளை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அற்புதமாக முடித்து தொடரும் நண்பர் திரு. சத்யா அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன்.
மாலைச்சுடர் -17/01/2015
http://i61.tinypic.com/55jktt.jpg