அன்பு குமரேசன் பிரபு சார்,
வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு முன் கூட்டியே எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். விரைவில் சந்திப்போம். நடிகர் திலகம் புகழ் பாடுவோம்.
வாசுதேவன்.
Printable View
அன்பு குமரேசன் பிரபு சார்,
வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு முன் கூட்டியே எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். விரைவில் சந்திப்போம். நடிகர் திலகம் புகழ் பாடுவோம்.
வாசுதேவன்.
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் அழைப்புக்கு நன்றி. கடலூர் மற்றும் நெய்வேலியில் இருந்தும் வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்காக பெங்களூர் வர முயற்சி செய்கிறோம்
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர்திலகம் அவர்களின் தினமணி பேட்டி படித்து முடிப்பதற்குள், நடிகர்திலகத்தை கலைச்செல்வி பேட்டி காணும் பொம்மை பதிவு. அதனைப் படித்து இன்று பதிலைப் பதிவு செய்யலாம் என்று திரியைப் பார்த்தால், நடிகர்திலகத்தை இளைய திலகம் பேட்டி காணும் பொம்மை பதிவு என அடுத்தடுத்து சுவையான கலக்கல் பதிவுகளை அளித்து, செப்டம்பர் மாதத்தை, சிறப்பு பேட்டிகள் மாதமாக ஆரம்பித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல.
பம்மலார் அவர்கள் 335 ஆம் பக்கத்தில் இடுகை செய்திருந்த, பொம்மை (1987) அக்டோபர் இதழில் வெளி வந்த 'சிவாஜி படங்களும் இலங்கை ரசிகர்களும்' என்ற தலைப்பில் அருமையான கட்டுரையை எழுதிய திரு.யாழ் சுதாகர் இவர் தான்.
http://upload.wikimedia.org/wikipedi...h_suthahar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நாளை 9-9-2011 பொன்விழா நிறைவு ஆண்டு. பாலும் பழமும் கொடுத்து வரவேற்கிறோம். வருக! வருக!
http://padamhosting.com/out.php/i100148_pp5.png
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகர்,
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். மூன்று பேட்டிகளிலும் மூன்று வெவ்வேறு கோணங்கள். கால வித்தியாசம் காரணமாக இருக்கலாம். இளைய திலகத்துக்கு அளித்த பேட்டியில், பிரபுவின் நடிப்பைப்பற்றி சொல்லியிருந்தது சிரிப்பை வரவழைத்தது. நடிகர்திலகம் சொன்னதும் உண்மைதான். பேட்டிகண்ட அந்த காலகட்டம் (1984) வரை, பிரபுவுக்கு ஓகோவென்று சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் வரவில்லை, 'சங்கிலி'யைத் தவிர.
ஆனால் அதே நடிகர்திலகம் பிற்காலத்தில் சின்னத்தம்பி போன்ற படங்கள் வந்தபோது பிரபுவைப்பாராட்டியதோடு, டைரக்டர் பி.வாசுவிடம், 'என்னைப்பற்றி பீம்பாய் (ஏ.பீம்சிங்) புரிந்து வச்சிக்கிட்டு படம் எடுத்த மாதிரி, நீயும் இவனை (பிரபுவை) நல்லா புரிஞ்சிக்கிட்டு படம் எடுக்கிறே. அதுக்காக ஒரே மாதிரி ரோல் கொடுத்து அவன் கேரியரை கெடுத்துடாதே' என்று சொல்லியிருக்கிறார். (வாசுவை பீம்சிங்குடன் ஒப்பிட்டது சற்று நெருடல்தான்).
கூடவே அந்த நாளைய 'பொம்மை' இதழ்களைப்பார்க்கும்போது மனம் அப்படியே பின்னோக்கிப் பயணிக்கிறது. பொம்மை மாத இதழ், திரைப்பட விரும்பிகள் பெரும்பாலோரால் பாதுகாத்து வைக்கப் பட்ட தரமான பத்திரிகை என்பதில் ஐயமில்லை.
டியர் பம்மலார்,
இங்கு சந்திரசேகர், சாரதா மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டது போல், தொடர்ச்சியாக அருமையான பொக்கிஷங்களை அள்ளி வழங்கி அனைவரையும் திக்கு முக்காட வைக்கிறீர்கள்.
டியர் வாசுதேவன் சார்,
பம்மலாரும் தாங்களும் படைக்கும் விருந்தில் உண்பதற்கு மேலும் இடம் வேண்டும்... இரண்டு மனம் வேண்டும் என தலைவர் கேட்பது போல் வேண்டும்...
குறிப்பாக
ஸ்கூல் மாஸ்டர் காணொளி.... சிம்ப்ளி சூப்பர்....
அன்புடன்
இயக்குநர் திரிலோக்சந்தர், வசனகர்த்தா பால முருகன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட். சுகுமாரி, மற்றும் சித்ராலயா கோபு... இவர்கள் இந்த ஆண்டு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசிற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட கலைஞர்கள். இவர்கள் 01.10.2011 அன்று நடைபெற உள்ள விழாவில் கௌரவிக்கப் பட உள்ளனர். அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். விழா அழைப்பிதழின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு -
முகப்பு
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0A.jpg
பக்கம் 2
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0B.jpg
பக்கம் 3
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0C.jpg
பக்கம் 4
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0D.jpg
அன்புடன்
திரு குமரேசன் சார்,
யார் என்ன சொன்னாலும் பெங்களுரை பொறுத்தவரை கட் அவுட்களுக்கு மாலை அணிவிப்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது நமது மாற்று முகாமினரே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் ,மற்றவர்களை ஒதுக்கிதள்ளுங்கள்.ரிலீஸ் தேதிக்கு முன் வரும் ஞாயிறு அன்று தினத்தந்தி, தினகரன் மற்றும் தினசுடர் நாளிதழ்களில் கண்டிப்பாக வெளியீட்டு விளம்பரம் வரவேண்டும் என்று விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ,அப்போதுதான் ரசிகர்கள் அனைவரும் தயாராவதற்கு வசதியாக இருக்கும். ஞாயிறு மாலை கண்டிப்பாக சந்திப்போம்.
திரு வாசுதேவன் சார்,
தாங்களும் சென்னையில்தான் வசிப்பீர்கள் என்று நினைத்து கொண்டு சொல்லிவிட்டேன், மன்னிக்கவும்.தமிழகத்தின் அனைத்து ஊர்களிலுமிருந்து ரசிகர்கள் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
பெங்களூரு எங்களூரு என்று சிவாஜி ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு நடிகர் திலகத்தின் மேல் தங்கள் அபிமானத்தை எந்தெந்த வழிகளில் நிரூபிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த மன நிறைவைத் தருகிறது. வசந்த மாளிகை பெங்களூருவை வசந்த வாசமாக மாற்றும் என்பது திண்ணம்.
ஹரீஷ் கார்த்திக் குமரேஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் மகிழ்வூற்றுக்கள்...
அன்புடன்