MAKKAL THILAGAM MGR TEMPLE AT TIRUNNINDAVOOR - MOOLASTHANAM
http://i48.tinypic.com/5v91v.jpg
Printable View
MAKKAL THILAGAM MGR TEMPLE AT TIRUNNINDAVOOR - MOOLASTHANAM
http://i48.tinypic.com/5v91v.jpg
http://i49.tinypic.com/11rgmqd.jpg
MAKKAL THILAGAM MGR FAN FROM SALEM--HIS OWN VECHILE
வெற்றி மீது வெற்றி வந்து ..
http://i46.tinypic.com/bgzmfc.jpg
pic taken at vellore - TEL -OPENING FUNCTION -1985
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
Dear ramamoorthi
nice pics and postings . Really a great stills and olivilakku posters .
Thanks a lot .
21-12-2012
chennai
PILOT.......
BRODWAY...
MAHALAKSHMI .....
KRISHNAVENI
http://i45.tinypic.com/25uje4p.jpg
UN OFFICIAL INFORMATION .
MAKKAL THILAGAM MGR- CUT OUT AT VELLORE NEAR COLLECTOR'S OFFICE
http://i45.tinypic.com/slmzid.jpg
courtesy- kalapriya.
makkal thilagam movies and camera man analysis in the net.
காந்திமதிநாதனுக்கு ரெண்டு பட்டப் பேர். ஒன்று கண்சிமிட்டி, அடிக்கடி கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருப்பான்.இன்னொன்று ஒலிபெருக்கி காந்தி. அப்படி யொரு சத்தம் குரலில். அதுவும் சண்டையென்று வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.அவனுக்கும் ’பர்மா ஸ்டோர்’ஜவுளிக்கடை ஆண்டியப்ப அண்ணாச்சி மகன் உலகநாதனுக்கும், யார் குரலுக்கு ‘சவுண்டு’ ஜாஸ்தி என்று போட்டி வந்து விட்டால், காதைப் பொத்திக் கொண்டு விட டியதுதான். இந்த விஷயத்தில் நான் உலகநாதன் கட்சி.அதனாலேயே காந்திக்கும் எனக்கும் இரண்டாம் வகுப்பில் ஆரம்பித்த சண்டை நீண்டு கொண்டே போயிற்று.கொஞ்சம் சொந்தக்காரன் வேறு.
1964-பெப்ரவரியில் வந்த காதலிக்க நேரமில்லை படத்தின் வர்ணம் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டிருக்கையில், ஆகஸ்ட்டில் வந்த புதிய பறவை படம் பிரமாதமாக ஓடியது.சிவாஜிக்கு மூன்றாவது முழு நீளக் கலர்ப்படம். ஆகப் பெரிய பொருமலுடன் பார்த்தோம் வாத்தியார் ரசிகர்கள் எல்லாம். ’CHASE A CROOKED SHADOW’- ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் ஆறுதல் பட்டுக் கொண்டாலும். படமும் கலரும் பாட்டும் சிவாஜியின் நடிப்பும், எப்படா ’படகோட்டி’ படம் வரும் என்று எதிர்பார்க்க வைத்திருந்தது. எம்.ஜி.ஆருக்கு அதுதான் இரண்டாவது கலர்ப்படம். இத்தனைக்கும் தமிழின் முதல்க் கலர்ப்படமான அலிபாபாவில் அவர்தான் நடித்திருந்தார்.நாடோடிமன்னன் பின்பகுதி கலரில் வந்தது.இரண்டுமே கேவா கலர். ஜெமினி கணேசனுக்குக் கூட (தமிழின் ‘முதல் டெக்னிக் கலர்’ படம் என) ’கொஞ்சும் சலங்கை’, இரண்டாவது கலர்ப்படமாக படமாக 1962-ல் வந்து விட்டது.1964 தீபாவளிக்கு படகோட்டி வெளிவந்தது. திருநெல்வேலியில் முதல் முறையாக ‘ஒரு நாளில் ‘5’ காட்சிகள். முதல்க் காட்சி காலை 8 மணிக்கு.ரிஸர்வேஷன் டிக்கெட்டிற்கே அடிபிடியாகக் கிடந்தது. நான் 1.66 ரூபா டிக்கெட் வாங்கி வைத்திருந்தேன். ஒரு மனிப்பர்சில் வைத்து அதை டிராயர்ப் பையில் போட்டுக் கொண்டேதான் எங்கும் போவேன்.அவ்வப்போது ‘இருக்கிறதா’ என எடுத்துப் பார்த்துக் கொள்வேன்.ரொம்ப நம்பகமான’ சேக்காளிகளிடம் மட்டும் காண்பிப்பேன்.
நாடோடிமன்னன் இரட்டை வேடக் காட்சிகளே ரொம்ப தத்ரூபமாக இருப்பதாகச் சொல்வார்கள்.காந்தியும் அதை ஒத்துக் கொண்டான்.கண்ணைச் சிமிட்டிக் கொண்டே படங்களை நல்லாப் பாத்துருக்கானே மூதேவி என்று தோன்றியது. சொல்லவில்லை. நாடோடி மன்னனுக்கு ஜி.கே.. ராமு கேமிரா.. அதன் விளம்பரங்களிலெல்லாம் ஜி.கே ராமு பெயர் தவறாமல் இருக்கும்.
நாடோடிமன்னன் படத்தின் கலர்க் காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய W.R. சுப்பாராவை எம்.ஜி.ஆர் கேட்டாராம்.அவர்தான் அலிபாபா மற்றும் கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு. அவர் மறுத்து விட்டாராம். எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் பரவாயில்லை ராமுவே கலரிலும் எடுக்கட்டும் என்று ஜி.கே.ராமுவை, அவர் தயங்கிய போதும், பம்பாய் அனுப்பி கலர் நுணுக்கங்களைக் கற்று வரச் செய்தாராம்.கட்டபொம்மனுக்கு ஒளிப்பதிவு உதவியாளர்கள் வி.ராம மூர்த்தி மற்றும் கர்ணன். கர்ணன் அதிலிருந்துதான் கட்ட பொம்மன் மீசை வைத்துக் கொண்டார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்த எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மணி அண்ணனும் தன் குருநாதரைப் போலவே கட்ட பொம்மன் மீசையுடன் சென்னையிலிருந்து வந்தார்.
படகோட்டிக்கு ஒளிப்பதிவு பி.எல்.ராய்.. டைரக்*ஷன் டி.பிரகாஷ்ராவ், நாங்கள் வின்செண்ட் ஒளீப்பதிவாக இருக்க்க் கூடாதா என்று ஏங்கினோம். பிரகாஷ்ராவ், வின்செண்ட், ஸ்ரீதர் காம்பினேஷனில் பல படங்கள் வந்தன அதனால் அப்படி நினைத்தோம்.ரசிக ஆசையின் ’பலனாக’, எங்க வீட்டுப் பிள்ளைக்கு, வின்செண்ட்- சுந்தரம் ஒளிப்பதிவு. வின்செண்டின் உதவியாளராக இருந்த பி.என்.சுந்தரம் தெய்வத்தாய் போன்ற பி.மாதவன் படங்களுக்கு( பி. மாதவன்.பி.ஏ, எஸ்.ஏ.அசோகன்.பி.ஏ, கே.பாலசந்தர். பி.எஸ்சி என்று போட்டுக்கொள்வது அப்போது, ’ஏயப்பா பி.ஏ’ என்று புருவந்தூக்க வைக்கிற விஷயம்.)தனியே ஒளிப்பதிவு செய்து விட்டதால், ’எ.வீ. பிள்ளை’க்கு ஒளிப்பதிவு:வின்செண்ட்-சுந்தரம் என்று டைட்டில் போட்டார்கள்.அற்புதமான ஒளிப்பதிவு.ஏவி.எம்மின்முதல் தமிழ்க் கலர்ப்படமான பக்த பிரகலாதாவுக்கும் வின்செண்ட் சுந்தரம்தான் ஒளிப்பதிவு.அப்புறம் பிரிந்து விட்டார்கள்.
இன்னொரு நிபுணர் எம்.ஏ ரஹ்மான்.அவர் பெரும்பாலும் டி ஆர். ராமண்ணா படங்களுக்கு ஒளீப்பதிவு செய்வார்.அவர் லைட்டிங்கையும் பிரமாதமாகச் சொல்லுவார்கள்.
, “உள்ளம் ரெண்டும் ஒன்று...” சனிக்கிரக வளையத்தில்-புதுமைப்பித்தன். இதிலெல்லாம் கில்லாடி. ’நான்’, ’பறக்கும்பாவை’, ’மூன்றெழுத்து’ படங்களில் அவர் காமிரா ‘ப்ரைட்டாக இருக்கும்.ராஜாதேசிங்கு படத்தில் போர்க்களக் காட்சிகளும்,இரண்டு எம்.ஜி.ஆர் வாள்ச் சண்டை போடும் காட்சியும் பெரிதும் பேசப்பட்டவை.லைட் அண்ட் ஷேட் காட்சியிலும் அவர் புகுந்து விளையாடுவார். பெரிய இடத்துப் பெண் பட்த்தில் அவனுக்கென்ன தூங்கி விட்டான்..பாடலும் பறக்கும்பாவை படத்தில்,” யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாடலும்,அற்புதமானவை.
பழைய படங்களில் காமிராமேனுக்கு சவால்கள் அதிகம் என்பார்கள்.ஜூம் லென்ஸெல்லாம் இல்லாத காலத்திலேயே ‘பொன்முடி’ படத்தில் அருமையான ஜூம் காட்சி வரும். காமிரா ஜே.ஜி.விஜயம் என்று பழைய காமிராமேன். ஜெனோவா, கலையரசி, ஆனந்த ஜோதி. அன்னையின் ஆணை போன்றவைகளின் ஒளிப்பதிவு இவர்தான்.கலையரசி தமிழில் ஒன் அண்ட் ஒன்லி சயின்ஸ் ஃபிக்*ஷன். (ஷங்கரை மறந்துவிடுங்கள்) அதில் பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் அழகாய் இருக்கும்.படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வெளிவந்தது. நன்றாய் ஓடவில்லை. கதை வசனம் நடோடிமன்னன் (வசனம்:கண்ணதாசன் -ரவீந்தர்) புகழ் ரவீந்தர் என்பவர் எழுதியது.உண்மையில் இவர் ஒரு இஸ்லாமியர் என்று ஞாபகம்.எம்.ஜி.ஆர் புதிதாகக் கட்சி ஆரம்பித்த சமயத்தில், சென்னை போன போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முயன்றோம். கோவை செழியன் ஆஃபீசில் இருப்பதாகச் சொன்னார்கள்.அங்கே இல்லை. ரவீந்தர் உட்கார்ந்து வசனம் எழுதிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்த மணி என்பவரை மீண்டும் தற்செயலாக அங்கு சந்தித்தோம்.அவர்தான் சொன்னார் “தம்பி , இது யார் தெரியுமா,இவர்தான் ரவீந்தர்’ என்றார். அவரிடம் பேசவில்லை அவர் மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தார்.எம்.ஜிஆர் இவர் கதை வசனம் எழுத “இணைந்த கரங்கள்” என்று ஒரு படம் எடுப்பதாக ‘பிரம்மாண்டமான விளம்பரங்கள் வந்தது.பெரிய வேடிக்கை என்னவென்றால் ரவீந்தர் வசனம் எழுதிக் கொண்டிருந்த கோவை செழியன் படம், “ உழைக்கும்கரங்கள்” அதற்கு வசனம் ’நாஞ்சில் மனோகரன்” என்று படத்தில் போடுவார்கள்.முதலிலிருந்தே அப்படித்தான் விளம்பரங்களும் செய்தியும் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம். வி.ராமமூர்த்தி காவல்காரன் படத்திற்குப்பின் எம்.ஜி.ஆருடன் மறுபடி சேர்ந்து கொண்டார்.வி.ராமமூர்த்தி பிரம்மாண்டமான காட்சிகளைப் பிழையில்லாமல் எடுப்பார் என்பார்கள்.அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் சிவாஜியின் கர்ணன் எல்லாம் இவர் கை வண்ணங்கள்.எம்.ஜி ஆர் ரொம்ப நம்பக் கூடியவர் இவர் என்று சொன்னார்
எம்.ஜி.ஆர் நம்பக் கூடிய இன்னொரு கேமிரா மேன், ஏ.சண்முகம் என்று ஒருவர்.சண்டைக் காட்சிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எடுக்கக் கூடியவராம் இவர்.சிலம்புச் சண்டையென்றால், காமிரா வேறுயாராக இருந்தாலும், இவரையும் வைத்துக் கொள்ளுவாராம், எம்.ஜி.ஆர். ”அரசகட்டளை, தாலி பாக்கியம் ,அன்னமிட்ட கை,இதய வீணை என்று பல படங்கள் இவர் பண்ணியதுதான். அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்களில் இவர் பங்கு கணிசமானது. சில படங்களில் டைட்டில் கார்டில் நன்றி: ஒளிப்பதிவாளர் ஏ.சண்முகம் என்றும் போடுவார்கள்.