Page 3
http://i125.photobucket.com/albums/p...ps181f75bb.jpg
Printable View
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்
----------------------------------------------------------------------------------------------
http://i49.tinypic.com/u0u2t.jpg
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .
1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.
பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.
"HOME LAND" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.
1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.
சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :
1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்
எழுதிய நூல்கள் :
1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு
நாடக வடிவில் எழுதிய கதைகள் :
1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
திரைக்கதைகள்
1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி
அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -
ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.
நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.
விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.
காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.
அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.
தனது தம்பி மார்களை ஆசிரியராக கொண்ட பின் வரும் பத்திரிகைகளிலும் கதை கட்டுரைகள் எழுதி அவர்களை உற்சாகபடுத்தினார்.
1. சமநீதி : மக்கள் திலகம் எம் ஜி ஆர் (பதிப்பாசிரியர்), சொர்ணம் (ஆசிரியர்)
2.. மன்றம் : நாவலர் நெடுஞ்செழியன்
3. நம் நாடு : கலைஞர் கருணாநிதி
4. அறப்போர் : இராம. அரங்கண்ணல்
5. இன முழக்கம் : சிந்தனை சிற்பி சிற்றரசு
6. மாலை மணி : பி. எஸ் இளங்கோ
7. தென்னகம் : கே. ஏ. மதியழகன்
8. முரசொலி : மாறன்
9. தனியரசு : ஏ.வி.பி. ஆசைதம்பி (அதிகாரபூர்வமான தி. மு. க. நாளேடு)
10. திராவிடன் : என். வி. நடராஜன்
11. போர்வாள் : காஞ்சி மணிமொழியார்
தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.
இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்
அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,
2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.
3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..
4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.
5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.
6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.
7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்
8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.
================================================== ================================================== =================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் ரூப் சார்
சங்கே முழங்கு - நான் ஆணையிட்டால் பாடல் பதிவுகள் அருமை .
குறிப்பாக நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்
பாடலில் நடுவே மக்கள் திலகம் தனது நாடோடிமன்னன் படத்திற்கு பின் தயாரிக்கும் அடிமைப் பெண் படத்திற்கு மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரம் கொடுத்தது அந்த காலத்தில் புதுமையாக இருந்தது
நானே எழுதி நானே நடிக்கும் நாடகத்தில் நல்ல திருப்பம் என்று பாடும் நேரத்தில் வருகிறது அடிமைப்பெண் சீரியல் லைட்டுடன் காணும் விளம்பரம் இன்று பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது .
1966ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான "நான் ஆணையிட்டால்" திரைப்படத்தில் இடம் பெறமால் போன ஒரு பாடல் :
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே - இப்பாடலை பாடியவர்கள் : எம். எஸ் விஸ்வநாதன் - பி. சுசீலா. இந்த இனிமையான பாடல் மற்றும் அதன் தொடர்பான காட்சிகளும் காண இயலாதது துரதிருஷ்டமே.
மற்றொரு பாடலாகிய "பாட்டு வரும்" என்ற பாடலில்,
மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்
ஏந்திய கைகளில் இருப்பவள் நானே - இறைவனை நேரில் வரவழைத்தேனே
என்ற அருமையான வரிகள் வானொலியில் ஒலி பரப்பப்படும் போதும் கேட்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் உண்டு.
http://i49.tinypic.com/19b2vs.jpg
அன்பன் : S. SELVA KUMAR
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்