நாளை 05.10.2012 வெள்ளிக் கிழமை இரவு 10 மணி சென்னை சூரியன் பண்பலை வானொலியில் திரு ராம்குமார் கணேசன், இளைய திலகம் பிரபு கணேசன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
நாளை 05.10.2012 வெள்ளிக் கிழமை இரவு 10 மணி சென்னை சூரியன் பண்பலை வானொலியில் திரு ராம்குமார் கணேசன், இளைய திலகம் பிரபு கணேசன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
அக்டோபர் 7, ஞாயிறு அன்று நாகர்கோயிலில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழா விமர்சையாகக் கொண்டாடப் பட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக திண்டுக்கல் லியோனி அவர்கள் பங்கேற்கும் பட்டி மன்றம் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. விவரம் விரைவில்.
அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற இலக்கிய அணி மற்றும் சென்னை சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு ரத்த தான முகாம் அக்டோபர் 1, 2012 திங்கள் காலை சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன், சென்னை மாநகராட்சி உறுப்பினர் பத்மினி சுந்தரம், பிரார்த்தனா திரையரங்கு உரிமையாளர் ரங்கநாத், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் கே.வி.பி. பூமிநாதன், நடிகர் திலகத்தைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மருது மோகன், துஷ்யந்த் ராம்குமார் பங்கேற்றனர். முன்னதாக சென்னை மாகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள் வருகை புரிந்தார். விழாவினை நாஞ்சில் இன்பா அவர்கள் தொகுத்து வழங்க ரமேஷ் அவர்கள் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ரத்த தான முகாமை ராம்குமார் கணேசன் அவர்கள் துவக்கி வைத்தார். சிவாஜி ரசிகர்களும் பொது மக்களும் ஆர்வத்துடன் ரத்த தானத்தில் பங்கு பெற்றனர். விழாவின் ஒரு பகுதியாக சோனியா வாய்ஸ் பருவ இதழின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பிதழை ராம்குமார் அவர்கள் வெளியிட்டார். விழாவின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
சென்னை சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் ரமேஷ் அவர்கள்
http://i872.photobucket.com/albums/a...psb5c36654.jpg
திரு ராம்குமார் கணேசன் அவர்கள்
http://i872.photobucket.com/albums/a...psad724a15.jpg
பிரார்த்தனா திரையரங்க உரிமையாளர் ரங்கநாத் அவர்கள்
http://i872.photobucket.com/albums/a...ps08540fe3.jpg
சென்னை மாகராட்சி உறுப்பினர் பத்மினி சுந்தரம் அவர்கள்
http://i872.photobucket.com/albums/a...ps8b2dc360.jpg
திரு மருது மோகன் அவர்கள்
http://i872.photobucket.com/albums/a...ps80ffe48f.jpg
ரத்த தானம் செய்யும் சிவாஜி ரசிகர் திரு முத்துக் குமார் அவர்களை ராம்குமார் அவர்கள் பாராட்டுகிறார்
http://i872.photobucket.com/albums/a...psdc4c9c9d.jpg
மற்றொரு ரசிகர் ரத்த தானம் செய்கிறார்
http://i872.photobucket.com/albums/a...psd4b7d34c.jpg
ரத்த தான முகாமைப் பற்றிய தகவல் பேனர்
http://i872.photobucket.com/albums/a...psd60289e5.jpg
விழாவில் சோனியா வாய்ஸ் பருவ இதழின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பிதழை ராம்குமார் அவர்கள் வெளியிட்டார்.
http://i872.photobucket.com/albums/a...psf05a28df.jpg
மேலே உள்ள படத்தில் ராம்குமார் அவர்களுடன் சோனியா வாய்ஸ் இதழைக் கையில் பிடித்திருப்பவர் ஆசிரியர் நவாஸ் அவர்கள். அருகில் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் கே.வி.பி. பூமிநாதன்.
அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி. பூமிநாதன் அவர்கள் அன்னை இல்லத்திலுள்ள நடிகர் திலகத்தின் படத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...ps6a4d7e46.jpg
நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் பல்வேறு வகையான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. அவற்றில் சில நம் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/a...ps3d7a1aae.jpg
http://i872.photobucket.com/albums/a...ps308e60ab.jpg
மதுரை நகரில் முருக விலாஸ் திரு நாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்
http://i872.photobucket.com/albums/a...ps029bb88c.jpg
கோவை நகர ரசிகர் மன்றங்களின் போஸ்டர்கள்
http://i872.photobucket.com/albums/a...psb9fc1397.jpg
http://i872.photobucket.com/albums/a...psc0b1db9e.jpg
http://i872.photobucket.com/albums/a...ps7eecabc1.jpg
http://i872.photobucket.com/albums/a...ps3dbde4bc.jpg
இன்றைய ஹிந்து நாளிதழில் சிவாஜி பிரபு அறக்கட்டளை விழாவைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரை
LINK THE PAGE IN THE HINDUQuote:
A celebration made memorable
MALATHI RANGARAJAN
http://www.thehindu.com/multimedia/d...A_1227488g.jpg
Can a vote of thanks be the most gripping and poignant part of a birth anniversary celebration? Probably, only actor Prabhu could have pulled it off! The occasion was the 84 birth anniversary of Sivaji Ganesan, on October 1, at The Music Academy, Chennai. The function was marked by three succinct speeches including Ramkumar’s welcome address, and that of the chief guest, Governor of Tamil Nadu Dr. K. Rosaiah’s. “I may have not been a close friend of the great actor, but like all of you I love him,” the Governor said. “I’ve not gone to the cinemas for 40 years now. But I went to watch ‘Veerapandiya Katta Bomman’ four times,” he went on amidst applause.
The short AV highlighting the versatility of the actor, his body language, the various gaits that he had acted out to suit the roles he played, and his expressive eyes was a treat. Ganesan could make even his eyebrows (the ‘Samrat Asokan’ sequence from ‘Annaiyin Aanai’ exemplified it) convey emotions, and it was all there for the audience to watch, drink in and go into raptures. An audio byte from a recorded interview with the actor had been thoughtfully added. Relevantly, the scenes revealed the Sivaji Ganesan-awardees connect well. Whoever put it together deserves special mention.
“It was Lata Mangeshkar who gave us the idea of instituting an award in appa’s name,” said son Ramkumar. The recipients of the Dr. Sivaji Ganesan Memorial Award were director K. Balachander, thavil vidwan Valayapatti A. R. Subramaniam, actors K.V. Srinivasan and Kanchana and media person Dr. T.S. Narayanaswami. Sivaji Ganesan had touched the lives of each of the recipients in some way.
So when K.V. Srinivasan turned emotional as Prabhu dwelt on the association between the nonagenarian actor and the thespian, which dated back to their theatre days, the sentiment and the sensibility were only too evident. Rotary Club of Madras Boys Town Society was presented a sum of Rs.54000 and Chevalier Sivaji Ganesan Educational Trust, Rs.50000. High on goodwill it was an evening to savour.
The best part of Prabhu’s crisp conclusion was the warmth with which he spoke of each of the awardees. After an intro in English he turned towards the Governor saying, “Sorry Sir, I have to switch over to Tamil.” The from-the-heart talk was so engrossing that you quite forgot that the speaker’s brief must have been only a formal signing-off note! And he had the fans thronging the balcony eating out of his hand when he said that they are always part of the Sivaji family.
“Without you we are nobody. You were all close to appa’s heart,” he told them. The actor sure knew the pulse of the audience. Also, he didn’t forget to record the contribution of every person instrumental for the success of the evening.
The well-planned, neatly executed event organised by Sivaji Prabhu Charities Trust wasn’t merely purposeful -- the cordiality the evening radiated left an indelible impression on the attendees as a whole.
டியர் வினோத் சார்,
தங்களின் அன்பு உள்ளத்திற்கு என்றும் என் இதயங்கனிந்த நன்றி. மக்கள் திலகம் திரியில் தங்களுடைய உழைப்பு சாதாரணமானதல்லவே!
டியர் பார்த்தசாரதி சார்.
தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி! தங்களுடைய பாடல் ஆய்வுக் கட்டுரைக்காக காத்துக் கிடக்கிறேன்.
அன்பு நெஞ்சங்களுக்கு,
http://t1.gstatic.com/images?q=tbn:A...xyKORcW9eXLJJQ
முதலில் என் இருகரம் கூப்பிய நெஞ்சார்ந்த நன்றிகள். 2000 பதிவுகள் அடியேன் இடக் காரணமாய் இருந்த 'நான் வணங்கும் தெய்வம்' நடிகர் திலகத்திற்கும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களுக்கும், மற்றும் திரியில் என்பால் அன்பும், பாசமும், தோழமையும் கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை ஆனந்தக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு
2000-ஆவது சிறப்புப் பதிவு.
நடிகர் திலகத்தின் "துணை" (1-10-1982).31-ம் ஆண்டுத் துவக்கம்
ஒரு முழு ஆய்வுக் கட்டுரை
அன்பே துணை! அறிவே துணை! உயிரே துணை! உறவே துணை!
பண்பட்ட ஒரு மாமனாரின் புண்பட்ட கதை.
துணை. இந்த சொல்லுக்குத்தான் எவ்வளவு சிறப்பு! எத்துணை மதிப்பு! எப்படி நீரின்றி உலகு அமையாதோ அதே போல் துணைகளின்றி வாழ்க்கை அமையாது. துணை.. ஒரு முறை இந்தச் சொல்லை வாயார உச்சரித்துப் பாருங்கள். நூறு யானைகளின் பலம் ஒன்று சேர்ந்து கிடைப்பது போல ஒரு உணர்வு வருவது நிஜம்தானே! நம் தனிமையை தவிடு பொடியாக்கும் இந்த துணை என்ற சொல் நம்மைச் சுற்றி நமக்காக நாலு பேர் துணை இருக்கிறார்கள் என்ற அச்சம் தவிர்க்கும் உணர்வை அற்புதமாக உருவாக்குகிறதே! மனித உறவுகள், விலங்கினங்கள் ஏன் தாவரங்கள் கூட துணைகளின் துணையோடு தானே வாழ்கின்றன! துணைகள் இல்லாவிட்டால் துன்பமாகி விடாதா வாழ்க்கை! துணையென்று ஒன்றிருக்கையில் துன்பம் துணிவின்றி ஓடி விடும் அன்றோ! கடலுக்கு அலை துணை... நிலவுக்கு வானம் துணை... கொடிக்கு கொழு கொம்பு துணை... மலருக்கு வாசம் துணை... மனிதனுக்கு உறவுகள் துணை... கதியற்றோருக்கு கடவுள் துணை... இப்படி துணை.. துணை... துணையென்று ஒன்றுக்கொன்று ஆதரவாய் துணை நின்று ஆனந்த களிப்போடு வாழ்வதுதானே வாழ்க்கை. துணையே இல்லாது போனால்? கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை இல்லையா?
அப்படிப்பட்ட இந்த அருமையான சொல்லை தலைப்பாக வைத்து, நடிகர் திலகதைத் துணையாகக் கொண்டு, இயக்குனர் துரை அவர்கள் இயக்கி தன் 'பசி'யைத் தீர்த்துக் கொண்டு, நமக்கும் அருமையான விருந்தளித்ததுதான் பிரகாஷ் பிக்சர்ஸாரின் இந்தத் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரர் தசரதராமன் (B.A)
http://i1087.photobucket.com/albums/...atharaaman.jpg
தசரதராமன் (B.A) ஒரு இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர். நடுத்தர வயது. மனைவியை இழந்தவர். சப்-ரிஜிஸ்தரராக பணி புரிந்து கொண்டிருப்பவர். கல்யாண வயதில் ரகு என்று ஒரு மகன் அவருக்கு. வண்டலூரில் ஜாகை. பணி புரிவது வெஸ்ட்மாம்பலத்தில். கலகலப்பான பேர்வழி. "மனுஷனா பொறந்துட்டா சிரிச்சுகிட்டே இருக்கணும்... அழவே கூடாது"...என்ற கொள்கையைக் கொண்டவர். கடைப்பிடித்தும் வருபவர். இவர் இருக்கும் இடம் எப்போதும் 'கல கல'வென்றுதான் இருக்கும். அவரைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம் விரிந்து கிடக்கும். வண்டலூரில் இருந்து மின்சார ரயிலில் தினம் வேலைக்குப் பயணம். ரயில் பயண நேரங்களில் ஜோக்குகளும், சிரிப்பும், கும்மாளமுமாக அனைவரையும் சந்தோஷப் படுத்தி, தானும் சந்தோஷமடையும் ஒரு ஜாலியான நல்ல பேர்வழி.
ரகு
http://i1087.photobucket.com/albums/...%20-2/ragu.jpg
மகனின் மேல் மலையளவு பாசம். தான் கிழித்த கோட்டைத் தாண்டாத (ரகு) ராமன் தன் மகன் என்ற அசாத்திய நம்பிக்கை மகன் மேல்அவருக்கு. மகனுக்கு சமைத்துப் போடுவது முதல் துணிகள் அயர்ன் செய்து தருவது வரை அவரது வேலைதான். மகனுக்கும் அப்பா என்றால் கொள்ளைப் பிரியம். அன்பு நண்பன் கல்யாண புரோக்கர் V.K.R சரியான கம்பெனி. இப்படி ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை.
பையன் சரியான அசமஞ்சம். வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துப் பெண் ராதாவை அப்பாவுக்குத் தெரியாமல் பயந்து பயந்து காதலிக்கிறான். அவளோ இவனுக்கு நேர் எதிர். துணிச்சல்காரி. யாராய் இருந்தாலும் வெட்டு ஒண்ணு.. துண்டு ரெண்டு.. இதுதான் அவள் பாலிசி. நல்லவள் தான். ஆனால் பிடிவாதக்காரி. சுயகௌரவமும், தன்மானமும் ரொம்ப ஜாஸ்தி.
தன் மகன் ரகுவிற்குப் பெண் பார்க்கச் சொல்லி V.K.R யிடம் சொல்லி வைக்கிறார் தசரத ராமன். அதே சமயம் ரகு தான் ராதாவைக் காதலிப்பதை V.K.R யிடம் கூறி, அந்தப் பெண்ணையே தனக்கு முடித்து வைக்குமாறும் கூறுகிறான். தன் தந்தைக்கு தன் காதலைப் பற்றியும், காதலியைப் பற்றியும் சொல்லிவிடாமால் இருக்கச் சொல்லி V.K.R யிடம் கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ராதாவைப் பெண் பார்க்கத் தந்தையை அழைத்துச் செல்லுமாறும் கூறுகிறான். V.K.R ம் சம்மதிக்கிறார். நண்பனிடம் ரகுவின் காதலைப் பற்றி தெரியப்படுத்தாமலேயே அவரை பெண் பார்க்க அழைத்துசெல்கிறார்.
ராதா
http://i1087.photobucket.com/albums/...20-2/ratha.jpg
ஆபீஸ் முடிந்து வீடு திரும்பும் ராதாவிற்கு தன் காதலனின் அப்பாதான் தன்னைப் பெண் பார்க்க வருகிறார் என்று தெரியாது. தன் பெற்றோர்களிடம் அந்த சமயத்தில் திருமணம் 'என் இஷ்டப் படிதான் நடக்கும்' என்று ரகுவை மனதில் வைத்து மறுத்து எதிர்க்கிறாள் ராதா. ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக ஏனோ தானோவென வந்து தசரத ராமன் முன்னால் வந்து நிற்கிறாள். அவர் முன் மரியாதையே இல்லாமல் நடந்து கொள்கிறாள். தன்னை அவருக்குப் பிடித்து விடக் கூடாது என்றுதான் அவள் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறாள். தசரத ராமன் மரியாதையற்ற அவளின் செய்கைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'தப்பித்தோம்... பிழைத்தோம்' என்று நைசாக வெளியில் வந்து தனக்குப் பிடிக்காத அந்தப் பெண்ணைக் காட்டியதற்காக V.K.R யை ஒருவழி செய்து விடுகிறார். V.K.R மூலம் பெண் பார்க்க சென்ற போது நடந்த நிகழ்ச்சிகளை கேட்டறிந்து திருமணத்திற்கு இனியும் அப்பா சம்மதிக்க மாட்டார் என்று ஒரு முடிவெடுக்கிறான் ரகு.
ஒருநாள் தசரத ராமன் பணியில் இருக்கும் போது ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது. மகன் ரகு டவுன் ரிஜிஸ்தர் ஆபீசில் தன் மகன் ராதாவுடன் திருமணம் செய்து கொள்ள தயாராக வந்து நிற்கிறான் என்பதுதான் அது. அதுவரை சிரிப்பும், சந்தோஷமுமாய் போய்க் கொண்டிருந்த தசரதனின் வாழ்க்கை அந்த வினாடி முதல் சிக்கலாகி, சுக்கல் சுக்கலாகிப் போகிறது. தன் கௌரவம் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சட்டென உணர்ந்து திருமணம் நடக்கும் ரிஜிஸ்தர் ஆபீசிற்கு விரைகிறார். திருமணம் நடத்தி வைக்கும் ரிஜிஸ்தர் சாட்சி கையெழுத்து கேட்கும் சமயத்தில் கரெக்டாக ஆஜராகி தன் இஷ்டப்படி சிம்பிளாக தன் மகன் திருமணம் நடைபெறுவதாக எல்லோரிடமும் கூறி நம்பவைத்து, மகன் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார். சரி! தசரத ராமனின் துன்பத்தை கொஞ்ச நேரம் மறப்போம்.
வித்யா
http://i1087.photobucket.com/albums/...-2/saritha.jpg
இன்னொரு நடுத்தர குடும்பத்து நாயகி வித்யாவின் கதை. தன் தந்தைக்கு இரண்டாந்தாரமான விதவையான சித்தி, ஒரு பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய் கைக்குழந்தையுடன் ஒருவேளை சோற்றுக்கே ததிகினத்தோம் போடும் சொந்த அண்ணன், டிகிரி முடித்துவிட்டு டிகிரி காப்பிக்குக் கூட வழியில்லாத ஊர் சுற்றும் பொறுப்பற்ற தம்பி, வயது வந்த ஸ்கூல் படிக்கும் தங்கை, போதாக் குறைக்கு ஐந்தாறு வயதில் கடைக்குட்டி சிறுவன் இத்தனை பேரையும் தான் ஒருத்தி வேலைக்குப் போய் சுமைதாங்கியாய் சுமக்கும் 'இவளும் ஒரு தொடர்கதை' தான். ஏதோ ஓடிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் நல்லவன் போல் நுழைகிறான் ஒரு நயவஞ்சகன். குடும்பத்தினர் அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி நடித்து வித்யாவை திருமணமும் செய்து கொண்டு பின் கம்பி நீட்டி விடுகிறான் அந்தக் கயவன். இதில் கொடுமை என்னவென்றால் அந்தத் திருமணத்தை ரிஜிஸ்தர் ஆபீசில் நடத்தி வைத்தவரே நம் தசரத ராமன் தான். ரயில் பயணங்களின் போது வித்யாவும், தசரத ராமனும் ஏற்கனவே நண்பர்களாக அறிமுகம் ஆனவர்கள்தான். தசரதனுக்கு வித்யா மேலும், வித்யாவிற்கு தசரதன் மேலும் பரஸ்பரம் கள்ளமற்ற அன்பும், மதிப்பும், மரியாதையும் உண்டு. தான் உணர்ச்சி வசப்படும் நிலைகளின் போது தசரத ராமன் கால் கை வலிப்பு வந்து துடிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சில தருணங்களில் வித்யா தான் அவரை காப்பாற்றி அரவணைத்திருக்கிறாள். வித்யாவின் வாழ்க்கை சூன்யமாகிப் போனதற்கு தானும் ஒரு காரணம் என்று கூனிக் குறுகிப் போகிறார் தசரத ராமன். சரியாக விசாரிக்காமல் வித்யாவிற்கு ஒரு கயவனை கல்யாணம் செய்து வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு. தம்பிக்கு வேலை கிடைத்தவுடன் வித்யாவின் குடும்பம் அவளை நிராதராவாய் தவிக்க விட்டுப் போன பின் அவள் மீது இன்னும் இரக்கம் அவருக்கு. அவர் ஒருவர் தான் அவளுக்கு ஆறுதல்.
சரி. குடும்பத்தில் தசரத ராமனின் நிலை என்ன? சமுதாயத்திற்கும், சுய கௌரவத்திற்கும் பயந்து வேண்டா வெறுப்பாக மகனையும் மருமகளையும் ஏற்றுக் கொள்கிறார். மகனுக்குத் தெரியாமல் மருமகளால் அலட்சியப் படுத்தப் பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். சாப்பாட்டை கூட சரியாகப் போடாமல் சங்கடப் படுத்துகிறாள் சண்டிராணி மருமகள். வாழ்க்கையில் பிடிப்பை இழந்து ஏதோ கடமைக்கு வந்தோம் போனோம் என ஜடம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார் தசரத ராமன். கால் கை வலிப்பு வந்து துடி துடிக்கும் மாமனாரை காப்பாற்றும் வித்யாவை மாமனாரோடு தொடர்பு படுத்திப் பேசி விஷத்தைப் (பா)பீய்ச்சுகிறாள் மருமகள் ராதா. வெளியே சொல்லாமல் மென்று விழுங்குகிறார் தசரதர். மகனிடம் கூட எதையும் சொல்வதில்லை அவன் கஷ்டப்பட்டு விடக் கூடாதே என்று. மருமகளின் அராஜகம் எல்லை மீற ஆரம்பிக்கிறது. மாமனாரை வீட்டை விட்டு வெளியேறும்படி அவரிடம் கடிதமே கொடுத்து விடுகிறாள். எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றென்னும் தசரத ராமன் மட்டும் என்ன விதிவிலக்கா விதியின் கைகளில் சிக்கிக் கொள்ளாதிருப்பதற்கு? அவரும் ஆசாபாசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்ட ஒரு சராசரி மனிதன்தானே! மனைவியும் இல்லை. மகனுக்கு எதுவும் தெரியாது. மருமகள் மனம் குலையச் செய்கிறாள். வீட்டை விட்டே வெளியேற்ற முடிவு செய்த பின் இனி இந்த வாழ்வு தேவையா? வீட்டை விட்டு வெளியேறுகிறார். அனைவருக்கும் ஆறுதல் கூறுபவர் இன்று ஆதரவின்றி, துணையின்றி பட்ட மரமாய் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாய் நிற்கிறார். இதற்குள் மகன் ரகுவிற்கு வித்யா மூலம் எல்லா உண்மைகளும் தெரிய வர கொதித்துப் போகிறான் அவன். அப்பாவைக் கொடுமைப் படுத்திய தன் மனைவியை மொத்தமாகச் சேர்த்து பந்தாடுகிறான். அப்பாவின் நிலைமையை புரிந்து கொள்ளாமால் போய்விட்டோமே என்று அப்பாவைத் தேடுகிறான். அப்பா எங்கே?!
தற்கொலை முடிவெடுத்து தண்டவாளங்களை நோக்கிச் செல்கிறார் தசரதன். அங்கேயும் தேவதை போல வந்து அவர் உயிரைக் காப்பாற்றி விடுகிறாள் வித்யா. பூவாய் இருந்தவள் புயலாய் ஒரு திடுக்' முடிவெடுக்கிறாள். நேராக தசரத ராமனை ரிஜிஸ்தர் ஆபிசிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் துணையாய், அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். ஆதரவற்ற நிலையில் தசரத ராமனுக்கு தாரமாகி அவர் வாழ்க்கையை மீண்டும் தரமாக்க முனைகிறாள். அதில் கொஞ்சமும் சுயநலமில்லை. அவள் எண்ணம் முழுதும் தசரத ராமனின் நல்வாழ்வைப் பற்றிதான். அனைத்தையும் பேசாமல் கவனித்தபடியே மெளனமாக நிற்கிறார் தசரதன். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா?!!...
அனைவரும் விஷயமறிந்து அங்கே வந்து விடுகின்றனர். மகனும் அங்கே வந்து விடுகிறான். மருமகளும் மனம் திருந்தி வருகிறாள். வித்யாவின் முடிவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறான் ரகு. தன் அப்பாவிற்கு ஒரு நல்ல துணை வித்யா என்று ஆனந்தப்படுகிறான். தன்னுடைய திருமணத்திற்கு தன் தந்தையின் சாட்சிக் கையெழுத்து. தன் தந்தைக்கு நடக்கப் போகும் திருமணத்திற்கு தனயனான தன்னுடைய சாட்சிக் கையெழுத்து.
மகளாக ஏற்றுக் கொண்ட வித்யாவுடன் தசரத ராமர்.
http://i1087.photobucket.com/albums/..._012504394.jpg
ஆனால் தசரதன்?... இப்போதுதான் வாய் திறக்கிறார். ஈடு இணையில்லா அன்பை தன் மீது பொழியும் வித்யாவின் முடிவை வித்யாவின் துணையை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி ரகுவைத் தவிர. ஆனால் தசரதன் தங்கமல்லவா! அதனால் தான் வித்யாவைத் துணையாக ஏற்றுக் கொள்கிறார்... வாழ்க்கைத் துணைவியாக அல்ல... வாழ்நாள் முழுதும் மகளாக... துணையாக.
அன்புடன்,
வாசுதேவன்.
தொடர்கிறது...
நடிகர் திலகத்தின் நயமான நடிப்பு முத்திரைகள்.
கண்ணியமான 'தசரத ராம'ராக இதய தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/...hasarathar.jpg
தசரத ராமனாக நம் தவப்புதல்வர். நடிகர் திலகத்தின் நடிப்பை சற்று மிகை நடிப்பு என்று கூறுபவர்களின் மென்னியைப் பிடித்து நொறுக்கும் நடிப்பு. ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு ஈடாக அமைதியான நடிப்பையும் அள்ளி வழங்க முடியும் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்த நிகரற்ற திலகம். இரும்புத்திரை, அறிவாளி, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, முதல் மரியாதை, தேவர் மகன் என்று அவரின் இயல்பு நடிப்புப் பட்டியல் காவியங்கள் மேலும் நீளும். அந்தப் பட்டியலில் வெகு ஈசியாக நுழைவது 'தசரத ராமன்' ராஜ்ஜியம் நடத்தும் 'துணை'.
சப்-ரிஜிஸ்தரராக நடிகர் திலகம். கனஜோராக கச்சிதமாக சப்-ரிஜிஸ்தரர் பாத்திரத்தில் பொருந்திவிடுகிறார். (இவர் பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பாத்திரம்தான் இவருக்குள் பொருந்துகிறது) ஒயிட் பேன்ட், ஒயிட் ஷர்ட், கருப்பு கோட், ஒரு கையில் லஞ்ச் பாக்ஸ் கூடை, மறு கையில் மடக்கிப் பிடித்த குடை, சௌத்ரியை ஞாபகப்படுத்தும் நரைத்த கிருதா ஒப்பனை. கையெடுத்து கும்பிடத் தோன்றும் பாந்தமான தோற்றம். கேரக்டர் என்றால் அப்படி ஒரு கேரக்டர். சும்மா நச்'சென்று.
எலெக்ட்ரிக் ட்ரெயினில் கலக்கல் கலாட்டா
http://i1087.photobucket.com/albums/..._000961070.jpg
எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும் போது சிறுசுகளிடம் சும்மா ஜோக் மழை பொழியும் கலகல கலாட்டா...
("சாந்தி தியேட்டரில் என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
ஆனந்த் தியேட்டர்ல என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
காஸினோவில என்னம்மா படம் நடக்குது?
தெரியாது சார்...
மூணு தியேட்டரிலும் 'தெரியாது'ன்ற படமா நடக்குது?!)
ரயிலில் பயணிக்கையில் எல்லோருக்கும் கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் கடலை சாப்பிடும் நேரத்தில் சில கடலைகளை எடுத்து கோட் பாக்கெட்டுக்குள் போட, சரிதா அதைக் கவனித்துவிட்டு காரணம் கேட்க, "கடலை சாப்பிட்டு முடிக்கிற நேரத்துல ஒரு சொத்தக் கடலை வந்துரும்... அதுக்கப்புறம் சும்மாக் கிடந்த வாய் என்னவோ மாதிரி ஆயிடும்...அதனாலதான் முன்ஜாக்கிரதையா நாலு கடலையை எடுத்து பாக்கெட்டுல போட்டுக்குவேன்" என்ற புத்திசாலித்தனமான எல்லோருக்கிருக்கும் முன்ஜாக்கிரத்தை உணர்வு.
மகன் மேல் பெருமிதம்... தன் சொல் தட்ட மாட்டான் என்ற அபார தன்னம்பிக்கை... ராதாவை பெண் பார்க்க V.K.R. தன்னை அழைத்துச் சென்றவுடன் ராதா அவமானப்படுத்துவதைப் வெளிக்காட்டிக் கொள்ளாமல் (ஜாலியாகப்!) பொறுத்துக் கொண்டு, கல்யாணத்திற்கு சம்மதிப்பது போலத் தலையாட்டிவிட்டு ராதாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து V.K.R.ஐ விட்டு விளாசியதும், V.K.R., 'அப்புறம் ஏன்டா அந்தப் பொண்ணுகிட்ட காசு கொடுத்துட்டு வந்தே?" என்றவுடன் "நீ கொட்டிகிட்டயே டிபன்... அதுக்குதான்டா பரதேசி", என்று பட்டை கிளப்பும் பாங்கு...
மகன் தனக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கேட்டு பதைபதைத்து ஓடிவந்து தாங்க மாட்டாமல், "அப்பா வர்றதுக்குள்ள என்னப்பா அவசரம்?... பஸ் புடிச்சி வர வேண்டாமா?" என்று தன்மானத்திற்கு கேடு வந்து விடாத வகையில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதிர்ச்சியை மறைத்து சிரித்தபடி நிலைமையை சமாளிக்கும் விதம்...
தண்டவாளத்தில் கால்கை வலிப்புடன்
http://i1087.photobucket.com/albums/...atharaaman.jpg
தனக்குத் தெரியாமல் தன் மகன் தானே திருமணத்தை நடத்திக் கொள்ள முற்பட்டுவிட்டானே என அதிர்வுற்று துன்பம் தாங்க மாட்டாமல் கைகால்கள் துவள, வலிப்பு வந்து துடித்துத் துவளும் அவலம் (ஆஹா! இந்த ஒரு காட்சி போதும் மகனே!),
சரிதாவின் வாழ்க்கையை சக பயணிகள் கேலியும் கிண்டலுமாகப் பேசும்போது அதைப் பொறுமையைக் கேட்டு விட்டு, "எனக்குக் கோபம் வந்து நீங்கள் பார்த்ததில்லையே? என்று அமைதியாக முறைத்துவிட்டு சண்டமாருதமாய் அவர்களிடம் எகிறோ எகிறு எகிறு என்று எகிறும் கட்டம்... (கட்டம் போட வைக்கும் கட்டம்)
தன் சம்பந்தி அம்மாள் வீட்டுக்கு எதேச்சையாக வந்தவுடன் வரவேற்பை பலமாக அளித்து, மருமகள் மேல் உள்ள வருத்தங்களை வருடலாக மருமகளுக்குத் தெரியாமல், சம்பந்தியிடம் நயமாக, நாசூக்காக இருபொருள்பட குறைகளைக் கூறும் பாணி...
(சம்பந்தி அம்மாள் : ராதா முழுகாம இருக்காளா என்ன?
இவர் : முழுகலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிகிட்டுதான் இருக்கா...)
மகனின் திருமணத்திற்குப் பின் 'தேமே' என்று பிடிப்பில்லாமல் விட்டேற்றியாக வீட்டுக்கு வருவதும், ரூமிற்கு அடைந்து கொள்வதுமாய் மனைவியை இழந்த கணவனின் பரிதாப நிலைமைகளை வெளிப்படுத்தும் வெளிப்பாடு...
widower problem பற்றி நடிகர் திலகம்
http://i1087.photobucket.com/albums/...werproblem.jpg
ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு டயர்டாக திரும்பியவுடன் மருமகள் கடுப்புடன் காபி தம்ளரை டொக்'கென்று மேசை மீது மேலும் கீழுமாக சிந்துமாறு வைத்து விட்டுச் செல்ல, அதை வெறித்துப் பார்த்தபடியே, "அம்பத்தஞ்சி நயே பைசே இந்த காப்பியோட விலை... பேசாம ஹோட்டல்லியே சாப்பிட்டுருக்கலாம்... கூட பத்து பைசா கொடுத்தா கூடப் பொறந்த சகோதரன் மாதிரி அன்போட கொடுத்திருப்பான் ஹோட்டல் சப்ளையர்" என்று தனக்குத் தானே விரக்தியுடன் புலம்பித் தீர்ப்பது...
தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மருமகள் ஒருகட்டத்தில் தன்னை தைரியமாக எதிர்கொண்டு விளாசித்தள்ளி வெளுத்துவிட, அதை அப்படியே சின்னக் குழந்தை போல கைகட்டிகொண்டு மூக்குக்கண்ணாடியைக் கீழே இறக்கியவாறு கண்கள் மேல்நோக்க மருமகளைப் பார்த்து எதுவும் பேசமுடியாமல் வாய்பொத்தி மௌனியாய் அமர்ந்து accept செய்து கொள்ளும் அழகு...
வீட்டு வாசலில் இரு சிறுவர்கள் விளையாடும்போது அடித்துக் கொள்ள, இவர் என்ன நடந்தது என விசாரிக்க, அதில் ஒரு பையன், "பாருங்க அங்கிள்! இந்த ரகு என் தலையிலே மண்ண அள்ளிப் போட்டுட்டான் "என்று புகார் கூறியவுடன் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று புத்திமதி சொல்லிவிட்டு, "ரகுன்னாலே தலையிலே மண்ணதான் போடுவான் போலிருக்கு," என்று மகனை நினைத்தவாறு முணுமுணுத்துக் கொள்வது முத்தாய்ப்பு.
மருமகள் தன்னை வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று கடிதம் மூலம் கலங்க வைக்கையில் உண்மையாகவே நம் மருமகள் நம்மை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாளா என நம்பமுடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் கடிதத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து ஜீரணிக்க முடியாமல் தலையை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு, நிஜம் தான் என உணர்ந்து, பேசாமடந்தையாய் இனி அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்ச்சிப் பிழம்பாகாமல் உண்மையாய் உன்னதமாய் வெளிப்படுத்தும் விதம்...
என்று படம் முழுக்க யாருடைய துணையுமின்றி தனி ஆவர்த்தனக் கச்சேரி செய்து ராஜாங்க நடிப்பு தர்பார் நடத்துகிறார் நடிப்புலகச் சக்கரவர்த்தி.
படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வலிப்பின் போது வலிப்பின் துடிப்பை அவர் நடிப்பால் வெளிப்படுத்தி நம்மைத் துடிக்க வைக்கிறார் என்றால் அதைவிட ஒருபடி மேலேபோய் வலிப்பின் கொடுமையை ஆ..ஊ.. என்று கூக்குரலிட்டு தன் குரலில் அதனை வெளிப்படுத்தும் போது நம்மை பதைபதைக்க வைத்து விடுவார்.(என்ன ஒரு பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஒரு முனகல்! கண்களை மூடிக்கொண்டு அவருடைய வலிப்பைப் பார்க்காமல் அவருடைய வலிப்பின் முனகல்களைக் கேட்டாலே போதும்...வலிப்பில் அவர் படும் தவிப்பை நம்மால் முழுமையாக உணர முடியும்.)
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சாவிக்கொத்து.
http://i1087.photobucket.com/albums/...umnadikkum.jpg
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு காட்சி.. .மகன் திருமணம் முடித்து மருமகளுடன் இல்லை இல்லை அவன் மனைவியுடன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சேரில் அமர்ந்து கொண்டு மேஜை மேல் வலது கையை தலையணையாய் வைத்து பரிதாபமாக கண்களை மூடியபடி அமர்ந்திருப்பார். (அப்போதுதான் வலிப்பு வந்து சரிதாவால் காப்பாற்றப்பட்டு அமர்ந்திருப்பார்). வி.கே.ஆர் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில்வந்து மணமக்களை நடிகர்திலகத்திடம் ஆசிர்வாதம் வாங்குமாறு சைகையால் பணிக்க, இருவரின் ஸ்பரிசமும் தன் கால்களில் பட்டவுடன் கண்களைத் திறக்காமலேயே கைகளில் உள்ள சாவிக்கொத்தை இறுகப் பிடித்தபடியே, சற்றுமுன் வந்த வலிப்பின் தொடர்ச்சியை மீண்டும் ஒரு சிறு வலிப்பாக ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மறக்காமல் தொடர்வார். சாவிக்கொத்தை பிடித்தும் பிடிக்க முடியாமலும் விட்டு விட்டு பிடித்து வலிப்பை அடக்கிக் கொள்வார். வலிப்பின் கொடுமையை சேர்த்து அவரது மனவலிகளின் கொடுமையையும் அந்த சாவிக்கொத்து நமக்கு உணர்த்திவிடும். (அந்த சாவிக்கொத்து 'ஆஸ்கார்' அவார்ட் நாமினேஷனுக்கு போட்டி போடக் கூடிய தகுதி படைத்தது)
(சாப்பாட்டு ராமனின் வலிப்பின் போது அவனுக்கு நமக்கு உதவும் எண்ணம் தோன்றுவதை விட," ராமா! எழுந்திரு! உன் சவாலை நிறைவேற்று... பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து தேவகியைக் கரம் பற்று" என்று எழுந்து நின்று கூக்குரலிடத் தோன்றும். தசரத ராமனின் வலிப்பின் போது," தலைவா! இதோ நான் உங்களுக்குத் துணையாக வருகிறேன்," என்று துடிதுடித்து அவரை ஓடிப்போய் நமக்குக் காப்பாற்றத் தோன்றும். இரு காவியங்களிலும் பெயர் ஒன்றுபட்டாலும் வலிப்பின் ஆரம்பங்களும், அதன் தொடர்ச்சித் துடிப்புகளும், முனகல்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத ஆச்சர்ய வியப்புகள்!).
வைரமோதிரத்தின் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டம்.
http://i1087.photobucket.com/albums/...ramethunai.jpg
பின் நார்மலாகி வி.கே.ஆரை அழைத்து, தன் மனைவியின் நகைகளைக் கொடுத்து தழுதழுத்த குரலில் குரல் ஒன்றும் பாதியுமாக உடைந்து வெளியே வர, தன் உள் வேதனையை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பின் உச்சங்களைத் தாண்டிப் பயணித்து சிறகடிப்பார். வைர மோதிரத்தை மட்டும் வி.கே.ஆரிடம் தராமல், "மரியாதைக் குறைவா ஏதாவது நடந்துச்சுன்னா... அப்படி ஒன்னும் நடக்காதுன்னு நெனைக்கிறேன்... நடந்துச்சுன்னா இந்த வைரத்தைப் பொடி பண்ணி காபியில் போட்டு குடிச்சிடுவேன்" என்று கதறி வெடிக்கும் போது நம் கண்களைக் கடலாக்குவார். அது மட்டுமல்லாது வி.கே.ஆரிடம் தன் இறுதிச் செலவுக்கான தொகையைக் கொடுத்து," பத்தோ இருபதோ அதிகமா செலவானா பரவாயில்ல... என்னை கரண்ட்லியே வச்சு எரிச்சுடு... நான் செத்து சாம்பலாயிடுறேன்", என்று பொங்கி அழும்போது நம் நெஞ்சங்களைக் கோடாரியால் பிளந்து விடுவார். ("நீ முந்திண்டா ஒனக்கு...நான் முந்திண்டா எனக்கு" நினைவுக்கு வந்தாலும் அது வைடூர்யம். இது வைரம்.)
'துணை' கட்டுரைக்காக இந்தக் காவியத்தை பலமுறை பார்த்து refer செய்யும் போது இந்தக் குறிப்பிட்டக் காட்சியின் வசனத்தை நடிகர் திலகம் பேசுவதை கேட்டவுடன் நெஞ்சடைக்க என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். (அவர் வாக்கு பலித்துதான் போய்விட்டது. நடிகர் திலகத்தின் பூத உடலை மின்சார இடுகாட்டில் அல்லவா எரித்து திருநீறாக்கினார்கள் ! வருடா வருடம் அஞ்சலி செலுத்த ஒரு நினைவு சமாதி கூட நமக்கு இல்லாமல் போய் விட்டதே! அந்த ஞாபகம் அப்போது வந்துவிட்டது)
கொடி நாட்டும் வி.கே.ஆர்.
http://i1087.photobucket.com/albums/...ukkuoruvkr.jpg
பதிலுக்கு வி.கே.ஆரும் தன் பங்கிற்கு கொடி நாட்டுவார். அவரும் கதறிக்கொண்டே, "அப்படியெல்லாம் பேசாதடா.. இனிமே இப்படியெல்லாம் பேசின உன் பல்லை ஒடச்சிடுவேன் அயோக்கிய ராஸ்கல்! (உரிமையுடன்)! நீ வந்து இப்படியெல்லாம் பேசினா நான் பொறுத்துக்குவனாடா ?... என்னால தாங்க முடியுமா?...இப்ப நீயும் அழுது என்னையும் அழ வைக்கிறியே!," என்று பதிலுக்கு தலையில் அடித்துக் கொண்டு கதறும் போது அந்த இடத்தில் நாம் தசரத ராமனையோ அல்லது புரோக்கர் வி.கே.ஆரையோ காண முடியவில்லை. ஒரிஜினலான நடிகர் திலகத்தையும், அவருக்கு உயிருக்குயிரான V.K.ராமசாமியையும்தான் நேராகக் காண முடிகிறது. 'பார் மகளே பார்' காவியத்தில் சிவலிங்கமும், ராமுவும் சிவலிங்கத்தின் மகளின் நிச்சயதார்த்ததின் போது மோதிக் கொள்ளும் அந்த ஆவேச நடிப்புப் போட்டிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்த நெஞ்சை உருக்கும் நட்புப் போட்டிக் காட்சி.
மகன் பாசத்தில் மனம் மாறுமா?!...
http://i1087.photobucket.com/albums/...ninaiththu.jpg
ஆபிசிலிருந்து லேட்டாக இரவு விரக்தியுடன் வீடு திரும்பும்போது வீட்டில் தந்தை தன் மனைவியால் கொடுமைப்படுத்தப்படுவதை அறியாத மகன் செல்லக் கோபத்துடன் இவரைக் கடிந்து கொண்டு அன்பால் அரவணைத்து உபசரிக்கும் போது தன் மீது மகனுக்கிருக்கும் பாசம் எள்ளளவும் குறையவில்லை என்று விரக்தி நிலையில் இருந்து சற்றே விடுபட்டு "பந்தபாசம் எல்லாத்தையும் அறுத்து விட்டுட்டு எங்கேயாவது ஓட லான்னு பாக்குறேன்... இவன் என்ன புதுசா விலங்கு போடுறான்" என்று மகனின் பாசத்தை எண்ணியவாறே சொற்ப நேர சந்தோஷத்தை முகத்தில் பரவவிட்டு குழப்பத்தில் ஆழ்வது...
என காணும் காட்சிகளில் எல்லாம் கண்ணிலும், கருத்திலும் நிறைகிறார் நடிப்பின் துணைவர்.
விளையாட்டிலும் மருமகளுடன் போட்டி.
http://i1087.photobucket.com/albums/...ilumpoatti.jpg
மனைவியை இழந்த widower ஆக தன் மகன் ஒன்றே உலகமென வாழ்ந்து மருமகளால் உதாசீனப் படுத்தப் படும் தன்மானமுள்ள நடுத்தர வர்க்கத்து மாமனாரை அப்படியே அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நடிகர் திலகம். தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் மகிழ்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற உயரிய உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதனாகப் பரிமளிக்கும், பாமரனுக்கே உரிய ஆசாபாச விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுத்தப்படும் அருமையான பாத்திரம். கம்பீரத்துடனும், சிம்மக்குரல் கர்ஜனையுடன் பல பாத்திரங்களில் நடிப்பு வேந்தரைக் கண்டு களித்த நமக்கு, நார்மலாக நம்மில் ஒருவராக உலவும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க தசரத ராமரின் பாத்திரத்தை அனாயாசமாய், அசாதரணாமாய் வடித்துத் தருகிறார் நம் திரையுலக சிற்பி. இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பு வேறு சிக்கலானது. "நடிப்புக்காகக் கூட யார் காலிலும் நான் விழக்கூடாது' என்ற குருதட்சணைக்கருத்து நம்மவரிடமிருந்து வெளிப்படக் காரணமாயிருந்த அன்பு வெறி ரசிகர்களைக் கொண்ட அந்த சிங்கம் சீற்றத்தை விட்டு சிங்காரமாய்த் தனக்கு துணையில்லாமல் துணிவோடு தேர்ந்தெடுத்துக் கொண்ட தன்னிகரற்ற தாழ்ந்து போகக் கூடிய ரோல். கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அற்புதக் கேரக்டர்களை வாரி வழங்கி வாய்பிளக்க வைத்தாரென்றால் எண்பத்து இரண்டிலும் அந்த அளவிற்கு சிறப்பாக வழங்க முடியும் என்று நிரூபணம் செய்யும் ரோல். கத்தி மேல் நடப்பது போன்றது. ஒன்றிலே சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகி, ஈகோ மாயைகளையெல்லாம் அண்டவிடாமல் ஐந்திலேயே அசகாயசூர வில்லனாய் அதகளம் செய்து 'திரும்பிப் பார்'த்தவருக்கு எந்த வருடமானாலென்ன! எந்த வேடமானாலென்ன! ப்பூ.. தானே! இருந்தாலும் துணையைத் துணிவாகத் தேர்ந்தெடுத்தது துணிச்சல்தான். அடக்கி ஒடுங்கிப் போகவேண்டிய கேரக்டர்... ஆனால் நடிப்பில் அடங்குமா?! சும்மா ஆட்டி வைத்து விட்டதே!
மகன் மருமகளுடன் தசரதர்.
http://i1087.photobucket.com/albums/...ratharaman.jpg
மொத்தத்தில் சப் ரிஜிஸ்தரார், அடக்கமான மாமனார் என்ற புதிய கோணங்களில் காட்சியளித்து வாழ்ந்து, சராசரிவாழ் மனைவியை இழந்த, மாமனார்களின் மறுபக்க அவஸ்தை அவலங்களை தன் நயமான நடிப்பால் பதிவு செய்து, உள்ளக் குமுறல்களை உணர்ச்சிகள் கொப்பளிக்காமல் உணர்த்தி, அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்து, கொந்தளிக்க வேண்டிய சமயங்களில் அளவாகக் கொந்தளித்து, இயல்பான நடிப்பை இங்கிதமாக வழங்கி, ஈகோ இல்லாமல் இளம்தலைமுறை நடிகர்களுடன் இணை சேர்ந்து, நம் இதயங்களை மெல்லிய மயிலிறகால் மென்மையாக வருடுகிறார் நடிக மாமன்னர்.
அன்புடன்,
வாசுதேவன்.
தொடர்கிறது...