பொடி வைப்பதில் அவர் கில்லாடியாயிற்றே!
Printable View
பொடி வைப்பதில் அவர் கில்லாடியாயிற்றே!
டியர் வினோத் சார்,
தனிப்பிறவியில் ஆனந்தன் கிளிப்பிங்க்ஸ் நன்றாக இருந்தது. அப்படத்தில் 'நல்ல'நம்பியாரின் வில்லத்தம்பி.
உங்களுக்கு மிகவும் பிடித்த நீரும் நெருப்பும் படத்திலும் ஆனந்தன் நடித்திருந்தார்.
மோகன், நளினி, சத்யராஜ் நடித்த '24 மணிநேரம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் ஆனந்தன். (ஜெயில் அதிகாரியாக ஜெய்சங்கர்).
பாவம் விஜயபுரி வீரன். மதுரை வீரனிடம் 'நீரும் நெருப்பும்' படத்தில் வாழைத் தோட்டத்தில் வாள் சண்டை போட்டு ஆடைகள் கிழிந்து உள்ளாடைகள் தெரிந்து அசிங்கப்பட்டுப் போய் விடுவார். கழுதை தேய்ந்த கதைதான்.
கார்த்திக் சார்
நீரும் நெருப்பும் படத்தில் ஆனந்தன் சண்டை காட்சி சற்று ஏமாற்றம்தான் .
பெங்களூரில் ஒரு முறை அதிமுக கூட்டத்தில் ஆனதன் கலந்து கொண்ட நேரத்தில் [1974] அவரை
நேரில் சந்தித்து உரையாடியது நினைவிற்கு வந்தது .இனிமையான மனிதர் .
மறந்து விட்ட ஒரு நடிகரை நினைவு படுத்தி நமக்கெல்லாம் பழைய நினைவுகளை வழங்கிய வாசு
சார் - பாராட்ட வார்த்தைகள் இல்லை .
அனைத்துலக ஆடலழகி ஜோதிலட்சுமி மன்ற தலைவர் திரு கோபால் பதிவை எதிர்பார்க்கிறேன் .
MY CONTRIBUTION ......
http://youtu.be/RvH7gem64nE
http://s1.dmcdn.net/AjeIt/526x297-2C7.jpg
'வாசு சார்/
மலை நாட்டு மங்கை
(முதல் எழுத்து ரொம்பவும் கவனமாக எழுத வேண்டும் அது போல் முதல் வார்த்தையும் )
நான் மிகவும் ரசித்த மற்றும் மறக்க முடியாத படம் சார் .
முதலாவது காரணம் அதில் நடித்த விஜயஸ்ரீ
அந்த படத்தில் அவர் படம் முழுவதும் அரை ட்ரஸில் தான் வருவார்
அதை ரசிக்க (பிஞ்சில் பழுத்த இந்த அரை டவுசர் )
1973-74 கால கட்டத்தில் 8 ஆப்பு அல்லது 9 ஆப்பு (அப்ப எல்லாம் ஆப்பு தான் ) படித்து கொண்டு இருந்த நேரம் .
அந்த வருட quarterly half early exams இல் maths சுமார் மார்க் (முட்டை இல்லை) .
அதனால் வீட்டில் டியூஷன் சேர்த்து விட்டு இருந்தார்கள் .
மலை நாட்டு மங்கை நெல்லை பாபுலர் ரிலீஸ் அன்று சனி கிழமை நல்ல நினைவு
காலையில் டியூஷன் கிளாஸ் இல் மதேமடிக்ஸ் வீக்லி டெஸ்ட் வைத்தார்கள் .
அதில் 100 அவுட் ஒப் 100 வாங்கியதை எனது அம்மாவிடம் காண்பித்து 'கெட்டிகாரன்' என்று ஷொட்டு ஒன்று வாங்கி
45 பைசா (தரை டிக்கெட்)+5 பைசா (ஒரு அரிசி முறுக்கு 3 பைசா) 2 முறுக்கு வாங்கினால் 5 பைசா (ஆனால் அதில் ஒன்று தேன்குழல் முறுக்கு சவ சவ என்று நவுத்து இருக்கும் பல்லுக்கு ஹிதம்) ஆட்டையை போட்டு indha படம் பார்த்தேன் .
படம் பார்த்து விட்டு வந்து வீட்டுக்கு வந்தால் எனது அபபா போட்டு பின்னி எடுத்துட்டாரு.
டியூஷன் கிளாஸ் டெஸ்ட்ஐ காண்பித்து அது ஸ்கூல் டெஸ்ட் மார்க் என்று ஏமாற்றி விட்டு போனதற்காக
கொஞ்சம் சொந்த கதை தான் ஆனால் ஆனந்த(னின்) நினைவு
இங்கு பகிர்ந்ததில் கொஞ்சம் பாரம் இறங்கியது
கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்
[QUOTE=esvee;1146388]MY CONTRIBUTION ......
excellant contribution esvee sir
http://www.5eli.com/Lyrics/wp-conten...an-300x296.jpg
தலைவன் 1970
http://lh4.ggpht.com/-DSPFXM7FO3k/Ts...jpg?imgmax=800
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, வாலி அவர்கள்
நீராழி மண்டபத்தின், இசைதர்பாரில் வீற்றிருக்க
பீ.சுசீலா, பாலு அவர்களின் குரல்கள்
நாட்டிய நர்த்தனமிட....நம்மையெல்லாம்
அந்த இசைதர்பாருக்கே அழைத்து செல்கிறது
மக்கள் திலகம் , வாணிஸ்ரீ நடிப்பில்
இந்த தலைவன் படப்பாடல்.. கேளுங்கள்..
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கைத்தொடும்போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும் ம்ம்ம்ம்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ..ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பெண்ணிலவு அங்கே நானுவதைக்கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டாள் - அவள்
பூமுகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க - அதை
தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
போய் மறைந்த நிலவும் முகிழ்ந்திருக்க வந்து
வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துறைக்க
பேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெருவதிலே ஒன்றை இனைந்திருக்க
கீழ்திசையில் கதிர் தொன்றும் வரை அங்கு
பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தால்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
பாலாவின் மெலிய குரல் சுசீலாவின் இனிமையுடன்
http://www.youtube.com/watch?v=xF8mBsg4UkU
கிருஷ்ணா சார்!
தலைவன் படத்தின் நீராழி மண்டபத்தில் பாடலைத் தந்து தங்கள் ரசனையை மறுபடி நிருபித்திருக்கிறீர்கள். பாடல் வரிகளுக்கு நன்றி!
எனக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும். ஆனால் இதைவிட நம் ராட்சசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடிய
http://i1.ytimg.com/vi/fb4JGubfbRE/0.jpg
'ஓடையிலே ஒரு தாமரைப்பூ
பாடல்தான் ரொம்பப் பிடிக்கும்.
கிருஷ்ணா சார்,
தங்கள் 'மலைநாட்டு மங்கை' படம் முறுக்கு தின்று பார்த்த அனுபவம் நறுக். ரசித்தேன்.