that was a good one tamizh :lol:
no offence meant..your posts remind me of Luna Lovegood of Harry Potter series :lol:
Printable View
சில நேரங்களின் சில தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் போது கொஞ்சம் நிதானமானவர்கள் அவைகளை பரப்புவதற்கு முன் முன்னணி செய்தி நிறுவனங்களில் அந்த செய்தி வந்திருக்கிறதா என உறுதி செய்து கொண்டு அதை நம்புவது அல்லது பிறருக்கு தெரிவிப்பது வழக்கம் . நேற்று விகடன் முகநூல் பக்கத்தில் பெற்றால் தான் பிள்ளையா என்ற சமூக சேவை அமைப்புக்கு கமல்ஹாசன் 16 கோடி நிதியளித்தார் என அந்நிறுவனமே சான்றிதழ் அளித்ததாக குறிப்பிட்டு அந்த சானறிதழில் புகைப்படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது .
தன் கொள்கையை தளர்த்தி என்றாவது விளம்பரங்களில் நடிப்பதாக இருந்தால் அந்த பணத்தை பொதுக்காரியத்துக்கு அளிப்பேன் என முன்பு ஒரு முறை கமல் குறிப்பிட்டிருந்தார் . அதனடிப்படையிலும் விகடன் போன்ற முன்னனி நிறுவனம் வெளியிடும் செய்தி நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற வகையிலும் நானும் அதை நம்பினேன் ..இன்னொரு வாட்ஸப் குழுமத்தில் கூட அந்த செய்தியை பகிர்ந்தேன் ..ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த செய்தி விகடன் முகநூலிலிருந்து நீக்கப்பட்டபோது இதுவும் ஒரு போட்டோஷாப் வேலை என்பது புரிந்து விட்டது ..
கமலும் இணைந்து உருவாக்கிய பெற்றால் தான் பிள்ளையா அமைப்பின் நிர்வாகம் இது தவறான செய்தி , வெளியிடப்பட்டது போலியான சான்றிதழ் என உறுதி செய்தது . இவ்வாறெனில் கமலின் நலன் விரும்பிகள் இதை செய்திருக்க வாய்ப்பில்லை .. ஆர்வக்கோளாறில் கமல் ரசிகர்களே இதை செய்திருப்பார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருந்திருக்க முடியாது .
இந்நிலையில் இது உண்மை அல்ல என தெரிந்தவுடன் கமல் வெறுப்பாளர்கள் குஷியாகிவிட்டர்கள் ..என்னவோ கமலே தான் பணம் கொடுத்ததாக ஒரு பொய் செய்தியை விளம்பரப்படுத்தியது போலவும் , பார்த்தாயா அவர் லட்சணத்தை என்பது போல பொங்கி வழிகிறார்கள் .. நான் கமலை குற்றம் சொல்லவில்லையே , அவரது ரசிகர்களைத் தானே குற்றம் சொன்னேன் என அவர் விளக்கம் சொல்லலாம் .ஆனால் அவர் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறது .. மற்றவரை ஆர்வக்கோளாறு என சொல்லும் போது இவர்களும் ஆர்வக்கோளாறில் கமலை குறை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டதற்காக ஆர்வக்கோளாறில் பொங்குகிறார்கள் என்பதே உண்மை.
என்னைப் பொறுத்தவரை தன் கொள்கையை தளர்த்தி அவர் விளம்பரத்தில் நடித்ததில் அதில் வரும் தொகையில் ஒரு பகுதியை சமூக காரணத்துக்காக செலவழிப்பதாக சொன்னதை அவர் செய்வார் என்றே நம்புகிறேன் .. யாரோ ஒருவர் போலியாக வெளியிட்ட சான்றிதழுக்காக , அவர் எதுவுமே செய்யப்போவதில்லை .. காசுக்காகத் தான் நடித்தேன் என்ற உண்மையை சொல்லிட்டு போக வேண்டியது தானே என முந்திரைக்கொட்டைத் தனமாக பொங்குவதிலேயே இவர்களின் நோக்கம் தெரிகிறது .
ஆம் . எவனோ வெளியிட்ட அந்த சான்றிதழ் போலியானது தான் . அதை உறுதிப்படுத்தாமல் வெளியிட்ட விகடனை குறை சொல்வதை விட்டு கமலையும் அவர் எண்ணத்தையும் பற்றி தீர்ப்பு வழங்குவானேன் ? அது உண்மையில்லையென்றால் அவர் காசுக்காகத் தான் நடித்தார் என்றாகிவிடாது .. அவருக்கு கிடைத்த தொகை வேறாக இருக்கலாம் .. அதில் அவர் கொடுக்கப்போகும் தொகை வேறாக இருக்கலாம் ..அவர் கொடுக்கபோகும் அமைப்பு வேறாக இருக்கலாம் .. அதை அவரே சொல்லும் வரை பொறுமை இல்லாமல் ஏன் இவ்வளவு பொங்க வேண்டும் ..காரணம் தெரியும் ..சொல்லி என்னத்துக்கு ? :)))
Joe, the fake certificate was made by the logo designer who initially made PTP logo. Not by any kamal fans. http://www.lokas.in/images/portfolio/ptp.jpg
And then, a kamal fan contacted the PTP via phone to inform and also ask clarification. After that only PTP tweeted that the certificate was fake
Photoshop work? :shock:
actually, when the news about pothys ad came itself, a rumour came that kamal he going to donate 10C out of the 15C remuneration. And this rumour came in some print magazines too for past one week. Once a certificate came, மக்கள் பாஞ்சிட்டாங்க without verifying its credibility :(((((
Social media is being used for more of negative stuffs than good ones. Not a good sign. At least in india
It is better kamal himself to clarify whether he is really have a plan to donate and how much
Ulaganayagan Kamal Hassan Donates 50 Lacs to "Petraal thaan Pillaiya" Trusthttps://pbs.twimg.com/media/CQX7sVmUAAARN8O.jpg:large
Ulaganayagan Kamal Hassan Donates 25 Lacs to Adyar Cancer Institutehttps://encrypted-tbn1.gstatic.com/i...7v2PKRmcMuhp2_