-
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களே...
தங்களுடைய original ஆவணங்கள் அனைத்தும் முத்துக்கள்.
அனைவருக்கு இது பகிர்ந்துகொண்டு உண்மையான தகவல் அனைவருக்கும் தெரியவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்த இந்த விளம்பரங்கள்..வசூல் விளம்பரங்கள் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது !
தங்களது முயற்ச்சியில் ராஜ ராஜ சோழன் படத்தின் வசூல் விபரங்கள் எங்காவது இருப்பின் அதனையும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் !
பின் குறிப்பு :
நீதி திரைப்படத்தின் 28 நாட்கள் வசூல் ராஜா திரைப்படத்தின் வசூலை முறியடித்த விபரம் முதல் முறையாக இனைய தளத்தில் வந்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது ! காரணம் நான் சொல்லவேண்டியதில்லை ! அதுவரை வெளிவந்த படங்களில் வசூலில் நீதி அந்த நாட்களில் முதலில் நிற்கிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது !
மேலும் அவன் தான் மனிதன் திரைப்படம்கோவையில் அதுவரை வெளியான அனைத்து பட வசூலையும் முறியடித்து முன்னணியில் இருந்த விஷயமும் உங்களுடைய முயற்சியால் பரந்த மனப்பான்மையால் இந்த விளம்பரம் மூலம் இன்று வெட்டவெளிச்சமாகி உள்ளது
உங்களது சேவைக்கும் நடிகர் திலகம் புகழ் ஞாயமாக நேர்மையாக பரப்பும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தங்கள் அனைத்து ஆதார ஆவன பதிவுகளும் சிறந்ததாக உள்ளது..
தொடர்ந்து பகிருங்கள் ..மிக்க நன்றி !
Rks
-
-
திரு செந்தில்வேல் அவர்களே
ராஜ ராஜ சோழன் திரைப்படம் பற்றி பேசினாலே ...அது தோல்வி படம் என்றும் ...முக்கியமாக எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்றும் ஒரு குற்றசாட்டு ஒரு சாரர் எப்போதுமே கூறிக்கொண்டு இருப்பார்கள் .அது முழு சோற்றில் மறைத்த பூசணிக்காய் ...மிக மிக பொய்யான ஒரு புளுகு என்பதற்கு அறிகுறியாக அமைகிறது நீங்கள் பதிவு செய்த விளம்பரம் ...
http://i501.photobucket.com/albums/e...ps3qa11p9y.jpg
ஒரு திரைப்படம் ரெண்டாவது வாரத்திலயே Rs. 25,00,000 ( TWENTY FIVE LAKH RUPEES )வசூல் செய்துள்ளது என்றால் வசூல் ரீதியாக எவ்வளவு பெரிய ஒரு இமாலய வெற்றி என்பது தெள்ளம் தெளிவாக தெளிந்த நீரோடை போல தெரிகிறது.
மேலும் தமிழ் பட உலகிலயே இந்த அசுர வசூலின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.
செய்தித்தாளில் பதிவிடும் அளவிற்கு மின்சார வெட்டு இருந்திருக்கிறது என்றால் அது எந்தளவிற்கு இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு பயங்கர மின்சார வெட்டிலும் இப்படி ஒரு அசுர வசூல் நமது நடிகர் திலகம் நடித்த ராஜ ராஜ சோழன் திரைப்படம் செய்துள்ளது என்றால் மின்சார வெட்டு இல்லாமல் இருந்திருந்தால் அதனை விட பல மடங்கு வசூல் செய்திருக்கும் என்பதை தான் இந்த விளம்பரம் புரியவைக்கிறது !
இந்த ஒரு காரனத்திர்க்காகதான் ராஜ ராஜ சோழன் திரைப்படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர் என்பது இதில் இருந்து உளன்கை நெல்லிகநிபோல தெரிகிறது !
ராஜ ராஜ சோழன் திரைப்படம் மிக பெரிய வெற்றிப்படம் மட்டுமல்ல...
ஒரு அசுர வசூல் செய்த சரித்திர காவியம் என்பது
இதன் மூலம் டிசம்பர் 9 ஆம் தேதி 2015 ஆம் வருடம் நிரூபிக்கப்பட்டு, பொய் தகவல் பரப்பியவர்களுக்கு அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது !
மிக்க நன்றி திரு செந்தில்வேல் சார் !
RKS
-
திரு விக்ரம் பிரபு மற்றும் திரு பிரபு அவர்களுடைய பிரஸ் மீட் - நன்றி YOUTUBE
https://www.youtube.com/watch?v=FnRFf76Rt-E
-
முத்தையன் சார்,
இங்கே நடிகர் திலகம் திரியில் அனைவரும் சமம். அது போலவே அனைவரும் இங்கே வரவேற்கப்படுவார்கள். நண்பர் ஆர்கேஎஸ் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்தார்.அதில் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் நாகரீகமாக வெளிப்படுதியிருக்கலாம். அதை விடுத்து தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்தியிருப்பது மிகவும் தவறானது இனிமேலாவது இது போன்ற எழுத்துக்களை தவிர்க்கவும்.
அன்புடன்
-
ஆர்கேஎஸ்,
திரு முத்தையன் அம்மு அவர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டு விட்டதால் அதை குறித்து நீங்கள் எழுதிய பதிவையும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
மதுரை டவுன் ஹால் ரோட்டில் குறிப்பாக சென்ட்ரல் திரையரங்கில் ஏதேனும் சிவாஜி மன்ற மாநாடு நடைபெறுகிறதா அல்லது நடைபெறப் போகிறதா என்று அந்த தெரு வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து மலைத்து கேட்டுப் போகிறார்களாம். அரங்க வாசலின் இரு புறத்திலிருந்து ஆரம்பித்து உள்ளே திரையரங்க வளாகம் முழுக்க நடிகர் திலகத்தின் கட் அவுட்களும் பானர்களும் கிட்டத்தட்ட 40,50 வருமாம். நாளைதான் படம் ரிலீஸ். இன்றே இப்படி. வரும் நாட்கள் திருவிழா நாட்கள்தான்.
ராஜா என்றென்றும் ராஜாதானே!
தகவலுக்கு நன்றி vcs
அன்புடன்
-
மய்யம் இணைய தளத்தில் 9000 பதிவுகளோடு பங்களிப்பினைத் தரும் முத்தையன் அம்மு அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
-
The great poet Bharathi's Birth Anniversary
https://youtu.be/EDAIILa8VPw