-
டியர் ராகவேந்தர்,
நாளை 51-வது உதயதினத்தை சந்திக்க இருக்கும் 'டாக்டர் ரவி'யை வரவேற்கும் வண்ணம் இன்றைக்கே அளித்திருக்கும் விகடன் விளம்பரம், அனைத்து பாடல்களின் வீடியோ காட்சிகள், மற்றும் 'போனால் போகட்டும் போடா' பாடலின் ஷூட்டிங் ஸ்டில் என்று அமர்க்களமாகத் துவங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல.
பெரும்பாலோரால் கண்டுகொள்ளாமல் விடப்படும், எனக்குப்பிடித்த பாடலான 'இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா' பாடலையும் மறக்காமல் இணைத்தமைக்கு மிக்க நன்றி. அத்துடன் படத்துக்காக இயற்றப்பட்டு, இசையோடு பதிவு செய்யப்பட்டும் படத்தில் இடம்பெறாமல் போன 'தென்றல் வரும் சேதி வரும், திருமணம் பேசும் தூது வரும்' பாடலின் ஆடியோவையும் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
('பாலும் பழமும்' படம் சென்னையில் காஸினோவிலோ அல்லது சித்ராவிலோ வெளியாகியிருந்தால் இன்னொரு வெள்ளிவிழாப்படமாகியிருக்கும். சாந்தியில் வெளியானதால் 133 நாட்களில் 'பார்த்தால் பசிதீரும்' படத்துக்காக தூக்கப்பட்டது. இத்தகவல் 'நம்பியார்' ஆதிராம் கவனத்துக்காக).
-
டியர் சந்திரசேகரன் சார், ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா,
தாங்கள் வழங்கிய வளமான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
டியர் வாசுதேவன் சார்,
அண்ணல்-அபிநயம் "பாலும் பழமும்" நிழற்படம் சூப்பர் !
திரு.யாழ் சுதாகர் அவர்களின் நிழற்படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் ஜெயந்தி விழா அழைப்பிதழ் அருமை ! விழா சிறக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
பொன்விழாக் காவியமான "பாலும் பழமும்" பற்றிய பதிவுகள் பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சியைத் தந்தது !
பேராசிரியர் பாலா.பாலசந்திரன் அவர்களுக்கும், "The Hindu" நாளிதழுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4533a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : திராவிட நாடு : 3.9.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4531a-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 9.9.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4534a-1.jpg
'இப்பொழுது நடைபெறுகிறது' விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4535a-1.jpg
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]
காவிய விளம்பரம் : The Hindu : 14.10.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4536a-1.jpg
50வது நாள் : The Hindu : 28.10.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4537a-1.jpg
12வது வாரம் : The Hindu : 25.11.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4538a-1.jpg
100வது நாள் : The Hindu : 17.12.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4541a-1.jpg
குறிப்பு:
100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் மொத்தம் பத்து, அவையாவன:
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார்,
அசத்திட்டீங்க... பாலும் பழமும் படத்தை வேறு ஏதேனும் திரையரங்கில் திரையிட்டிருந்தால் வெள்ளி விழாக் கண்டிருக்கும். நாம் இப்படி சாந்தி திரையரங்கில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அகற்றப் பட்டு நம்மிடையே வருத்தம் ஏற்படுத்தியிருக்கையில் சில பிரகஸ்பதிகள் சாந்தி திரையரங்கை குறிப்பிட்டு விதண்டா வாதம் கேட்கும் போது மனதுக்கு உள்ளபடியே கஷ்டமாயுள்ளது. இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்களா என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது.
சகோதரி சாரதா,
தாங்கள் கோரியபடி தென்றல் வரும் பாடல் வரிகள் இதோ
ஓஹோ...ஒஹோஹோ...
ம்ம்.....ம்ம்....ஓஹோ ஒஹோஹோ
தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் மாலை வரும்
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்
சரணம் 1
கண்ணழகும் பெண்ணழகும்
முன்னழகும் பின்னழகும்
காதல் வார்த்தை பழகும் - அதைக்
கண்டிருக்கும் பெண்டிருக்கும்
வண்டிருக்கும் மங்கையர்க்கும்
உள்ளம் தானே மலரும்
எண்ணம் தொடரும்
இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம் திகழும்
--- தென்றல் வரும்
சரணம் 2
பட்டிருக்கும் பொன்னுடலைத்
தொட்டிருக்கும் பொட்டிருக்கும்
பந்தலில் கூட்டம் திரளும் - கோலம்
இட்டிருக்கும் மேடை தன்னில்
வி்ட்டிருக்கும் பெண் கழுத்தில்
மாப்பிள்ளை கைகள் தவழும்
மலர் குவியும், மனம் நிறையும்
அங்கு மங்கல கீதம் திகழும்
--- தென்றல் வரும்
-
டியர் ராகவேந்திரன் சார்,
As you earlier pointed out, just ignore the ignorant people.
தாங்கள் அளித்த அசத்தல் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
தங்களின் கூற்று முற்றிலும் உண்மை !
தங்கள் பதிவால் திரியில் தென்றல் தவழுகிறது !
அன்புடன்,
பம்மலார்.
-
பொன்னோணம்
அனைவருக்கும் திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...lar/KKD1-1.jpg
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
இதோ உங்களுக்கு மிகவும் பிடித்தமான தென்றல் வரும் பாடல். (திரு ராகவேந்திரன் சார் சார்பாக)
http://google.saregama.com/music/pag...y=INH100306230
அன்புடன்,
வாசுதேவன்.
-