Anandhan appeared as Gemini's servant in Soorakottai singakutti as well
Printable View
Anandhan appeared as Gemini's servant in Soorakottai singakutti as well
another Vijayalalitha telugu song from Charmain Chalamayya(chalam's own movie), music by Salilda
http://www.youtube.com/watch?v=CjFW0Lg9qkw
one more from Kannada too
http://www.youtube.com/watch?v=cruPmifgIC4
அனைவருக்கும் காலை வணக்கம் 10/7/14
ராஜேஷ் சார்
சலம் (ஊர்வசி சாரதாவின் கணவர் பின்னாட்களில் சாரதாவிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் ) விஜயலலிதா நடித்த பாடல் காட்சி சலில் சௌத்ரி இசை .அருமையான மெலடி . விஜயலலிதா எவ்வளுவு அழகு இந்த பாடல் காட்சியில் . முகத்தில் காட்டும் அந்த மலர்ச்சி மறக்க முடியாதது
மொழி தெரியாத பாடல் என்றாலும் இனிமையானது
நன்றி .
Bullemmaa Bullodu
சலம் விஜயநிர்மலா (நடிகர் கிருஷ்ணாவின் மனைவி),vijayalalitha நடித்து 1972 இல் வெளிவந்த மற்று ஒரு தெலுகு படம்
http://4.bp.blogspot.com/-s-KH1UoOTW...lodu-1972.jpgl
பாலா சுசீலா குரல்களில் சத்யம் இசையில் ஒரு நல்ல பாடல்
http://www.youtube.com/watch?v=LWkd6vdHYGc
இன்றைய ஸ்பெஷல் (26)
http://www.thehindu.com/multimedia/d...n_1222330e.jpg
படம்: மெட்ராஸ் டு பாண்டுச்சேரி
நடிகர்கள்: ரவிச்சந்திரன் (டைட்டிலில் B.S ரவிச்சந்திரன் என்று போடுவார்கள்), கல்பனா, நாகேஷ், ஏ.கருணாநிதி, 'பக்கோடா' காதர்
இசை: டி.கே.ராமமூர்த்தி
ஒளிப்பதிவு: விட்டல்ராவ்
தயாரிப்பு: விவிதபாரதி
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்
இயக்கம் மேற்பார்வை: ஏ.பீம்சிங்.
இன்றும் அதிகம் கேட்டறியாத ஒரு பாடல். அதிகம் என்ன.... முற்றிலுமே அறியப்படாத ஒரு பொக்கிஷப் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கிடைக்கும் இன்பத்தைவிட எனக்கு நம் மக்கள் மீது கோபம்தான் அதிகமாக வரும்.
இப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு எந்தெந்த குப்பைப் பாட்டுக்களையெல்லாம் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் இந்த ரசனை கெட்ட உலகத்தை நினைத்து (மன்னிக்கவும்) வருந்தாமல் என்ன செய்ய?
ஒரு இனிமையான பாடல் வரவேற்புப் பெறாமல் போனதின் எரிச்சலும் ஆத்திரமும் ஏற்பட்டதனால் வந்த கோபம்தான் இது.
சினிமாவில் சேர்ந்து கதாநாயகியாக வேண்டும் என்று இந்த நாகரீக யவதியின் கனவு, லட்சியம். எப்படியும் நடிகையாகி உலகப் புகழ் பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கை கொண்டு உற்சாகத்துடன் ஷவரில் குளித்தபடி சற்றே திமிருடன் கூட இப்பாடலைப் பாடுகிறாள் ஆங்கில வார்த்தைகள் கலந்து. அவளே இன்னொரு வடிவமாகி அவளையே பாராட்டுவது போன்ற ஆரம்பக் காட்சிகள்.
அவள் ரூம் முழுதும் புகழ் பெற்ற நடிகைகளின் புகைப்படங்கள். தனக்குத் தானே தன் இன்னொரு கற்பனை உருவத்தின் மூலம் தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்கிறாள். உலகம் தன்னை விரைவில் புகழப் போகிறது என்று சந்தேகமற கூறுகிறாள். தன் மேனியழகை தானே மெச்சிக் கொள்கிறாள்.
அழகாக நடிகை போல தன்னை அலங்கரித்துக் கொண்டு சைக்கிளில் பாடியபடி வலம் வருகிறாள். சந்தோஷ ரேகைகள் அவள் முகத்தில் பரவி ஓடுவதை காண முடிகிறது.
http://antrukandamugam.files.wordpre...dicherry-6.jpg
அழகான 'சிக்'கென்ற இன்னொரு 'கன்னடத்துப் பைங்கிளி' கல்பனா. ரொம்ப ஸ்லிம். அழகாகச் செய்திருக்கிறார். காட்சியும் அம்சமாகப் படமாக்கப் பட்டிருக்கும்.
பாடியது சுசீலா. ரொம்ப அனுபவித்துப் பாடியிருப்பார்.சிறு சிறு வார்த்தைகளை விட்டு விட்டு அவர் எடுக்கும் போது அதை நாம் கேட்கையில்அனுபவிக்கும் சுகமே அலாதி. அந்தக் குரலும், தெளிவும்...ம்...இப்போது எவராலும் இயலுமா? பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
பாடலின் வரிகள் சிரமமானவை. ஆனால் தமிழ் விளையாடுகிறது. நாயகி நாகரீகப் பெண் என்பதனால் பாடலாசிரியர் புரிந்து கொண்டு ஆங்கில வார்த்தைகளை பாடலில் சிம்பிளாக கலந்திருப்பது சிறப்பு.
என்னுயிரில் கலந்த பாடல். ராமமூர்த்தியின் ரசனையின் உச்சம் இப்பாடலில் தெரியும். கேட்டுவிட்டு சொல்லுங்கள் இந்த அற்புத பாடலின் இன்ப அனுபவங்களை.
பாடலின் வரிகளை கவனியுங்கள்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
லலலல லாலல்லா
லலலல லாலல்லா
லலலல லாலல்லா
Hello
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
carry on
ஹாஹா.................ஹஹா
மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனை அள்ளி வரும்
பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ
மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனை அள்ளி வரும்
பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ
(ஓஹோஹோ! என்ன அருமையான வரிகள்! தேவை வரும் போது அவள் தேனிதழ்கள் பேசுமாம்)
ஆசை பந்தாடும்
சங்கீதப் பண்பாடும்
பெண் மான் என்ற ஆனந்த பாவமோ
மாலை பொன்மேகம்
கொண்டாடும் சிங்கார
செங்கோலத்தில் ஏனிந்த நாணமோ
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு
பார்வை சென்ற வழி
பயணம் போகும் எழில்
போதை கொண்டு
இசை பாடுதே
வாழ்க்கை வானில்
மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு
பறந்தோடுதே
பார்வை சென்ற வழி
பயணம் போகும் எழில்
போதை கொண்டு
இசை பாடுதே
வாழ்க்கை வானில்
மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு
பறந்தோடுதே
ஆஹா எந்நாளும்
செண்டாடும் வண்டாக
உல்லாசம் தன்னால்
துள்ளும் lovely life
காலம் என்னோடு
கைகூடும் என் ஆவல்
முன்னேறும் என்
வாழ்வென்றும் ஜாலி life
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன
My friend நெஞ்சத்தில் என்ன
I know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு
carry on
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7l3vEqEbnLw
கிருஷ்ணா சார்!
காலை வணக்கம்.
விஜயலலிதாவை இன்னும் விடலையா?
வாசு சார்
கடை இன்னும் திறக்கலையேனு போணி ஆகலேன்னு நினைச்சேன்
கல்லா நல்லா கட்டுறீங்க
ரவியின் மெட்ராஸ் டு pondicherry பற்றி கோபால் சொன்னது நினைவிற்கு வருகிறது ஹிந்தியின் பாம்பே டு கோவா இதில் பாதி கூட இல்லை
நேற்று தனி பிறவி சன் லைப் இல் ஆனந்தன் பார்த்ததும்
காலையில் நாம் ஆனந்தன் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது
கார்த்திக் சார் சொன்ன மாதரி என்ன ஒரு vibration
எப்படி விட முடியும் வாசு சார்
பின்னிட போறாங்க
நாம விடணும்னு நினைச்சாலும் ராஜேஷ் விட மாட்டேங்கறரே
'மதறாஸ் TO பாண்டிச்சேரி'
http://i1087.photobucket.com/albums/...31355/1-11.jpg
ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.
இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/6-10.jpg
நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா இராணியும் செய்திருந்தார்கள்.
படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.
http://i1087.photobucket.com/albums/...n31355/8-5.jpg
ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.
பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..
பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)
இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.
சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).
கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)
பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.
திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.
O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.
இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.
கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.
"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...
என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.
பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.
ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)
'மதறாஸ் TO பாண்டிச்சேரி' யக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.
மெட்ராஸ் டு பாண்டிசெர்ரி
முதல் தமிழ் ரோடு movie (பின்னாட்களில் திருமலை தென்குமரி,பயணம்,நிஜங்கள் போன்ற படங்கள் இதே போல் பேருந்து பயணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது )
முற்றிலும் எளிய அருமையான காமெடி காட்சிகள்
அதனுடன் ஒரு சிறு suspense அண்ட் த்ரில் அதுவும் 1966 கால கட்டத்தில்
ஒரு பேருந்து
சென்னையில் இருந்து pondicherry வரை
அதில் பயணம் செய்யும் கதா பாத்ரங்கள்
எப்போதும் சண்டை போட்டு கொண்டு இருக்கும் கணவன் மனைவி
அவர்களின் மகன் எப்போதும் பகோடா தின்று கொண்டு
ஒரு வயதான பெண்மணி அவர்களுடைய பேத்தி, ஒரு மரியதிகுரிய குடும்பம் ,வீதியில் பொருட்கள் விற்கும் வியாபாரி , ஒரு பாம்பாட்டி
இவர்களுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்
ஆனால் முக்கிய கதா பாத்ரம் ஒரு பருவ பெண் (கல்பனா) தாய் தந்தை பார்க்கும் மணமகன் வேண்டாம் என்று கூறி பிறகு
இரண்டு ஏமாற்று பேர்வழிகளிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி மாட்டி கொண்டு பிறகு அந்த இருவரில் ஒருவன் (ராமதாஸ்) இன்னொருவனை கொல்வது அதை பார்த்த சாட்சி கல்பனா
ராமதாஸ் இடம் இருந்து தப்பி ஒரு ஆடவனிடம் (ரவி) காதல் கொள்வது
இறுதியில் எல்லாம் சுபம்
அருமையான திரைகதை எல்லா கட்சிகளும் நகைச்சுவை நிறைந்த
தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர்கள்
நாகேஷ் கண்டக்டர் ,எ.கருணாநிதி டிரைவர்
இருவரும் இந்த பயணத்தில் மறக்க முடியாத சித்திரங்கள்
இந்த திரை படத்தில் கருணாநிதி யின் expressions are சுபெர்ப்
காமெடியன் இல் முன்னுக்கு வராத ஒரு மிக சிறந்த காமெடியன்
(புதிய பறவை மரத்தடி மாமுனி ,ஆதி பராசக்தி நிசும்பன் )
பகோடா காதர் அவரை எப்போதும் கடிந்து கொள்ளும் வீரப்பன்
அங்கமுத்து அவர் கொண்டு வரும் கோழி காமெடி அப்போதைய நாட்களில் மிக பிரசித்தம்
Sun Beam Productions தயாரிப்பு
மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி இசை (கோபால் அவர்களின் ஆதங்கம் )
ஒரு பயணத்தின் போது இப்படி கூட காமெடி உண்டா என்ன ஒரு கற்பனை அல்லது அனுபவம்
1966 கால கட்டம் என்பது ஒரு மாற்றத்தின் தொடர்ச்சி
1964 இல் ஸ்ரீதர் ஆரம்பித்த காதலிக்க நேரமில்லை தொடர்ந்து,அன்பே வா போன்ற காமெடி திரைப்படங்களின் தொடர்ச்சி இந்த மெட்ராஸ் டு
பாண்டிசெர்ரி . இவ்வளுவுக்கும் 60 சதவிகித படம் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கும் எனென்றல் இப்போது போல் அப்போது technical சப்போர்ட் அவ்வளவாக கிடையாது இருந்தும் எல்லா தரபினரியும் கவர்ந்த திரைப்படம்
கலை வேலை பிரிவு களில் தமிழ் திரை படம் அவ்வளுவு முன்னோடி இல்லை என்று சொல்பவர்கள் இந்த திரை படத்தை முழுவதும் பார்த்து
அனுபவிக்க வேண்டும்
இந்த படத்தின் காமெடி ஐ பின்னாட்களில் நிறைய படங்களில் காபி அடித்து வெளியிட்ட்ருப்பர்கள்
அமிதாப் அருணா இராணி நடித்து வெளிவந்த பாம்பே டு கோவா இதன் தழுவல் மெஹ்மூத் நாகேஷ் ரோல் இல் கண்டக்டர் ஆக வருவார்
மெஹ்மூத் நாகேஷ் இன் பரம விசிறி .நாகேஷ் இன் எதிர் நீச்சல் ,அனுபவி ராஜ அனுபவி ,சர்வர் சுந்தரம் போன்றவற்றை ஹிந்திக்கு கொண்டு சென்றவர்
வீரப்பனின் காமெடி காட்சிகள் அமைப்பதில் வல்லவர் .கௌண்டமணி செந்தில் வாழை பழ காமெடிக்கு அச்சாணி வீரப்பன்
திருமலை மகாலிங்கம் பீம்சிங் உதவியாளர் இது போன்று சாது மிரண்டால் ,சோப்பு சீப்பு கண்ணாடி காமெடி படங்களை இயக்கியவர்