வைரமுத்து பேட்டி போனவாரத்திலேயே குமுதத்தில் படித்தேன் க்ருஷ்ணாஜி..இப்போது இன்னொரு முறை..நன்றி..படங்களுக்கும் சேர்த்து..:)
Printable View
வைரமுத்து பேட்டி போனவாரத்திலேயே குமுதத்தில் படித்தேன் க்ருஷ்ணாஜி..இப்போது இன்னொரு முறை..நன்றி..படங்களுக்கும் சேர்த்து..:)
டியர் கார்த்திக் சார் ,
'வாடியம்மா' பாட்டிற்கு தங்களுடைய பாராட்டிற்கும்,மேலதிக மனோரமா தகவலுக்கும் மிக்க நன்றி!
அது கிடக்கட்டும். இன்ப அதிர்ச்சி. தலைவரின் 'சவாலே சமாளி' 'நிலவைப் பார்த்து வானம் சொன்னது' பாடல் ஆய்வைத்தான் சொல்கிறேன்.
அற்புதம் சார். மிக அழகான விரிவுரை.
'தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை'
படத்தில் மூன்றாவது சரணம். ஆனால் ரேடியோவில் கேட்க முடியாது. இரண்டு சரணங்களோடு முடிந்து விடும். ஆனால் இப்போது சானல்களில் முழுப் பாடலையும் கேட்டு ரசிக்க முடிகிறது அந்தப் புண்ணியவான்கள் திமிரெடுத்து பாதியிலேயே நிறுத்தித் தொலைக்காமல் இருந்தால்.
இந்த வரிகளுக்கான தங்கள் விளக்கம் ரொம்ப சூப்பர்.
http://i.ytimg.com/vi/H1Qf_xEI428/maxresdefault.jpg
'ராஜா'வில் மாடர்ன் ராஜா. 'சவாலே சமாளி'யில் அதே அழகு கொஞ்சும் முகத்துடன் கிராமத்து மாணிக்கம். அந்த நீள் கிருதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் சைட் போஸ் இருக்கிறதே. உலகின் ஒட்டுமொத்த அழகையும் பிரம்மன் அந்த முகத்தில் கொண்டு வந்து கொட்டி உருவாக்கியிருப்பான்.
http://www.maalaisudar.com/images/st...709/pillai.jpg
நேற்று முரசு தொலை காட்சியில் பிள்ளையோ பிள்ளை திரை படத்தின் சில பாடல்களை ஒலி பரப்பினார்கள் .அடிகடி இந்த திரை படத்தின் பாடல்களை நீங்கள் முரசு தொலை காட்சியில் பார்க்கலாம் .அது சம்பந்தமாக மாலைசுடர் 2009 நாள் இதழில் வெளி வந்த ஒரு விமர்சனம்
1971 ஆம் ஆண்டு திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் மாதிரி வேடமணிந்து பிரச்சார நாடகங்களில் நடித்தார் முதலமைச்சர் கருணாநிதி யின் மகன் மு.க.முத்து. 1972 ஆம் ஆண்டு அவர் கதாநாயக னாக நடித்த "பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தை கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை, வசனம் கருணாநிதி. படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணன்பஞ்சு.
.
இந்தப் படத்தில் மு.க.முத்து எம்ஜிஆர் போலவே நடை, உடை பாவனையுடன் நடித்தார். பாடினார். சண்டை போட்டார். அதுவும் முதல் படத்திலேயே எம்ஜிஆர் போல இரட்டை வேடம்.
கொடியவன் கங்காதரன் தனது முதல் மனைவி பார்வதியைக் கொலை செய்கிறான்.இரண்டாவது மனைவி காஞ்சனாவையும் கர்ப்பிணி யாகத் துரத்தியடிக்கிறான். பார்வதி யின் மகன் குமாரை அவளைக் கொன்றவன் என்று கங்காதரனால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த வேலைக்காரன் முருகனை வளர்த்து வாலிபனாக்கி டாக்டருக்குப் படிக்க வைக்கிறான்.
காஞ்சனாவின் மகன் கண்ணன் கடமை வீரனாக வளர்கிறான். உருவத்தால் ஒன்றுபட்ட குமாரும், கண்ணனும் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களுடைய வாழ்க்கையில் பப்ளிக்பிராசிக்யூடர் ராதா குறுக்கிடுகிறாள். காதலில் மோதல்,முடிவிலே சுபம். வில்லன் கங்காதரனை பழிவாங்குவதிலும் சகோதரர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
வண்ணத்தில் தயாரான "பிள்ளையோ பிள்ளை'யில் மு.க.முத்துவின் அறிமுகக் காட்சியே அமர்க்களமானது.
"உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்
ஓய்வில்லாமல் உழைப்பன் நான்'
என்று பாடியவாறு அவர் ஆடிப் பாடுவதை ரசிகர்கள் வரவேற்கவே செய்தனர். ஆனால் மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம், கருணாநிதி எம்ஜிஆர் உறவில் விரிசல் ஏற்படுத்தி கட்சியே உடையக் காரணமானதாகக் கூறுவார்கள்.
கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்தார்.
"ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை'
"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'
"மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி'
"வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருதே சுகம் இங்கு'
சுசீலாவின் அருமை ஆன ஒரு பாடல் சார் இது லக்ஷ்மியும் விஜயகுமாரியும் இந்த பாடலில் தோன்றுவார்கள் மெல்லிசை மன்னரின் திறமைக்கு இந்த பாடல் ஒரு மகுடம் .இந்த பாட்டிற்கு விடியோ கிடைக்க வில்லை
போன்ற பாடல்களை டிஎம்எஸ் சுசீலா ஆகியோர் பாடி, அவை ஹிட்டும் ஆனது.
கலைஞரின் வசனத்தில் அண்ணாவின் பழக்கவழக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
"கணையாழி உனக்கு, கசையடி எனக்கா' என மு.க.முத்து மற்றொரு முத்துவிடம் கேட்கும் வசனம் அக்காலத்தில் பிரபலம்.
எம்ஜிஆர் படத்துக்கு சண்டைப் பயிற்சி அளிக்கும் சியாம்சுந்தர்தான் "பிள்ளையோ பிள்ளை' படத்துக்கும் சண்டைகளை அமைத்தார். "பிள்ளையோ பிள்ளை' முதற் காட்சி விழாவில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் தான் எனது ஆசான் என்று மு.க.முத்து கூறினார். இதைக் குறிப்பிட்ட ம.பொ.சிவஞானம், துரோணரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில்வித்தையில் தேர்ச்சி பெற்றது போல, எம்ஜிஆரை ஆசானாகக் கொண்ட முத்துவும் அவரைப் போல புகழையும், சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்.
இறுதியாக எம்ஜிஆர் வாழ்த்திப் பேசினார். என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப் படுகிறேன்.ஆனால் முத்து ஒருநாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனிவழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
ஆனால் அதை மு.க.முத்து கடைப்பிடித்தது போலத் தெரிய வில்லை. அதனால் சில படங்களில் மட்டுமே அவரால் சோபிக்க முடிந்தது. எனினும் "பிள்ளையோ பிள்ளை' ரசிகர்களைக் கவரத் தவறவில்லை.
கார்த்திக் சார்
சவாலே சமாளி பாடல் ஒரு சர்ப்ரைஸ் பதிவு.. சூப்பர் சார்...
கண்ணா நீயும் நானுமா?
http://www.thehindu.com/multimedia/d...pg_555734g.jpg
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம்
அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி
மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.
http://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
http://kavingarvaali.files.wordpress...aram.jpg?w=570
இந்த போட்டோ ஏற்கனவே ராகவேந்தர் sir போட்டு விட்டாரா ?
dear esvee sir
ஷீலாவும் லதாவும் இருக்கும் இந்த போட்டோ எந்த திரைப்படம் சார் ?