-
சிவந்த மண் படத்திற்கு தனியாகவே ஒரு சாதனை பட்டியல் எழுதலாம்.
7. முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - சிவந்த மண்.
8. மிக அதிகமான இசை கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் சிவந்த மண் படத்தில் வந்த பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல்.
9. மிக அதிகமான ஊர்களில் வெளியான நாள் முதல் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய சாதனையை புரிந்தது சிவந்த மண்.
தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்
சென்னை
குளோப் - 125 காட்சிகள்
அகஸ்தியா - 117 காட்சிகள்
மதுரை - சென்ட்ரல் - 101 காட்சிகள்
கோவை -ராயல் - 103 காட்சிகள்
திருச்சி - ராஜா - 104 காட்சிகள்
பட்டுகோட்டை - நீலா - 102 காட்சிகள்
10. 100 நாட்களை கடந்து ஓடிய ஊர் மற்றும் அரங்குகள்
சென்னை
குளோப் - 145 நாட்கள்
அகஸ்தியா - 117 நாட்கள்
மேகலா- 103 நாட்கள்
நூர்ஜகான் - 103 நாட்கள்
மதுரை - சென்ட்ரல் - 117 நாட்கள்
கோவை -ராயல் - 103 நாட்கள்
திருச்சி - ராஜா - 103 நாட்கள்
சேலம் - ஓரியண்டல் - 110 நாட்கள்
தூத்துக்குடி - பாலகிருஷ்ணா - 101 நாட்கள்
11. முதன் முதலாக தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓடிய படம் - சிவந்த மண்.
12. சென்னையில் மொத்த வசூல் - Rs 12,32,970. 21 p
சென்னையில் மொத்தம் ஓடிய நாட்களின் (468) கணக்குப்படி அந்த நாட்களுக்கு அதிகமான வசூலை பெற்ற படம் - சிவந்த மண்.
13. மதுரையில் பெற்ற வசூல் - Rs 3,37, 134.95 p
சென்ட்ரல் திரையரங்கில் 117 நாட்களுக்கு மிக அதிகமான வசூலை பெற்ற படம் சிவந்த மண்.
14. கோவையில் பெற்ற வசூல் - Rs 3,56, 453.59 p
சிவந்த மண் 50 நாட்களை கடந்து 80 நாட்கள் வரை ஓடிய ஊர்கள் - 22.
15. நடிகர் திலகம் கௌரவ வேடத்தை ஏற்க (தமிழில் முத்துராமன் செய்தது) இந்தியிலும் தர்த்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வட நாட்டில் 8 ஊர்களில் 200 நாட்களை கடந்தது.
16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.
17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.
-
சிவா சார்,
ஏற்கெனவே முரளி சார் தொகுத்த 'சாதனை சிகரங்கள்' திரியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். எனவே முரளி சார் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே.
-
'வைர நெஞ்சம்'
'Gehri chaal'
பாடல்கள் ஒப்பீடு
'நடிகர் திலகம்' நடித்து வெளிவந்த ஸ்ரீதரின் படம் 'வைர நெஞ்சம்' என்பது எல்லோருக்கும் தெரியும். இதையே ஸ்ரீதர் அதே சமயத்தில் இந்தியிலும் எடுத்தார். படத்தின் பெயர் 'gehri chaal'. சில பல காரணங்களால் 'ஹீரோ 72' என்று பெயரிடப்பட்டு தாமதமாக 'வைர நெஞ்ச'மாக மாறி 1975 ல் ஒருவழியாக தீபாவளிக்கு தமிழில் வெளிவந்தது. இதே நாளில் நடிகர் திலகத்தின் 'டாக்டர் சிவா' (2.11.1975) படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் சிக்கல்கள் இல்லாத காரணத்தால் 'gehri chaal' 1973-ல் வெளி வந்துவிட்டது.
இந்தியில் 'நடிகர் திலகம்' தமிழில் ஏற்று நடித்த நாயகன் பாத்திரத்தை ஜிதேந்திராவும், முத்துராமன் ரோலை அமிதாப் பச்சனும், பத்மப்ரியா வேடத்தை அழகுப் பெட்டகம் ஹேமாமாலினியும் செய்திருந்தனர்.
எந்த ஹேமாமாலினியை தமிழில் முகவெட்டு நன்றாக இல்லை என்று ஸ்ரீதர் ஒதுக்கினாரோ அதே ஹேமாவை இந்தியில் கதாநாயகியாக ஸ்ரீதர் போட வேண்டிய கால மாற்றம் ஆயிற்று. சில நண்பர்கள் ஸ்ரீதர் படத்தில் ஹேமா நடித்ததில்லை என்று என்னிடம் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
சரி! இப்படத்தின் பாடல்களைப் பார்த்து விடலாமா?
எல்லாப் பாடல்களுமே தமிழில் 'மெல்லிசை மன்னரி'ன் அதிரடி இசையில் சூப்பரோ சூப்பர். இந்தியில் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் எல்லாப் பாடல்களுமே சுமார் ரகமே.
'நடிகர் திலகம்' பத்மப்ரியாவைக் கலாய்த்து,
'ஹே ஹே மை ஸ்வீட்டி' என்று டி.எம்.எஸ்.குரலில் ரகளை பாடல் ஒன்று பாடுவாரே. அது இந்தியில் 'Ae Bhai Tu Kahan' என்று ஒலித்தது. இரண்டையும் பாருங்கள். தமிழ் எவ்வளவு டாப் என்று தெரியும்.
தமிழில் அழகான ஸ்லிம்மான நடிகர் திலகம். இந்தப் பாடலின் ஷூட்டிங்கை நான் பார்த்தேனாக்கும். நடிகர் திலகத்திடம் பேச முடியவில்லை. ஆனால் பதமப்ரியாவுடன் சிறிது நேரம் உரையாடினேன்.
https://youtu.be/uGPfXFx6S7w
இந்தியில் ஜிதேந்திராவின் குதிப்பு. ஹேமா ஆறுதல். 'Ae Bhai Tu Kahan'
https://youtu.be/UAP15bOlmkc
-
சி.ஐ.டி சகுந்தலாவை ஏமாற்ற கழைக் கூத்தாடிகள் போல வேடமிட்டு நடிகர் திலகமும் பத்மப்ரியா குழுவினரும் ஆடிப் பாடும் 'கார்த்திகை மாசமடி...கல்யாண சீசனடி' பாடல்.
https://youtu.be/CGrbrkvDnxM
அதுவே இந்தியில் Jaipur Ki Choli ஆக. (இதிலும் 'சோளி கே பீச்சே' உண்டு) சகுந்தலாவுக்கு பதிலாக இந்தியில் கவர்ச்சி பிந்து
https://youtu.be/ZZm45CZGH10
-
தமிழில் வாணி ஜெயராம் மிக மிக அற்புதமாகப் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்
'நீராட நேரம் நல்ல நேரம்' நடிகர் திலகத்தின் செம ஸ்டைல் போஸ்களில். வியக்க வைக்கும் ஸ்மோக் ஸ்டைல்களில்.
https://youtu.be/uvknaw6In7Q
இந்தியிலும் நல்ல பாடலே. ஆனாலும் தமிழை நெருங்க முடியாது. பிந்து ஆடும் 'Sham Bheegi Bheegi' பாடல்.
https://youtu.be/5Jh8oWYC60Y
-
'அம்மான் மகன்... எங்கே அவன்? பத்மப்ரியாவின் காபரே. ராட்சஸியின் ரகளை. நடிகர் திலகத்தின் கூலிங் கிளாஸ் ஸ்டைல்.
https://youtu.be/0MAUDabbuBE
இந்தியில் ஹேமாவின் கேபரே. பத்மப்ரியா அளவுக்கு கவர்ச்சி இல்லை.
https://youtu.be/ZUHZSYaOU7I
-
இந்தியில் மிஸ் ஆகி தமிழில் பட்டை கிளப்பிய 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று' பாடல்.
https://youtu.be/WiQsVl5KkEc
-
வாசு சார்
தங்கள் ரூட்டே தனி, கிட்டே யாரும் நெருங்க முடியாது. தூள் கிளப்புங்க..
கேஹ்ரி ச்சால் படத்தைப் பொறுத்த மட்டில் ஷாம் பீகி பீகி பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட். தினமும் இரவு 10.30 மணிக்கு விவித்பாரதியில் ஒலிபரப்பாகும் மன்சாஹே கீத் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். அதே போல் 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஜவான்களுக்கான ஜெய்மாலா நிகழ்ச்சியிலும் இப்பாடல் அடிக்கடி இடம் பெறும். ஜவான்களுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என, ஒரு முறை ஹிந்தி டெக்னீஷியன் ஒருவர் சிறப்பு ஜெய்மாலா நிகழ்ச்சியில் கூறிய ஞாபகம்.
மற்றபடி சொல்லிக்கொள்ள ஏதுமில்லா படம் கேஹ்ரி ச்சால்.
தமிழிலும் ஹேமமாலினியைத் தான் அணுகினார்கள். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியவில்லை. இதைப்பற்றி ஹேமாவே ஒரு பத்திரிகையில் (சித்ராலயா என்று நினைக்கிறேன்) சொல்லியிருந்தார். இரண்டு மூன்று படங்களுக்கு மேல் கால்ஷீட் காரணத்தால் நடிகர் திலகத்துடன் நடிக்கும் வாய்ப்பு நழுவிப்போனதை மிகவும் வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார்.
அதுவும் ஹே.ஹே. மை ஸ்வீட்டி பாடலில் ஹேமாவை இருத்திப் பார்த்தால் ... மனம் கொள்ளை கொள்ளும்.. ஜோடி அம்சமாயிருந்திருக்கும்.
பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.
அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள்.
-
ராகவேந்திரன் சார்!
மேலதிக தகவல்கள் அருமையிலும் அருமை. பதிவிற்கே பெருமை சேர்த்து விட்டது தங்கள் பதிவு. நானும் அப்போது அம்மாவின் புண்ணியத்தில் 'ஷாம் பீகி பீகி' பாடலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் நினைவு படுத்தலால் ஜெயமாலா நிகழ்ச்சி அப்படியே மனதில் ஓடுகிறது. 7.15 முடிந்து மணி எப்போது எட்டாகும் என்று தமிழ்ப் பாடல்களுக்காக வெயிட் செய்ததும் லேசாக நினைவிருக்கிறது. சரியா என்று தெரியவில்லை.
//பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.
அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள். //
கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் படங்கள் எ(ங்கள்)ன் ஆளுக்குப் போனதில் பெரும் ஆறுதல் ராகவேந்திரன் சார். மஞ்சுளா தலைவர் ஜோடின்னாலே அது தனிதான்.:)
-
இந்த ஒரு பாடல் போதும் சார் இந்த அற்புத ஜோடிக்கு. வாவ்! என்ன ஒரு சாங்! என்ன ஒரு ஸ்டைல்! மஞ்சுளா என்ன ஒரு அழகு! தலைவர் அதற்கும் மேல். தேக்கடி யானைக் கூட்டங்களுக்கு நடுவில் ரதி, மன்மதனே டூயட் பாடுவது போல. ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்'
என் உள்ளம் கொள்ளை கொண்ட பாட்டு.
பார்த்ததீர்களா ராகவேந்திரன் சார்! இயற்கையாக 'வைர நெஞ்சம்' பாடல் வந்தவுடனேயே பின்னாலேயே நம் 'டாக்டர் சிவா'வும் வந்து விட்டார். இதுதான் சார் நம் தலைவர் என்பது. இந்தக் கொடுப்பினை நமக்கு மட்டுமே சொந்தம். தலைவர் நடையே தனி. அந்த நடை ஒன்றுக்கே சொத்தை எழுதி வைத்து விடலாம் சார்.
https://youtu.be/U0rPHDMD0tU