டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு ரத்த தான முகாம் புகைப்படங்கள் அம்சம். ரத்ததான முகாம் பற்றிய விவரங்கள் லைவ் ரிலே மாதிரி அருமையாக இருந்தது. அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி. பூமிநாதன் அவர்கள் அன்னை இல்லத்திலுள்ள நடிகர் திலகத்தின் படத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி அட்டகாசம். தலைவரின் மலர்ந்த முகத்தைப் பார்க்கையில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த பல்வேறு போஸ்டர்கள் கண்களையும், கருத்தையும் கவருகின்றன.
ஹிந்து நாளிதழில் சிவாஜி பிரபு அறக்கட்டளை விழாவைப் பற்றி வெளிவந்துள்ள கட்டுரையும் அதி அற்புதம்.
'துணை' பற்றிய தங்களின் அன்பு கலந்த அருமைப் பாராட்டு கண்டு மனம் மகிழ்கிறேன். திரியில் நான் பங்கு பெற எனக்கு ஊக்கமளித்து என்னை திரிக்கு வரச் செய்ததே தாங்களும், அன்பு முரளி சாரும்தான். நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். மூத்த ரசிகரான தங்களது அன்பு ஆசீர்வாதங்கள் இருக்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இரண்டாயிரம் பதிவுகள் கடந்ததை வாழ்த்தும் முகமாக பூஜ்யங்களுக்குள்ளே ராஜ்யங்களை ஆண்டு கொண்டிருக்கும் நடிப்புலக இறைவனாரின் நிழற்படங்கள் தாங்கள் எனக்களித்த விலைமதிப்பில்லா மாணிக்கப் பரிசுகள். அதற்காக என் உள்ளம் குளிர்ந்த நன்றிகள். அற்புதமான பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.