-
சிவாஜி பாட்டு-5
வார்த்தைகளில் இருக்கிற தெளிவை ஒரு வாத்தியத்தில்
கொண்டு வந்த இசை வித்தகர்,
வயலின் மேதை அமரர்.குன்னக்குடி வைத்தியநாதன்
அவர்களின் நினைவு நாள் இன்று என அறிந்த நிமிஷத்தில்
பளீரென்று நினைவுக்கு வந்தது
இந்தப் பாட்டு.
கம்பீரம்,கம்பீரம் என்கிறோமே..
அதன் பொருளை இந்தப்
பாடலில் அறியலாம்.
அதிரும் அந்தக் குரலில் கம்பீரம்.
தெளிவான பாடலின் தெளிவான இசையில் கம்பீரம்.
நல்ல தமிழ் வரிகளில் கம்பீரம்.
நடந்தாலும்,
படி இறங்கினாலும்,
படி ஏறினாலும்,
கொஞ்சமும் சாதாரண மனிதனின் தளர்வுத் தோற்றம்
காட்டாத அய்யா நடிகர் திலகத்தின் அசைவுகளில் ராஜ
கம்பீரம்.
"நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்" என்று அருகில்
நிற்கிற தமக்கை பாட, உணர்ச்சி
வசப்பட்டு,உதடுகள் சுழித்து,
விழிகள் மலர்த்தி நம் நடிகர் திலகம் காட்டும் பாவங்களுக்கு
புல்லரிக்காத உடம்புகளை..
கண்ணம்மாப் பேட்டைகளும்
மதிக்காது.
-------
நடிகர் திலகமெனும் மாபெரும்
கலைஞன், நாட்டையும்,தமிழையும் வாழ வைத்து,
நமக்கென உள்ளதை வழங்கி விட்டு,தலை நிமிர்ந்து நிற்கிறான்..
தஞ்சை பெரிய கோயில் போல.
அவனுக்கென உள்ள மரியாதையையும், கௌரவத்தையும்..
எப்போது,எப்படி தரப்போகிறோம்..நாம்..?
https://youtu.be/0kFijxungwE
-
Dear Raghavender Sir
I visited PT office today. I discussed with the chief editors secretary. I will write the details of discussion tomorrow.
Am submitting to them something. They WILL publish apology.
If Papers, think that why govt should spend money for sivaji manimandapam, the same papers should also question how can govt spend money to decorate remodel Anna square and MGR Square. That's what I debated with him.
Regards
RKS
-
Dear Basker sir
They will only publish fake information and fabricated news, knowing deliberately.
Mr. Kalaivendhan is smart enough to publish some third party link trying to establish that as KALKI as if all readers are dumb.
He will also quote a book and a year of approximation as if he is saying true information.
We have experienced that already. Our People here are Gandhian Policy followers and won't even botherto mention true information, which others are taking advantage.
Rks
-
-
Mr Neyveliar,
Excellent comparison of Vaira Nenjam and no one can match our handsome and stylish NT in all aspects.
-
From Facebook
மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc
-
நடிகர்திலகத்தை விமர்சனம் செய்ய அருகதை இருக்கிறதா?
கல்வியை வியாபாரம் செய்யும் பச்சமுத்து போன்ற பச்சோந்திகளுக்கு நம் தலைவர் நடிகர்திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய சிறிதும் யோக்கியதை இல்லை. இப்படி எல்லாவற்றையும் கமெண்ட் செய்து தாங்கள் அதிமேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் இவர்களின் லட்சணத்தை முதலில் பார்க்கவேண்டும். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி, மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக (அரசு நிர்ணயித்த கட்டணமில்லாமல்) ரசீது ஏதுமின்றி கொள்ளையடித்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஒரு கட்சியை ஆரம்பித்த, பாரிவேந்தராக மாறியுள்ள பச்சமுத்துவிற்கு, தான் ஆரம்பித்த கட்சிக்கு யாரிடமும் நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தன சொந்த காசை செலவழித்த நடிகர்திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய துளியும் அருகதை இல்லை.
இன்று கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனுக்கு மணிமண்டபத்திற்கு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி ஒதுக்கப்பட்டு மணிமண்டப வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கெல்லாம் அனைத்துக் கட்சிகளும் அதனை வரவேற்றுள்ளன. எதிர்த்தால் உயிரோடு இருப்பதே கடினம் என்பதுதான் உண்மை நிலை. ஆனால் இங்குதான் தமிழ், தமிழன் என்று கூறிக்கொண்டு, உண்மைத் தமிழனுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதை சகித்துக்கொள்ளமாட்டாமல் விமர்சிக்கிறார்கள்.
இதனைக்கூட, இத்தகைய செய்திக்கும், அதன் உரிமையாளருக்கும் சம்பந்தமில்லை என்று மறுக்கலாம். ஆனால், ஒரு இதழின் தலையங்கம் என்பது அதன் ஆசிரியரின் மற்றும் உரிமையாளரின் குரலாகப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே கருதப்படும். அப்படியானால், இவர்களால் நடத்தப்படும் கல்லூரிகளின் கல்விக் கொள்ளையைப் பற்றி இவர்கள் ஏன் தலையங்கம் எழுதுவதில்லை?
இன்னும் ஏராளம் எழுத இருக்கிறது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் புதிய தலைமுறை இதழுக்குக் கண்டனக் கடிதம் எழுதவுள்ளேன். நம் நண்பர்களும், திரியில் பதிவு செய்வதோடு நில்லாமல், தங்களுடைய கண்டனத்தை கடிதம் மூலம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
-
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...18&oe=566235FF
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...bb&oe=5663B5CB
இந்த வார புதிய தலைமுறை பத்திரிக்கையில் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் பற்றி தவறான செய்தி பிரசுரமாகி உள்ளது. அதில் அவர் சமுதாயத்திற்கு என்ன செய்தார் என்று எழுதியுள்ளார் நிருபர். புதிய தலைமுறை இதழின் நிருபர்களே, நீங்கள் எழுதியுள்ள விபரங்கள் சரிதானா என்பதை யாரிடமாவதுக் கேட்டீர்களா அல்லது உங்கள் பத்திரிக்கையின் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் அவர்களிடம் இந்த செய்தியைப் போடாலாமா என்றுக் கேட்டீர்களா. சிவாஜியைப் பற்றி உங்கள் கைக்கு வந்தை எழுதுவதற்கு நீங்கள் யாரிடம் எவ்வளவு கையூட்டுப் பெற்றீர்கள். அடுத்தவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடிகர்திலகத்தைப் பற்றி எழுதிய நீங்கள், உங்கள் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் சிவாஜி அவர்களின் சமுதாயப் பங்களிப்புப் பற்றி உரையாற்றியதைத் கேட்டதில்லையா, நாங்கள் சிவாஜி அவர்கள் இந்த சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த உதவிகளையும் பங்களிப்பையும் பற்றி ஆவணங்களை ஆதாரத்தோடு தந்தால் நீங்கள் உங்கள் மூஞ்சியை எங்குக் கொண்டு போய் வைப்பீர்கள். தன்னைத் தானே தண்டித்துக் கொள்வீர்களா. ஆதாரமில்லாமல் ஒரு செய்தியை எழுதிவிட்ட உங்கள் பத்திரிக்கை ஒரு டுபாக்கூர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இதில் விசயம் என்னவென்றால் இதை எழுதியது ஒருவர் இல்லையாம் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து எழுதியதாம்
அவர்களிடம் சில கேள்விகள்
1.தங்கப்பதக்கம் திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினாரே (இன்றைய திரைப்படங்களில் 100க்கு 99படங்களில் காவல்துறையை மிகவும் கேவலமாக சித்தரித்து எடுப்பது தான் சமுதாய சீர்திருத்தமோ.)
2.பாவமன்னிப்பு திரைப்படத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தி நடித்தாரே ( மூன்று மதத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மக்கள் சாக வேண்டும் என்று நடிப்பது தான் சமுதாய சீர்திருத்தமோ)
3.பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கை எப்படி பாசத்துடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அன்பு என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைத்தாரே ( இன்றைய செய்தித்தாள்களில் வருவது போல் அண்ணனும் தங்கையும் தகாத உறவு எப்படி வைத்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்தால் தான் உங்கள் பார்வையில் சமுதாய சீர்திருத்தமோ)
4.வெள்ளையர்களை முதன்முதலில் எதிர்த்த கட்டபொம்மன் அவர்களை நினைத்தால் சிவாஜி அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
கட்டபொம்மனின் வரலாற்றை இன்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள காரணமாக இருப்பது சிவாஜி அவர்கள் தான். மேலும் சுதந்திரம் பெற நடந்த போராட்டத்தையே கேலி பேசும் இன்றை சமுதாயத்தினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள காரணமாயிருக்கிறாரே அது சமுதாயத்திற்கு அவர் செய்யும் செய்த மாபெரும் சாதனை அல்லவா.
5.இதே இதழில் லால்பகதுார்சாஸ்திரி அவர்கள் காலத்தில் நடந்த போரைப் பற்றி எழுதியுள்ளீர்களே. அந்த யுத்தம் நடந்த போது சாஸ்திரி அவர்களைச் சந்திக்க சென்ற சிவாஜி அவர்கள் அந்த தருணத்திலேயே தனது மனைவி கமலா அம்மாள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழட்டிக் கொடுத்தவர் சிவாஜி. இது உங்கள் பார்வையில் சமுதாயத்திற்கு நல்லது செய்தது இல்லையா.
இது போல் அவர் செய்த ஏராளமான நிதி உதவிகளை ஆதாரத்துடன் நாங்கள் நிரூபிக்கத் தயார். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் பத்திரிக்கையின் சார்பில் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள் அங்கு சிவாஜி ரசிகர்கள் மற்றும் அவர்பால் அன்பு கொண்டவர்கள் அனைவரும் வருகிறோம், சிவாஜி அவர்களின் சமுதாய பங்களிப்பினைப் பற்றி ஒரே மேடையில் விவாதத்தை வைத்துக் கொள்வோம்.
6.உங்கள் முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் அவர்களைப் போல் தான் நடத்தும் எஸ்.ஆர்.எம் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்விக்காக நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கான தொகையை வசூலிப்பது தான் சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு என்றால் அப்படிப்பட்ட சமுதாயத் தொண்டினை எங்கள் சிவாஜி அவர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்.
சிவாஜியைப் பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை என்று கூறியிருக்கும் டுபாக்கூர் நிருபரே நீங்கள் சிவாஜி அவர்களைப் பற்றி எந்த வரலாற்றுப் புத்தகங்களைப் படித்தீர்கள் என்பதை ஏன் குறிப்பிடவில்லை.
என்னிடம் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு சிலப் புத்தகங்களே உள்ளன.
அதில் யுத்த சமயத்தில் நன்கொடைக் கொடுத்தது.
சென்னையில் வெள்ளம் வந்த போது மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்த தானே முன்னின்று சமையல் செய்து மக்களுக்குக் கொடுத்தது. முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்திற்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் தான் நன்கொடை அளித்ததோடு மட்டுமல்லாமல் தனது புதல்வன் இளையதிலகம் பிரபு அவர்களையும் தனியாக நன்கொடைக் கொடுக்கச் செய்தார். இளையதிலகத்திடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தங்கப்பேனா பரிசளித்தது உண்மையான நேர்மையான பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும்.
1956-ல் ஒரு புயல் வந்து மக்களின் வாழ்க்கை பாதிக்கபட்டது புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல்செய்துதாருங்கள் என்று அண்ணா கூறினார் அப்பொழுதுநானுஞ்செனறு விருதுநகரில் துண்டை விரித்து பராசக்தி வசனம் பேசி பணம் வசூல் செய்து கொடுத்தேன் DR.SIVAJIGANESHAN
* தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரில் கட்டினார்.
சிலை வடித்து நிலையான புகழ் கொண்டார்
* வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு கயத்தாறு எனும் அவன் மாண்ட இடத்தில் சிலை அமைத்தார்.
* பம்பாயில் வீர சிவாஜிக்கு சிலை அமைப்பதற்கான தொகையை வழங்கினார்.
* உலகத் தமிழ்மாநாட்டின் போது வள்ளுவருக்கு சிலையமைத்து வழங்கினார்.
நிதியாய் வாரி வழங்கியவை (அறிந்தவை)
* தேசப் பாதுகாப்பு நிதிக்காக தமிகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் வசூலித்து வழங்கினார்.
* பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கமலா அம்மையார் போட்டிருந்த தங்கநகைகள், தனது தங்க பேனாவையும் கொடுத்தார். ரூ.17 லட்சம் மீண்டும் வசூலித்துக்கொடுத்தார்.
* மத்திய உணவு திட்டத்திற்காக நேருவிடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.
* நேரு நினைவு நிதிக்காக நாடகத்தின் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.
* சீனப் படையெடுப் பின்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.25 ஆயிரம் வழங்கினார். தனது இந்திய தயாரிப்பான ராக்கி படத்தின் ஒருநாள் வசூலை கொடுத்தார்.
* ரூ.32 லட்சத்தை வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் மூலம் வசூல் செய்து, பல கல்விக்கூடங்களுக்கு உதவினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது குடியரசுத்தலைவர் ஜாகிர்உசேனிடம் ரூ.50 ஆயிரம் அளித்தார்.
* பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட, கட்டபொம்மன் நாடகத்தின்
மூலம் ரூ.2 லட்சம் நன்கொடை.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ.15 லட்சம் நிதி.
* கோவையில் உலகத் தமிழ் மாநாட்டிற்காக நாடகம் நடத்தி ரூ.5 லட்சம் நிதி.
* தென்னிந்திய திரைப் பட தொழிலாளர்கள் சங்க கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகம் மூலம் ரூ.30 ஆயிரம் நிதி.
* சென்னை தீ விபத்து நிதிக்காக ரூ.11 ஆயிரம்.
* அமெரிக்க குழந்தைகளுக்கு யானையும், லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார்.
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம்
வீடு நாடகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதி.
* ஆந்திர மக்கள் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம்.
* நேசமணி சிலை அமைப்பு நிதியாக ரூ. 5 ஆயி ரம்
* கட்டபொம்மன் சிலை பாதுகாப்புப் பணிக்கு ரூ.10 ஆயிரம்.
* எகிப்து அதிபர் நாசருக்கு சென்னையில் வரவேற்பு வழங்கி
சிறப்பு செய்தார்.
1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.
அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.
தமிழக முதல்வர், தன் உரையில் -
‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.
வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.
1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியா போது சிவாஜி அனைவரையும் அழைத்து வந்து சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் மக்கள் முன் நடித்தார். ஒரு லட்சம் பேர் கூடிய இடத்தில் இரவு 10 மணிக்கு எங்கே கலிங்கம்? என்று சொன்னவுடன் அவ்வளவு கூட்டமும் அமைதியானது. 15 நிமிடம் தொடர்ந்து நடித்து கொடுத்ததை MGR உணர்ச்சி வசப்பட்டு பாராட்டினார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை அரசுக்குக் கொடுத்தார்.
என்னிடமே இவ்வளவு விபரங்கள் இருக்கிறதே ஆனால் ஒரு பத்திரிக்கை நிருபர் எந்த வரலாற்றுப் புத்தகத்தைப் படித்தாா் என்பது தெரியவில்லை.
இறுதியாகவும் தெளிவாகவும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சிவாஜி அவர்கள் உங்களுக்கு வேண்டுமானால் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் என்னை போன்ற கோடிக்கணக்கான் பரிசுத்தமான உண்மையான அன்பு உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்.
கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்வது தான் சமுதாய சீர்திருத்தமா நிருபரே.
சிவாஜியைப் பழித்தது சிவனைப் பழித்ததற்கு சமம்.
இதை எழுதிய நிருபர் யார் என்று எனக்குத் தெரியாது. உண்மையை எழுதாமல் பொய்யை எழுதிய உனக்கு கலைமகள் என்றும் துணையிருக்க மாட்டாள் என்பது மட்டும் உறுதி.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அற்புதக் கலைஞர் சிவாஜி.
-
இன்று நாம் தமிழை ஒழுங்காக உச்சரிக்கிறோம் பேசுகிறோம் என்று சொன்னால் அது சிவாஜி அவர்கள் கலைத்துறைக்கு வந்த பிறகு தான். தமிழை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று தமிழனுக்கு சொல்லிக் கொடுத்ததே சிவாஜி தான். இன்று தமிழ் பேசுவதையே தரக்குறைவாக எண்ணும் சில முட்டாள்களுக்கு இவையெல்லாம் புரியாது, அல்லது அவன் தமிழனாக இருக்க மாட்டான்.
பல சுதந்திரப் போராட்ட வீரர்களை தனது நடிப்பு மூலம் இன்றும் நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார் என்றால் அது சிவாஜியால் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தில் மகனாகவும், வாலிபனாகவும், சகோதரனாகவும், நண்பனாகவும், கணவனாகவும், மாமனாராகவும், தகப்பனாகவும், தாத்தாவாகவும், கொள்ளுத் தாத்தவாகவும், மேலும் நல்ல காதலனாகவும், இப்படித்தான் வாழவேண்டும் என்று மக்களுக்கு தனது நடிப்பில் மூலம் உணர்த்தியவர் சிவாஜி அவர்கள் தான். இல்லையென்றால் மக்கள் அன்பு என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்திருப்பார்கள். அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக் கொடுத்தவர் சிவாஜி தான்.
300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், ஒரு படத்தின் படபிடிப்பிற்கு குறைந்தது 600 முதல்1000 பேர் வரை வேலை செய்யவேண்டும் அப்படியென்றால் குறைந்தது 200000 லட்சம் முதல் 300000 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கறார்.
அதே போல் தியேட்டரில் வேலை பார்ப்பவர்கள், அந்த தியேட்டரைக் கட்ட வேலை செய்த இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், நிமிந்தாள்,
அந்த கட்டிடத்தைக் கட்ட தேவையான பொருட்களை விற்கும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என குறைந்த பட்சம் 1000000 பேருக்கு ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியாத வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் சிவாஜி தான்.
இறுதியாக சிவாஜிக்கு மணிமண்டபம் ஏன் என்று கேட்கும் முட்டாள்களுக்கு சிவாஜி அவர்கள் நடித்த படங்கள் 300ல் 100நாள் ஓடிய படங்கள் 100ஐ தாண்டும், வெள்ளிவிழா படங்கள் 30ஐ தாண்டும், 75 நாட்களுக்கு ஒடிய படங்கள் 100ஐ தாண்டும், 50 நாட்களுக்கு ஒடிய படங்கள் 50ஐ தாண்டும் இதன் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரியை வைத்து ஒரு மினி அரசாங்கத்தையே நடத்தலாம் என்பது படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இன்றும் தனது பழைய படங்கள் மூலம் கர்ணன் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது, புதிய படங்கள் ஒரு நாள் இரண்டு நாள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகமெங்கும் இன்றும் சிவாஜியின் பழைய படங்கள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே இறந்தும் அரசாங்கத்திற்கு கேளிக்கை வரி மூலம் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் அட்சயப்பாத்திரம் தான் சிவாஜி.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்-இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது சிவாஜி ஒருவருக்குத் தான் பொருந்தும்.
இன்று வரை எந்த தயாரிபாளரும், விநியோகஸ்தரும் சிவாஜியை வைத்து படம் எடுத்தோம் நஷ்டம் அடைந்தோம் என்றோ தற்கொலை செய்து கொள்வோம் என்றோ, காசோலை மோசடி செய்து விட்டார் என்றோ எவரும் நீதிமன்றத்திற்கோ அல்லது உண்ணாவிரதமோ இருந்ததில்லை.
சிவாஜியைப் போல் விருதுகள் வாங்கிய நடிகர்கள் இந்தியாவிலேயே யாரும் இல்லை. நம் நாட்டில் காசு கொடுத்து விருது வாங்கும் தன்னுடைய திறமைக்காக விருது வாங்கிய ஒரே நடிகர் சிவாஜி தான்.
தான் சம்பாதித்த வருமானத்தில் ஓழுங்காக அரசுக்கு வருமானவரி கட்டியவர் சிவாஜி தான். அதன் மூலமும் அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுத்தவர் சிவாஜி.
வெளிநாட்டு விருதுகள் அதிகம் வாங்கி தமிழன் மற்றும் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் சிவாஜி தான்.
முக்கியமாக ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து, கூட்டுக்குடும்பமாக வாழவேண்டும் என்று இன்று வரை தமிழக கலாச்சாரத்தை காத்துக் கொண்டிருப்பவர் சிவாஜி தான். இந்த ஒரு காரணத்திற்காகவே சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.
இன்னும் நிறைய விபரங்கள் சாதனைகள் உள்ளன நண்பர்களே, நேரில் வந்தால் விவாதிக்கத் தயார்.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாமல் உங்க ................க்கா மணிமண்டபம் கட்டும் அரசு.
காந்தியையே காதல்மன்னன் என்று சொல்லும் இவர்களின் பைத்தியக்காரத்தனமான கேள்விகளை விமர்சனங்களை உதறித்தள்ளுங்கள்
தமிழ் நெஞ்சங்களே.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அற்புதக் கலைஞர் சிவாஜி.
-
பார்த்ததில் பிடித்தது -51
சாந்தி
நடிகர் திலகத்தின் 103 வது படம் , படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நம்மவர் நவராத்திரி படத்தை தொடர்ந்து பழனி என்ற கிராமத்து காவியத்தை தொடர்ந்து , அன்புக்கரங்கள் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் என்று வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்து சென்றவர் சாந்தி திரைபடத்தில் ஒரு critical சுப்ஜெக்ட் ல் நடித்து வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளித்தார் .
சந்தானம் (சிவாஜி) ராமு (SSR) இருவரும் நண்பர்கள் . கல்லூரி படிப்பை முடித்த உடன் சந்தனத்தின் தாயார் (சந்தியா) அவருக்கு பெண் பார்க்கிறார் , அந்த பெண்ணின் பெயர் சாந்தி (விஜயகுமாரி). கண் பார்வை இல்லாத அவரை நிராகரிக்க , சாந்தியின் தோழி மல்லிகைவை (தேவிகா) பார்க்கும் சந்தானம் அவளை காதலிக்கிறார்
மல்லிகா படிக்க வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார் .
சந்தானம் சாந்தியின் நிலைமை மற்றும் அவளுக்கு 10 லட்சம் சொத்து இருபதாக கூற ராமுவின் மாமா சொத்துக்கு ஆசைப்பட்டு ராமுவுக்கு சாந்தியை மணமுடித்து வைக்கிறார் ,தாலி கட்டிய பிறகு இதை தெரிந்து ராமு சாந்தியை விட்டு சென்று விடுகிறார்
இதை அறிந்து சந்தானம் ராமுவை சாந்தியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் .ராமுவை சமாதானம் செய்கிறார் , நண்பர்கள் உடன் வேட்டைக்கு செல்லும் ராமு எதிர்பாராமல் நீர் வீசியில் விழுகிறான் .
அவன் இறந்து போனதாக சந்தானம் ராமுவின் மாமனார்விடம் (நாகையா ) சொல்ல அவர் அதிர்ச்சியில் இறந்து விடுகிறார் , சாந்திக்கு கண் சிச்சிகை வெற்றிகரமாக அமைய , சாந்தி அதிர்ச்சி அடையாமல் இருக்க ராமுவின் உறவினர் ( MR ராதா ) சந்தனத்தை ராமுவாக நடிக்க சொல்லுகிறார்
சாந்தி சந்தனத்தை தன் கணவராக நினைத்து பழகுகிறார் , சந்தானம் விலகி போகிறார் , இந்த சமயத்தில் ராமு எதிர்பாராத விதமாக உயிருடன் திரும்பி வர சந்தானம் சந்தோசம் அடைகிறார் .
ராமு சந்தனம்தான் சாந்திக்கு ஏற்றவர் என்று சொல்லி உண்மையை சொல்ல வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்
மல்லிகாவும் ஊருக்கு திரும்பி வர மல்லிகா , ராமு , இருவரும் சிக்கலை தீர்க்க ராமுவுக்கு கல்யாணம் என்று சொல்லி , சந்தானம் , மல்லிகாவின் திருமணம் முடித்து விட்டு , ராமு தான் சாந்தியின் கணவர் என்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறார்
சாந்தி ராமு தான் தன் கணவர் என்று தன் திருமண நாள் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்
முடிவு என்ன என்பது வெள்ளித்திரையில்
படத்தில் நடித்து உள்ள அனைவருமே அந்த பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் , சிவாஜி , பீம்சிங் கூட்டணி தான் அழகான குடும்ப உறவுகளை , தாயகத்தின் மகத்துவத்தை கதைகளை மூலமாக அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள் , இந்த தடவையும் இந்த கூட்டணி அதில் பெற்று இருப்பது முழு வெற்றி
இது போன்ற கதைகளும் கதாபாத்திரங்களும் பா வரிசை படங்களுக்கு பிறகு , (பீம்சிங் ,சிவாஜி , MSV , கண்ணதாசன் கூட்டணி ) அமையவில்லை எனபது என் கருத்து.
படத்தில் நடித்து உள்ள நடிகர்களின் நடிப்பை பற்றி தனியாக எழுத தோன்றவில்லை , காரணம் படத்தில் நடித்து உள்ள அனைவரும் இயல்பாக இருக்கிறார்கள்
ஒரு சாதாரன கதையே நம்மவர் தன் நடிப்பால் பேச வைத்து விடுவார் , இது போன்ற அருமையான கதை கிடைத்தால் கேட்க வேண்டுமா என்ன
முதல் காட்சியில் கல்லூரி படிப்பை முடிந்த உடன் சந்தோசமாக ஆடி பாடுவதும் , தன் நண்பருக்கு புத்தி சொல்லுவதும் , தன் கணவர் தான் இவர் என்று நண்பனின் மனைவி நெருங்கும் போது தவிப்பதும் , என்று இவர் ராஜாங்கம் தான்
mono acting காட்சியிலும், யார் அந்த நிலவு காட்சியும் நம்மவர் நடித்து இருக்கும் நடிப்பை , அவர் உடல் மொழி அனைத்தும் வைத்து பாடமே நடத்தலாம்
சிவாஜிக்கும் பிறகு இந்த படத்தில் அதிகமாக நடிக்க ஸ்கோப் உள்ளவர் விஜயகுமாரி
சாந்தி என்ற டைட்டில் ரோல் . பெயரை போல சாந்தமான குணம் , கண் தெரியாமல் அவர் தவிக்கும் பொது பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் ,
SSR - இவர் அவசர பட்ட அந்த ஒரு கணம் தான் சந்தானம் - சாந்தி மற்றும் அனைவரின் வாழ்வும் திசை மாறுகிறது
திருந்தி மீண்டும் வந்த பிறகும் உண்மையை அவர் மறைக்கும் காரணம் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கிறது
MR ராதா - இவரால் தான் கதை , இவரால் தான் கொஞ்சம் காமெடி என்று படம் நகர்கிறது
படத்தின் முடிவு சுபமாக இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்