http://i57.tinypic.com/muais6.jpg
Printable View
"நல்ல நேரம்'
தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியில் திரைப்படம் தயாரிக்க விரும்பினார். தெற்கிலிருந்து வடக்கே சென்று பல வெற்றிப் படங்களை ஜெமினி, ஏ.வி.எம்.போன்ற நிறுவனங்கள் தயாரித்தது போல, தாமும் இந்திப் படத்தை தயாரிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்தது.
.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை ஒரு தோல்வி படத்தின் கதையாகும். 1967 ஆம் ஆண்டு மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக வைத்து "தெய்வச் செயல்' என்ற படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது.
அந்தப் படத்தின் கதையை தான் தயாரிக்கவிருந்த இந்திப் படத்திற்கு அவர் தேர்வு செய்தார். அந்த கதையில் சில மாற்றங்களை செய்து "ஹாத்தி மேரா சாத்தி' என்ற படத்தை இந்தியில் தேவர் தயாரித்தார். அப்போதைய இந்தி சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா இந்த படத்தில் நடித்தார். படம் வெள்ளி விழா கண்டு சக்கைப் போடு போட்டது. படத்தில் நடித்த யானைகளுக்கு பெரும் வரவேற்பு கிட்டியது.
"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.
எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.
ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.
கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், கண்ணன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.
யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய,
ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
ஆகிய பாடல்களும், அவினாசி மணி எழுதிய ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
சென்னை நகரில் சித்ரா - மகாராணி - மேகலா- ராம் 4 அரங்கில் வந்தது .
சித்ரா - மகாராணி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை புரிந்த படம் .
1970- மக்கள் திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அதற்கு பின்னர் 4 அரங்கில் ஓடிய படம் நல்ல நேரம் -1972 ஆண்டில் 4 அரங்கில் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
8 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் .
மக்கள் திலகம் புதுமையான விக் வைத்த படம் .
படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி
கதாநாயகியை பெண் பார்க்க போகும் காட்சியும் - நடிப்பும்
சொத்துக்களை இழந்த பின் நம்பிக்கையுடன் முன்னேற நடிக்கும் காட்சி
யானைகள் துணையுடன் மீண்டும் செல்வந்தராக முன்னேறும் காட்சிகள்
இனிமையான பாடல்கள் - அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசமான சண்டை காட்சிகள்
என்று ரசிகர்கள் - பொது மக்கள் - குழந்தைகள் -எல்லா தரப்பு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்ற படம் நல்ல நேரம் .
AAYIRATHIL ORUVAN SUCESSFULLY RUNNING IN CHENNAI 75 DAYS AT THE SAME TIME THALAIVAR ANOTHER MOVIE NALLANERAM RE-RELEASED IN PILOT THEATER THIS IS ALSO ONE OF THE RECORD OF WORLD CINEMA RERELEASED HISTORY
http://i1170.photobucket.com/albums/...ps0868fadb.jpg
THIS IS THE FAMOUS POSE FOR THIS FILM THIS STICKER IS PASTED MOST OF THE AUTORICKSHAWS IN CHENNAI CITIES
http://i1170.photobucket.com/albums/...psfaa176fc.jpg