வாசு சார்
ஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு
பார்துரோவோம்
காசா பணமா துட்டா
Printable View
வாசு சார்
ஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு
பார்துரோவோம்
காசா பணமா துட்டா
கிருஷ்ணா சார்,
'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் வில்லன் ராமதாஸ் இல்லை. 'கள்ளபார்ட்' நடராஜனே பிரதான வில்லன்.
ஓடும் பஸ்ஸில் 'பயணம் எங்கே" பாடலில் பேப்பர் படித்தபடி துப்பாக்கியால் கல்பனாவை குறி வைத்தபடி வருவாரே ஒரு துணை வில்லன்! அவர் நமது 'சாந்தி' திரையரங்கில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். (அநேகமாக கார்த்திக் சாருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)
'சந்திப்பு' படத்தில் '50 கோடி அம்பலவாணன்' என்று பெயர் இவருக்கு. இவரை கோழி தீவன மெஷினில் போட்டு நம்பியார் அரைக்கப் பார்ப்பார். ஆனால் இந்த நபரை நடிகர் திலகம் காப்பாற்றி விடுவார்.
நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் வருவார். ஒன்று ரவுடியாக அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக. 'ராஜா' படத்தில் வைரப் பெட்டியுடன் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்( 'நீ வர வேண்டும்')நடிகர் திலகத்தையும், மேடத்தையும் கான்ஸ்டபிள்களுடன் பாலோ செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்தான். நடிகர் திலகத்தின் ரொமான்ஸ் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை லேசாக கடித்து சிரிப்பார். ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'.
அமிதாப் பாடும் இந்தி பயணம் எங்கே
'தேகானா ஹயரே சோச்சானா' செம சூப்பர் பாட்டு சார்.
கிருஷ்ணா சார்
கேட்டு விட்டீர்கள். மனசு கேட்கவில்லை. அப்புறம் மதிய சாப்பாடு செரிக்காது. இதைப் பார்த்துக் கொண்டே சந்தோஷமாகப் பார்த்து மகிழுங்கள். ஆனால் ரூமில் தனியாக சாப்பிடுங்கள்.:)
'பில்லா பிடுகா' வில் ராட்சஸி குரலில் ஜோதிலஷ்மி கலக்குவதைப் பாருங்கள். இதைப் பார்த்தும் கூடவா ஜோதியைப் பிடிக்காமல் போகும். பார்த்து விடுவோம் ஒரு கை.:)
http://www.dailymotion.com/video/x8h...uga_shortfilms
டியர் வாசு சார்,
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் இடம்பெற்ற மிக அற்புதமான பாடலை இன்றைய ஸ்பெஷலாக தந்துள்ளீர்கள். சும்மா ஒப்புக்காக சொல்லவில்லை. இன்றைய ஸ்பெஷல் தலைப்பில் நீங்கள் தரும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொன்றும் அதிகம் கேட்டிராத அபூர்வ, அதே சமயம் அருமையான பாடல்கள்.
இன்றைய ஸ்பெஷலாக வந்துள்ள 'மை ப்ரண்ட், நெஞ்சத்தில் என்ன' பாடலை நானும் நான்கு முறையும் படத்தில் பார்த்தது / கேட்டது தவிர வேறு எந்த சேனல்களிலும் பார்த்ததே இல்லை. இதுபோன்ற நல்ல பாடல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது உண்மையிலேயே வருந்தத் தக்கது. ஒரு இருபத்தைந்து, முப்பது பாடல்களை மட்டுமே பொறுக்கி வைத்துக்கொண்டு அவைகளையே திருப்பித்திருப்பி ஒளிபரப்பி வருகின்றனர்.
நல்ல பாடலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தைப்பற்றிய விரிவான ஆய்வும் அருமையாக எழுதியுள்ளீர்கள். படத்தை நேரில் பார்ப்பது போன்று அருமையான விவரிப்புக்கள். உங்கள் ஆய்வு இப்படத்தை இதுவரை பார்க்காதவர்களை நிச்சயம் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது...
டியர் வாசு சார்,
அவர் பெயர் 'சாந்தி' குமார். 70-க்குப்பின் வந்த நடிகர்திலகத்தின் முக்கால்வாசி படங்களில் இருப்பார். 'திரிசூலம்' படத்தின் மூன்று பிரதான வில்லன்களில் ஒருவர். 'தியாகம்' படத்தில் வி.கே.ஆரின் கையால் 'காளி' இவர்தான். இப்படி நிறையப் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
சாந்தி தியேட்டரில் டிக்கட் கொடுத்து முடிந்தபின் வெளியில் வந்து ரசிகர்களுடன் பேசிக்கொண்டு நிற்பார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ரோல் பற்றி நிறைய சொல்வார்.
இவருக்கு நடிகர்திலகம்தான் திருமணம் பேசி, தானே நின்று நடத்தி வைத்தார். அதிதீவிர சிவாஜி ரசிகர்.
டியர் கார்த்திக் சார்,
தங்கள் மனம்நிறை பாராட்டுதல்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
நீங்கள் 'சாந்தி' குமார் பற்றிக் கொடுத்துள்ள தகவல்கள் அபூர்வமானவை.
எனக்கு இன்றுதான் அவர் பெயர் தங்கள் பதிவால் தெரிந்தது.
'சாந்தி' குமார் நடிகர் திலகத்திற்கு உறவுக்காரர் என்றும் ஒரு நண்பர் சொன்னார். அனால் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
டியர் கிருஷ்ணாஜி,
நமது வாசு சார் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் பாடலைப் பதித்ததும், உங்கள் பங்குக்கு படத்தின் கதைச்சுருக்கம், காட்சிகளின் விரிவாக்கம், படங்களின் ஸ்டில்கள், அதன் இந்தி ரீமேக், தெலுங்கு டப்பிங் என அனைத்து விவரங்களையும் தந்து படத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக்கி விட்டீர்கள்.
கல்பனா கே.எஸ்.ஜி.யின் 'ஸ்வாதி நட்சத்திரம்' (1971) என்ற படத்திலும் நடித்திருந்தார். வித்தியாசமான கதை. ஒரு இளம்பெண்ணுக்கு இடையிடையே கண்பார்வை வருவதும் போவதுமாக இருக்கும். பார்வை இல்லாத காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், கண்பார்வை இருக்கும் காட்சிகளை வண்ணத்திலும் எடுத்திருந்தார். சீனியர் பானுமதி கிறிஸ்டியன் மதர் வேடத்தில் நடித்திருந்தார். படம் வெற்றியடையவில்லை.
http://www.thinakaran.lk/2013/05/07/f5.jpg
சந்திரோதயம் 1966
கே.ஷங்கர் இயக்கம்
சரவணா ஸ்க்ரீன்ஸ் வேலுமணி தயாரிப்பு
மக்கள் திலகம்,கலை செல்வி,பாரதி,நாகேஷ்,நம்பியார் நடித்து
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் (என்று) (இந்த வார்த்தை சேர்த்தால் ஒருத்தருக்கு புடிக்கும்)
வெளிவந்தது கருப்பு வெள்ளை
மக்கள் திலகம் பத்திரிகையாளர் ஆக வருவார்
சமீபத்தில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்
அருமையான பாடல்கள்
சீர்காழி கோவிந்த ராஜனின் கணீர் வெண்கல தொண்டை குரலில்
பாரதிதாசனின் "புதியதோர் உலகம் செய்வோம் "
வாலியின் பிற பாடல்கள்
"கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம் " சுசீலாவின் இனிய சோலோ
"புத்தன் ஏசு காந்தி பிறந்தது " பாடகர் திலகத்தின் சோலோ
"காசிக்கு போகும் சந்நியாசி " சீர்காழி ,பாடகர் திலகம் இணைந்த குரல்களில் காமெடி பாடல்
மற்றும் இரண்டு தேனினும் இனிய மெலடி பாடல்கள்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிறியாத உறவல்லவோ ….
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ (பின்னணியில் காலை சூரியன் ஒளி கிரணங்கள் )
செவ்வானமே உந்தன் நிறமானதோ
ஆ அஅ ஆ ஹா ................................... (அருமையான ஹம்மிங்)
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே ….
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
ஆ அஅ ஆ ஹா ...................................
அருமையான தமிழ்,அதனோடு சேர்ந்த இசை ,இசையோடு சேர்ந்த இசை கருவிகள்
2.எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
என்னனென்று சொல்ல தெரியாமலே
நான் ஏன் இங்கு மாறினேன்
ஆசை வரும் வயது இளம் வயது
பேசும் இள மனது எந்தன் மனது
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுள்ளம் நாளொரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ
தேவி - பாடகர் திலகத்தின் குரல்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
என்னனென்று சொல்ல தெரியாமலே
நான் தான் உன்னை மாற்றினேன்
மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க
நான் அதை பார்கையில் நூல் என இளைக்க
என்னனென்ன அதிசயமோ
சந்தித்தோ பார்வைகள் தித்தித்ததோ நினைவுகள்
(நிச்சயமாக தித்திகின்ற நினைவு தான் இந்த பாடலை கேட்கும் போது )
மையலை சொல்ல தெரியாமலே
ஏன் ஏன் இந்த கேள்விகள்
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ல.. ல.. லா.. லா..
சூப்பர் triumpht சாக்ஸ் பங்கோ கலந்த இசை
இந்த இரண்டு பாடல்களையும் இசையோடு சேர்ந்து இன்னும் சற்று விளக்கமாக ஆராய ஆசை .
வாசு சார் கார்த்திக் சார் எஸ்வி சார் யாரவது உதவி செய்வீர்களா
http://www.youtube.com/watch?v=nMc8d53LLaM
http://www.youtube.com/watch?v=kfqjI4LYjs0